வேலுநாச்சியாருக்குக் குயிலி | வேலுப்பிள்ளையின் மகனுக்கு மில்லர் – தமிழர் வரலாற்று நாயகர்கள்

வேலுநாச்சியார், குயிலி, மில்லர், கரும்படை, இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டம், பவுத்த மதமும், சிங்கள மொழியும் வந்த வரலாறு மற்றும் வரலாற்றுப் பின்னணி குறித்து விரிவான சிறப்புக் கட்டுரை.

Jul 05, 2026 - 10:22
Updated: 1 day ago
0 42
வேலுநாச்சியாருக்குக் குயிலி | வேலுப்பிள்ளையின் மகனுக்கு மில்லர் – தமிழர் வரலாற்று நாயகர்கள்

வேலுநாச்சியாருக்குக் குயிலி | வேலுபிள்ளையின் மகனுக்கு மில்லர் !

--மெய் சிலிர்க்க வைக்கும் தமிழர் வரலாற்று நாயகர்கள்

பிரிடிஷ் ஆக்கிரமிப்பு ஆட்சிக்கு முன்பு இந்தியா போலவே இலங்கையும் ஒரே நாடாக இருந்திருக்கவில்லை. தனித் தனி மொழிவழி நாடுகளாகத்தான் இருந்தன.

இந்தியா கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை பல்வேறு மொழி பேசும் தனித்தனி நாடுகளாக இருந்தன. இலங்கை நாடும் தமிழ் பேசும் யாழ்ப்பாணம் மற்றும் சிங்களம் பேசும் கண்டி என்று இரண்டு மொழிவழி நாடுகளாகத் தனித்தனியாகவே இருந்தன. இது பிரிட்டிஷ் ஆட்சி வருவதற்கு சில காலம் முன்புவரை இருந்த நிலை.

இதில் வியப்பு என்னவெனில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திற்கு முன்புவரை ஆசிவகம், சன்மார்க்கம், சைவம், வைணவம், செயினம், புத்தம் உள்ளிட்ட சமயங்கள் மட்டுமே இந்திய நிலப்பரப்பில் இருந்தன. இந்து மதம் என்ற ஒன்று உருவாகியிருக்கவேயில்லை. கிறித்தவமும், இஸ்லாமும் உருவாகியிருக்கவில்லை.

இதில் இலங்கையில் சிங்களம் அந்த மண்ணின் பூர்வகுடி மொழியோ, மக்களோ அல்ல. சிங்கள வரலாறு கூறும் மகாவம்சமே சிங்கள மக்கள் இப்போதைய இந்தியாவின் ஒரிசா (கலிங்கம்) நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் என்றே கூறுகிறது. அதிலும் விஜயன் எனும் இளவரசன் தலைமையில் வெறும் 700 இணையர்கள் மட்டுமே வந்ததாகக் குறிப்பிடுகிறது. இவர்கள் வந்த காலம் கிமு ஆறாம் நூற்றாண்டின் இறுதியில். அதாவது கிமு.543 ம் ஆண்டு.

இந்த விஜயனின் தாய் தந்தை பெயர்கள் சிங்க சீவலி, சிங்க பாகு. இந்த "சிங்கம்"

என்பதுதான் "சிங்கள - சிம்ஹளா"என்று மருவியுள்ளது. சிம்ஹளா எனும் சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் சிங்கம் என்று பொருள். சிம்மம் என்று தமிழில் சிங்கத்திற்குப் பெயர் வழங்கப்படுகிறது. இதனல்தான் சிங்கள அரசின் கொடியில் சிங்கம் படம் உள்ளது.

இந்த விஜயனின் வருகைக்கு 300 ஆண்டுகள் பின்பாக தானும் புத்த மதத்திற்கு மாறி எல்லோரையும் புத்த மதத்திற்கு மாற்றிக்கொண்டிருந்த அசோகர் கிமு.3 ம் நூற்றாண்டில் - கிமு.243 ம் ஆண்டில் தனது மகனும், புத்த மதகுருவுமான மஹிந்தவை இலங்கைக்கு அனுப்புகிறார்.

மஹிந்த அங்கே அப்போது அனுராதபுரத்தை ஆட்சி செய்துவந்த தேவநம்பிய தீசன் எனும் மன்னனை புத்த மதத்திற்கு மாற்றுகிறார். தேவநம்பிய தீசனின் தந்தை பெயர் மூத்த சிவன்.

புத்தமதம் முதன்முதலாக இலங்கைக்குள் கால் வைத்த காலம் இந்த தேவநம்பிய தீசன் காலம்தான். அதுவரை இலங்கை மண்ணில் பின்பற்றப்பட்டு வந்த நெறி சிவ நெறி - சைவ சமயம்.

வரலாற்றுக் காலங்களில் ஒரு மன்னர் ஒரு மதத்திற்கு மாறிவிட்டால் அந்த நாட்டு மக்கள் அனைவருமே விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மக்கள் அந்த மதத்திற்கு மாறியாக வேண்டிய நிலை.

இப்படித்தான் இலங்கையின் தெற்கு, பவுத்த மதத்திற்கு மாறியது. சைவ சமயத்தைப் பின்பற்றிய தமிழர்கள் பவுத்த மதத்திற்கு மாற்றப்பட்டதும் இப்படித்தான்.

சிங்கள மொழியின் வரிவடிவம் தமிழின் வட்ட வடிவ வட்டெழுத்துதான். சிங்கள மொழியைத் தனிதனியே கழற்றி பிரித்துப்பார்த்தால் அதில் தமிழ், பாலி, சமஸ்கிருதம், டச்சு உள்ளிட்ட பல மொழிகள் கலந்து கிடைக்கும். அது ஒரு பல கலப்பால் உருவான ஒரு மொழிதான்.

ஆக, இலங்கையின் தெற்கில்தான் இத்தகைய பலகலவை இனம், மொழி கலந்த ஒரு கலப்படம் உருவானது, மதமும் மாற்றம் பெற்றன. ஆனால் வடக்கில் அன்றுமுதல் இன்றுவரை சிவ நெறி - சைவ சமயமே செழித்து ஓங்குகிறது.

இதிலிருந்தே இலங்கை ஒரே நாடு அல்ல, அதிலும், தமிழர் நாடு தனி நாடாகவே பல ஆயிரமாண்டுகாலம் இருந்து வந்திருக்கிறது என்பது புரியும்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் விடுதலை கொடுக்கும்போது எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருந்த தெற்கின் சிங்கள மக்களிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

ஆகவே, இலங்கை வடக்கில் கோரப்படும் தனி நாடு என்பது புதிதல்ல...ஏற்கனவே இருந்த தங்கள் நாட்டைத் தங்களிடமே கொடுத்துவிடுங்கள் எனும் தமிழர்களின் கோரிக்கைதான் அது.

சரி ஒரே நாடாக சேர்ந்து வாழ்வோம் என்று இருந்த தமிழர்களை வேறுபடுத்தி, தாழ்த்தி நடத்த ஆரம்பித்தார்கள் சிங்கள ஆட்சியாளர்கள். எடுத்துக்காட்டாக சிங்களவன் 50 மதிப்பெண்கள் பெற்றால் அரசு வேலை, தமிழர்கள் 70 மதிப்பெண்கள் எடுக்கவேண்டும், அதிலும் அவர்களுக்கு உயர் கல்வி நிலையங்களில் இடமே கொடுக்கப்படாது. சிங்களவர்களுக்குப் போக மிச்ச மீதம் இருந்தால் கிடைக்கும்.

இப்படி எல்லாவற்றிலும் தமிழர்களைத் தாழ்த்தி, அடக்கி, ஒடுக்கி ஆட்சி செய்தது மட்டுமல்லாமல் 1950 ம் ஆண்டுகள், 1970 ம் ஆண்டுகள், 1983 ம் ஆண்டுகள் காலகட்டங்களில் வெறிகொண்டு தமிழர்களை ஓட ஓட வெட்டிப் படுகொ*லை செய்தார்கள் சிங்கள பவுத்த இனவெறியர்கள். தமிழர்களின் வீடுகள், கடைகளை சூறையாடினார்கள்.

வேறு வழியின்றித்தான் இடைப்பட்ட 1976 ம் ஆண்டில் தமிழர்கள் வட்டுக்கோட்டை எனும் இடத்தில் ஒன்றுகூடி எங்கள் நாட்டை எங்களிடம் கொடுங்கள், தனி நாடு கொடுங்கள் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

அறப்போராட்டம் நடத்தினால் எடுபடாது எடுபடாது என்று கூறி ஆயுதப் போராட்டத்தை எடுத்தனர் தமிழர் இளையோர்கள்.

அப்படித் தொடங்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் ஒரு வடிவாக அவர்கள் எடுத்ததுதான் "உயிராயுதம்".

தங்களின் உயிரையே ஆயுதமாக்கி எதிரி இராணுவத்தை அழிப்பதும் விரட்டி அடிப்பதுமான உத்திதான் இந்தக் கரும்புலிப் படை.

வீரமங்கை வேலுநாச்சியார் படையணியில் ஆங்கிலேயே ஆயுதப் படைக் கிடங்கை அழித்தொழிக்க "குயிலி" எனும் வீரத் தமிழச்சி உடலில் எரியும் நெருப்பு, வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு கிடங்கினுள் பாய்ந்தாள்.

அதுபோல நெல்லியடி எனும் இடத்தில் முகாமிட்டுத் தமிழர்களை அழிக்கக் காத்திருந்த இலங்கை இராணுவ முகாமுக்குக்குள் வெடிகுண்டுகள் நிரப்பிய ஒரு சரக்குந்தை (வாகனத்தை) ஒட்டிச்சென்று மோத வைத்து வெடிக்கச் செய்தார் மில்லர் எனும் இளைஞர்.

பிறகுதான் அந்த மில்லரின் அம்மா வள்ளிபுரம் கமலாம்மாவுக்கே தெரியும் தமது மகன் ஒரு கரும்புலி என்பது. மகனை இழந்த வருத்தம் இருந்தாலும், நாட்டுக்காக உயிர்துறந்தான் மகன் என்று பெருமை கொண்டார் இந்தத் தாய். (படத்தில் இருகைகளையும் தூக்கி நிற்கும் தாயார்).

வரலாற்றில் குயிலிக்குப் பிறகு மில்லரின் பெயர் இடம்பெற்றது.

தாய்நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த மில்லரைப் போல 100க் கணக்கான கரும்புலிகள் அந்த விடுதலைப் போராட்டக் களத்தில் தமிழர் இன விடுதலைக்காக உயிராயுதம் தாங்கிப் போராடினார்கள்.

அந்த முதல் உயிராயுதத்தின் பெயர் மில்லர். அந்த மில்லரின் நினைவாகவே ஒவ்வொரு ஆண்டும் கரும்புலி நினைவு நாள் அனுசரிக்கப் படுகிறது.

இன்று ஜூலை 5 - கரும்புலி நாள் !

What's Your Reaction?

Like Like 4
Dislike Dislike 0
Love Love 4
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User