"கூட்டாட்சிக் கோரிக்கை ஈ*ழப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும்" |கஜேந்திரகுமாருக்கு தமிழ்நெட் ஜெயா எச்சரிக்கை
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கூட்டாட்சி, ஈ*ழப் போராட்டம் மற்றும் இலங்கைத் தமிழர் அரசியல் குறித்து தமிழ்நெட் நிறுவக ஆசிரியர் ஜெயா (எ) ஜெயச்சந்திரன் முன்வைத்த கருத்துகளின் விரிவான நேர்காணல் சாராம்சம்.
இந்தியா போலவே இலங்கையும் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திற்கு முன்பு ஒரே நாடாக இருந்திருக்கவில்லை.
இலங்கை வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில், வடபகுதியில் தமிழ் அரசியல் ஆட்சிகளும் தென் மற்றும் மத்திய பகுதிகளில் அனுராதபுரத்தை மையமாகக் கொண்ட சிங்கள அரசுகளும் இயங்கிய காலங்கள் இருந்தன.
முன்னதாக, கிமு. 6 ம் நூற்றாண்டில், அதாவது கிறித்து பிறப்பதற்கு 543 ஆண்டுகள் முன்பு இந்தியாவின் இப்போதைய வங்காள மாநிலத்தின் லாலா என்று அழைக்கப்பட்ட ஒரு சிறு நாட்டிலிருந்து விரட்டப்பட்டு புயல் காரணமாக இலங்கைக்கு வந்து கரை ஒதுங்கியவர் விஜயன் என்கிற இளவரசன் (ஆதாரம் மகாவம்சம்).
லாலா நாட்டில் இவரும், இவரது கூட்டாளிகள் 700 பேரும் அடாவடி செய்து பொதுமக்களை அளவு கடந்து வாட்டி வதைத்துக் கொடுமைப் படுத்தியதால் பொது மக்களே அவரைக் கொன்றுவிடுமாறு அரசருக்கு வலியுறுத்தினர். வேறு வழியில்லாமல் விஜயன் மற்றும் அவரது 700 கூட்டாளிகள், மனைவிகள் உள்பட அனைவரும் மாலுமி இல்லாத ஒரு கப்பலில் வைத்து நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர்.
புயலில் சிக்கிய விஜயன் பயணம் செய்த கப்பல் கரை ஒதுங்கிய இடம் இலங்கையின் "தம்பலகாமம்" எனும் இடம். அங்கே இருந்த இயக்கர் எனும் மக்களின் தலைவியாக இருந்த குவேனி என்கிற பெண்ணைத் திருமணம் செய்து மன்னராகிவிடுகிறார் விஜயன். பிறகு அவரையும் விரட்டிவிட்டு பாண்டி நாட்டு மதுராபுரியிலிருந்து அரசகுமாரியை அழைத்து வந்து மணக்கிறார்.
விஜயனின் அப்பா பெயர் சிங்கபாகு, அம்மா பெயர் சிங்கசீவலி. சிங்கபாகு சிங்கத்தின் இரத்தத்தில் அல்லது சிங்கத்திற்குப் பிறந்தவர் என்று கூறப்படுவதால், சிங்கம் இவர்களின் குடும்ப சின்னமாக உள்ளது. இவர்கள் பேசிய மொழிக்கும் "சிங்களம்" என்று பெயர். "சிம்ஹளா" என்றால் சமஸ்கிருதத்தில் சிங்கம் என்று பொருள்.
எனவேதான், இன்றும் இலங்கையின் சிங்கள அரசாங்கத்தின் கொடியில் சிங்கம் உள்ளது. (இந்திய அரசின் அரசு முத்திரையிலும் சிங்கங்கள் இருப்பதும், சிங்கப்பூர் எனும் சிங்கத்தின் பெயரில் ஒரு நாடும் அதன் சின்னமும் சிங்கமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது).
விஜயன் வருகைக்கு முன்பு வரை இலங்கை முழுதும் தமிழர்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர். சைவ நெறியே பின்பற்றப்பட்டு வந்தது.
கிறித்து பிறப்பதற்கு 543 ஆண்டுகள் முன்பாக விஜயன் குழு வந்தபிறகு, கிறித்து பிறப்பதற்கு 240 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர் அசோகனின் மகனும், புத்த குருவுமான மஹிந்த இலங்கைக்கு வருகிறார்.
அவர் தேவநம்பிய தீசன் எனும் மன்னரை புத்த மதம் தழுவ வைக்கிறார். இப்படித்தான் இலங்கையில் தமிழர்கள் புத்த மதத்திற்கு மாற்றப்பட்டார்கள். ஆக, கி.மு.543 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் சிங்களமோ, பவுத்தமோ இருந்திருக்கவில்லை.
இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா போலவே இலங்கையையும் பிரிடிஷ் ஆட்சியாளர்கள் நிர்வாக வசதிக்காக ஒரே நாடாக பாவித்தனர்.
1947 ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி ஒழியும்போது இலங்கையை சிங்கள பவுத்த பேரினவாதிகளிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றுவிட்டனர்.
அவர்கள், இலங்கை வடக்கு கிழக்கில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த தமிழர்களை பாரபட்சமாக நடத்தத் தொடங்கினர். என்னவோ தமிழர்களையே அந்த நாட்டுக்கு வெளியில் இருந்து வந்த வந்தேறிகள் போல நடத்தத் தொடங்கினார்கள்.
தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்பில் கை வைத்தார்கள்.
எடுத்துக்காட்டாக, சிங்களவர் 50 மதிப்பெண்கள் எடுத்தாலும் உயர் கல்வி, ஆனால் தமிழர்கள் 75 மதிப்பெண்கள் எடுத்தாலும் உயர் கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை இல்லை, பவுத்த மதத்திற்கே முன்னுரிமை, சிங்கள மொழியே அரசு மொழி, அரசு விண்ணப்பங்கள், அலுவல் மொழியும் சிங்களமே.....
இப்படி சொந்த நாட்டில் தமிழர்கள் அடக்குமுறை கொண்டு சிங்கள பவுத்த மயப்படுத்தப் பட்டனர். இன்றும் தமிழர்களின் புனித இடங்களில் சிங்கள பவுத்த விகாரைகள் நிறுவப்படுவது இதன் நீட்சியே. தமிழர்களுக்கு இடையில் சிங்களர்களைக் குடியேற வைப்பதும் இதன் காரணமாகவே.
சிங்கள பவுத்த பேரினவாதிகளின் இந்தப் போக்கைக் கண்டித்தே அறப்போராட்டமாகத் தொடங்கிய தமிழர்கள் பிறகு ஆயுதப் போராட்டத்தில் இறங்க சிங்கள பவுத்த பேரினவாதிகளால் நிர்பந்திக்கப்பட்டனர்.
எனவேதான், "எங்கள் தமிழர் தாயகத்தை எங்களிடமே கொடுத்து விடுங்கள்" என்ற முழக்கம் எழுந்தது.
இப்படிப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றவுடன் "இலங்கையில் தமிழர்களுக்கு கூட்டாட்சி முறையைத் தாருங்கள்" எனும் முழக்கம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் இந்திய அரசும், சிங்கள பவுத்த பேரினவாத சக்திகளும் எழுப்புகின்றன என்று குற்றம் சாட்டுகிறார்கள் தமிழர்கள்.
தனி நாடு ஒன்றே தீர்வு என்கிற ஒற்றைப் புள்ளியில் நிற்கும் இலங்கை உள்பட உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் சொல்லொணாத் துயரங்களை சந்தித்து வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இத்தகைய "கூட்டாட்சி" முயற்சிகள் அம்மக்களை மீண்டும் அடிமைகளாக ஆக்கும் செயல் என்கிற கருத்து எழுந்துள்ளது. இதற்காகவே இலங்கை நாடாளுமன்றத் தமிழ் உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் கடந்த சில நாட்களாக தமிழ் நாட்டில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் என்கிறார்கள் அவர்கள்.
இத்தகைய நிலையில், தமிழ்நெட் இணையதளத்தின் நிறுவக ஆசிரியர் ஜெயா அண்ணன் என்கிற ஜெயச்சந்திரன் கோபிநாத் அவர்கள் தமிழ் ஊடகம் ஆசிரியர் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்துக்கு அளித்த காணொலி நேர்காணலின் எழுத்து வடிவ சாராம்சம் இதோ...
(முழுக் காணொலிகளைக் காண TNTV TamilOodagam எனும் Youtube ஊடகத்தைக் காணுங்கள்)
தமிழ் நெட் இணைய நிறுவக ஆசிரியர் ஜெயா அண்ணன் என்கிற ஜெயச்சந்திரன் கோபிநாத் முன்வைக்கும் முக்கிய விவாதப் புள்ளிகள் :
1. தமிழக அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு:
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். இது வழக்கமான சந்திப்பாகத் தெரிந்தாலும், இந்திய அரசின் ஏற்பாட்டின் பேரிலேயே தான் இந்தச் சந்திப்புகளை நிகழ்த்துவதாக அவர் கூறுவது கவனிக்கத்தக்கது என ஜெயா அண்ணன் குறிப்பிடுகிறார்.
2. கூட்டாட்சி (Federalism) - ஒரு திணிக்கப்பட்ட கோரிக்கை:
ஈ*ழத் தமிழர்களின் கோரிக்கை என்பது 'இறைமை மீட்பு' மற்றும் 'தனித்தமிழ் ஈ*ழம்' என்பதாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், தற்போது 'கூட்டாட்சி' (Federalism) என்ற கோரிக்கையை முன்னிறுத்துவது ஈ*ழப் போராட்டத்தின் வீரியத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சி என்று அவர் சாடுகிறார். சிங்கள ராஜதந்திரிகள் மற்றும் சில சர்வதேச சக்திகள் இந்தக் கூட்டாட்சி திட்டத்தைத் தமிழர்கள் மீது திணிக்க முயல்வதாக அவர் எச்சரிக்கிறார்.
3. வரலாற்றுச் சிவப்பு கோடு (The Red Line):
தந்தை செல்வா காலத்திலேயே 'கூட்டாட்சி' கோரிக்கை தோல்வியடைந்து, 'வட்டுக்கோட்டை தீர்மானம்' மூலம் தனி நாடு என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தந்தை செல்வா போட்ட அந்த 'சிவப்புக் கோட்டை' எவரும் தாண்டக்கூடாது என்பது ஈழப் போராட்டத்தின் அடிப்படை. ஆனால், கஜேந்திரகுமார் அந்தச் சிவப்புக் கோட்டைத் தாண்டிச் செயல்படுவதாக ஜெயச்சந்திரன் குற்றம் சாட்டுகிறார்.
4. இலங்கை அரசியலமைப்பின் சிக்கல்:
இலங்கை அரசியலமைப்பில் உள்ள பவுத்த முன்னுரிமை மற்றும் ஒற்றையாட்சித் தன்மை ஆகியவற்றை மாற்றுவது என்பது ஜனநாயக ரீதியில் சாத்தியமற்றது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மற்றும் பொது வாக்கெடுப்பு ஆகியவற்றின் மூலம் மட்டுமே இதை மாற்ற முடியும், இது ஒருபோதும் தமிழர்களுக்குச் சாதகமாக அமையாது. எனவே, உள்நாட்டுப் பொறிமுறைக்குள் தீர்வைத் தேடுவது அர்த்தமற்றது என்கிறார் ஜெயச்சந்திரன்.
5. சர்வதேச நீதியின் அவசியம்:
முள்ளிவாய்க்கால் இனப்படுகொ*லைக்கு சர்வதேச நீதியும், சர்வதேசப் பொறிமுறையின் ஊடாக மட்டுமே தீர்வும் கிடைக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, இலங்கை அரசாங்கத்துடன் கூட்டாட்சி பற்றிப் பேசுவது என்பது சர்வதேச சமூகத்தின் கவனத்தை மடைமாற்றும் திசை திருப்பும் செயல் என்று சுட்டிக் காட்டுகிறார் தமிழ் நெட் ஜெயச் சந்திரன்
6. தமிழகத் தலைவர்களின் பங்கு:
விஜய் போன்ற புதிய அரசியல் தலைவர்களுக்கு இருக்கும் ஈ*ழப் போராட்டத்தின் ஆழமான புரிதலைச் சிதைக்கும் வகையில் இதுபோன்ற சந்திப்புகள் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தை அவர் வெளிப்படுத்துகிறார். ஈ*ழத் தமிழர்களின் ஆதரவைத் தேடுவதற்காக தமிழகத் தலைவர்களைக் கஜேந்திரகுமார் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் தமிழ் நெட் ஜெயா (எ) ஜெயச்சந்திரன் வலியுறுத்துகிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)