GEM வீரமணி வழக்கு; புகார் கொடுத்த பத்திரிகையாளர் | செய்தி மக்கள் தொடர்புத்துறையில் திமுக ஆதிக்கமா? பருந்தார் எழுப்பும் கேள்விகள்
செய்தி மக்கள் தொடர்புத்துறை யாருடைய பிடியில்? அனுபவமற்ற அமைச்சர்களை அதிகாரிகள் ஆட்டிப்படைக்கிறார்களா? பருந்தார் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.
+ GEM கிரானைட் வீரமணி வழக்கு : பதறியடித்த தினகரன் "பத்திரிகையாளர்" ?
+ திமுக அதிகாரிகளின் "பிடியில்" செய்தி மக்கள் தொடர்புத்துறை ?
+ அனுபவம் இல்லாத அமைச்சர்களை ஆட்டிப்படைக்கும் "தோன்றும்
நிலவு" அதிகாரியின் ஐஏஸ் "சிண்டிகேட்" ?
+ ஆட்சியை பேசாமல் திமுகவிடமே ஜோசப் விஜய் ஒப்படைத்துவிடலாம் : முணுமுணுப்பு
+ தமிழ் ஊடகம் பருந்தார் செய்தியைப் பகிராதீங்க : கெஞ்சி அழும் செய்தி ஆசிரியர் ?
தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்
நல்ல சிலுசிலுவென காற்று...மாலை நேரம், மொட்டைமாடியில் அமர்ந்திருதோம்.
பருந்தார் வந்து சேர்ந்தார். கையில் ஏதோ ஒரு காகிதம்.
என்னவாம் என்றோம்.
புகார் மனு என்றார்.
யார் மீது யார் புகார் என்று கேட்டோம்.
GEM கிரானைட் வீரமணியின் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக் கொடூர வழக்கில் முன்னாள் காவல் துறை சென்னை மாநகர உயர் அதிகாரிக்கும் - வீரமணிக்கு இடையே வழக்கை ஊத்தி மூட இடைத் தரகராக தான் செயல்பட்டதாக இரண்டு பேர் யூடூயூப்பில் கூறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தினகரன் செய்தியாளர் சுரேஷ் வேதநாயகம் என்பவர் அது பொய் என்றும் அந்த யூடியூபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு ஒரு புகார் மனுவை சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஆகியோரிடம் கொடுத்திருக்கிறார்.
ஓ...
அந்தப் புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ள ஒரு தகவலைப் பார்த்து காவல்துறை வட்டாரத்தில் மட்டுமல்ல பத்திரிகையாளர்கள் மத்தியிலும் சிரிப்போ சிரிப்பு.
அப்படி என்ன நகைச்சுவை !? என்று கேட்டோம்.
"தான் ஒரு அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் என்றும் பல சமூக விரோத செய்திகளையெல்லாம் வெளிக்கொண்டு வரும் 'சிறந்த' செய்தியாளர் என்றும் தன்னைக் குறிப்பிட்டுள்ள சுரேஷ் வேதநாயகம் "அந்த யூடியூபர்கள் 2 பேர் மீது யாரோ சில அதிகாரிகள் எடுத்த சரியான நடவடிக்கை குறித்தும் தாம் செய்தி வெளியிட்டதால் அந்த ஆத்திரத்தில் அவர்கள் 'நேர்மையான' தன் மீது அபாண்டமாகப் பழி சுமத்துவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்"
அதைப் பார்த்துதான் சிரிப்புத் தாங்க முடியாமல் சிரிக்கிறார்கள் என்ற பருந்தார் தொடர்ந்து பேசினார்...
சுரேஷ் குறிப்பிட்ட அந்த சில அதிகாரிகளில் மிக முக்கியமானவர் சென்னை மாநகரக் காவல்துறை முன்னாள் ஆணையர் அருண் ஐபிஎஸ்.
சுரேஷ் - அருண் ஆகியோரின் நட்பு காவல்துறை வட்டாரத்திலும், பத்திரிகையாளர் வட்டாரத்தில் மட்டுமல்லாது அது ஊரறிந்த ஒன்று.
அருண் ஐபிஎஸ்-ன் உதவியோடுதான் சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தலையே நடத்தினார் சுரேஷ் வேதநாயகம் என்பது உலகறிந்த ஒன்று. வெறும் 1200 வாக்குகள் கொண்ட சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தலுக்கு ஒரு இணை ஆணையர் தலைமையில் சுமார் 500 காவலர்களை இறக்கி பத்திரிகையாளர்களையே மிரள வைத்தார் சுரேஷ் வேதநாயகம். மூத்த பத்திரிகையாளரும், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் மூத்த உறுப்பினராகவும் இருந்த மறைந்த நிலா வேந்தன் மீது பொய்ப் புகார் கொடுத்து அவரைக் காவல்நிலையத்தில் அமர வைத்தவர் இந்த சுரேஷ் வேதநாயகம். அந்தச் சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தின் தேர்தல் முறைகேடாக நடைபெறுகிறது, மன்றத்தின் பொதுக்குழுவின், சட்ட விதிகளின் படி நடக்கவில்லை, அங்கே சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் ஒரு தேவையற்ற கேன்டீன் கட்டப்பட்டு பணம் விரயமாக்கப்படுகிறது என்று எழுதியும், பேசியும் வந்த சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் முதன்மை உறுப்பினரும், உங்க தமிழ் ஊடகம் செய்தி ஆசிரியருமான வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் மீது விசாரணையே இன்றி பொய்ப் புகாரின் பேரில், FIR - முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வைத்தவரும் இதே சுரேஷ் வேதநாயகம்தான், என்ற பருந்தார் தொடர்ந்து பேசினார்,
உங்க செய்தி ஆசிரியர் குறிப்பிட்டதுபோலவே அந்த கேன்டீன் பிளாட்பாரக் கடையாக மாறி அது சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பெயரையே கெடுத்துவிட்டது என்பதும் உலகத்துக்கே தெரிஞ்சுபோச்சு என்றார்.
ஆமாம்...அதற்குத்தானே "கேன்டீனில் மூன்று பேர் மட்டுமே சாப்பிடுகிறார்கள்" என்று அபாண்டமாக பொய் சொல்லி வருகிறார் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் என்று புகார் மனுவில் சுரேஷ் தரப்பில் ஹாசிப் என்பவரை வைத்து புகார் கொடுத்து அதற்குப் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தார்கள் என்றும் நினைவூட்டினோம்.
ஹா ஹா ஹா... அதுவெல்லாம் இந்த சுரேஷ் வேதநாயகத்தின் காமெடிக் கைங்கரியம்தான். "ஏண்டா 100 பேர் பணம் கொடுத்து சோறு வாங்கி சாப்பிடவேண்டிய இடத்தில் 10 பேர் கூட சாப்பிடலை" என்று சொல்வது ஒரு குத்தமாடா ?! என்று அப்போதே இந்தக் கேள்வி எழுந்தது என்று சிரித்த பருந்தார் தொடர்ந்து பேசினார், "சுரேஷ் டென்சன் ஆனதற்குக் காரணம் இருக்கு. அந்தக் கேன்டீன் கட்டடம் கட்ட, கீழக்கரைப் பகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கோ, செய்தித்துறைக்கோ எந்தத் தொடர்பும் இல்லாத இரண்டு பேர் நிதி உதவி அளித்ததாகவும் அவர்களே அந்தப் "புரவலர்கள்" என்றும் அடையாளம் காண்பிக்கப் பட்டு அந்த இரண்டுபேரை சென்னை பத்திரிகையாளர் மன்றப் பொதுக் குழுவில் கொண்டு வந்து நிறுத்தினார் சுரேஷ் வேதநாயகம், என்ற பருந்தார்...
அந்தப் புரவலர்கள் அருண் ஐபிஎஸ்-ன் பரிந்துரையின்பேரிலேயே அந்தக் கேன்டீன் கட்டுமானத்துக்கு சுமார் 30 -40 லட்சம் ரூபாய் செலவு செய்ததாகவும், அந்த இருவரும் ஒரு வழக்கு ஒன்றில் தொடர்புடையவர்கள் என்றும் அப்போதே பத்திரிகையாளர்கள் மத்தியில் பேச்சு வலம் வந்தது என்றார். மேலும், அந்தக் கேன்டீன் கட்டடத்தையும் அருண் ஐபிஎஸ்-ஐ வைத்தே சுரேஷ் வேதநாயகம் திறந்து வைத்தார் என்பதும் ஊரறிந்த தகவல்.
அதன்பிறகு, மற்றொரு முறையும் அருண் ஐபிஸ்-சை அழைத்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிகழ்ச்சி நடத்தினார் சுரேஷ் வேதநாயகம். ஆக, அருண் ஐபிஎஸ்-உடன் இந்த அளவுக்கு நெருக்கமான நட்பு கொண்டவராக சுரேஷ் வேதநாயகம் இருக்கிறார் என்பது தெரிந்த அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும் சிரிப்பார்களா சிரிக்கமாட்டார்களா ?! என்று கேள்வி எழுப்பிய பருந்தார், "ஆட்சி மாறாம இருந்து அருண் ஐபிஎஸ் மாறாம சென்னை மாநகர ஆணையரா இருந்திருந்தா தினகரன் செய்தியாளர் சுரேஷ் வேதநாயகம் அமெரிக்க அதிபருக்கு ஈடான பவர்புல் ஆளா இருந்திருப்பார், அவரை எதிர்த்து ஒரு பத்திரிகை, ஊடகர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்திருக்கவே முடியாது என்று சொல்கிறார்கள் அந்த சிரிக்கும் பத்திரிகையாளர்களும், காவல்துறை அதிகாரிகளும்" என்றார் பருந்தார்.
ஆமாம் ஆமாம் ஆட்டம் ரொம்பவே ஓவர் என்று எமது தொடர்பில் உள்ளவர்களும் கூறுகிறார்கள் என்றோம்.
தொடர்ந்து பேசிய பருந்தார், "அந்த இரண்டு யூடியூபர்கள் வைக்கிற குற்றச்சாட்டில் பொய் இருந்தால் அதற்கு சுரேஷ் வேதநாயகம் நிவாரணம் தேடிக்கொள்ள உரிமை இருக்கிறது, ஆனால் சுரேஷ் வேதநாயகத்தால் பொய்ப் புகார் கொடுக்கப்பட்டு எந்த அடிப்படை விசாரணையும் செய்யப்படாமல் கொடுங்கோல ஆட்சியில் நடப்பது போல பொய்யான புகாரில் FIR போடப்பட்டு பாதிக்கப்பட்ட வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்தின் மன உளைச்சல், வாழ்க்கை, தொழில் பாதிப்பு ஆகியவற்றுக்கு சுரேஷ் வேதநாயகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்தானே ? சுரேஷ் அப்படி ஒன்றும் ஒன்றுமே தெரிந்திராத அப்பிராணி பப்பா அல்லவே" என்ற பருந்தார், அந்த யூடியூபர்களின் சில தனிமனித தாக்குதல்கள், குற்றச்சாட்டுகள் மீது நமக்கு உடன்பாடு இல்லை, மேலும் நாம் அவர்களோடு பேச்சுவார்த்தை கூட வைத்துக்கொள்வதில்லை என்றார்.
உண்மைதான் நீங்க சொன்னதை இப்போ நினைத்துப் பார்த்தால் நமக்கே சிரிப்பு வருகிறது என்றோம்.
சிரித்தது போதும் இப்போ ஒரு முக்கியத் தகவல் என்ற பருந்தார், "GEM கிரானைட் வீரமணி மீதான பாலியல் குற்றச்சாட்டு என்பது வெறும் கையைப் பிடிச்சு இழுத்தார் அப்படிங்கிற குற்றச்சாட்டு அல்ல. அது paedophile offence அதாவது சிறார் மீதான பாலியல் குற்ற வழக்கு. இந்த வழக்கை ஊத்தி மூட முயற்சி செய்தது மிகப்பெரிய குற்றம். paedophile offence என்பது பன்னாட்டு காவல்துறை மிகக் கடுமையாகக் கையாளும் வழக்கு. அதற்கு சமரசமே இருக்காது. இந்த வழக்கை மிகக் கவனமாக விசாரித்து வரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறாராம். நாளை (திங்கட்கிழமை) தமது சட்டமன்றப் பதிலுரையில் இதுகுறித்துக் குறிப்பிட்டு, சிறார்கள், பெண்கள் பாதுகாப்பு விசயத்தில் தவெக அரசின் நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை முதலமைச்சர் ஜோசப் விஜய் உறுதி செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் குழந்தைகள் நல சமூக செயற்பாட்டாளர்கள். இதில், உண்மையான விசாரணை நடந்தால் பலர் மாட்ட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் காவல்துறையில் உள்ள சில மூத்த அதிகாரிகள் என்ற பருந்தார் அடுத்த தகவலுக்குத் தாவினார்,
பெயர்தான் செய்தி ஆசிரியர். ஆனா செய்தியைத் தவிர வேறு எல்லா 'வேலைகளையும்' பார்த்துக்கொண்டு பல நூறு கோடி சொத்து சேர்த்ததாகக் கூறப்படும் அந்த டுபாக்கூர் செய்தி ஆசிரியர் கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர்கள் பங்களாக்கள் உள்ள கிரீம்ஸ் ரோட்டில் ராத்திரி நேரத்தில் ராப்பிச்சைக்காரன் போல சுத்தி வந்து கொண்டிருந்தார். அதிலும் தமது தாய்மொழியான தமிழ் அல்லாத பிறமொழி பேசும் அமைச்சர்கள் வீட்டில்தான் ராச்சோறு. அப்படி சுத்தி சுத்திப் பல கோடி சேர்த்துவிட்ட நிலையில், ஆட்சி மாறினாலும் 'கை அரிப்பு' மாறாமல் இருக்காம். அதனால இப்போ தலைமைச் செயலகம் பக்கம் அவரை அதிகம் பார்க்க முடியுதாம். அதிலும், வன்னி மரத்தை சுத்திச் சுத்தி வாறாராம் அந்த டுபாக்கூர். தான் செய்கிற அயோக்கியத்தனம் மேலிடத்துக்குத் தெரியாமல் தடுக்க உயர் அதிகாரிகளை அன்றாடம் மதியம் வெளியில் அழைத்துபோய் காஸ்டலியான கறிச்சோறு வாங்கிக் கொடுக்கிறாராம். வாராவாரம் கிழக்குக் கடற்கரைச் சாலை சொகுசு விடுதியில் அந்த உயர் அதிகாரிகளுக்கு 'சிறப்பு' விருந்துமாம். மேலிடத்துக்கே இப்படி எந்தத் தகவலும் போகாம செலவு செய்து தடுக்கிறோம், ஆனா பருந்தார்ல மட்டும் வந்துக்கிட்டே இருக்குனு 'கவலைப்படும்' அந்த டுபாக்கூர் ஆசாமி, "பருந்தார் தகவல்களைப் பகிராதீங்க பகிராதீங்க ப்ளீஸ்" அப்படினு ஒவ்வொருத்தர்கிட்டயா கெஞ்சுறாராம் என்ற பருந்தார் தலைமைச் செயலகம் பக்கம் திரும்பினார்.
நாம் பலமுறை குறிப்பிட்டும் தவெக அரசின் பலவீனமாகத் தொடர்ந்து நீடித்துவரும் பிரச்சனை அதிகாரிகளின் சிண்டிகேட். அனுபவம் இல்லாத, துறை சார்ந்த அடிப்படை தெரியாத அமைச்சர்களை இந்த அதிகாரிகள் சிண்டிகேட் எளிதாக ஆட்டிப் படைக்கிறதாம். குறிப்பாக, இந்த அதிகாரிகள் சிண்டிகேட், கடந்த மு.க.ஸ்டாலின் ஆட்சியில் "நிழல் அரசாகவே" Shadow Government ஆகவே செயல்பட்டது என்று கூறப்பட்டது. ஐந்தாண்டுகள் ருசி கண்டுவிட்ட அந்த 'தோன்றும் நிலவு' அதிகாரி தலைமையிலான சுமார் 60 - 70 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட சிண்டிகேட் இப்போதும் அதே வேலைகளைச் செய்கிறதாம். அதனால், இப்போதெல்லாம் 'காரியம் சாதிக்க' விரும்புவோர் அதிகாரிகளையே சந்தித்து காதும் காதும் வைத்ததுபோல காரியம் சாதிக்கிறார்களாம். அமைச்சர்களிடம் "சார் அப்படி செஞ்சா கெட்ட பெயர் வந்துடும், இப்படி செய்யுங்க, இவரை அங்கே அமர்த்தலாம், அவரை இங்கே அமர்த்தலாம்" என்று ஆலோசனை சொல்வதே இந்த அதிகாரிகள் சிண்டிகேட்தானாம், சொல்ல வைப்பவர் அந்த சிண்டிகேட்டின் தலைவர் 'தோன்றும் நிலவு' அதிகாரிதானம். அவர் முன்னாள் திமுக ஆட்சியாளர்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பவர் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்றும் பேசிக்கொள்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தில்.
அந்த வகையில், தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை தெரிவுக்குழுவில் ஹிந்து நாளிதழின் டி.சுரேஷ்குமார் அல்லது அதே நிறுவனத்தைச் சேர்ந்த இன்னொரு பத்திரிகையாளரை சேர்த்தாக வேண்டும் என்று செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் அருண் தம்புராஜ் வலியுறுத்துகிறாராம். இதில் இந்த டி.சுரேஷ்குமார்தான் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை தேர்தல் எனும் பெயரில் அடாவடி செய்து திமுகவிடம் தாரை வார்த்தவர். இதற்காகவே திமுக ஆட்சியில் இவருக்கு தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை தெரிவுக்குழுவில் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இதில் அதே நிறுவனத்தைச் சேர்ந்த இன்னொரு பத்திரிகையாளர் திமுகவுக்கு எதிர்க் குழுவில் போட்டியிடுவதுபோல நடித்து எதிரணியின் வாக்குகளைப் பிரித்தவர் என்று பத்திரிகையளர்களால் குற்றம் சாட்டப்பட்டவர். ஆக, இவர்கள் இருவரும் அரசியல் செய்யும் பத்திரிகையாளர்கள். இப்படிப்பட்ட நிலையில், இவர்களில் ஒருவரை (மீண்டும்) நியமிக்க அருண் தம்புராஜ் துடிப்பதில் இருந்து மு.க.ஸ்டாலினின் வாக்கிங் நண்பர் ஹிந்து என்.ராமின் அழுத்தம் காரணமாகவே தம்புராஜ் துடிக்கிறாரோ என்ற கேள்வி பத்திரிகையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஹிந்து போன்ற பெரிய, மூத்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் அந்தக் குழுவில் இடம்பெறவேண்டும், ஆனால் இப்படி அரசியல் கட்சி ஆதரவாளர்கள் இல்லாமல் எல்லோருக்கும் பொதுவான ராமகிருஷ்ணன் போன்ற பத்திரிகையாளர்களை அக்குழுவில் இடம்பெற வைப்பதே ஜோசப் விஜய் அவர்களின் தவெக அரசுக்கு மரியாதை என்கிறார்கள். ஆனாலும் திமுக ஆதரவாளர்களுக்கு மட்டும்தான் இடம் கொடுப்பேன் என்று அருண் தம்புராஜ் துடிப்பதில் இருந்து அவரது நோக்கம் ஐஏஸ் சிண்டிகேட்டின் நோக்கம்தான் என்றுகூடவா தலைமைச் செயலகப் பத்திரிகையாளர்களுக்குத் தெரியாது என்று பேசிக்கொள்கிறார்கள் என்ற பருந்தார்,
தமிழ் வளர்ச்சித்துறை கூறு கெட்டுக் கிடக்கிறதாம். அதில் அவ்வை நடராசனின் மகன் அவ்வை அருள் ஆட்டம் கமுக்கமாக ஆனால் ஆழமாக இருக்கிறதாம். அவர் இரண்டு பொறுப்புகளில் இருந்துகொண்டு இரண்டு ஊதியம் வாங்கிக்கொண்டு பல வேலைகளைத் தமிழுக்கும், தமிழருக்கும்,தமிழ் வளர்ச்சித் துறைக்கும் எதிராக செய்து கொண்டிருக்கிறாராம்...அது குறித்து அடுத்த சந்திப்பில் பார்ப்போம் என்ற பருந்தார்,
இப்படி பழைய ஊறிப்போன அதிகாரிகளை இன்னமும் வைத்துக்கொண்டு பழைய குருடி கதவைத் திறடி என்கிற பழமொழி போல கடந்த திமுக ஆட்சியே மீண்டும் நடப்பதற்குப் பதிலாக ஆட்சியை திமுகவிடமே ஒப்படைத்துவிடலாம் என்று வருந்துகிறார்கள் நேர்மையான அதிகாரிகளும், பொதுமக்களும். எனவே, முதலமைச்சர் கண்டுகொள்ளவேண்டும் என்ற பருந்தார் திரும்பிப் பார்ப்பதற்குள் வானத்தில் மேகத்தினுள் மறைந்துவிட்டிருந்தார்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
1
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)