₹5,000 கோடி மோசடி: நியூஸ் தமிழ் தொடர்பு என்ன? சுரேஷ் வேதநாயகம் பணி நீக்கமா? பருந்தார் தகவல்கள்
₹5,000 கோடி மோசடி வழக்கில் கைதான பிரேம்குமாருக்கும் நியூஸ் தமிழ் நிர்வாகத்திற்கும் என்ன தொடர்பு? சுரேஷ் வேதநாயகம் பணி நீக்கமா? நக்கீரன் கோபால் மீதான புகார் என்ன? பருந்தார் தகவல்கள்.
+ 5,000 கோடி மோசடியில் கைதான ப்ரேமுக்கும் நியூஸ் தமிழ் தொலைக்காட்சி இயக்குநர் சகிலனுக்கும் என்ன தொடர்பு ?
+ தினகரன் தலைமைச் செய்தியாளர் சுரேஷ் வேதநாயகம் பணி நீக்கமா ?!
+ நக்கீரன் கோபாலைக் காப்பாற்றுகிறதா மக்கள் தொடர்புத்துறை ?!
+ முதலில் தேவர் சிலைக்கு மரியாதை பிறகே பெரியம்மா இறப்புக்கு அஞ்சலி
+ "என் முகத்தை நானே இன்னும் பார்க்கலை" : அன்பில் மகேஷ் வேதனை !
+ விசாரணைக்கு ஆஜரான சேகர் பாபு !
-தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்
ஸ்ஸ்ஸ்....அப்பா.....எதை விடுறது எதை சொல்றதுன்னே தெரியலை என்று புலம்பிக்கொண்டே வந்தார் பருந்தார்.
எல்லாவற்றையும் சொல்லுங்க பருந்தாரே.. விரைவுச் செய்தி போல வாசகர்களுக்குச் சொல்லிவிடலாம் என்றோம்.
தொலைக்காட்சி விரைவுச் செய்திகள் போலவா என்று கேட்ட பருந்தார், "முதல் தகவலே தொலைக்காட்சி குறித்துதான்" என்று ஆரம்பித்தார். நியூஸ் தமிழ் 24 X 7 தொலைக்காட்சியின் தலைவராக இருக்கும் சகிலனை எல்லோருக்கும் தெரியும். அவர் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கத்தின் தலைவராக நீண்ட காலம் இருக்கிறார். தமிழக கேபிள் டிவி கம்யூனிகேஷன் லிமிடெட்' (TCCL) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும் இருக்கிறார்.
ம்...
SPlus Media (P) Limited எனும் நிறுவனத்தின் பெயரில்தான் நியூஸ் தமிழ் 24 X 7 மற்றும் நியூஸ் மலையாளம் 24 X 7 ஆகிய தொலைக்காட்சிகள் இயங்குகின்றன. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக 2018 ம் ஆண்டிலிருந்து சகிலன் பத்மநாபன், குமரன் ஜெயபால் ஆகியோரும், 2020 ம் ஆண்டில் ஐயம்பெருமாள் நாகமணிக்கமும், 2024 ம் ஆண்டிலிருந்து பாலாஜி கிருஷ்ணன் மற்றும் லட்சுமணகிருஷ்ணன் மஹிதா ஆகியோரும் இயக்குனர்களாக செயல்படுகிறார்கள் என்கிறது அந்த நிறுவனம் குறித்த இணையத் தகவல்கள்.
ஓ...
இதில் இப்போது 5,000 கோடி நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கேரள மாநிலம் கோழிக்கோடு குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செயப்பட்டுள்ள ஆர். பிரேம்குமார் என்பவர் பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் ஹவுசிங் எனும் கூட்டுறவு சங்கத்தின் (BLM) நிறுவனத் தலைவர்.
ம்ம்ம்...
பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட சுமார் 5,000 கோடி ரூபாய் முதலீட்டுப் பணத்தில் கணிசமான அளவு தனிப்பட்ட நிறுவனங்களுக்கும் சொத்துகள் வாங்குவதற்கும் சட்டவிரோதமாகத் திருப்பியதாகப் பிரேம் குமார் மீது குற்றச்சாட்டு.
அடடே...ம்.
கேரள ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி:
- முதலீட்டாளர்களின் பணம் பிரேம்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதாகக் குற்றச்சாட்டு.
- சுமார் 17 துணை நிறுவனங்கள் மூலம் பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றதாக விசாரணைத் தகவல்.
- ஹோட்டல்கள், திரையரங்குகள், சுற்றுலா விடுதிகள், நிலங்கள் வாங்க முதலீட்டுப் பணம் பயன்படுத்தப்பட்டதாகப் புகார்.
- கோழிக்கோடு நடக்காவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு பின்னர் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று பட்டியலிட்டார் பருந்தார்.
சரிங்க பருந்தாரே...இதில் நியூஸ் தமிழ் சேனல் பெயர் எதற்கு அடிபடுகிறது? என்று கேட்டோம்.
நியூஸ் தமிழ் இயக்குநர் சகிலன் முதலமைச்சர் ஜோசப் விஜயை சந்திக்கச் சென்றிருந்தபோது எடுத்துக்கொண்ட படத்தில் பிரேம்குமாரும் அவர்களோடு நின்று 'போஸ்' கொடுத்தார். அவரை நியூஸ் தமிழ் தொலைக்காட்சி இயக்குநர் என்று குறிப்பிட்டு மக்கள் தொடர்புத்துறை படத்தை வெளியிட்டிருந்தது.
ஆனால், அப்படி யாரும் நியூஸ் தமிழ் நிறுவனத்தில் இயக்குநர்களாக இல்லை என்று இன்று அந்தத் தொலைக்காட்சி அறிவித்திருக்கிறதே என்று கேட்டோம்.
சரிதான்...ஆனால் சவுத் பர்ஸ்ட் எனும் இணைய இதழுக்கும், கேரள ஊடகங்களுக்கும் விளக்கமளித்துள்ள நியூஸ் மலையாளம் 24 X 7 தொலைக்காட்சி மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி, "கைது செய்யப்பட்டுள்ள பிரேம்குமார் நியூஸ் மலையாளம் தொலைக்காட்சியின் நேரடிப் பங்குதாரர் என்றும் அதே சமயம் நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் அவர் இயக்குநர் அல்ல" என்றும் தெரிவித்துள்ளார் என்றார் பருந்தார்.
ஆஹான்...! தலை சுத்துதே பருந்தாரே என்றோம்.
அதெல்லாம் அப்படித்தான்...பூவை பூ என்றும் சொல்லலாம் புய்ப்பம் என்றும் சொல்லலாம். சரி..சுருக்கமாக நாம் புரிந்துகொள்வோம். நியூஸ் மலையாளம் சேனலில் பிரேம்குமார் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது, அவ்வளவுதான் புரிகிறதா என்று கேட்டார் பருந்தார்.
புரிகிறது பருந்தாரே...அனால் அவரது இந்தப் பணம் அந்த பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் ஹவுசிங் எனும் கூட்டுறவு சங்கத்தில் (BLM) முதலீடு செய்த மக்களின் பணமாக இருந்தால்...?! என்று இழுத்தோம்.
அப்படி இருந்தால் சிக்கல்தான் என்ற பருந்தார், விசாரணையில் பிரேம்குமார் காட்டும் கணக்குகள், முதலீட்டாளர்களுக்குத் திருப்பிச் செலுத்த அவரிடம் உள்ள பணம், சொத்து ஆகியவற்றையெல்லாம் கணக்குப் பார்ப்பார்கள். அதன் பிறகே நடவடிக்கை இருக்கும், ஒருவேளை அவர் போட்ட முதலீட்டுப் பணத்தை அவரிடமே திருப்பிக்கொடுத்து அவரை பங்குதாரரில் இருந்து நியூஸ் மலையாளம் நிர்வாகம் நீக்கலாம். ஆனால் இதுபோன்ற சமயங்களில் நிறுவனச் சட்டங்கள் என்ன சொல்கின்றன என்று பார்க்கவேண்டும் என்று கூறிவிட்டு தமிழ்நாட்டுப் பத்திரிகை உலகச் செய்திக்கு வந்தார்.
ஜெம் வீரமணி செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர்களை மிரட்டி, அவதூறு பரப்பிய வழக்கில் நக்கீரன் நிருபர் தாமோதரன் பிரகாஷ், தினகரன் செய்தியாளர் சரத், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவரும், தலைமைச் செய்தியாளருமான சுரேஷ் வேதநாயகம் ஆகியோர் முன்பிணை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்கள். அதன் மீது நவம்பர் 2 அன்று விசாரணை.
ம்....
இதற்கிடையில் சுரேஷ் வேதநாயகத்தைப் பணியிலிருந்து நீக்க அவர் பணியாற்றும் நிறுவனத்தின் தலைமை மேலாண்மை இயக்குநரகம் உத்தரவிட்டிருப்பதாக ஒரு தகவல் கசிகிறது. ஆனால் அதிகாரப் பூர்வத் தகவல் வெளியாகவில்லை.
ஓஹோ...!
"கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் விளக்கம் கேட்கலாம்" என்று அவரது தலைமை நிர்வாகி மேலிடத்தில் கேட்டாராம். "ஒரு விளக்கமும் வேண்டாம் FIR போட்டாச்சு, முன்பிணைக்கும் போகிறார்கள்..இன்னும் என்ன அவகாசம்?!" என்கிற ரீதியில் அவரிடம் இயக்குநரகம் கேட்டதாம். அந்தச் செய்தியாளருக்கு அளவுக்கு அதிகம் இடம் கொடுத்ததாக அந்த நிர்வாகி மீதும் தலைமை அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்.
ம்...
இப்படி ஒரு இடியாப்ப சிக்கலில் அந்த இருவர் இருக்கும் நிலமையில், "நான்தான் இனி செய்தித்தாளுக்கும் தலைமை என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் 'உற்சாக நேரத்தில்' சொல்லி 'சீயர்ஸ் 2.50' என்கிற ரீதியில் காலரை தூக்கிவிட்டுக் கொள்கிறாராரம் அந்தப் பகலவன் செய்தி ஆசிரியர்.
ஓ..இது வேறயா ! என்றோம்
ஆமாம், ஏற்கனவே மெயின் செய்தி, 24 மணி செய்தி ஆகிய இரண்டு பதவிகளும் தன் வசம் இருப்பதால் நாளிதழும் தன்வசம் வந்துவிட்டால் அடுத்த CEO தான்தான் என்கிறாராம்.
அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போக் காலியாகும் என்று பார்க்கிறாராம் என்று சிரித்துக்கொண்டே கேட்டோம்...
என்ன கருமமோ என்று சொன்ன பருந்தார், நக்கீரன் கோபால் மீது கொடுக்கப்பட்ட பத்திரிகையாளர் ஓய்வூதியத்தில் மோசடி செய்ததாகக் கூறப்படும் புகாரில் அவரைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு மக்கள் தொடர்புத்துறை உயர் அதிகாரிகள் முயற்சி செய்கிறார்களாம் என்ற பருந்தாரிடம்,
அவர்களுக்கு என்ன காப்பாற்ற வேண்டிய அக்கறை என்று கேட்டோம்.
நக்கீரன் கோபால் உறுப்பினராக இருந்த அரசு பத்திரிகையாளர் நலக் குழுதான் இந்தப் பத்திரிகையாளர் அல்லாத பிற பிரிவில் வேலை செய்தவர்களின் ஓய்வூதிதிற்கும் ஒப்புதல் கொடுத்துள்ளதாம்.
அதாவது தானே குண்டு வச்சு தானே எடுப்பது... அப்படியா என்று கேட்டோம்.
இல்லை, தானே குழி தோண்டித் தானே படுத்துக்கொள்வது என்று திருத்திய பருந்தார், தனது நிறுவனத்தில் ஒரு வாட்ச்மேன் வேலை செய்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் ஓய்வு பெரும் காலத்தில் அவரை 'உதவி ஆசிரியர்' ஆக்கிவிடுவது...அதாவது பெயருக்கு.
ஓ....
பிறகு அவருக்கு ஓய்வூதியம் வாங்கிக் கொடுத்து விடுவது...
அடடே..இது நல்லா இருக்கே.
இப்படித்தான் மோசடி நடந்திருப்பதாகப் புகார்.
ஓ....
அந்த ஒப்புதல் கொடுக்கும் குழுவின் தலைவர் மக்கள் தொடர்புத்துறையின் இயக்குநர்.
புரிகிறது பருந்தாரே...இப்போ நக்கீரன் கோபால் மீதான புகார் மீது முதலில் விசாரணை மேற்கொண்டு அவர் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுத்து அந்த பத்திரிகையாளர் அல்லாத நபர்களின் ஓய்வூதியத்தை உடனே நிறுத்த வேண்டும் இல்லையா...என்று கேட்டோம்.
ஆமாம்...அத்தோடு நக்கீரன் கோபால் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக...
அப்படியானால் கமிட்டி மற்றும் அதன் தலைவர் மீதும் நடவடிக்கை பாயுமே....என்று கேட்டோம்.
இது ஒரு கூட்டுத் தவறுதான். ஆவணங்கள் சரி பார்த்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் விட்டது அந்தக் குழு மற்றும் அதிகாரிகளின் தவறும்கூட என்ற பருந்தாரிடம்,
ஓ...இதனால்தான் மக்கள் தொடர்புத்துறை நக்கீரன் கோபாலைப் பாதுகாக்க முயற்சிக்கிறது என்று சொன்னீர்களா ?! என்று கேட்டோம்.
ககக போ...என்ற பருந்தார் தவறு எங்கு நடந்துள்ளது என்று பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. மக்கள் பணத்தைத் தொடமாட்டோம், தொட்டவர்களை விடமாட்டோம் என்று கூறும் முதலமைச்சர் ஆட்சியில் இருக்கும்போது இது போன்ற மோசடிகள் மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டிய நிலையில் மக்கள் தொடர்புத்துறை உள்ளது என்றார் பருந்தார்.
உண்மைதான் பருந்தாரே..உண்மையில் பத்திரிகைத் துறையில் உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்து இறுதி வரை வறுமையில் வாடிய பத்திரிக்கையாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் கோபால் கையைக் காட்டுவோருக்கெல்லாம் கொடுத்தால் பாதிக்கப்படுவது உண்மையான பத்திரிகையாளர்கள்தானே.. எப்படியெல்லாம் 'பவரை மிஸ்யூஸ்' செய்திருக்கிறார்கள் என்றோம்,
ஆமாம்...பார்ப்போம் என்று சொன்ன பருந்தார், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.
ம்....பார்த்தோம் என்றோம்.
மரியாதை செலுத்தப் புறப்படுவதற்கு முன்னதாகவே முதலமைச்சரின் மிக நெருங்கிய உறவில் ஒரு பெரிய அம்மையார் தவறிவிட்டதாகத் தகவல்.
ஓ...
ஆனால், முதலில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டே அங்கு சென்றிருக்கிறார் என்ற பருந்தார்,
விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் காவல்துறை வாகனத்தை விட்டு இறங்கும்போது, திமுகவின் தமிழன் பிரசன்னா "என்ன ஷேவ் பண்ணாம இருக்கீங்க என்று கேட்டாராம்." அதற்கு, "நான் என் முகத்தையே இன்னும் பார்க்கலை" என்றாராம் அன்பில். சிறையில் சப்பாத்திதான் தருகிறார்கள், எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றும் சொன்னாராம்.
அதெல்லாம் இனி A வகுப்பு மரியாதை கிடைக்கும் என்றோம் நாம்.
ஆமாம், காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு என்ற பருந்தாரிடம்,
இது என்ன அமைச்சர்கள் வாரமா ? என்று கேட்டோம்.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று சொல்லிவிட்டு ஜிவ்வென்று பறந்தார் பருந்தார்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Wow
2
Sad
0
Angry
0
Comments (0)