மு.க.ஸ்டாலின் ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட பெண் டிஜிபி சீமா அகர்வால்? விஜய் செய்த தரமான நடவடிக்கை!

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட பெண் "டிஜிபி" - விஜய் செய்த தரமான சம்பவம் ! - தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்-

Jun 26, 2026 - 15:56
Updated: 10 days ago
0 9
மு.க.ஸ்டாலின் ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட பெண் டிஜிபி சீமா அகர்வால்? விஜய் செய்த தரமான நடவடிக்கை!

- தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள் -

சன்னல் தட்டும் ஓசை கேட்டது, திறந்தால் பருந்தார் விருக்கென்று வந்து நேரே மேசையின் மீது அமர்ந்தார். குடிக்க பாதாம் பால் கிடைக்குமா என்றார், இதோ தருகிறோம் என்று கூறினோம்.

பிறகு பேசத் தொடங்கியவர் முதலமைச்சர் ஜோசப் விஜய் எல்லோரும் எதிர்பார்த்ததைவிட ரொம்ப ஷார்ப்பாகவும், நிதானமாகவும், உறுதியாகவும் செயல்படுகிறார்னு அதிகாரிகள் மட்டத்திலேயே பேச்சு என்றார்.

ம்.

அதிமுக, திமுக செய்த தவறுகளை குறிப்பாக, எதற்காக அந்தக் கட்சிகளை மக்கள் வெறுத்தார்களோ அதையெல்லாம் துல்லியமாகப் புரிந்து கொண்டு அந்தந்த விசயங்களை மிகச் சரியாகத் தொட்டு சரி செய்கிறார் விஜய்.

அடடே...

ஆமாம், கடந்த மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஒரு காவல்துறை அதிகாரியும், ஒரு ஐஏஎஸ் அதிகாரியும்தான் நிழல் முதலமைச்சர்கள் போல செயல்பட்டாங்க இல்லையா என்று நிறுத்திவிட்டு பாதாம் பாலை வாங்கிக்கொண்டார் பருந்தார்.

ஆமாம் என்றோம் நாம்.

அந்த ஐபிஎஸ் அதிகாரிதான் காவல்துறைத் தலைவர் நியமனத்துல உள்ளே புகுந்து கட்டையைக் கொடுத்துட்டு இருந்தார் என்று நிறுத்திவிட்டு பாலை உறிஞ்சினார்.

அதாவது அவர் ஏடிஜிபியாக இருந்தார். அவர் டிஜிபி ஆகத் தகுதியாகப் பணி மூப்பு வரும்வரை வேறு யாரும் டிஜிபி ஆகக் கூடாதுன்னு கட்டயைப் போட்டார், சரிதானே.

ஆமாம், அதுமட்டுமல்ல கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தோட அப்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் பதவிக்காலம் முடிஞ்சுது. அதற்கு மூனு மாசம் முன்னாடியே அடுத்த டிஜிபியாக யார் யார் தகுதி படைச்சவங்க அப்படினு ஒரு பட்டியலை இந்தியப் பணியாளர் தேர்வு ஆணையத்துக்கு (UPSC) அனுப்பனும்.

ஆமாம், அனுப்பலை. அதோடு மட்டுமல்ல பணி மூப்பு அடிப்படையில் மிகவும் பின்னாடி இருந்த வெங்கட்ராமன் அப்படினு ஒருத்தரை பொறுப்பு டிஜிபி ஆக்குனாங்க என்று எடுத்துக் கொடுத்தோம் நாம்.

அப்படியே தேர்தல் வரை இழுத்துட்டா மறுபடியும் திமுக ஆட்சி வந்தவுடனே தான்தான் டிஜிபி அப்படினு கனவு கண்டுட்டு இருந்தாரே அந்த நிழல் டிஜிபி என்றவரிடம்,

ஆமாம், ஆனா தேர்தல் ஆணையம் கண்டுபுடுச்சித் தொக்காத் தூக்கி காத்திருப்போர் பட்டியலில் வச்சுட்டாங்கதானே என்றோம்.

மிகச்சரி...அந்த நிழல் அதிகாரியால் இருட்டடிப்பு செய்யப்பட்ட அதிகாரிதான் சீமா அகர்வால். சங்கர் ஜிவாலுக்கு அடுத்து உண்மையில், நியாயமாக டிஜிபியை நியமிச்சிருந்தா சீமா அகர்வால்தான் டிஜிபி ஆகியிருக்கனும். அப்படி இல்லைனா இப்போதைய டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலாவது ஆக்கப்பட்டிருக்கனும். ஆனா வெங்கட்ராமன் அதுவும் பொறுப்பு டிஜிபியாக ஆக்கப்பட்டார்.

ஆமாம்,

கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகியிடுச்சு. இதுல சீமா அகர்வால் வரும் (ஜூலை) 30 ம் தேதியுடன் பணியில் இருந்தே ஓய்வு பெறப்போகிறார்.

அடடா....ஒரு அதிகாரிக்கு பணி மூப்பு, அனுபவம், நற்பெயர் இருந்தும் அவரை டிஜிபி ஆக்கவிடாமல் தடுத்து 10 மாதங்களாகக் காலம் தள்ளிப்போடுவது எவ்வளவு பெரிய அநீதி ?! என்று கேள்வி எழுப்பினோம்.

உண்மை....பெண்ணுரிமைக்கு நாங்கதான் மொத்தக் குத்தகைதாரர்னு சொல்லிக்கிற மு.க.ஸ்டாலினின் திமுக ஆட்சியில ஒரு டிஜிபி தரத்துக்கு உயர்ந்து நிற்கும் ஒரு பெண் அதிகாரி திட்டமிட்டு வஞ்சகத்தோடு புறக்கணிக்கப்பட்டு அவர டிஜிபி நாற்காலியில் கடைசிவரை உட்காரவிடாம செஞ்சிருக்கிறாங்க என்று கவலைப்பட்டார் பருந்தார்.

கொடுமை....இதுகூடத் தெரியாமலா மு.க.ஸ்டாலின் முதலமைச்சரா அதுவும் காவல்துறைக்குப் பொறுப்பா இருந்தாரு.

தெரியல...ஆனா, இதற்காகவே அந்தப் பெண் அதிகாரி சீமா அகர்வாலை தீயணைப்புத் துறை வாரியத்தின் தலைவர் பொறுப்பில் அமர வைத்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்.

ஆனாலு அவர் பணி ஓய்வு பெற இன்னும் 4 நாட்கள்தானே இருக்கு.

ஆமாம், இருந்தாலும் அந்த அம்மையாருக்கு ஒரு ஆறுதல் தரவும், அவருக்கு ஒரு அங்கீகாரம் தரவும் முதலமைச்சர் இந்தப் பொறுப்பை கொடுத்திருக்கார்.

தீயணைப்புத் துறை வாரியமே சங்கர் ஜிவாலுக்காக உருவாக்கப்பட்ட வாரியம்தானே என்று கேட்டோம்.

ஆமாம்...அந்த வாரியத்தில்தான் சீமா அகர்வால் அமரவைக்கப்பட்டுள்ளார் என்று சொல்லிவிட்டு அதே சன்னல் வழியாகப் பறந்து மேக மூட்டத்தில் மறைந்து போனார் பருந்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User