இனி வாராவாரம் ‘CIBIL’ கடன் ரிப்போர்ட்! ஒரு மாதம் காத்திருக்க வேண்டாம் — மாதம் 4 முறை கடன் தகவல் Update: RBI அதிரடி நடவடிக்கை!
கடன் தவணை செலுத்தியும் CIBIL-ல் Update ஆகவில்லையா? RBI புதிய நடைமுறையின்படி கடன் தகவல்கள் இனி மாதத்தில் 4 முறை Credit Bureau-களுக்கு புதுப்பிக்கப்படுகின்றன. 9, 16, 23 மற்றும் மாதத்தின் கடைசி நாள் ஆகியவை Reference Dates. முழு விவரம்.
வங்கிக் கடன் தவணையை முறையாகச் செலுத்திவிட்டீர்கள். ஆனால் சில நாட்கள் கழித்து CIBIL Report-ஐ பார்த்தால் இன்னும் பழைய நிலுவைத் தொகையே காட்டுகிறது!
அல்லது கடனை முழுமையாக அடைத்துவிட்டீர்கள். ஆனால் Credit Report-ல் அந்தக் கடன் இன்னும் முடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை!
இதுபோன்ற தாமதங்கள் கடன் வாங்கிய பலருக்கும் கவலையை ஏற்படுத்தி வந்தன.
இந்தப் பிரச்சினையைக் குறைக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
இனி கடன் தொடர்பான தகவல்கள் Credit Bureau நிறுவனங்களுக்கு மாதத்தில் நான்கு முறை புதுப்பிக்கப்பட வேண்டும்.
இந்தப் புதிய நடைமுறை 2026 ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
மாதத்தில் எந்தெந்தத் தேதிகளில்?
RBI புதிய நடைமுறையின்படி,
09ஆம் தேதி
16ஆம் தேதி
23ஆம் தேதி
மாதத்தின் கடைசி நாள்
ஆகிய நான்கு நாட்கள் Credit Information reporting-க்கான Reference Dates ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதனால் கடன் தொடர்பான மாற்றங்கள் Credit Bureau பதிவுகளில் முன்பைவிட விரைவாகப் பிரதிபலிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடன் தவணை செலுத்தினால் என்ன நடக்கும்?
உதாரணமாக, உங்கள் வங்கிக் கடனுக்கான EMI-ஐ செலுத்துகிறீர்கள்.
அதன் காரணமாக உங்கள் கடன் நிலுவைத் தொகையில் மாற்றம் ஏற்படுகிறது.
அல்லது கடனையே முழுமையாக அடைத்து கணக்கை முடிக்கிறீர்கள்.
இதுபோன்ற மாற்றங்களை அடுத்தடுத்த reporting cycle-களில் வங்கிகள் மற்றும் கடன் நிறுவனங்கள் Credit Information Companies-க்கு அனுப்ப வேண்டும்.
எனவே முன்புபோல் புதிய தகவல் பதிவாக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை குறையும்.
மாதத்தின் கடைசி நாள் மட்டும் அல்ல!
இதில் மற்றொரு முக்கியமான விஷயம் உள்ளது.
மாதத்தின் கடைசி நாளில் நடைமுறையில் உள்ள அனைத்து கடன் கணக்குகளின் தகவல்களும் Full File முறையில் அனுப்பப்பட வேண்டும்.
9, 16 மற்றும் 23ஆம் தேதிகளில் முந்தைய reporting date-க்குப் பிறகு மாற்றம் ஏற்பட்ட கணக்குகள் தொடர்பான தகவல்கள் புதிய தரவுகள் (Incremental Data) முறையில் அனுப்பப்படும்.
இதனால்,
+ EMI செலுத்தியது,
+ நிலுவைத் தொகை மாறியது,
+ புதிய கடன் தொடங்கியது,
+ கடன் முழுமையாக முடிக்கப்பட்டது
போன்ற மாற்றங்கள் முன்பைவிட விரைவாக கடன் நிறுவனங்களைச் (Credit Bureau) வை சென்றடைய வாய்ப்பு ஏற்படுகிறது.
அப்படியானால் CIBIL Score உடனே உயர்ந்துவிடுமா?
இல்லை. இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
RBI உத்தரவின் பொருள், EMI செலுத்திய உடனேயே உங்கள் CIBIL Score உயரும் என்பதல்ல.
வங்கிகள் மற்றும் கடன் நிறுவனங்கள் Credit Bureau-க்கு தகவல் அனுப்பும் கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது என்பதே முக்கியமான மாற்றம்.
Credit Score என்பது கடன் திருப்பிச் செலுத்திய வரலாறு, நிலுவைக் கடன்கள், Credit utilisation உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
எனவே “மாதத்தில் நான்கு முறை தகவல் Update என்பது மாதத்தில் நான்கு முறை CIBIL Score கட்டாயமாக மாறும்” என்று பொருளல்ல.
நல்ல செய்தி மட்டுமல்ல; எச்சரிக்கையும் இருக்கிறது!
இந்த மாற்றம் கடனை முறையாகச் செலுத்துபவர்களுக்கு சாதகமானது.
அதேநேரம் கடன் தவணையைத் தாமதமாகச் செலுத்துபவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.
கடன் திரும்பச் செலுத்தும் (repayment) தகவல்கள் விரைவாக Credit Bureau-க்கு செல்லும் வாய்ப்பு
இருப்பதைப்போலவே, தவணை தாமதம் மற்றும் overdue தொடர்பான மாற்றங்களும் விரைவாகப் பதிவாகக்கூடும்.
எனவே EMI மற்றும் Credit Card Bill போன்றவற்றை உரிய தேதிக்குள் செலுத்துவது மேலும் முக்கியமாகிறது.
மொத்தத்தில் என்ன மாற்றம்?
ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டிய பழைய நிலைக்கு மாற்றாக, மாதத்தில் நான்கு Reference Dates அடிப்படையில் கடன் தகவல்கள் புதுப்பிக்கப்படுகின்றன.
09, 16, 23 மற்றும் மாதத்தின் கடைசி நாள் — இந்த நான்கு தேதிகளும் இனி முக்கியமானவை.
கடனை அடைத்தும் Credit Report-ல் Update ஆகவில்லையே என்று நீண்ட நாட்கள் கவலைப்படும் நிலையை குறைக்கவும், கடன் வாங்குபவர்களின் அண்மைய தகவல்கள் Credit Bureau பதிவுகளில் விரைவாகப் பிரதிபலிக்கவும் இந்த RBI நடவடிக்கை உதவும்.
அதேநேரம் நினைவில் கொள்ளுங்கள்: கடன் தகவல் விரைவாக Update ஆவது வேறு; CIBIL Score உடனடியாக உயர்வது வேறு!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)