நக்கீரன் பிரகாஷ் கைது : மாலதி முதல் GEM கிரானைட் வரை...கிடுக்கிப் பிடி போட்ட தமிழ்நாடு காவல்துறை ! பருந்தார் தகவல்கள்
பெண் ஊடகவியலாளர் மாலதி அளித்த புகாரில் நக்கீரன் நிருபர் தாமோதரன் பிரகாஷ் கைது செய்யப்பட்டதன் பின்னணி மற்றும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்த பருந்தார் தகவல்கள்
"இதற்காகத்தான் இந்தக் கூட்டம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தைக் கைப்பற்றியது !"
அதிரவைக்கும் பின்னணித் தகவல்கள்
தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்
நாம் ஊர்தியில் போய்க் கொண்டிருதோம். மிக வேகமாகப் பருந்தார் நமது ஊர்தியை நோக்கிப் பறந்து வந்ததைப் பார்த்து வண்டியை ஓரம் கட்டினோம்.
என்ன பருந்தாரே அவசரமா...என்று கேட்டோம்.
நான் வேறு ஒரு வேலையாகச் சென்று கொண்டிருந்தேன், தகவல் கிடைத்தது...வானத்தில் இருந்து பார்த்தேன் உமது ஊர்தி தெரிந்தது சரி உம்மிடம் சொல்லிவிட்டு அப்படியே செல்வோம் என்று இறங்கினேன் என்றார்.
மகிழ்ச்சி...என்று சொல்லிவிட்டு நம்மிடமிருந்த வேர்க்கடலைகளைக் கொடுத்தோம். கொறித்துக்கொண்டே பேசினார் பருந்தார்.
நக்கீரன் பத்திரிகையின் நிருபர் தாமோதரன் பிரகாஷைக் கொத்தாகத் தூக்கியிருக்கிறது காவல்துறை...
ஆமாம் அதுகுறித்து உங்களைத் தொடர்பு கொள்ளவேண்டும் என்று எண்ணியிருந்தோம் அதற்குள் நீங்களே வந்துவிட்டீர்கள் என்று சமாளித்தோம்.
ம்...ம்....என்னை அழைக்க மறந்துவிட்டு சமாளிக்காதீர் என்று செல்லமாகக் கடிந்து கொண்ட பருந்தார், "எத்தனை பிராடுத்தனம் செய்தாலும் ஏதாவது ஒரு கட்டத்தில் செய்பவர்கள் வசமாக மாட்டிக்கொள்வார்கள் என்பது உலக இயற்கை. ஆனாலும், என்னை எவனாலும் ஒன்னும் செய்யமுடியாது என்று இறுமாப்பில் திரிபவர்களே அதிகம்" என்றார்.
உண்மைதான் பருந்தாரே....என்றோம்.
இந்த தாமோதரன் பிரகாஷுக்கு தான் ஏதோ பிபிசி செய்தியாளர் போல நினைப்பு...ஆனா பேசுவது, எழுதுவது, செயல்படுவது எல்லாம் மட்டரகமான Yellow Journalism - "மஞ்சப் பத்திரிகை" அதாவது பொறுக்கித் தனமான ப்ளாக்மெயில் வேலை" அப்படின்னு நான் சொல்லலை...அந்த ஆள் பத்தி எங்கு விசாரிச்சாலும் இதே மாதிரிதான் ஸ்டேட்மென்ட் வருது என்று தொடங்கிய பருந்தார் அடுத்தடுத்து சொன்னது த்ரில்லர் மூவி இரகம் !
தொடர்ந்து பேசிய பருந்தார், "நக்கீரன் பிரகாஷ் கைது என்பது எனக்குத் தெரிந்து காவல்துறை மிக நுட்பமாக விரித்த மிகப் பெரிய வலை. உண்மையில் காவல்துறை மொழியில் சொன்னால் Big Catch என்றார்.
புரியும்படியா சொல்லுங்க பருந்தாரே என்று கெஞ்சினோம் !
ம்...ம்...மங்குனிக்கு என்னதான் புரியப்போகிறதோ, என்று செல்லமாகக் கடிந்து கொண்ட பருந்தார், நக்கீரன் பிரகாஷ் கைது செய்யப்பட்டிருப்பது சவுக்கு சங்கரின் Youtube காணொலிகளில் தோன்றும் தொகுப்பாளர் மாலதியின் புகாரின் பேரில்.
ஆம்...காவல்துறை குறிப்பில் சொல்லப்பட்டிருக்கு என்றோம்
கொஞ்சம் நேரம் என்னைப் பேசவிடு...கேட்கிற கேள்விக்கு அப்பப்போ பதில் கொடு அது போதும்...என்று சினந்த பருந்தார் தொடர்ந்து பேசினார்.
2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சியில் தலைமைச்செயலகம், அறிவாலயம் பக்கமே வரக்கூடாதுன்னு "தடா" போடப்பட்டவர்கள்தான் நக்கீரன் கோபால், பிரகாஷ் ஆகியோர். 2021 தேர்தலில் அதிமுகவிடம் பணம் வாங்கிக்கொண்டு ஆறு பக்கத்துக்கு விளம்பரம் போட்ட பத்திரிகை நக்கீரன். அதாவது திமுகவுக்கு எதிராக....
ஓ...புரிகிறது !
திமுக பக்கம் நெருங்கமுடியாத நிலையில் ஒருவேளை ஆட்சி மாறினால் தாங்கள் தொடர்ந்து செஞ்சுட்டு வருகிற பிளாக்மெயில் + பணம் சுருட்டல் வழக்குகள் பஞ்சாயத்துகள் எல்லாம் "அதிகாலையில் வீடு தேடிவரும்" அப்படிங்கற பயத்துலதான், நக்கீரன் கோபால், பிரகாஷ் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தஞ்சம் புகுந்தாங்க.
ம்...
தஞ்சம் புகவேண்டும் என்பதை வெளியில் காட்டாமல் "கடந்த 25 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் இருப்பது நியாயமா....என்று ஒரு காரணத்தை வைத்து ஹிந்து என்.ராம் மூலம் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினிடம், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை மட்டும் கைப்பற்றிவிட்டால் நிரந்தரமாக திமுகதான் தமிழ்நாட்டின் ஆட்சியாளர்" என்று ஏகத்துக்கும் பிட்டுகளை சேர்த்துப்போட்டு திமுக அரசின் ஆதரவோடு அந்த மன்றத்தைக் கைப்பற்றியது நக்கீரன் கோபால், நக்கீரன் பிரகாஷ், மாற்றத்திற்கான ஊடகவியலாளர் ஹசீப் ஆகியோர் அடங்கிய கூட்டம். இதுல ஹஸீப் ஏற்கனவே NIA ராடார் கண்காணிப்பில் இருப்பதாக ஒரு தகவல்.
ம்....
இந்தக் கூட்டத்துல தெரியாம வந்து மாட்டிட்டேன் என்று இப்போ புலம்புகிறாராம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் தினகரன் சுரேஷ்.
ஓ....
தங்களை, இந்தக் கூட்டம் இப்படி ஏமாற்றிய விவரமே 2026 தேர்தல் முடிவுலதான் திமுக தலைமைக்கே தெரிஞ்சிருக்கு. "ஏண்டா...இத்தனை பத்திரிகை ஊடகவியலாளர்கள், சென்னை பத்திரிகையாளர் மன்றம் இருந்தும் கொளத்தூர்ல மு.க.ஸ்டாலின் ஜெயிக்கிறதுக்கான நிலைமை இல்லைன்னு ஒருத்தன் கூடவா கண்டுபிடிச்சுத் தலைமைக்கு சொல்லல ?" என்று இன்றும் கேட்கிறார்கள் திமுகவின் சில மூத்த தலைவர்கள்.
ம்...
அதனால, இந்தக் கூட்டத்தை திமுகவும் கழட்டி விட்டுடுச்சு. இப்போ இவங்ககிட்ட இருக்கிற ஒரே "அட்ரஸ்" சென்னை பத்திரிகையாளர் மன்றம் எனும் அட்ரஸ்தான். அதிலும் இவங்களைப் பத்தித் தெரிஞ்ச ஒருத்தரும் இவங்களுக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டாங்க.
ம்...
ஆக, இவங்க எல்லாம் தங்கள் சுயநலத்துக்காகவும், வழக்கு, சிறையில் இருந்து தப்பிக்கவும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்துல வந்து ஒளிஞ்சிக்கிட்டு இருக்காங்க.
ஓஹோ....
இதெயெல்லாம் தெளிவா மோப்பம் பிடித்த காவல்துறையின் உளவுப்பிரிவுக்கு லட்டு மாதிரி கிடைச்ச வழக்குதான் GEM கிரானைட் வீரமணியின் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் வழக்கு.
ம்....
அந்தப் புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பிறகு காவல்துறை தரப்பிலேயே நீதிமன்றத்தில் "புகார் தொடர்பான காணொலியில் சிறுமியுடன் உள்ள நபரை அடையாளம் காண முடியாததால் வழக்கை மேற்கொண்டு விசாரிக்க முடியலை"ன்னு அறிக்கை தரப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அந்த வழக்கை அப்படி ஊத்தி மூட அனுமதிக்கலை. விசாரிச்சே ஆகனும்னு சொல்லிடிச்சு.
ம்....
இப்படி வழக்கை ஊத்தி மூடக் கோடிகளில் பணம் கைமாறியதாக ஒரு தகவல் கசிந்தது.
ம்...
இந்த கூத்தெல்லாம் நடந்தது கடந்த, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அப்படிங்கறது குறிப்பிடத்தக்கது.
ம்...
இந்த வழக்கை ஊத்தி மூடும் வைபவத்தின் முக்கிய நபர்கள் என்று அடிப்பட்ட பெயர்களில் நக்கீரன் தாமோதரன் பிரகாஷ் பெயரும் ஒன்று.
ஓஹோ....
நக்கீரன் பிரகாஷ் மட்டுமல்லாது தினகரன் சுரேஷ் பெயரும் அடிபட்டது, ஆனா சுரேஷ், அது தவறான தகவல்னு சொல்லி சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல்துறை இயக்குநரிடம் புகார் மனு கொடுத்ததோடு நீதிமன்றத்தையும் நாடி இருக்கார்.
ம்.....
ஆனா, நக்கீரன் பிரகாஷ் தன் மீது சுமத்தப்பட்ட "GEM கிரானைட் வீரமணி வழக்கு ஊத்தி மூடல் சம்பவத்தில் தொடர்பு" குற்றச்சாட்டு குறித்து சுரேஷ் போல மறுப்பு தெரிவிக்கலை.
ம்....
GEM கிரானைட் வீரமணி மகளுடன் நக்கீரன் ப்ரகாஷ் நீண்ட நெடுங்காலம் தகவல் தொடர்பில் உள்ளார் என்றும் ஒரு பேச்சு இருக்கு.
ஓஹோ...கதை அப்படிப் போகிறதோ ! என்றோம் நாம்.
ஆமாம், ஆக, GEM கிரானைட் வீரமணியின் சிறுமிகள் பாலியல் தொடர்பான வழக்கை ஊத்தி மூட நக்கீரன் பிரகாஷ் மூலமாகவே முக்கிய "வேலைகள்" நடந்து இருக்கலாம்னு காவல்துறைக்கு ஒரு பலத்த ஐயம் இருக்கு.
ம்.....
மேலும், நக்கீரன் பிரகாஷ் இப்போ ஒரு Youtube சேனலில் அவர் மட்டுமே அமர்ந்து பேசி சுமார் 100 க்கும் மேற்பட்ட காணொலிகள் போட்டிருக்கார். அந்தச் சேனலுக்கு "பின்புலம் மற்றும் நிதி உபயம்" ஒரு காவல்துறை ஐபிஎஸ் அதிகாரி என்பது கூடுதல் தகவல்.
அடடே...
அதாவது, அந்தச் சேனலே அந்த ஐபிஎஸ் அதிகாரியின் - அவர் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லவும், அவருக்கு எதிராகக் காணொலி இடுவோர்களை எதிர்த்து நக்கீரன் தாமோதரன் பிரகாஷை வைத்து அசிங்க அசிங்கமாகப் பேசவும்தான் அப்படின்னும் ஒரு டாக் ஓடுது.
சுத்தம்...
ஆக, அந்த காவல்துறை அதிகாரிக்கு வெளிப்படையா வேலை செய்கிறவர்தான் நக்கீரன் தாமோதரன் பிரகாஷ் அப்படினு ஒரு கோணம் இதுல இருக்கு.
ம்....
ஆக, GEM கிரானைட் வீரமணி வழக்கை ஊத்தி மூட "வீரமணி மகள் + நக்கீரன் தாமோதரன் பிரகாஷ் + சில காவல்துறை அதிகாரிகள்" எனும் முக்கூட்டணி செயல்பட்டிருக்க வாய்ப்பு அப்படின்னு இன்னொரு கோணம் இதில் இருக்கு, இல்லையா?! என்றார் பருந்தார்.
அட...ஆமாம் !
ஆக...அந்தப் பெண் ஊடகவியலாளர் மாலதி புகாரில் பிரகாஷ் கைது என்பது ஒரு தொடக்கம்தான்... மேலும் மேலும் வழக்குகள் பின்னாடி லாரில காத்துட்டு இருக்கு என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து பேசத் தொடங்கினார் பருந்தார்.
இடைமறித்த நாம், ஆனா பிரகாஷ் கைதை எதிர்த்துச் சென்னை பத்திரிகையாளர் மன்றம், மானே தேனே பொன்மானேனு வசனம் எழுதி பிரகாஷை ஏதோ பெரிய புரட்சியாளர் போல பில்ட் அப் செஞ்சுருக்காங்களே என்று கேட்டோம்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுச் செயலாளர் ஹஸீப் என்பவர் மாற்றத்திற்கான ஊடகவியலாளர் அப்படின்னு ஒரு அமைப்பு வச்சிருக்கார். ஒருமுறை எஸ்.வீ சேகர் பெண் ஊடகர்களைப் பற்றி அவதூறாக பேசியபோது அவர் வீட்டுக்குச் சென்று கல்லெடுத்து வீசியவர்தான் "இந்தப் பெண்ணிய விடுதலைப் புரட்சியாளர்" ஹஸீப்.
ம்...
ஆனா, இப்போ பெண் ஊடகர் மீது ஆபாச, அருவருப்பு, அவதூறு பரப்பிய நக்கீரன் பிரகாஷுக்கு ஜால்ரா தட்டுறார். இப்போ புரியுதா இவங்க எதுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தைக் கைப்பற்றி கோழி போல ஒளிஞ்சிட்டு இருக்காங்கன்னு...
நல்லாவே புரியுதுங்க பருந்தாரே என்றோம்.
அதுமட்டுமல்ல, நக்கீரன் தாமோதரன் பிரகாஷை தூக்க காவல்துறை முடிவு செஞ்சுட்டுப் பிறகு குழம்பிப் போனது மட்டுமல்ல இதென்னடா துர்நாற்றம் புடிச்ச பிழைப்பா இருக்கேன்னு தலையில அடிச்சிக்கிட்டாங்களாம்.
ஏன்....
அவருக்கு சென்னையில், சிந்தாதிரிப்பேட்டை, தண்டையார் பேட்டை, பல்லாவரம்னு வெளில தெரிஞ்சே ஆறேழு வீடு இருக்காம்.
அடேங்கப்பா...
இதுல நாலு வீட்டுல மாறி மாறி இருப்பாராம். எந்த வீட்டில் இருக்கார்னு தேடவே சிரமப்பட்டுப் பிறகு தேடிப் பிடிச்சு இருக்காங்க காவல்துறையினர் என்ற பருந்தாரிடம்,
நக்கீரன் பத்திரிகையில் இவருக்கு ஊதியம்னு பார்த்தா ஆயிரங்களில் மட்டுமே இருக்கும். ஆனா...இவருக்கு எப்படி ஆறேழு வீடு, மாறி மாறி தங்க நாலு வீடு என்று கேட்டுவிட்டு...அப்போ இவரது மனைவி எந்த வீட்டில் இருப்பாங்க என்று அப்பிராணி போல கேட்டோம்.
இத்தனை வீடு இருந்தும், பத்திரிகையாளர் "கோட்டாவில்" அண்ணா நகரில் ஒரு அரசு வீடு வாங்கி அங்கே தனது மகனைக் குடி வச்சிருக்கார் என்றார் பருந்தார்.
அடேங்கப்பா....நாங்க எல்லாம் ஒரு வீட்டுக்கு வாடகை கொடுக்கவே திண்டாடுறோம் என்றோம்.
தொடர்ந்து பேசிய பருந்தார், முறைப்படி திருமணம் செய்ததாகக் கூறப்பட்ட முதல் மனைவியை இவர் ஏடாகூடமாக படம் எடுக்க அதுல கடுப்பான அந்தம்மா துரத்தி விட்டுவிட்டதாகத் தகவல். அதன்பிறகு இவர் அதிகார பூர்வமா திருமணம் செஞ்சதா தகவல் இல்லை. ஆனா, கணவன் இல்லாத வசதியான சொத்தோடு இருக்கும் பெண்களுக்கு ஆதரவு தரும் நல்ல உள்ளம் கொண்டவராம்.
ஓ...மனிதாபிமான அடிப்படையிலே ஒரு சேவை அப்படித்தானே என்றோம்
என்ன கருமமோ... ஆனா பெண்கள் விஷயத்தில் இவர் விளக்குமாறு அடி வாங்காத இடமே இல்லைனு சொல்றாங்க. பல்லாவரம் தாம்பரம் பகுதியில் இட்லிக் கடை வைத்திருந்த ஒரு பெண்மணியிடம் வாலாட்டி, உள்ளாடையோடு காவல்நிலையத்தில் உட்கார வச்சிருக்காங்க. அப்புறம், நீலகிரியில் கொடநாடு எஸ்டேட் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற போது இவரைத் தனது வீட்டில் தங்க வச்ச பாவத்துக்காக அந்த ஊர் செய்தியாளர் ஒருவரிடம் அவரது மனைவி மீது தனக்கு விருப்பம் உள்ளதாக வாய்க்கொழுப்பு பேச...வச்சு வெளுத்து அனுப்பியிருக்காங்க.
முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களைப் பற்றி அளவு கடந்த ஆபாசத்தோடு பேசியவர்தான் இந்த நக்கீரன் தாமோதரன் பிரகாஷ்.
பெண்களை போகப் பொருளாக, அவதூறாக, பாலியல் கோணத்தில் அசிங்க அசிங்கமாகப் பேசக்கூடிய நபர்தான் இந்த நக்கீரன் தாமோதரன் பிரகாஷ்.
திமுக ஆட்சியில் எப்படியோ தப்பித் தப்பி ஓடிட்டு இருந்தவர் இப்போ தவெக அரசுல வசமா மாட்டி இருக்கார் என்று முடித்த பருந்தார்.... "பெண்கள் குறித்து ஆபாச, அருவருப்பு, அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கத் தயங்க வேண்டாம் என்று காவல்துறைக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரடியாக அறிவுரை வழங்கியிருக்கார்னு நாம் கடந்த முறையே சொன்னோம், அதற்கேற்ப சட்டப்பேரவையில் இதனைக் குறிப்பிட்டும் முதலமைச்சர் ஜோசப் விஜய் சொல்லியிருக்கார்." என்று சொல்லிவிட்டு வானத்தில் பறந்தார் பருந்தார்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
1
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)