தவெக ஆட்சியைக் கவிழ்க்க திமுக அதிரடி முயற்சி ! அவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ?! EXCLUSIVE

தமிழக அரசியலில் புதிய பரபரப்பு. தவெக அரசை கவிழ்க்க புதிய அரசியல் நகர்வுகளை மேற்கொள்கிறதா திமுக ? அவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானமா ? அதிரவைக்கும் அரசியல் சதுரங்கம்

Jul 02, 2026 - 20:37
Updated: 4 days ago
0 28
தவெக ஆட்சியைக் கவிழ்க்க திமுக அதிரடி முயற்சி ! அவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ?! EXCLUSIVE

--நாச்சி.செல்வராஜ், பத்திரிகையாளர்

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகக் கூட்டணி அரசு பதவியேற்று இரண்டு முறை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது.

இந் நிலையில் நிதிநிலைக் கூட்டத்தொடர் இந்த மாத இறுதியில் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.

நிதிநிலை அறிக்கை தயாரிப்பில் தீவிரம்

இதைத் தொடர்ந்து 34 துறைகளில் திட்டச் செயல்பாடுகள் குறித்து அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன் முடிவில் எந்தெந்தத் துறைகளுக்கு எவ்வளவு நிதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஒவ்வொரு துறைகளிலும், ஏற்கனவே நிலுவையில் உள்ள திட்டங்களின் நிலை, புதிய திட்டங்களை உருவாக்க வேண்டியதன் அவசியம், அதற்குத் தேவையான நிதிகளைப் பெறுவது தொடர்பாகவும் அமைச்சர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

இப்படி உற்சாகத்துடன் வெ தரப்பு நிதிநிலை அறிக்கைப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் திமுக வேறு வகைகளில் காய் நகர்த்தி வருகிறது.

ஆட்சி கவிழும் எனப் பரப்புரை

தமிழக வெற்றிக் கழக அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது, அது கவிழ்ந்து விரைவில் தேர்தல் வரும் என்று திமுக தரப்பில் பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை மு..ஸ்டாலின் வெளிப்படையாகவே மேடைகளில் பேசி வருகிறார்.

மு..ஸ்டாலின் ஒருபுறம் இப்படிப் பேசிக்கொண்டிருக்க, மறுபுறம் தங்களின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு திமுக தரப்பில் வலை விரிக்கப்படுவதாக வெ தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

அதன் ஒருபகுதியாக, இளையராஜா என்கிற ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு 35 கோடி தருவதாகப் பேச்சு வார்த்தை நடைபெற்றதாகவும், அதில் செந்தில் பாலாஜிக்குத் தொடர்பிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜிக்கு காவல்துறையினர் வலை வீசியுள்ளனர்.

ந்த "பேரம்" தொடர்பாக ஆறுக்கும் மேற்பட்டோரைக் கைது செய்து அவர்களிடம் சென்னைக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்சிக் கவிழ்ப்பு நகர்வு

சட்டமன்ற விதிகளின்படி ஒரு ஆட்சியின் மீது ஒருமுறை நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்த பிறகு, எதிர்க்கட்சிகள் சார்பில் மீண்டும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர குறைந்தபட்சம் ஆறு மாதம் இடைவெளி வேண்டும்.

கணிசமான அளவு வெ சட்டமன்ற உறுப்பினர்களை அசைத்து விட்டால் ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து "சட்டப்பேரவை வாக்கெடுப்பில்" வெ அரசுக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில் கவிழ்த்து விட முடியும்.

ஆனால் அதற்குத் தேவையான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை திமுகவுக்கு சாதகமாக இல்லாத நிலையிலும்கூட , அவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் அடுத்த ஆட்சிக் கவிழ்ப்பு ஆயுதத்தை கைகளில் எடுக்கிறது திமுக .

ஒருவேளை அவைத் தலைவர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றி பெற்று விட்டால் அது வெ அரசுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படும்.

இதனை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட வெ தரப்பு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. திமுகவின் இந்தத் திட்டத்தை முறியடிக்கக் காவல்துறை களமிறக்கப்பட்டுள்ளது.

வெ சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவுக்கு, தான் விரித்த வலையில் திமுகவே சிக்கிக் கொண்டுவிட்டது.

யாரெல்லாம் இந்த ஆட்சிக்கு எதிராகச் செயல்படுகிறார்களோ அவர்களையெல்லாம் உடனே கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கும்படி முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, ஆட்சி அமைப்பதற்கான தொடக்கத்தில் தமது கட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க வெ வாக்கெடுப்பு நடத்தியபோது அதிமுக எதிர்த்து வாக்களித்து தனது கட்சியின் எதிர்ப்பு நிலையை சட்டசபையில் பதிவு செய்தது. ஆனால் அதே அதிமுகவில் இருந்த வேலுமணி தலைமையிலான ஒரு அணி விஜய் ஆட்சிக்கு ஆதரவு அளித்தது. இதன் மூலம் விஜய் தலைமையிலான ஆட்சி 140க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுப் பெரும்பான்மையை நிரூபித்தது.

தற்பொழுது அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி தவெவில் நேரடியாக இணைந்து வருகின்றனர்.

மதிமுகவும் வெ தலைமையிலான கூட்டணியில் இணைந்திருக்கிறது.

ஆக, திமுகவின் இந்த ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டத்திற்கு எதிராக விஜய் ஒரு பெரும் படையைத் திரட்டி வருகிறார்.

வெ சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவுக்கு வீசிய வலை திமுகவுக்கு எதிராக பூமராங் போல திரும்பியிருக்கிறது.

திமுகவின் அடுத்த நகர்வு என்ன என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User