மேக்கேத்தாட்டு அணை கூடாது: ஒற்றை வரித் தீர்மானம் இயற்றக் கோரி புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்

மேக்கேத்தாட்டு அணை கட்டக்கூடாது என ஒற்றை வரித் தீர்மானம் இயற்ற புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தி போராட்டம் நடத்தியது

Jun 26, 2026 - 17:24
Updated: 10 days ago
0 18
மேக்கேத்தாட்டு அணை கூடாது: ஒற்றை வரித் தீர்மானம் இயற்றக் கோரி புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்

"மேக்கேத்தாட்டு அணை கூடவே கூடாது" என்று ஒற்றை வரித் தீர்மானம் ஒன்றை புதுச்சேரி அரசு இயற்ற வேண்டும் என்று கோரி காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம் நடத்தியது.

காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டு அணை கட்டலாமா கூடாதா என்று ஆராய ஒரு தீர்ப்பாயம் வேண்டுமென்ற தமிழ்நாடு அரசின் துரோகத் தீர்மானத்தைப் பின்பற்றாமல், அணை கூடவே கூடாது என்று புதுச்சேரி அரசு தீர்மானம் நிறைவேற் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அதேபோல, கர்நாடகத்தின் அடாவடியை முறியடிக்க, கர்நாடகப் பொருட்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் தடை விதித்து பொருளியல் முடக்கத்தை அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம், புதுச்சேரி அண்ணா சிலை அருகே, இன்று (25.06.2026) காலை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு, திரு. கோ.அ. செகன்நாதன் (மக்கள் வாழ்வுரிமை இயக்கம்) தலைமை தாங்கினார். காவிரி உரிமை மீட்புக் குழு புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் திரு. இரா. வேல்சாமி தொடக்கவுரையாற்றினார்.

த.தே.பே. துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி, தமிழர் களம் தலைவர் திரு. கோ. அழகர், ஆறாம் திணை மக்கள் இயக்கத் தலைவர் திரு. ஆ. ஜெகதீசன், நாம் தமிழர் கட்சி புதுச்சேரித் துணைத் தலைவர் திரு. த. இரமேசு, தோழர் பிரியா (மகளிர் ஆயம், புதுச்சேரி), தொரவி), தோழர் க. முருகன் (தொரவி த.தேபே. கிளைச் செயலாளர்), தோழர். பா. குமார் (ஐவேலி த.தேபே. கிளைச் செயலாளர்), தெய்வத் தமிழ்ப் பேரவை புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் திரு. சிவ.மு. இராசாராம் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

நிறைவில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், ரையாற்றினார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் பாகூர் அன்புநிலவன் சுரேசுபாபு, விசய பாலன், ஐயா அரங்கதுரை, ஐயா ஆறுமுகம் ஐயா முருகவேல், வினோத், மகளிர் ஆயம் தோழர்கள் உமா நந்தினி, கௌசல்யா, சிந்து நாம் தமிழர் கட்சி ம.செ. இளங்கோவன், மதியழகன் கார்த்திகேயன்

தோழர் தொரவி முத்து நன்றி கூறினார்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User