அரசு விளம்பரங்களில் கமிஷன் புகார்? செய்தித்துறை, ஊடக வட்டாரங்களில் என்ன நடக்கிறது? பருந்தார் சொல்லும் பரபரப்புத் தகவல்கள்!

அரசு விளம்பர ஒதுக்கீட்டில் கமிஷன் தொடர்பான குற்றச்சாட்டுகள், பத்திரிகையாளர் நலவாரியம், ஜெம் வீரமணி வழக்கின் ஊடக விவாதங்கள், காவல்துறை மற்றும் செய்தித்துறையைச் சுற்றிய சர்ச்சைகள் குறித்து பருந்தார் தகவல்கள்.

Sep 29, 2026 - 09:58
Updated: 30 days ago
0 167
அரசு விளம்பரங்களில் கமிஷன் புகார்? செய்தித்துறை, ஊடக வட்டாரங்களில் என்ன நடக்கிறது? பருந்தார் சொல்லும் பரபரப்புத் தகவல்கள்!

தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்

தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் தொடர்பான முழுப்பக்க அரசு விளம்பரங்கள் அச்சடிக்கப்பட்ட செய்தித் தாள்களுடன் வந்தார் பருந்தார்.

என்னங்க பருந்தாரே நீங்களே ஒரு நடமாடும் செய்திப் பெட்டகம் உங்களுக்கு எதுக்கு செய்தித்தாள்கள் என்று கேட்டோம்.

எல்லாம் காரணமாகத்தான் என்று சிரித்துக்கொண்டே சொன்ன பருந்தார், இந்தத் திட்ட விளம்பரம் எல்லா நாளிதழ்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கு, அது அரசின் உரிமை. ஆனா, இந்த விளம்பரங்கள் செய்திதாள்களுக்குக் கொடுக்கப்பட்ட முறை குறித்ததுதான் தலைமைச் செயலகத்தில் ஒரே அரசல் புரசல் பேச்சு என்றார்.

எல்லோருக்கும் புரியும்படி சொன்னால் புண்ணியமாகப் போகும் என்றோம்.

கடந்தமுறை செய்தி மக்கள் தொடர்புத்துறை குறித்த தகவல்களைச் சொல்லும்போது ஒரு தகவல் சொல்லிவிட்டுப் போனேன் நினைவு இருக்கிறதா என்று திருப்பிக் கேள்வி கேட்டார் பருந்தார்.

மஹ்ம்....கடைசியா....ஆமாம்....செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் ஒரு உயர் அதிகாரியின் மாமனார் விளம்பர ஏஜென்சி ஒன்றை நடத்துறார்னு சொல்லியிருந்தீங்க.

மிகச் சரி....இப்போ இந்தத் தாய்மாமன் தங்க மோதிரம் விளம்பரங்களில் 50 விழுக்காடு அந்த மாமனார் ஏஜென்சி மூலமாகத்தான் பத்திரிகைகளுக்குப் போயிருக்கு என்கிறார்கள் தலைமைச் செயலக வளாகத்தில் சிலர்.

ஓ...அப்படிப் போகுதா கதை என்றோம்.

அந்த உயர் அதிகாரி செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையில் தான் வைப்பதுதான் சட்டம் என்று செயல்படுகிறாராம். இந்தப் பதவியில் இருப்பதால் அவருக்கு நேரடியாக பழக்கம் உள்ள அல்லது அவருடன் நேரடித் தொடர்பில் உள்ள பத்திரிகையாளர்களுக்கே சலுகைகள், அங்கீகார குழு, நலவாரியம்னு இடம் கொடுக்கிறாராம்.

ஓ...அந்தக் குளறுபடியின் ராஜா இவர்தானா என்றோம்

ஆம்....அதனால்தான் தவெக அரசை, முதலமைச்சர் விஜயைப் பத்திரிகை ஊடகங்களில் அதிக அளவு Damage செய்த, செய்துவரும் பத்திரிகையாளர்களாக இருந்தாலும்கூடத் தனக்கு வேண்டப்பட்ட ஆட்களாக அவர்கள் இருப்பதால் அரசின் இந்த அமைப்புகளில் இடம்பெறச் செய்திருக்கிறாராம் அவர்.

அடடே....ஏன் இது செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்குத் தெரியாதா ? என்று கேட்டோம்.

அது நமக்குத் தெரியவில்லை. விசாரித்துப் பார்க்க வேண்டும் என்ற பருந்தார், அதுமட்டுமல்லாமல், இன்னொருபுறம் அரசு விளம்பரங்களைத் தனது மாமனாரின் நிறுவனத்தின் மூலமாக வெளியிடும்போது 10 முதல் 15 விழுக்காடு கமிஷன் வேறு.

ஓ.....

அதாவது 1 கோடி ரூபாய்க்கு அரசுத் திட்டம் ஒன்றை விளம்பரம் செய்தால் அந்த விளம்பரங்கள் மாமனார் ஏஜென்சி மூலமாக வெளியிட்டால் 10 முதல் 15 லட்சம் வரை கமிஷன் தன் குடும்பக் கல்லாப் பெட்டிக்கு வரும்.

சூப்பரப்பு.....என்றோம்.

இனியும், "தவெக அரசு தங்களுக்கு விசுவாசமாகச் செயல்படும் அதிகாரிகளைத் தங்கள் பக்கம் வைக்காவிட்டால்...முதலமைச்சர் ஜோசப் விஜய் என்ன செய்தாலும் அது ஓட்டைப் பானையில் ஊற்றி வைத்த நீருக்குச் சமம் என்கிறார்கள்" என்ற பருந்தார் குடிப்பதற்கு கோகோ கோலா கிடைக்குமா என்றார்....

என்னது திடீரென கோகோ கோலா என்று பருந்தாரிடம் கேட்டுவிட்டு அலுவலக உதவியாளரை வாங்கிவர அனுப்பினோம்.

கோகோ என்றாலே விளம்பரங்கள்தானே நினைவுக்கு வரும் என்ற பருந்தார், தெடர்ந்து பேசினார், ஜெம் வீரமணி வழக்கில் Youtube பிரபலங்கள் துணிச்சலாகப் பல தகவல்களைச் சொன்னாலும்கூட அவர்களே நீதிபதிகளாகவும் மாறி "இவர்தான் குற்றவாளி" என்று தீர்ப்பு சொல்லத் தொடங்கியதுதான் பிரச்னை என்றார்.

ம்....

பத்திரிகை ஊடகங்களோ, செயற்பாட்டாளர்களோ, தனியார் புலனாய்வு முகமைகளோ புலனாய்வு செய்யலாம்...ஆனால் அவ்வாறு செய்து காவல்துறையிடம் அல்லது அரசாங்கத்திடம்தான் அடுத்து அந்தத் தரவுகளைச் சொல்ல முடியும். அல்லது செய்தியாக வெளியிடலாம். அதற்கும் உறுதியான சான்றுகள், ஆதாரங்கள் வேண்டும். அதன்பிறகு அரசின் காவல்துறைதான் கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க இயலும். காவல்துறை முன்வைக்கும் சாட்சியங்கள், சான்றுகள் ஆகியவற்றை வைத்து நீதிமன்றம்தான் ஒருவரைக் குற்றம் செய்தாரா என்று முடிவு செய்யமுடியும். இதுதான் சட்டம்.

ம்....

ஆனால், இந்த Youtube பிரபலங்கள் சும்மா எல்லோரையும் "குற்றாவளிகள்" என சித்தரித்தது கொஞ்சம் அபாயகரமான செயல்தான். எடுத்துக்காட்டாக ஜெம் வீரமணி சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலதிபர் என்கிற அடிப்படையில் அவருடன் வணிகம், தொழில் தொடர்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், நிறுவனங்கள், அவர் பங்கு பெற்ற பொது நிகழ்வுகள், திருமணம், காதுகுத்து என்று அவருடன் படம் எடுத்துக் கொண்டவர்கள் என்று எல்லோரையும் சமூக ஊடகங்கள் குற்றவாளிகள் ஆக்குவது மோசமான செயல் அல்லவா. வீரமணி செய்த இந்த பாலியல் குற்றங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்புடையவர்களை, உண்மையான குற்றவாளிகளை விசாரணை அதிகாரிகள் சரியாகக் கண்டுபிடிக்க இதுபோன்ற சமூக ஊடக, Youtube காணொலிகள் இடையூறாக இருந்துவிடக் கூடாது என்பதும் முக்கியம்.

ம்....

இதனைக் கருத்தில்கொண்டும், வீரமணி வழக்கு அரசியல் வாத விவாதங்களுக்குள் சிக்கி நீர்த்துபோய்விடக்கூடாது என்பதாலேயே நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு ஒன்றை சொல்லியிருக்கிறது.

ஆமாம், தமிழ் ஊடகம் டாட் காம் இணையதளத்தில் விரிவாகச் செய்தி வெளியிட்டுளோம் என்றோம்.

அதுமட்டுமல்ல, வீரமணி வழக்கில் அதிகாரிகளை இரண்டு கட்சிகளாகப் பிரித்து அதேபோல பத்திரிகை ஊடகங்களையும் இரண்டு கட்சிகளாகப் பிரித்து வேறு ஒரு அரசியலும் மேலோங்கத் தொடங்கிவிட்டது என்றார் பருந்தார்.

அது என்னங்க பருந்தாரே...என்று கேட்டோம்.

கடந்த திமுக ஆட்சியில் சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ் மூலம் தங்களுக்கு வேண்டாதவர்கள் மீதெல்லாம் குண்டர் சட்டம் போட்டுகொண்டு ஒரே கொண்டாட்டமாகத் திரிந்து கொண்டிருந்தது ஒரு திமுக ஆதரவாளர்கள் போல சுற்றிக் கொண்டிருக்கும் கொள்ளை இலாபம் பார்க்கும் வியாபார கூட்டம் ஒன்று.

ஓஹ்...

இப்போது ஆட்சி மாறி சென்னை மாநகர ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் ஆகிய நிலையில், அந்தக் கூட்டத்தின் மூன்று நான்கு பத்திரிகைக் கருப்பு ஆடுகள், குண்டர் சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஊடகர்கள் கைகளில் இப்போ வசமா சிக்கியிருக்கு.

ஓ....செம்மை, அப்புறம்

இப்போ பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு அந்தக் கருப்பு ஆடுகள் சிக்கியிருக்கும் வழக்குக்களை எல்லாம் தோண்டி எடுத்து தூர் வாரிவிட...அந்தக் கொள்ளைக் கூட்டப் பத்திரிகை ஊடக கருப்பு ஆடுகள் கரும்பு மெஷினில் சிக்கிய கரும்பு போல ஆகியிருக்காங்க. ஜெம் வீரமணி கூட சிறையில் தூங்கிவிடுவார், ஆனா இவங்க தூக்கமில்லாமத் திரிகிறார்களாம் என்ற பருந்தாரிடம்...

இவர்களால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் Youtube ஊடகர்களும் "செய்தி அறத்துடன்" செயல்படுவதில்லையே...ஒரு தரப்புக்கு ஆதரவாக இன்னொரு தரப்பை வறுத்தெடுப்பதை வழக்கமாகக் கொண்டு இருக்கிறார்களே ?! என்று கேள்வி எழுப்பினோம்.

ஆம்....அதைத்தான் தொடக்கத்தில் சொன்னேன் இப்போது இது திமுக - அதிமுக சண்டைபோல பத்திரிகை ஊடகத்திலும், காவல்துறை தரப்பிலும் மாறிவிட்டது, தவெக கட்சியும் உள்ளே வந்தால் பத்திரிகை ஊடகத்துறையின் நிலையை எண்ணிப்பார் என்று கவலைப்பட்ட பருந்தார் தொடர்ந்து பேசினார்.

தமிழ் ஊடகமும், உங்க செய்தி ஆசிரியரும் உங்க செய்தித் துறையில் நடைபெறும் அநீதிகளையும் தொடர்ந்து வெளிக்கொண்டு வருகிறீர்கள் பாராட்டுக்கள். அதனால் எனக்குக் கிடைத்த தகவல்களை இப்போ உன்னிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்றார் பருந்தார்.

நன்றிங்க பருந்தாரே சொல்லுங்கள் என்றோம்.

சென்னை தலைநகர்ல மட்டுமல்ல எல்லா மாவட்டங்களிலும் நேர்மையான செய்தியாளர்கள், பத்திரிகையாளர்கள் எல்லாம் மன வேதனையோடு ஒதுங்கி நிற்கும் நிலையில், "மசாஜ் பார்லர், சோதனைச் சாவடிகள், திருட்டு லாட்டரி, மணல் கொள்ளையர்கள், காவல்துறையில் சிவில் சப்ளைப் பிரிவு, மின்சார வாரியம்னு பல இடங்கள்ல பத்திரிகை ஊடகப் பெயரில் ஒரு குரூப் மாசா மாசம் மாமூல் வாங்கிட்டு இருக்கு. இவங்களாலதான் பத்திரிகை ஊடகத்தினருக்கு கெட்ட பெயர்.

அடக் கொடுமையே...அப்புறம் எப்படி செய்தி வெளில வரும் ? என்று வியப்போடு கேட்டோம்.

இப்படிப்பட்ட ஒரு குரூப் சமீபத்தில் மாமூல் அதாவது லஞ்சம் கேட்ட ஒரு துறையின் பெயரைக் கேட்டால் நீ அதிர்ந்து போய் விடுவாய் என்ற பருந்தாரிடம்....

அது என்ன துறை பருந்தாரே என்று ஆவலோடு கேட்டோம்.

வேறு என்ன துறை "லஞ்ச ஒழிப்புத் துறைதான்" என்று பருந்தார் சொன்னவுடன் உண்மையில் அதிர்ந்து போய்விட்டோம்.

அடக்கடவுளே, அது எங்கே...என்று கேட்டோம்.

சென்னைக்கு அடுத்துள்ள ஒரு மாவட்டத்தில் ஒரு அரசியல் பிரமுகர் வீடுகள், அலுவலகங்களில் DVAC - லஞ்ச ஒழிப்புத் துறையினர் Raid - சோதனை நடத்தினாங்க. அதுக்கு சுமார் 4-5 மணி நேரம் ஆச்சு. அதுவரை அங்கு வந்து செய்திக்காக காத்திருந்த இந்த செய்தி குரூப்தான் அதிகாரிகளிடம் கேட்டு இருக்கிறது. "சார் நாங்க வேறு ஏதாவது செய்திக்குப் போயிருந்தா இந்நேரம் 500 - 600 தேத்தி இருப்போம். இங்க வந்து அஞ்சு மணி நேரம் வேஸ்ட். பார்த்து ஏதாவது கவனியுங்க" என்று கேட்டு இருக்கிறார்கள்.

அடக்கடவுளே...

ஒன்றிரண்டடு ஆட்கள் கேட்கலை...சுமார் 40 பேர் என்ற பருந்தாரை இடை மறித்து...

இதையெல்லாம் சென்னையில் உள்ள இந்த குரூப்புகளின் தலைமைச் செய்தியாளர்கள், செய்தி ஆசிரியர்கள் கண்டிக்க மாட்டார்களா என்று கேட்டோம்.

இவங்க 500 - 1000 த்திற்கு இப்படி என்றால் சென்னையில் அவர்களில் சிலர் பாலியல், வழக்கு, கல்வித்துறையில் சிபாரிசு, சட்டம் ஒழுங்கு - குற்றபிரிவில் சிபாரிசு என்று கோடிகளில் "கட்டிங்" போடுகிறார்களாம் என்றார் பருந்தார்.

விளங்கிடும்....என்றோம்.

மாவட்ட அளவிலான 500 - 1000 என்ற நிலையில் உள்ள செய்தியாளர்களை நாம் குறை கூற முடியாது... காரணம் அவர்களுக்கு சரியான ஊதியம் இல்லை. தங்கள் சொந்த காசில் பெட்ரோல் போட்டுகொண்டு வாகனத்தை இயக்கி கிடைக்கும் இதுபோன்ற சில பணத்தில்தான் அவர்களின் வாழ்க்கை ஓடுகிறது. ஆனால் லட்சங்களில் ஊதியம் வாங்கும் இந்த சென்னைத் திருடர்களுக்கு அப்படி கட்டிங், கமிஷன் வாங்கித்தான் வாழணும்னு நிலை இல்லையே என்ற பருந்தார், தலை சரியாக இருந்தால்தானே வால் சரியாக இருக்கும் என்று சொல்லிவிட்டு அடுத்த தகவலுக்குத் தாவினார்...

தமிழ்நாட்டின் காவல்துறைத் தலைவராக செயலாற்றும் மகேஷ் குமார் அகர்வால் ஒரு திறமையான அதிகாரி. ஆனால் அவரது கைகள் கட்டப்பட்டு உள்ளது, அவரைச் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் மூன்றே மாதங்களில் சட்டம் ஒழுங்கைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார் என்று நாம் ஏற்கனவே பருந்தார் தகவல்களில் வெளியிட்டிருந்தோம்.

ஆமாம்...

அதன்பிறகு அவர் தற்போது தமிழ்நாட்டின் மண்டலங்கள் வாரியாக நேரடியாகச் சென்று கள ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.

ஆமாம்...

இருந்தாலும் அவருக்கு உளவுத்துறையின் ஒத்துழைப்பு சரிவரக் கிடைப்பதில்லை என்று ஒரு பேச்சு காவல்துறையினர் மத்தியிலும், பத்திரிகையாளர்கள் மத்தியிலும் ஓடுகிறது.

ஓஹ்....

வீரமணி வழக்கில் கூட உளவுத்துறை தரப்பு மடைமாற்றம் வேலைகளைச் செய்வதாக ஒரு பேச்சு.

அடடே....

கடந்த ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மொத்தமாக முடித்துவிட்ட துறைகள் இரண்டு. ஒன்று செய்தித் துறை மற்றும் செய்திப் பத்திரிகை - ஊடகர்கள் கூட்டம், அடுத்து உளவுத்துறை.

ம்....

இந்த ஆட்சியிலும் அதே மாதிரியான உளவுத்துறையினரின் செயல்பாடுகளும், அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறைக்குள் ஸ்டாலினை கவிழ்த்த அதே திமுக ஆதரவாளர்கள் போர்வையில் நடமாடும் பத்திரிகை ஊடகர்களை சேர்த்துள்ள செயல்பாடுகளும்....ஆட்சி என்னவோ தவெகவிடம், ஆனால் அதிகாரம் இன்னமும் இந்த "அதிகாரத் தரகர்கள்" (Lobbyists) வசம்தான் இருக்கிறதா என்கிற கேள்வி தலைமைச் செயலக வளாகத்தில் எழுந்துள்ளது.

ம்....

முதலமைச்சர் பார்த்து விழித்துக்கொள்ளாவிட்டால் சிரமம்தான் என்ற பருந்தார் அவசரமாக நான் தாராபுரம், மதுராந்தகம் செல்லவேண்டும் மீண்டும் சந்திப்போம் என்று சொல்லிவிட்டு பறந்துவிட்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User