சென்னை நிருபர்கள் சங்கத் தேர்தல் வழக்கு: மனு தள்ளுபடி | உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு

மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு தேர்தலுக்கு எதிரான மனுவை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தல் செல்லுபடியாகும் எனத் தீர்ப்பு.

Jul 03, 2026 - 22:01
Updated: 3 days ago
0 47
சென்னை நிருபர்கள் சங்கத் தேர்தல் வழக்கு: மனு தள்ளுபடி | உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு

மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு எனும் சென்னை நிருபர்கள் சங்கம் கடந்த 1956 ம் ஆண்டு ஏப்ரல் 26 ம் தேதி தொடங்கப்பட்டதுஇந்த அமைப்பு இந்தியாவின் மிகப் பழமையான செய்தியாளர் சங்கங்களில் ஒன்றாகும்.

அன்றைய காலகட்டம் இன்றுபோல அலைபேசி, இணையதள வசதிகள் இல்லாத காலம்.

பொதுவாக எல்லா அமைச்சர்களும், முதலமைச்சர்களும் பத்திரிகையாளர்களை நேரடியாக சந்திக்கும் வழக்கம் கொண்டவர்கள் அல்ல. சிலர் கூச்ச குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நல்லுறவை மேம்படுத்தவும், பொதுவாகவே சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை குறித்த கால இடைவெளிகளில் அழைத்து அவர்களையும், செய்தியாளர்களையும் நேரடியாகச் சந்திக்க வைப்பதுமான "பத்திரிகையாளர் சந்திப்பு - ப்ரெஸ் மீட்" நடத்தும் வழக்கத்தைக் கொண்டிருந்தது மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு எனும் சென்னை நிருபர்கள் சங்கம் மற்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆகியவை.

அந்தவகையில் 1968 ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் அறிஞர் அண்ணாவே நேரடியாக வருகை தந்து பத்திரிகையாளர்களை சந்தித்த வரலாற்றுப் புகழ் வாய்ந்த அமைப்பு மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு எனும்  சென்னை நிருபர்கள் சங்கம்.

அரசியல் ஆளுமைகளை அழைத்து பத்திரிகையாளர்களை சந்திக்க வைக்கும் நிகழ்வுகள் கடந்த சுமார் 15 ஆண்டுகளாக அப்படியே குறைந்து போய் தற்போது முற்றாக அந்த வழக்கம் அற்றுப்போய் விட்டது.

இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த சென்னையின் பத்திரிகையாளர் அமைப்புகளில் அரசியல் தலையீடுகள் வெளிப்படையாக ஏற்பட்டு பத்திரிகையாளர் அமைப்புகளின் மாண்பு மண்ணோடு மண்ணாகிக் கொண்டிருக்கின்ற. இன்று அந்த அமைப்புகள் அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகை ஊடகர்கள் ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஆக்கிரமிக்கும் அவல நிலைக்கு ஆளாகிவிட்டன.

மக்கள் நலன் சார்ந்த தொழிற்சங்க வாதிகளால் நடத்தப்பட்டு வந்த அமைப்புகள்கூட இப்போது அரசியல் கட்சி சார்ந்தவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டு வருகின்றன.

இதற்கு அடிப்படையான காரணம் செய்தித் தொலைக்காட்சி ஊடகங்கள் அரசியல் கட்சியினரால் தொடங்கி நடத்தப்படுவதாகும்.

கடந்த 25 ஆண்டுகளாக அரசியல் சார்பற்று நடந்து வந்த சென்னை பத்திரிகையாளர் மன்றதிற்குத் (சென்னை ப்ரெஸ் க்ளப்) தேர்தல் நடைபெறாமல் தள்ளிப்போன நிலையில் அதைக் காரணம் காட்டி திமுக ஆதரவு பத்திரிகை, ஊடகக் குழுமத்தினர் கடந்த (மு..ஸ்டாலின் தலைமையிலான) திமுக ஆட்சியில் அந்த அமைப்பைக் கைப்பற்றினர்.

அதன் தலைவராக திமுக ஆதரவு பத்திரிகையான தினகரன் நாளிதழின் செய்தியாளர் சுரேஷ் வேதநாயகமும், நிர்வாகிகளாக திமுக ஆதரவாளர்களுமே அதிக அளவில் அந்த அமைப்பில் உள்ளனர். அதற்கேற்ப பத்திரிகையாளர் மன்ற விதிகளுக்கு (பை லா) எதிராக சுமார் 800 பேரை உறுப்பினர்களாக சேர்த்து ஒருபக்கச் சார்பான தேர்தலை நடத்தினார்கள்.

ஏற்கனவே மெட்ராஸ் யூனியன் ப் ஜர்னலிஸ்ட் அமைப்பிலும் தலைவராக தினகரன் நாளிதழைச் சேர்ந்த செல்வின் வினோத்குமார் பொறுப்பில் உள்ளார். நிர்வாகிகளும் அத்தகைய ஆதரவாளர்களே.

இந்நிலையில் மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு அமைப்பையும் திமுக ஆதரவாளர்களே கைப்பற்ற முயன்றனர். சென்னை பத்திரிகையாளர் மன்றம் போலவே அதிலும் தங்களுக்கு ஆதரவான சுமார் 500-600 பேரை உறுப்பினர்களா சேர்ந்து அதையும் தேர்தல் எனும் பெயரில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி கைப்பற்றத் திட்டமிட்டனர்.

ஆனால் அவ்வாறு இல்லாமல் ஏற்கனவே இருந்த உறுப்பினர்களை வைத்து ஒரு தேர்தல் நடத்தப்பட்டு புதி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அந்தத் தேர்தல் செல்லாது என்று அறிவிக்கக்  கோரியும், புதிய உறுப்பினர்களை சேர்த்து மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும் என்றும் கோரியும் தினகரன் நாளிதழைச் சேர்ந்த வில்சன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் "நடத்தியது" போலவே ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிடையில், முந்தைய திமுக ஆட்சியின்போது "மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டைத் திறந்தால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை வரும்" என்று ஒரு பொய்யான வதந்தியைக் கிளப்பி காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுத்து அந்த அமைப்பின் கட்டடத்தை இழுத்து மூடினார்கள்.

வில்சனின் மனு மீதான விசாரணை கடந்த வாரம் வந்தபோது "தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிக்கை அளிக்கவேண்டும் அதே வேளை கில்டின் அன்றாடப் பணிகளில் தலையிடக்கூடாது"என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

மேலும், கில்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளாகப் பூட்டப்பட்டிருப்பதாகவும், தூய்மைப்படுத்தி அன்றாடப் பணிகளை செய்ய வேண்டும் என்றும் கில்டு அமைப்பின் துணைத் தலைவர் குமார் தரப்பில் கோரப்பட்டது. இதற்கு நீதிபதி வாய்மொழி ஒப்புதல் கொடுக்க, கில்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், வழக்கு மீண்டும் விசரணைக்கு வந்தபோது, தினகரன் வில்சன் தொடர்ந்த "புதிய உறுப்பினர்களைச் சேர்த்து, ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்" என்ற மனுவை கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனால், நடத்தப்பட்ட தேர்தல் செல்லும் என்பதும் அதே நிர்வாகிகளே மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டை நிர்வகிக்க உரிமை படைத்தவர்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரிப்போர்ட்டர்ஸ் கில்டு கட்டடத்தை மூடிவைக்க எந்த நீதிமன்ற உத்தரவும் இல்லாதிருந்த நிலையில் கடந்த திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கு கொடுத்த அழுத்தம் காரணமாகவே கட்டடம் மூடி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உரிமையியல் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட மனு மற்றும் அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்த தகவல்கள் உயர்நீதி மன்றத்திலும் எடுத்து முன்வைக்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக முற்றாக முடக்கப்பட்டிருந்த மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டை மீண்டும் திறந்து செயல்பட வைக்கும் இந்த பெரும்பணியில் ஈடுபட்டவர்கள் மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு துணைத் தலைவர் குமார் மற்றும் இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளன தேசியச் செயலாளர் கே.அசுத்துல்லா ஆகியோர். இந்த வழக்குகளை முன்னின்று நடத்தி வருபவர் உச்சநீதிமன் வழக்கறிஞர் திரு. ஜி.எஸ்.மணி அவர்கள். அவருக்கு மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டின் முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு பத்திரிகை ஊடக அமைப்புகள் எந்த ஒரு அரசியல் கட்சி சார்பானவர்கள் கைகளிலோ, அரசியல்வாதிகள் கைகளிலோ சென்றுவிடக் கூடாது என்பதே அரசியல் கட்சி சாராத பத்திரிகை ஊடகர்களின் ஒரே எண்ணமாக இருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User