சாட்டை துரைமுருகனா? நாங்களா? முடிவு செய்யுங்கள் : சீமானிடம் கொந்தளித்த நாம் தமிழர் நிர்வாகிகள்

நாம் தமிழர் கட்சிக்குள் எழுந்துள்ளதாகக் கூறப்படும் அதிருப்தி, சாட்டை துரைமுருகன் தொடர்பான சர்ச்சைகள், சீமான் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டதற்கான பின்னணி மற்றும் கட்சி நிர்வாகிகளின் அதிருப்தி குறித்த தமிழ் ஊடகத்தின் பருந்தார் தகவல்கள்.

Jun 30, 2026 - 22:02
Updated: 6 days ago
0 789
சாட்டை துரைமுருகனா? நாங்களா? முடிவு செய்யுங்கள் : சீமானிடம் கொந்தளித்த நாம் தமிழர் நிர்வாகிகள்

சீமானிடம் கொந்தளித்த கட்சியினர் !

சுற்றுப் பயணத்தை ரத்து செய்த சீமான் !

நாம் தமிழரை ஊத்தி மூடும் சாட்டை அன் கோ?!! 

-தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்- 

வரும்போதே வழக்கம்போல இறக்கைகள் படபடக்க பரபரவென வந்து அலுவலகத்தில் அமர்ந்தார் பருந்தார்.

காற்று மிக மிக அதிகமாக வீசுகிறது, பறவைகளையே வானத்தில் காணோம் எப்படி நீங்கள் மட்டும் வந்தீர்கள் என்றோம்.

காற்றுப் புக முடியாத இடத்திலும் புகுந்து தகவல் எடுப்பதுதானே எமது வேலை என்று உடனே பந்தாக் காட்டினார் பருந்தார்.

வேகவைத்த நிலக்கடலைப் பருப்புகளை முன்னே வைத்தோம். எடுத்து உள்ளே தள்ளியவாறே பேசத் தொடங்கினார்.

நாம் தமிழர் கட்சி குறித்து அரசல் புரசலாகப் பேசப்பட்டு வந்தது எல்லாம் இப்போ அம்பலத்துக்கு வந்துவிட்டது என்று எடுத்தவுடன் சூடான தகவல்களோடு ஆரம்பித்தார்.

அதெல்லாம் தவெகவின் ரூட் மாஃபியாவின் சதி வேலை என்கிறார்களே தம்பி தங்கைகள்.

ஆமாம், கடந்த 14 ஆண்டுகளாக திக, திமுக சதி, இப்போ தவெக சதியா என்று கொக்கி போட்டார் பருந்தார்.

புரியலை பருந்தாரே...தெளிவாகச் சொல்லுங்கள் என்றோம்.

கடந்த 14 வருசமா கருணாநிதி, மு.க.ஸ்டாலின்தான் நாம் தமிழரை அழிக்க கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள் என்று மேடை தோறும் பேசி, நாம் தமிழரின் எதிரி திமுகதான்னு சீமான் கட்டமைச்சு வந்தார், இல்லையா !

ஆமாம், அதிலும் திராவிடத் திமுக....

அப்புறம் அது எப்படித் தேர்தலுக்கு முன்னாடி, அதிலும் மு.க.ஸ்டாலின் சீமான் சந்திப்புக்குப் பிறகு அது "தவெக விஜய்தான் எதிரினு" மாறுச்சு ?!

திரைக்கவர்ச்சியை மையமா வச்சு வருகிற ஒரு அரசியல்வாதியை எதிர்ப்பது சரிதானே...

சரிதான்...அதற்காக விஜயையும், தவெகவையும் மட்டுமே விடியறதுல இருந்து ராத்திரித் தூங்குற வரை விமர்சிக்கிறதா ?!

பருந்தாரே உங்களைத் தற்குகுறின்னு சொல்லப்போறங்க தம்பி தங்கைகள்.

முழுசாக் கேளு அப்புறம் யார் தற்குறின்னு புரியும் என்று மடக்கிய பருந்தார் தொடர்ந்து பேசினார். மு..முத்து இறந்தபோது அவரது வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினரிடம் துக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்குப் போய் துக்கம் விசாரிச்சார் சீமான். 

ஆமாம், அவர்கூட பாக்கியராசன், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி போயிருந்தாங்களே. அது ஒரு அரசியல் மாண்புதானே என்றோம்.

அதென்ன.. யாரைக் காலம் காலமா எதிரினு கட்டமைச்சீங்களோ, யாருக்கு எதிராக ஒட்டுமொத்த நாம் தமிழர் கட்சியினரையும் கொம்பு சீவி விட்டீங்களோ அவங்க வீட்டுலேயே போய் அமர்ந்து பேசுறது சமரசமா இல்லை மாண்பா ? என்று எதிர்க் கேள்வி கேட்டார் பருந்தார்.

அவர் எந்தக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள், திரைப்பட ஆளுமைகள் இறந்தாலும் போய் துக்கம் விசாரிக்கிறார்தானே அதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பினோம்.

அதைத்தான் நானும் சொன்னேன், மு..முத்து வீட்டுக்குப் போயிருந்தா அது மாண்பு. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும், பரம எதிரி என்று தொடர்ந்து பேசி கட்சியினரையும், தமிழர்களையும் உசுப்பேற்றி வந்த, மு.க.ஸ்டாலின் வீட்டுக்குப் போனதில் இருந்து அவர் மீது சந்தேகப் பார்வை பலமாகவே விழுந்துவிட்டது.

ஆமாம், அதுல எங்களுக்கே ஒரு கேள்வி இருந்துச்சு. மு.க.ஸ்டாலினை உருவக் கேலிகூடச் செய்து காணொலி வெளியிட்டு வந்த சாட்டை துரைமுருகன் எந்த முகத்தோடு ஸ்டாலினையும், உதயநிதியும் நேரில் பார்த்தார்னு. 

சரியான இடத்தைப் பிடிச்ச. அப்போ இருந்தே சாட்டை துரைமுருகனின் வேலை நூல் பிடிச்சா மாதிரி "ட்ராக்" மாறுச்சு.

கீழடி உள்ளிட்ட தமிழர் நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்று கூறிய, தமிழர் சங்க இலக்கியங்களைத் திராவிட இலக்கியம் என்று பெயர் மாற்ற முயற்சி செய்த, சீமானுக்கு எதிரா விஜயலட்சுமியைத் தூண்டி விட்ட, தமிழர்களுக்கு எதிரா வெளிப்படையாகவே அடக்குமுறை, இனவழிப்புக்குத் துணை போன திமுக தலைவரும், அப்போதய முதலமைச்சர் மு..ஸ்டாலினிடம் எந்த "மாண்போடு" துக்கம் விசாரிக்கப் போனாங்க இவங்க ?!

அது மட்டுமா...."இலங்கை வடக்குக்குப் போகவிருந்த இரத்தப் பொட்டலங்களை பூட்ஸ் காலால் நசுக்கி, முள்ளிவாய்க்கால் இறுதி நாளில் சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரத நாடகம் ஆடிய" திமுக வாரிசுவிடம் மட்டும் என்ன மாண்பு வேண்டிக்கிடக்கிறது ?! என்று குமுறுகிறார்கள் உண்மையான தமிழ்த் தேசியர்கள் என்று ஒரே மூச்சில் பேசினார் பருந்தார்.

இது பழைய தகவல் ஆச்சே பருந்தாரே என்றோம்.

இல்லை, இந்தக் குமுறல் கட்சிக்குள்ளேயேயும், புலம் பெயர் *த் தமிழர்கள் மத்தியிலும் வெடிக்க ஆரம்பிச்சிட்டது புத்தம் புது தகவல் என்றார் பருந்தார்.

...அப்படிப் போகுதா...ம் சொல்லுங்க.

திருச்சி கிழக்குத் தொகுதில வெ முதலமைச்சர் வேட்பாளர் ஜோசப் விஜயை எதிர்த்து நாம் தமிழர் சார்பில் போட்டியிட்டவர் டாக்டர் வி.கிருஷ்ணசாமி.

ஆமாம், அவர் பண வசதி படைத்தவர், நல்ல மனிதர்னு கேள்விப்பட்டிருக்கேன்.

சரிதான்...நாம் தமிழர் கட்சிக்கு அவரெல்லாம் பெரிய சொத்து. கடந்த 2012 ம் ஆண்டுல இருந்து கட்சியில் இருக்கும் அவர் கட்சிக்கென இதுவரை சுமார் 4 கோடி ரூபாய் சொந்தப் பணத்தை செலவு செய்திருக்கிறார்.

....

கடந்த 2026 தேர்தலில் திருச்சி கிழக்கில் உற்சாகத்தோடு தேர்தல் பணி செஞ்சு, செலவும் செஞ்சார்வர். அப்படித் தேர்தல் பணி செஞ்ச போது தொகுதி முழுக்க லட்சக்கணக்கில் செலவு செஞ்சு அவர் வச்ச பதாகைகளில் தொடங்கியது சாட்டை துரைமுருகனின் சேட்டை என்று சொல்லிவிட்டுத் தண்ணீர் குடித்தார் பருந்தார்.

தொடர்நது பேசிய அவர், "அந்தப் பதாகைகள்ள சாட்டை துரைமுருகன் பெயரும், படமும் சரியாப் போடலைன்னு சொல்லி அந்தப் பதாகைகளைத் தனது ஆதரவாளர்களை வச்சு வேக வேகமாக அகற்றி இருக்கிறார் சாட்டை. வேறு வழியில்லாம சாட்டை சொன்னது போல மறுபடியும் செலவு செஞ்சு புது பதாகைகள் வச்சிருக்கார் டாக்டர்.

..அப்ப அது சேட்டைதான்.

அதுமட்டுமல்ல...கிருஷ்ணசாமிக்கு யாரும் வேலை செய்யாதீங்க, போய் ஜல்லிக்கட்டு ராஜேஷுக்குப் வேலை செய்யுங்கன்னு சாட்டை துரைமுருகன் போட்ட குரல் பதிவு கிருஷ்ணசாமிக்கு அனுப்பப்பட கேட்டுவிட்டு நொந்து நூலாயிட்டார் கிருஷ்ணசாமி.

அப்படி என்ன ஜல்லிக்கட்டு ராஜேஷ் மீது சாட்டைக்குப் பாசம் ? என்று கேட்டோம்.

ராஜேசைக் கட்சிக்குள்ள கொண்டுவந்தது சாட்டைதான் என்று பதிலளித்த ருந்தார், ஜோசப் விஜயை எதிர்த்து நின்னு அப்படியும் அந்தக் கிருஷ்ணசாமி 4,790 வாக்குகள் வாங்கியிருக்கார். சாட்டை உள்ளடி வேலை செய்யாம, விஜயை மட்டுமே மையமா வச்சுக் காணொலிகள் போடாம இருந்திருந்தா நிச்சயமா இன்னும் கூடுதல் வாக்குகள் வாங்கியிருப்பார் டாக்டர் வி.கிருஷ்ணசாமி அப்படினு சொல்றாங்க திருச்சியில

அங்க மட்டுமா..தமிழ்நாடு முழுதுமே அதுதானே பெரிய பிரச்சனை ஆகியிருக்கு ? என்று நினைவுபடுத்தினோம்.

உண்மைதான், விஜய் பத்தி முக்கியமான விமர்சங்களை முன் வச்சு ரெண்டு மூணு காணொலிகள் மட்டும் போட்டுட்டு நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள், மக்கள் ஏன் நாம் தமிழருக்கு வாக்களிக்கனும்னு தொடர்ந்து காணொலிகள் போட்டிருந்தா நாம் தமிழர் நாகரிகமாவாவது தோற்று இருக்கும், வெகாவுக்கு அடுத்த கட்சியா நாம் தமிழரை மக்கள் கருதி இருப்பாங்க. இப்போ எல்லாம் போச்சுன்னு  புலம்புறாங்க கட்சிக்காரங்க.

அதுமட்டுமில்ல சீமான் பேச்சே பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்குனு சொல்றாங்களே ....

ஆமாம், அது பாலில் விட்ட சொட்டு நஞ்சு போல பெரிய பாதிப்பை நாம் தமிழருக்கு உண்டாக்கி இருக்கு. அதாவது சீமான் பேசுற முழுக் காணொலி பார்க்கிறவங்களுக்கு அது தப்பாத் தெரியாது, ஆனா துண்டு துண்டா அவர் பேசிய வார்த்தைகளை மட்டும் திமுக போலவே வெ ஐடி விங் பரப்பியது பெரிய வேலையைப் பார்த்துடுச்சு.

ஏன்...நாம் தமிழர் .டி விங் அதற்கு பதிலடி கொடுக்கலையா...

ம்க்கும்....அந்த .டி விங் லட்சணம் பத்தி இன்னொரு நாள் சொல்றேன் என்றர், பாஸிட்டிவா சிந்திக்கணும், பேசணும்னு சொல்ற சீமான், பொதுமக்கள்கிட்டப் போகும்போது "ஓட்டுப் போட்டாப் போடு, போடாட்டி போ" ன்னு சொல்றது, கட்சிக்காரங்ககிட்ட "இருந்தா இரு இல்லாட்டா ஓடு"ன்னு சொல்றது ஒட்டுமொத்தமா கட்சியைப் பதம் பார்த்துடுச்சு.

கொடுமைதான்...

அப்படிதான் சாட்டை துரைமுருகன் தனக்குச் செஞ்ச இந்த சேட்டை பத்தி குரல் பதிவு ஆதாரத்தோடு சீமான் பார்வைக்குக் கொண்டு போனார் திருச்சி கிழக்கு வேட்பாளர் டாக்டர் வி.கிருஷ்ணசாமி.

அப்புறம்....

அப்புறம் என்ன "அதெல்லாம் நீ சொல்லக் கூடாது. நான் சொல்றதுதான் சட்டம். நீ இருக்கப் பிரியம் இருந்தா இரு இல்லாட்டாக் கிளம்பு"ன்னு சீமான் சொல்ல...ஏற்கனவே நொந்து நூலாயிருந்த டாக்டர் வி.கிருஷ்ணசாமி முழுசும் உடைஞ்சு போயிட்டார்.

அடக்கடவுளே...

இதுபத்தித் தகவல் தெரிஞ்சவுடனே புஸ்ஸி ஆனந்த் தரப்பில் இருந்து அழைப்பு வர உடனே வெகவுல சேர்ந்துட்டார் டாக்டர் வி.கிருஷ்ணசாமி.

இப்போ...டாக்டர் வி.கிருஷ்ணசாமியைத் துரோகிப் பட்டியலில் சேர்த்திருப்பாங்களே.... என்றோம்.

இந்தப் பிரச்சனை பெரிசாகிடக் கூடாதுன்னுதான் அம்பாசமுத்திரத்தில் சீமான் போட்டின்னு ஒரு பிட்டைப் போட்டு நாலு நாளா ஓட்டிட்டு இருக்காங்க சாட்டை துரைமுருகன் அன் கோ.

..இதுகூடத் தெரியாமலா சீமான் இருக்கார் ?! என்று அப்பிராணி போலக் கேட்டோம்.

அவர் புதுசா இறக்கிய மூனு கோடி ரூபாய் பென்ஸ் கார், நட்சத்திர விடுதி பென்ஸ் பார்க் ஓட்டல்ல "நாதக சமூக ஊடகர்களுடன் கலந்துரையாடல்னு" ஒரே பிசியா இருக்கார் என்றார் பருந்தார்.

அந்தப்பக்கம் பெ.மணியரசன் தள்ளாத வயசுல காவிரி உரிமை மீட்புன்னு ரோட்டுல உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் செஞ்சுட்டு இருக்கார் என்று நினைவு படுத்தினோம்.

"ஒருவேளை பெ.மணியரசன் ஐயாவை ரூட் மாஃபியா அப்படி செய்யச்சொல்லி இருப்பாங்களோ" என்று நக்கலடித்த பருந்தார், ஜூன் 18 ம் தேதி திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை அழைத்து சீமான் கூட்டம் போடுறதாத் திட்டம், "சாட்டை துரைமுருகன் வேணுமா இல்ல நாங் வேணுமான்னு முடிவு பண்ணிட்டு திருச்சி வாங்க என்று கட்சியினர் கறாராகப் போர்க்கொடி தூக்க" முகம் வெளிறி மிரண்டு போன சீமான் கூட்டத்தை ரத்து செஞ்சுட்டார்.

ஜூன் மாதம் தொடங்கி தமிழ்நாடு முழுதும் சுற்றுப்பயணம் செஞ்சு கட்சியைப் பலப்படுத்துவேன்னு சொன்ன சீமானை முதலில் பலப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கு என்று சொல்லிவிட்டு வந்த வழியே பறந்து விண்ணில் மறைந்தார் பருந்தார்.

What's Your Reaction?

Like Like 19
Dislike Dislike 3
Love Love 2
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 2
Angry Angry 0

Comments (0)

User