அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது வன்மத் தாக்குதல்? தவெக பெண் அமைச்சர்களின் உள்ளடி அரசியல் பரபரப்பு

தவெக பெண் அமைச்சர்களுக்கு இடையே உருவாகியுள்ள உள்ளடி அரசியல், ஜெகதீஸ்வரி-கீர்த்தனா விவகாரம், நெறிமுறை சர்ச்சை மற்றும் சமூக ஊடக விவாதங்கள் குறித்த பருந்தார் தகவல்கள்

Jun 27, 2026 - 21:09
Updated: 9 days ago
0 32
அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது வன்மத் தாக்குதல்? தவெக பெண் அமைச்சர்களின் உள்ளடி அரசியல் பரபரப்பு

- தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள் -

"வெ பெண் அமைச்சர்களுக்கு இடையே உருவாகியிருக்கும் புது ரகமான அரசியல் பலரையும் முகம் சுழிக்க வச்சிருக்கு. விருதுநகர் நேற்று (26/6/26 அன்று) விளையாட்டுத் துறை ரிசளிப்பு விழாவில் பரிசு கொடுக்க இரண்டு பெண் அமைச்சர்கள் அழைக்கப்பட்டிருக்காங்க. ரெண்டுபேருமே விருதுநகர் மாவட்டம்தான்.

அந்த விழாவுக்கு வைக்கப்பட்ட பதாகையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பெயர் முதலிலும், அடுத்து சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பெயரை இரண்டாவதுமா போட்டிருக்காங்க.

நெறிமுறை (protocol) அடிப்படையில் இந்தத் தொகுதியின் பொறுப்பு அமைச்சரான எனது பெயரைத்தானே மேலே முதலில் அச்சிட்டிருக்கனும்னு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஜெகதீஸ்வரி எதார்த்தமாகக் கேட்டு வைக்க அதைப் பெரிய பிரச்சனை ஆகியிருக்காங்க கீர்த்தனா தரப்பு.

ஜெகதீஸ்வரி அரசியலுக்கே வராத காலத்தில் அவர் எடுத்த பழைய படங்களையெல்லாம் எடுத்து சமூக ஊடகங்கள் சுத்தவிட்டு அவருக்கு தர்ம சங்கடம் ஏற்படுத்திட்டு இருக்காங்க போல.

வெவில் உள்ள 100க்கு 97 பேர் பிறந்ததுல இருந்து பொது வாழ்க்கைக்கு வந்தவங்க அல்ல. வெவ்வேறு துறைகளில் இருந்தவங்கதான். அப்படியிருக்க ஒருத்தருக்கொருத்தரின் பழைய குப்பைகளை எல்லாம் மாறி மாறி எடுத்துப்போட்டு மல்லாந்து படுத்துக் காரித் துப்பிக்கிட்டா வெ முகத்துலதானே எச்சில் விழும் என்று தலைமைச் செயலகத்துல பேசிக்கிறாங்க. "

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User