52 தவெக எம்எல்ஏக்களுக்கு வலைவிரித்த ‘குதிரைபேரம்’? விசாரணை வளையத்தில் திமுக ஆதரவு ஊடகர்கள்? | பருந்தார் தகவல்கள்

தவெக எம்எல்ஏக்களை குறிவைத்ததாக கூறப்படும் குதிரைபேர வழக்கில் பத்திரிகை–ஊடகர்கள் விசாரணை வளையத்தில் உள்ளனரா? பத்திரிகையாளர் அங்கீகாரக் குழு, நல வாரியம் மற்றும் அமைச்சர் ராஜ்மோகனின் செயல்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பும் தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்.

Sep 22, 2026 - 11:38
Updated: 14 hours ago
0 150
52 தவெக எம்எல்ஏக்களுக்கு வலைவிரித்த ‘குதிரைபேரம்’? விசாரணை வளையத்தில் திமுக ஆதரவு ஊடகர்கள்? | பருந்தார் தகவல்கள்

தமிழ் ஊடகம் ; பருந்தார் தகவல்கள்

தோபார் வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்ற பருந்தார் இரண்டு நாட்கள் கழித்து வந்தார்.

வாங்க பருந்தாரே இதுதான் உங்க "டக்"கா என்று கேட்டோம்.

சிரித்துக் கொண்ட பருந்தார் என்ன செய்வது, "மாப்பிளை அவருதான் சட்டை என்னோடது என்ற நகைச்சுவை போல, ஆட்சி என்னவோ வெ ஆட்சிதான் ஆனால் அதிகாரம் பெரும்பாலும் திமுகவுடையதா இருக்கு...அதனாலதான் தகவல் சேகரிப்பதில் தாமதம், குழப்பம்" என்றார்.

புரியும்படியாகத்தான் சொல்லுங்களேன் என்று பருந்தாரிடம் கேட்டோம்.

கொஞ்சம் சூடாக சுக்குத் தண்ணீர் கிடைக்குமா என்றார்.

இதோ, உடனே...என்று சொல்லித் தயாரித்துக் கொடுத்தோம். அதுவரை வாட்ஸ்ஆப் தகவல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் பருந்தார்.

சுக்கு, மிளகு, திப்பிலி, கருப்பட்டி, ஏலக்காய் கலந்து பதமாக, சூடாகத் தயாரித்துக் கொடுத்தோம். ருசித்த பருந்தாரின் முகத்தில் பளீர் மகிழ்ச்சி.

நன்றாக இருக்கிறது நன்றி என்று சொல்லிவிட்டு பேசத் தொடங்கினார்,

பத்திரிகையாளர்களைத் தங்கள் பக்கம் வைத்துக்கொள்வதற்கு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி எப்போதும் முக்கியத்துவம் தருவார். பத்திரிகையாளர்கள் அவரை நேரடியாக அணுக முடியும். அல்லது செய்திகளை வாசித்துவிட்டு அதிகாலையில் அவரே பத்திரிகையாளரைத் தொடர்பு கொள்ளுவார். சிறு அளவில் விற்பனையாகும் பத்திரிகை, பெரிய அளவில் விற்பனையாகும் பத்திரிகை என்று வேறுபாடு எல்லாம் கலைஞர் பார்க்கமாட்டார், செய்தியில் உண்மை உள்ளதா என்று பார்த்து அது சிறு பத்திரிகை என்றாலும் அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் தருவார். அதேபோல நல்ல பத்திரிகையாளர் யார் ? டுபாக்கூர் யார் ? என்பதிலும் தெளிவாக இருப்பார் கலைஞர் கருணாநிதி.

ம்.....

ஆனால் கடந்த 2021 ம் ஆண்டு முதன் முதலாக முதலமைச்சர் ஆனா மு..ஸ்டாலினுக்கு அப்படிப்பட்ட பழக்கம் ஏதும் இல்லை, தொடர்பும் இல்லை. அப்படித் தொடர்பு உள்ள ஹிந்து என்.ராம் போன்றவர்களுக்கு தமிழ்நாட்டின் மக்கள் மனநிலை தெரியாது. உயர்தட்டு ஆங்கில பத்திரிகை வாசர்களைக் கொண்டுள்ள ராம் போன்றவர்களுக்கு நடுத்தர, அடித்தட்டு மக்களின் உண்மை நிலை தெரிய வாய்ப்பே இல்லை.

சரிதான்...

கலைஞர் கருணாநிதி மகன் மு..ஸ்டாலினுக்கே அத்தகைய அனுபவம் இல்லாத நிலையில் மருமகன் சபரீசனுக்கு மட்டும் என்ன அனுபவம் இருந்திருக்கப்போகிறது ?

ம்....

அப்படி அனுபவம் இருந்திருந்தால் பணபலம், படைபலம், அதிகார பலம் இருந்த நிலையில் திமு படுதோல்வி அடைவதை முன்கூட்டியே அவர் கணித்திருப்பாரே....மேலும் அவர் PEN எனும் பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி திமுக குறித்து "மானே தேனே பொன்மானே" என்று மிகையாக உயர்த்தி சொல்லவும், இன்னொருபுறம் திமுகவை விமர்சிப்பவர்களை எல்லாம் ஆபாசமாக, அருவருப்பாக திட்டும் ஐடி விங் ஒன்றை உருவாக்கி நடத்தினார். அது திமுகவுக்கு Backfire தான் ஆகியது.

ம்....

மறுபுறம், மு..ஸ்டாலினைச் சுற்றி ஒரு பத்திரிகையாளர்கள் ஒளிவட்டம், உதயநிதி ஸ்டாலினைச் சுற்றி மற்றொரு ஒளிவட்டம், சபரீசனைச் சுற்றி மற்றொரு ஒளி வட்டம் என்று

த்திரிகையாளர் கூட்டம் மொய்க்கத் தொடங்கி, மொத்தத்தில் பத்திரிகையாளர்களை மட்டுமல்ல பத்திரிகையாளர் சங்கம், அமைப்புகளையும் கைப்பற்றிவிட்டால் திமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று "பிட்டுகள்" பல போடப்பட்டு அதற்கு திமுக தலைமைகளிடம் ஒப்புதலும் வாங்கியது ஒரு கூட்டம்.

ம்...

இவர்கள் சொன்னதை நம்பி, அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரையும் அந்தக் கூட்டத்திற்குத் துணை நிற்கச்சொன்னது திமுக தலைமை.

பரிதாபம்....ம் !

இந்தக் கூட்டம்தான் திமுகவையே ஒட்டுமொத்தமாகக் கவிழ்த்தது என்பது திமுக தலைமைக்கு இப்போதாவது புரிகிறதா என்று தெரியவில்லை....

ம்....

திமுக தலைமைகளிடம் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி சாதாரணமாக குறைந்தது 10 கோடி முதல் அதிகபட்சம் 400 கோடி வரை தனித்தனியாகப் பணம் சுருட்டினார்கள் இந்தத் திமுக ஆதரவு பத்திரிகை - ஊடகர்கள் சிலர்.

ம்...

இதில் ஏதோ சின்னச் சின்னச் சிபாரிசு அதில் ஒரு கமிஷன் என்று இருந்தால்கூட போய்த் தொலைக்கிறார்கள் என்று விட்டுவிடலாம்... ஆனால் பெரிய பெரிய லஞ்சம், ஊழல், குற்ற நடவடிக்கைகளுக்குத் துணை போய் பெரிய வேலை பார்த்துப் பல கோடிகள் சுருட்டி இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சித் தகவல்.

ஓஹ்....

அப்படி இவர்கள் மாட்டியுள்ளதாகத் தகவல் கசியும் பெரிய குற்றம் குதிரை பேரம். வெ எம்எல்ஏக்கள் 52 பேருக்கு வலை விரிக்கப்பட்ட வழக்கு.

அடேங்கப்பா...ம் !

அந்த 52 வெ எம்எல்க்ளையும் கட்சிக்காரர்கள் தொடர்பு கொண்டு பேசுவதைவிட பத்திரிகையாளர்கள் மூலம் பேசினால் சுலபமாக வேலை முடியும் என்று "விஞ்ஞான பூர்வமாக" கணக்குப் போட்டிருக்கிறார்கள்.

...அப்படி ஒரு அலைபேசி உரையாடலில் மாட்டி முதலில் விசரணைக்கு அழைக்கப்பட்டவர்தான் புதிய தலைமுறை தொகுப்பாளரா என்று கேட்டோம்.

ஆமாம், சரியாகச் சொன்னீர்.

அடுத்தடுத்து மேற்கொண்ட விசாரணையில் காவல்துறையே அதிர்ந்து போய் நிற்கிறது. காரணம் குதிரைபேரம் பேசியவர்களில் பெரும்பாலும் சென்னை மற்றும் மாவட்ட அளவில் பணிபுரியும் (திமுக ஆதரவு) பத்திரிகை - ஊடகர்ள்தானாம்.

சுத்தம்...ம்

அதில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தோடு தொடர்புடையவர்கள் பெயர்கள்தான் அதிக அளவு அடிபடுகிறதாம்.

அட்றா சக்கை அட்றா சக்கை....என்றோம்.

ஆமாம், மீசை வச்ச கிழட்டுக் குழந்தை, ரயில்வே தொழிற்சங்கத் தலைவரின் வாரிசு, இயேசு கிறித்து பெயர் கொண்ட சேவித்துக் காப்பாற்றும் ஒருவர்....இவர்கள் பெயர்கள் முதன்மைப் பட்டியலில் இருக்கிறதாம். இவர்கள் எல்லோரும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தைக் கைப்பபற்றி திமுகவிடம் ஒப்படைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்ற பருந்தாரிடம்,

...இதுக்குதான் "25 ஆண்டுகாலம் தேர்தல் நடக்கலை....அநீதி...அக்கிரமம்" என்று உதார் விட்டார்களா இவர்கள் ?! என்று கேட்டோம்.

ஆமாம்..."எல்லாம் தள்ளி நில்லுங்க நாங்க சுரண்டி வழிக்கணும்" என்பதன் code word தான் அது.

ம்....கொடுமை.

ஆக, குதிரை பேர வழக்கில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தோடு தொடர்புடையவர்கள் பெயர் சீக்கிரம் தலைப்புச் செய்திகளில் - Breaking நியூஸில் வரலாம் என்கிறார்கள்.

ம்....

இதுல ஒன்றிண்டு பேர் இரண்டு வழக்குகளிலும், இன்னொரு நபர் மூன்று வழக்குகளிலும் ஒரே நேரத்தில் மாட்டி இருக்காங்க.

...யார் யார் அது ?!

வழக்கு விவரம் சொல்லிவிடுகிறேன்....நீங்களே யார் யார் என்று ஊகித்துக் கொள்ளுங்கள் என்ற பறந்தார்,

வழக்கு ஒன்று : பெண் ஊடகரை இழிவாகப் பேசியது

வழக்கு இரண்டு : ஜெம் வீரமணியை பாலியல் வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க இடைத்தரகராக செயல்பட்டது

வழக்கு மூன்று : வெ எம்எல்ஏக்களை குதிரை பேரம் பேசியதான வழக்கு

அட...ங்கொக்கமக்கா...! என்றோம் நாம்.

வாய்விட்டுச் சிரித்த பருந்தார் தொடர்ந்து பேசினார், "நிலைமை இப்படி இருக்க செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் "பத்திரிகையாளர் அங்கீகாரக் குழு மற்றும் பத்திரிகையாளர் நல வாரியத்தில்" நியமிக்கப்பட்டவர்களின் பட்டியலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் மூத்த உண்மையான பத்திரிகை ஊடகர்கள்.

...அதில் என்ன குளறுபடி ?! என்று கேட்டோம்.

அதாவது, முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் வெ கட்சி குறித்து தொலைக்காட்சி விவாதங்களில் விஜய்க்கும், வெ கட்சிக்கும் எதிராகப் பேசும், கழுவிக் கழுவி ஊற்றும் திமுக ஆதரவு ஆட்களைத் தேடிப்பிடித்து விவாத நிகச்சிகளில் பங்கேற்க வைத்தவர்களையெல்லாம் இந்தக் குழு மற்றும் வாரியத்தில் சேர்த்து விட்டிருக்கிறார்கள்.

...ஜீசஸ் வாட் இஸ் திஸ் ?! என்றோம்.

ஆமாம் பட்டியல் பார்த்ததும் எனக்கும் இப்படித்தான் கேள்வி எழுந்தது. எடுத்துக்காட்டாக தந்திடிவி அசோக வர்ஷினி. அந்தப் பெண்தான் பத்திரிகை ஊடக உலகில் மட்டுமல்லாது பொதுமக்களில்கூட யாருமே மதிக்காத நக்கீரன் தாமோதரன் பிரகாஷைத் தந்தி டிவி விவாத நிகழ்ச்சிக்குத் தொடர்ந்து அழைத்து அவர் என்னவோ சிறந்த பத்திரிகையாளர் போல பில்ட்அப் செய்த பெண். வெகவை கழுவி ஊற்றுவது இவரது அஜென்டா.

அட ஆமாம்....!

அந்தப் பெண்ணுக்கு இந்த அரசு பொறுப்பு. அடுத்து, தம்பி தமிழரசன்னு ஒருர். அவர் கருப்பு சிவப்பு வண்ணத்தில் சட்டைபோடாத திமுக ஆதரவாளர்னு சொல்றாங்க. அவர்தான் கோடீஸ்வரன், தாமோதரன் பிரகாஷ் போன்ற வெ வெறுப்பாளர்களுக்கு விவாத மேடை கொடுத்து அன்றாடம் வெ குறித்து எதிர்மறைத் தகவலைகளைப் பரப்புகிறவர். அவருக்கு இந்தக் குழு / வாரியத்தில் பொறுப்பு.

விளங்கிடும்..அப்புறம் !

புதியதலைமுறையில் சமஸ்-ன் வலதுகரம் வேலுச்சாமி, பிரேம் ஷங்கர் ஆகியோருக்கும் இதைக் குழுவில் / வாரியத்தில் பொறுப்பு.

அவர்கள் மீது அதிமுகவிடமும் பணம் வாங்கினார்கள் என்று குற்றச்சாட்டு இருக்கே என்றோம்.

ஆமாம்...புகார் இருக்கு. அடுத்து, தமிழரசின்னு ஒரு பெண் ஊடகர். இவர் நியூஸ் 18 இருக்கார். இவரது கணவர் சன் நியூஸ்ல செய்தி உள்ளீட்டு ஆசிரியர். இவங்க ரெண்டுபேரும் அக்மார்க் திமுக ஆதரவாளர்கள்னு பத்திரிகை ஊடக உலகத்துக்கே தெரியும். இதில் சன் நியூஸ்ல வெ எதிர்ப்பு செய்திகளைத் தேடித் தேடி போடுகிறவர் இந்தப் பெண்ணின் கணவர்.

....பிரமாதம். வெ வாழ்க என்று சொல்லிவிட்டு அடுத்து என்றோம்

இவை எல்லாம் ஒரு சாம்பிள்கள்தான். அப்புறம் பொதுவாகவே இது தமிழ்நாடு, பெரும்பாலான பத்திரிகை ஊடகங்கள் தமிழில்தான் உள்ளன. அப்படியென்றால் தமிழ் பத்திரிகை ஊடகர்களைதானே அதிக அளவில் அரசு அங்கீகாரக் குழுவில் சேர்க்கணும் ?

ஆமாம்...அதுதான் நியாயம். பிற மாநிலங்களில் அப்படிதான் செய்வார்கள் என்றோம்.

ஆனா, இங்க அப்படி அல்ல...இங்கிலிஷ் பத்திரிகை ஊடகர்கள்தான் "பெரிய மூளை" உள்ளவர்கள். தமிழ் பத்திரிகையாளர்கள் எல்லாம் மூளையே இல்லாதவர்கள் அப்படினு ஒரு பொய்யான பிம்பம் கட்டமைச்சு வச்சிருக்காங்க. மேலும் அப்படி இவர்கள் சேர்த்த தி ஹிந்து இதழின் ரம்யா கண்ணனும் அப்படியே அக்மார்க் வெ எதிர்ப்பாளர், திமுக ஆதரவாளர்.

விளங்கிடும்...என் நாம், ஆங்கிலப் பத்திரிகைக்காரர்கள் மட்டும் பெரிய அறிவாளிகள் என்பது ஒரு திட்டமிட்ட பொய்ப் பரப்புரை என்றோம்

அதனாலதான் தமிழ்நாட்டின் பத்திரிகை ஊடகர்களின் வலி, வேதனை தெரியாத ஆங்கிலப் பத்திரிகை மேல்தட்டு வாசிகளின் ஆட்களை இதுபோன்ற அங்கீகாரக் குழுவில் போட்டுக் கொண்டு பெருமை பீத்திக்கொள்கிறார்கள்.

ந்தப் பொய்ப் பிம்பத்தை முதலில் உடைக்கவேண்டும் என்றோம்.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அமைச்ராக இருக்கும் ராஜ்மோகன் உண்மையில் என்ன செய்கிறார் என்று கேள்வி எழுப்பும் பத்திரிகை ஊடகர்கள், இத்தனைக்கும் ராஜ்மோகன் பத்திரிகை ஊடகத்துடன் தொடர்பில் இருந்தவர் என்பதையும் நினைவுகூருகிறார்கள் என்ற பருந்தார் தொடர்ந்து பேசினார்,

முந்தைய திமுக ஆட்சியில் மிக மிக அதிகமாக Corrupt ஆக்கப்பட்ட துறை பத்திரிகை ஊடகத்துறை. அதில்தான் இன்றைய வெ அரசு கவனம் செலுத்தி "களைகளைப்"

பிடுங்க வேண்டும். ஆனால், அதில் பழைய திமுக கால அதிகாரிகள் சொல்வதை அப்படியே தலையாட்டி ஒப்புதல் தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜ்மோகன் என்றால்....ராஜ்மோகனும் திமுக சார்பு பத்திரிகை ஊடகர்களைக் கண்டு அச்சப்படுகிறாரா ? எனும் கேள்வியை முன்வைக்கிறார்கள் தரமான பத்திரிகை ஊடகர்கள்....

அமைச்சர் ராஜ்மோகன் தவெக காசில் தவெவுக்கே சூனியம் வைத்துக்கொள்கிறாரா என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.
என்று சொல்லிவிட்டு சிணுங்கிய அலைபேசியை எடுத்துப் பேசிக்கொண்டே விண்ணில் பறந்துவிட்டார் பருந்தார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Wow Wow 1
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User