கன்னியாகுமரியை அசத்திய ஐந்துநாள் கலைவிழா | சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த பாரம்பரிய நிகழ்ச்சிகள்

கன்னியாகுமரியில் நடைபெற்ற ஐந்துநாள் கலைவிழா சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், கரகாட்டம் மற்றும் கலைஞர்களுக்கு பாராட்டு விழா குறித்து விரிவான செய்தி.

Jul 05, 2026 - 14:04
Updated: 1 day ago
0 14
கன்னியாகுமரியை அசத்திய ஐந்துநாள் கலைவிழா | சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த பாரம்பரிய நிகழ்ச்சிகள்

--த.இ.தாகூர், சிறப்புச் செய்தியாளர் - கன்னியாகுமரி 

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் கன்னியாகுமரியில் ஐந்து நாட்கள் கலைவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கடந்த ஜுன் 26 ம் தேதி தொடங்கிய நிகழ்ச்சிகள் 30 ம் தேதியன்று நிறைவு பெற்றன. 

நிறைவு நாள் நிகழ்ச்சியில் (ஜுன் 30)ல் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை கலந்துகொண்டு கலைஞர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பேசுகையில், "தமிழர்களின் பாரம்பரியக் கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளைத் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகக் கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு, சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் ஐந்து நாள் குமரி கலை விழா நிகழ்ச்சி கடந்த 26.06.2026 துவக்கி இன்று நிறை பெற்றுள்ளது. இக்கலை விழாக்களை பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர். மேலும் தமிழ்நாட்டின் பராம்பரிய மண்ணின் கலைகளை அனைத்து தரப்பட்ட மக்களும் கண்டு களிக்கும் வகையில் இவ்விழா அமைந்தது. முக்கடலும் சங்கமிக்கும் ஐயன் திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப்பாலம், காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபங்கள், சூரிய தோன்றும் மற்றும் மறையும் முனைகள், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகு சவாரி, பூங்காங்கள் உள்ளிட்டவைகள் மிகவும் கவரும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக மாத்தூர் தொட்டி பாலம் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட முக்கியமான பாலம் நீர்ப்பாசனத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். அடுத்ததாக பத்மநாபபுரம் அரண்மனை சிறந்த கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாகும். எந்தத் தொழில் நுட்ப வசதியும் இல்லாத காலத்தில் இவ்வளவு கலைநயமாக கட்டப்பட்ட சிறப்பாக அரண்மனையாகும். தற்போது வரை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்திற்கு உட்பட்ட சுற்றுலாத் தலங்களை அனைவரும் பார்வையிட்டு கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஐந்து நாட்கள் கலை நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்திய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்" என்று மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.அ.பூங்கோதை அவர்கள் பேசினார்.

நிகழ்வில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் ஜென்சி, பூம்புகார் போக்குவரத்து கழக மேலாளர் திரு. முருகபூபதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செல்வலெட்சுமி சுஷ்மா ஆகியோர் பங்கேற்றனர்.

பல்துறை கிராமியக் கலைஞர்கள் பங்கேற்ற குமரிக் கலை விழாவில் கரகாட்டக் கலைஞர் முனைவர் துர்கா பல்வேறு முத்திரைகளுடன் ஆடிய நடனம், செய்த சாகசங்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரையும் வெகுவாக ஈர்த்தது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User