கபடி கார்த்திகாவுக்கு உதவுவார்களா ஆதவ் அர்ஜுனாவும், முதலமைச்சர் விஜயும் ?

கபடி வீராங்கனை கார்த்திகா, பயிற்சியாளர் ராஜு மீதான புகார், கண்ணகி நகர் கபடி அணி எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் ஆதவ் அர்ஜுனா, முதலமைச்சர் விஜயிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்.

Jun 30, 2026 - 14:24
Updated: 6 days ago
0 1.6k
கபடி கார்த்திகாவுக்கு உதவுவார்களா ஆதவ் அர்ஜுனாவும், முதலமைச்சர் விஜயும் ?

-நாச்சி. செல்வராஜ், பத்திரிகையாளர்

விளையாட்டில் எளிய மக்கள் சர்வதேச அளவில் முன்னேறினால் அது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆகாது, அதைத் தட்டிப் பறித்துத் தள்ளிவிட்டு அவர்களைத் தரைமட்டமாக்குவது இவர்களது ஒரே பணி.

சமூகத்தில் வாழும் எளிய மக்கள் தேசிய அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ விளையாட்டுத் துறையில் முன்னேறினால் முன்னேறிய சமூகத்திற்கும், கார்ப்பரேட் கம்பெனிக்கும் ஏனோ கண்களை உறுத்துகிறது.

அந்த வகையில் சென்னை மெட்ரோ சிட்டியில் வசித்து வந்த எளிய மக்களை விரட்டிவிட்டு அவர்களுக்கென்று மாநகரின் ஒரு ஓரத்தில் கொடுக்கப்பட்ட கண்ணகி நகரில் வசித்து வந்தவர்தான் கார்த்திகா

ஜூனியர் கபடி போட்டிகளில் மாவட்ட அளவில் முன்னேறி பிறகு மாநில அளவில் நடைபெற்ற கபடி போட்டிகளில் பெயர் பெற்றார் கார்த்திகா.

இன்று தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டு அதிலும் ஜொலித்த கார்த்திகா, சர்வதேசக் கபடி போட்டியிலும் முன்னேறியுள்ளார்.

கார்த்திகா மட்டுமல்ல கேப்டன் சுஜி, கார்த்திகாவின் தங்கை உள்ளிட்ட பலர் கண்ணகி நகரில் வசித்து வருகின்றனர். சமீபத்தில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் புகழ் பெற்ற கார்த்திகாவுக்கு மாநில அமைச்சர்களும், தொழிலதிபர்களும், பல்வேறு நிறுவனங்களும் பாராட்டு விழா நடத்தி கௌரவித்தனர்.

இந்த நிலையில் விளிம்பு நிலை மக்களை வீழ்த்தத் துடிக்கும் ஒரு கார்ப்பொரேட் கம்பெனி, கார்த்திகாவின் தாயாரின் ஏழ்மை நிலையைப் பயன்படுத்தி அவரிடமிருந்து பொய்ப் புகார் ஒன்றைப் பெற்று கார்த்திகாவின் பயிற்சியாளர் ராஜு மீது பாலியல் வழக்குத் தொடுக்க வைத்தது.

இதனைப் பொய்ப் புகார் என்றும் தன்னையும் ன்னைச் சார்ந்த பெண்களையும் இழிவு படுத்தும் நோக்கத்தில் செய்யப்பட்ட சதி என்றும்தங்களது முன்னேற்றத்தைத் தடுக்க சதிச் செயல் நடக்கிறது என்றும் கபடி வீரர் கார்த்திகா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்தச் சதி வலையில் சிக்கிய கண்ணகி நகர் கபடிக் குழுவினர் பொய்ப் புகாரிலிருந்து விடுபட்டு மீண்டும் தேசிய அளவிலும் சர்வதேசப் போட்டிகளிலும் கலந்து கொண்டு கண்ணகி நகருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும், அதற்கு முதலமைச்சர் விஜய் அவர்கள் உதவ வேண்டும் என்றும் கூறுகின்றனர் விளையாட்டு நலன் விரும்பும் செயற்பாட்டாளர்கள்.

பயிற்சியாளர் ராஜு நேர்மையானவர் என்றும் அந்தக் கபடிக் குழுவை சிதைக்க துடிக்கும் கார்ப்பரேட் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணகி நகரில் நாம் சந்தித்த பலரும் தெரிவிக்கின்றனர்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் போற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இந்தப் பிரச்சனையில் தலையிட்டு கபடிக்குழுவை மீட்டுத் தரவேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

ஏழை சொல் அம்பலம் ஏறும் ஆட்சியே உண்மையில் மக்களாட்சி. முதலமைச்சர் ஜோசப் விஜய் அத்தகைய ஆட்சி தரும் தலைவராக இருப்பதால் அவரது கண் பார்வை பட்டு கண்ணகி நகர் கபடிக்குழு, பன்னாட்டு அரங்கில் மீண்டும் ஒளி வீசும் என்று எதிர்பார்ப்போம்.

What's Your Reaction?

Like Like 21
Dislike Dislike 0
Love Love 4
Funny Funny 0
Wow Wow 1
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User