சாட்டை ஊடகம், நாம் தமிழர்: தேர்தலில் நடந்தது என்ன? | சிறப்புக் கட்டுரை

சாட்டை ஊடகத்தின் அரசியல் நிலைப்பாடு, நாம் தமிழர் கட்சியுடனான தொடர்பு, விஜய் அரசியல் மற்றும் தேர்தல் தாக்கம் குறித்து விரிவாக ஆராயும் சிறப்புக் கட்டுரை.

Jul 02, 2026 - 07:10
Updated: 4 days ago
0 256
சாட்டை ஊடகம், நாம் தமிழர்: தேர்தலில் நடந்தது என்ன? | சிறப்புக் கட்டுரை

நாம் தமிழர் கட்சிக்குத் தொடர்பில்லாத "சாட்டை"

தேர்தலில் நாம் தமிழர் கட்சியை மடை மாற்றியதா!?

இது மூன்று மாதமாக வலம் வரும் வாத விவாதங்கள் !

-வளர்மெய்யறிவான் () விசுவா விசுவநாத்

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகச் செயலாற்றி வரும் துரைமுருகன் என்பவர் சாட்டை எனும் யூடியூப் ஊடகம் நடத்தி வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் "சாட்டை வலையொளியில் வெளியாகும் காணொலிகள், கருத்துக்களுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று அறிக்கை வெளியிடப்பட்டது.

அதிமுகவுக்கு ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் என்று பத்திரிகை ஊடகம் உள்ள. திமுகவுக்கு முரசொலி, கலைஞர் தொலைக்காட்சி உள்ளன. மதிமுவுக்கு சங்கொலி, மதிமுகம் என்று உள்ளன, பாமகவுக்கு மக்கள் தொலைக்காட்சி உள்ளது, விசிகவுக்கு வெளிச்சம் தொலைக்காட்சி உள்ளது.

ஆனால், நாம் தமிழருக்கு இருக்கும் பத்திரிகை, ஊடகங்களை விட மக்கள் மத்தியில் "நாம் தமிழரின்" குரலாக மக்களால் கட்சிக்காரர்களாலும், மக்களாலும் பார்க்கப்படுவது சாட்டை ஊடகம்.

கட்சிக்கும் "சாட்டை" காணொலிகளுக்கும் தொடர்பு இல்லை என்று தலைமை அறிவித்தாலும் அப்படி அந்த ஊடகம் பார்க்கப்படுவதில்லை.

துரைமுருகன் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருப்பதால் அவ்வாறு மக்களாலும், கட்சிக்காரர்களாலும் அந்த ஊடகத்தில் வெளியாகும் காணொலிகளைக் கடந்து சென்றுவிட முடியாது.

இப்படிப்பட்ட இரு நிலைப்பாடு கொண்ட சாட்டை ஊடகம், கடந்த பல ஆண்டுகளாக திமுக எதிர்ப்பில் அதற்கென்று ஒரு முத்திரை பதித்திருந்தது.

அனைவரும் விரும்பிப் பார்க்கும் காணொலிகளை சுவையான வடிவங்களில் வெளியிட்டு லட்சக்கணக்கான பார்வையாளர்களை சாட்டை பெற்றது. திமுக குறித்த உண்மையான புரிதல்களை அவை ஏற்படுத்தின.

அப்படியிருக்க, தேர்தலுக்கு முன்னதாக சில மாதங்களில் இருந்து அது திமுக எதிர்ப்பை விட்டுவிட்டு முழுக்க முழுக்க வெ விஜய் எதிர்ப்பாக மாறியது சாட்டை ஊடகம்.

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 100 காணொலிகளைக் கடந்து விஜய் எதிர்ப்புக் காணொலிகளை அது வெளியிட்டு "சதம்" அடித்திருக்கிறது.

சில நாட்களில் விஜய் தொடர்பான இரண்டு காணொலிளைக்கூட அதுவெளியிட்டுள்ளது.

விஜய் குறித்த காணொலிகளை இடும்வரை 15 லட்சங்களுக்குகள் இருந்த சாட்டையின் பின்பற்றாளர்களின் எண்ணிக்கை அதன் பிறகு 20 லட்சங்களைத் தாண்டியது.

இப்படிப்பட்ட நிலையில், சாட்டை துரைமுருகனின் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் பேச்சு, வீச்சு, சுவையாகச் சொல்லும் விதம் ஆகியவை நாம் தமிழர் கட்சியை அறிந்து கொள்ள விரும்பும் பார்வையாளர்களால் நாம் தமிழரின் கொள்கை பரப்புச் செயலாளரால் வழங்கப்படும் காணொலிகளாகவே அவை ஈர்த்தன.

திரைக்கவர்ச்சியை மட்டுமே வைத்துக்கொண்டு தேர்தலில் களமிறங்கிய நடிகர் விஜயின் "திறன்கள்" குறித் புரிதல்களை சாட்டை வலையொளி தேர்தலுக்கு முன்னதாக ஏற்படுத்தினாலும்கூட, தேர்தல் முடிந்து விஜய் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பிறகும் அதே தொனியில் பேசிக்கொண்டிருப்பது மக்களால் இரசிக்கப்படவில்லை.

விஜயின் அரசியல் திறன் குறித்த சாட்டையின் காணொலிகள், விஜய்க்கு மக்களிடம் இருந்த செல்வாக்கைக் கணிக்கத் தவறிவிட்டதோ என்கிற கேள்வி எழுகிறது.

உண்மையில், இது சாட்டை மட்டுமல்ல தமிழ்நாட்டின் 100க்கு 99 விழுக்காடு ஊடகங்கள் கணிக்கத் தவறிய ஒரு கூறுதான்.

அதேவேளை, காட்சி ஊடகத்தில் ஒரு மிக முக்கியமான உத்தி உள்ளது. அதாவது ஒரு "குறிப்பிட்ட தலைப்புக்குள்" சென்று செய்தி அல்லது காணொலி இட்டால் அது குறித்த "பரப்புரை" போல செய்தாலும்கூட ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்தத் தலைப்பில் இருந்து வெளியே வந்துவிட வேண்டும் என்பது.

இது ஒரு போர் வியூகம் போல. எதிரியின் கூடாரத்திற்குள் நுழைவது பெரிதல்ல செயல் முடித்துப் பத்திரமாக வெளியே வருவது போன்றது.

ஒரு செய்தி ஆசிரியராக, பயிற்றுநராக, 24 மணி நேர செய்திக் காட்சி ஊடகங்களில் பணியாற்றியவராக நாம் இன்றும் நமது பத்திரிகை - ஊடக மாணவ மாணவிகளுக்கு இதனைக் கற்றுக்கொடுத்து வருகிறோம்.

கிட்டத்தட்ட இது எம்.எஸ்.சுவாமிநாதனின் பசுமைப் புரட்சி போலத்தான் இதுவும். விளைச்சல் இல்லாத பஞ்ச காலத்தில் செயற்கை உரங்களையிட்டு பெரும் விளைச்சல் தந்து பசியாற்றி உயிர்காத்தது அந்தப் பசுமைப் புரட்சி. ஆனால் பஞ்சம் தீர்ந்து உபரியாக விளைச்சல் வந்தபிறகும் சுமார் 60 ஆண்டுகளாக அதே உரங்களை இட்டே வேளாண்மை நடக்கிறது. அதிக விளைச்சல் வந்தால் அதிக வருவாய் என்கிற எண்ணம் ஏற்பட்டு இயற்கை உரங்களை விட்டு விலகிவிட்டோம்.

இதன் காரணமாக இரண்டு மூன்று தலைமுறையினரின் உணவு நஞ்சாகிவிட்டது.

அதுபோலத்தான் விஜய் குறித்து தேர்தலுக்கு முன்னதாக சாட்டை தொடங்கிவிட்டு தேர்தல் முடிந்தபிறகும் அதே இராகத்தில் பாடி வருவது.

விஜயின் ஊடகப் பிரிவு இதில் நுட்மாக செயல்பட்டது. அதாவது விஜய் தொடர்பான மக்களை ஈர்க்கும் ஆயிரக்கணக்கான குறுங் காணொலிகளை வெளியிட்டுவிட்டு அப்படியே போகிற போக்கில் திமுக எதிர்ப்பை தூவி விட்டுச் சென்றார்கள். அதேபோல விஜயும் மேடையில் பேசும் சில நேரங்களில் மட்டும் திமுகவை தீய சக்தி என்று பதிய வைத்துவிட்டுச் சென்றார். அதனை அன்றாடம் நினைவு படுத்தும் விதமாக காணொலிகளோ, பரப்புரைகளோ அவர்கள் செய்யவில்லை.

நாம் தமிழர் மற்றும் சீமானுக்கு எதிரான நச்சுப் பரப்புரைகளையும் அவ்வாறே "ரூட் மாஃபியா" என்று நாம் தமிழரின் சமூக ஊடகங்கள் வருணிக்கும் வெ ஐடி விங் செய்தது. மிக முக்கியமாக மக்களிடம் எடுபடும் சீமான் எதிர் கருத்துக்களையும் அப்படியே தூவி விட்டது.

இந்த உத்தி இளையோர்களிடம் மி ஆழமாக ஊடுருவியது.

ஆனால், விஜய் அரசின் அன்றாட நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து எதையாவது பேச வேண்டுமே என்று சாட்டை காணொலிகள் வெளியிடுவது பார்வையாளர்களை சலிப்படையச் செய்துவிட்டது. அதிலும் குறிப்பாக விஜய் மீது அதிருப்தி கொண்டிருப்பவர்களைக்கூட.

சாட்டை ஊடகமா அல்லது விஜய் ஊடகமா எனும் கேள்வியைக் கேட்க வைத்துவிட்டது.

விஜய் அரசின் மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் குறித்து நறுக் நறுக்கென்று வாரத்தில் ஒரு தொகுப்பாக ஒன்றிரண்டு காணொலிகள் வெளியிட்டால்தான் அது மக்கள் மனதில் பதியும், தாக்கம் ஏற்படுத்தும்.

இது ஊடக நுட்பம்.

உடனே இந்தக் கட்டுரை எழுதிய நம்மையும், தமிழ் ஊடகத்தையும் "ரூட் மாஃபியா" என்று உருட்டி அப்படித்தான் செய்வோம் என்று சொன்னால், அதனால் எமக்கு எந்த பாதிப்பும் இல்லை, நாம் தமிழருக்குதான் பாதிப்பு.

What's Your Reaction?

Like Like 14
Dislike Dislike 0
Love Love 2
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 1
Angry Angry 0

Comments (0)

User