CIJ பத்திரிகை ஊடகக் கல்வி நிறுவனத்தை அரசு நடத்துவதா ?!

அரசு நடத்தும் பத்திரிகை கல்வி நிறுவனங்களில் அரசியல் தலையீடு குறித்து கேள்வி எழுப்பும் கட்டுரை.

Jun 23, 2026 - 14:04
Updated: 10 days ago
0 6
CIJ பத்திரிகை ஊடகக் கல்வி நிறுவனத்தை அரசு நடத்துவதா ?!

மக்கள் வரிப்பணத்தில் "தவெக அரசு" சார்பில் "திமுகவினருக்கு" பத்திரிகை ஊடகப் பயிற்சியா ?!

தி ஹிந்து நாளிதழ் நிறுவனம் Asian College of Journalism (ACJ) எனும் ஒரு தனியார் பத்திரிகை ஊடகக் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறது.

தி ஹிந்து நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஹிந்து என்.ராமின் தம்பி ஹிந்து என்.ரவி என்பவரைத் தலைவராகக் கொண்டு, கடந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சார்பில், CIJ எனும் Chennai Institute of Journalism எனும் பத்திரிகை ஊடகப் பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டது.

அது எப்படி ஒரு தனியார் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கும் குழுமத்தைச் சேர்ந்த என்.ரவியை இந்த அரசு நிறுவனத்தின் தலைவர் ஆக்கினார்கள் என்பதே முதல் கேள்விக்குரியது. மேலும், மிகவும் முரணானது.

ஆங்கிலத்தில் இதனை Conflict of Interest என்பார்கள். அந்த நிறுவனத்தின் Director General பொறுப்பிலும் ஹிந்து நாளிதழிலில் பணியாற்றிய ஏ.எஸ்.பன்னீர் செல்வன் அமர்த்தப்பட்டிருக்கிறார்.

ஹிந்து என் ராம், மு.க.ஸ்டாலின் அவர்களின் வாக்கிங் நண்பர் என்பதும், ஹிந்து என்.ராம் தலைமையில்தான் சென்னை பத்திரிகையாளர் மன்றம் திமுகவினருக்குக் கைப்பற்றிக் கொடுக்கப்பட்டது என்பதும் உலகறிந்த ஒன்று.

ஒரு அரசாங்கம், அதிலும் திமுக அரசாங்கம் சார்பில் பத்திரிகை ஊடகப் பயிற்சி நிறுவனம் தொடங்கினால், அந்த நிறுவனத்தில் படித்து வெளி வரும் மாணவ மாணவிகள் திமுகவுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவார்களா என்கிற முதல் கேள்வி எழுகிறது.

அடுத்து எந்த அரசு வந்தாலும் அந்த நிறுவனத்தில், அப்போது பயிலும் மாணவ மாணவிகள் பத்திரிகை ஊடகர்களாக ஆனபிறகு, அந்த அரசாங்கம் தவறு செய்கிற போது சுட்டிக்காட்டுவார்களா என்கிற அடுத்த கேள்வியும் எழுகிறது.

புரியும்படியாக சொன்னால், திமுக ஆட்சியின்போது திமுக பத்திரிகையாளர்களையும், அதிமுக ஆட்சியில் அதிமுக பத்திரிகையாளர்களையும், தவெக ஆட்சியில் தவெக பத்திரிகையாளர்களையும் உருவாக்கினால் தமிழ்நாடு எப்படி உருப்படும் என்கிற அடுத்த கேள்வியும் எழுகிறது.

இந்த நிறுவனத்தில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும் முதலாமாண்டு சேர விரும்பிய மாணவர்கள், அவர்கள் திமுக ஆதரவாளர்களா என்று பார்த்தே சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்கள்.

அதற்கேற்ப, அந்தக் கல்வி நிறுவனத்தில் படித்து பட்டம் பெற்று வெளிவந்த முதல் மாணவர் குழுவினர் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களையோ, கல்வி அமைச்சர் அவர்களையோ சந்திக்காமல் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது அடுத்த கட்ட மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றிருந்தால், அவர்கள் எந்தக் கட்சி ஆதரவாளர்களாக இருப்பார்கள் என்கிற அடுத்த கேள்வியும் எழுகிறது.

எனவே இதுபோன்ற பத்திரிகை ஊடக நிறுவனங்களை அரசாங்கம் நடத்துவது ஏற்புடையது அல்ல. அதில் அரசியல் தலையீடு நிச்சயமாக இருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இதுபோன்று அரசு நிறுவனத்தில் அரசியல் தலையீடு இருக்கும், எனவே கூடாது என்று அறிவுரை - ஆலோசனை சொல்லவேண்டிய தி ஹிந்து நிறுவனத்தினரே இந்த நிறுவனத்தில் தலைவர் பொறுப்பில் அமர்கிறார்கள் என்றால் அவர்களின் பத்திரிகை ஊடக அறம் கேள்விக்குறியாகி நிற்கிறது.

மேலும், இந்தக் கல்வி நிறுவனத்தில் குணசேகரன், கார்த்திகை செல்வன் உள்ளிட்ட வெளிப்படையான திமுக ஆதரவாளர்கள் பயிற்சி கொடுத்தாலோ, நிர்வாகத்தில் இருந்தாலோ அது எப்படி கட்சி சாராத கல்வி நிறுவனமாக இருக்க முடியும் ?!

தவெக அரசு இந்த CIJ நிறுவனம் குறித்த வெளிப்படையான கொள்கை என்ன என்பதை பரிசீலனை செய்து, அரசியல் தலையீடு அற்ற வகையில் எப்படி செயல்படும் என்பதை பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். அதற்கு உத்தரவாதம் தர இயலாது என்றால், இந்த நிறுவனத்தை இழுத்து மூட வேண்டும்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் பத்திரிகை ஊடகத்துறை முழுக்க முழுக்க அரசியல் சார்புடையதாகி, மக்கள் மத்தியில் மொத்தமாக மதிப்பை இழந்து நிற்கிறது. இந்த நிலையில் அரசியல் கட்சி சார்பில் உருவாகும் பத்திரிகை ஊடகர்கள் எப்படி இந்த CIJ தமது அறிமுகத்தில் சொல்வது போல… Truth - Independence - Fairness - Humanity - Accountability என்கிற தரத்துடன் நடப்பார்கள் ?!

கட்டுரை ஆசிரியர் BBC - Thomson Foundation செய்தி பத்திரிகை ஊடகப் பயிற்சி பெற்றவர். இதுவரை சுமார் 1200 மாணவ மாணவ மாணவிகளுக்கு செய்திப் பத்திரிகை ஊடகப் பயிற்சி வகுப்புகள் நடத்தியவர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User