கலைஞர் கருணாநிதியின் புகழ் பாட மறுப்பு : திமுகவால் புறக்கணிக்கப்பட்டதா உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் ?!

உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள்: கருணாநிதி நடத்திய செம்மொழி "அரசியல்" மாநாட்டுக்குப் பிறகு என்ன நடந்தது ? முழுப் பின்னணி

Jul 13, 2026 - 10:37
Updated: 2 months ago
0 36
கலைஞர் கருணாநிதியின் புகழ் பாட மறுப்பு  :  திமுகவால் புறக்கணிக்கப்பட்டதா உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் ?!

மலேசியாவின் மலாயாப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த தனிநாயகம் அடிகளார் முன்னெடுப்பில் 1964 ம் ஆண்டு International Association of Tamil Research (IATR) - உலகத் தமிழாராய்ச்சி மன்றம் நிறுவப்பட்டது.

இந்த அமைப்பின் மிக முக்கியமான முன்னெடுப்பு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடத்தப்படவேண்டும் என்பது.

இந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளின் நோக்கம், "உலகெங்கிலும் வாழும் தமிழ் அறிஞர்களிடமிருந்து தமிழ், தமிழர் குறித் ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்று அவற்றை மாநாட்டில் முன்வைப்பது, அவற்றைத் தொகுத்து நூல்களாக வெளியிடுவது என்பது.

ஆக, தமிழ் சார்ந்த ஆய்வு அறிவை கூர்மைப் படுத்த வேண்டும், ஆய்வு அறிவை செழுமைப் படுத்தித் தொகுத்து ஆவணப்படுத்த வேண்டும் என்பதே.

அதன்படி,

முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1966 ஆம் ஆண்டு மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டை சர்வதேச தமிழாராய்ச்சி மன்றத்தின் (IATR) நிறுவனர் பேராசிரியர் தனிநாயகம் அடிகளார் முன்னின்று நடத்தினார்.

இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1968 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டை அப்போதைய தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாதுரை தலைமையிலான தமிழக அரசு, IATR உடன் இணைந்து நடத்தியது.

மூன்றாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1970 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்றது. பிரெஞ்சு இந்தியவியல் அறிஞர் பேராசிரியர் ஜீன் பிலியோசா (Jean Filliozat) தலைமையில் மாநாடு நடைபெற்றது.

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974 ஆம் ஆண்டு இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதன் தலைவராக பேராசிரியர் சு. வித்தியானந்தன் செயல்பட்டார். இந்த மாநாட்டின் நிறைவு நாளில் ஏற்பட்ட காவல்துறை தலையீட்டில் பலர் உயிரிழந்த சம்பவம் தமிழர் வரலாற்றில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்றது. அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் தலைமையிலான தமிழக அரசு மாநாட்டை நடத்தியது.

ஆறாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1987 ஆம் ஆண்டு மீண்டும் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது. மலேசியத் தமிழர் அமைப்புகளும், அந்நாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவும் முக்கிய பங்கு வகித்தன.

ஏழாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1989 ஆம் ஆண்டு மொரீசியஸ் நாட்டின் போர்ட் லூயிஸில் நடைபெற்றது. அந்நாட்டு கல்வி அமைச்சர் அர்மூகம் பரசுராமன் மாநாட்டு ஏற்பாடுகளில் முக்கிய பங்கு வகித்தார்.

எட்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1995 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் நடைபெற்றது. அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு இதை நடத்தியது.

இப்படி, 8 மாநாடுகள் வரை ஒழுங்காக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் வரிசையில் ஜெயலலிதாவும் உலகத் தமிழாராய்ச்ச்சி மாநாடு நடத்திவிட்டார் என்பதால் "தனது தலைமையிலும் உலகத் தமிழாராய்ச்ச்சி மாநாடு நடக்க வேண்டும்" என்று கலைஞர் கருணாநிதி ஆசைப்பட்டார்.

ஆனால் முதலமைச்சர் கருணாநிதியின் விருப்பப்படி உடனே நடத்தமுடியாது என்றும் மாநாட்டு விதிகளின்படி குறைந்தது ஒரு ஆண்டாவது ஆயத்தப் பணிகளுக்கும், ஆய்வுக் கட்டுரைகள் பெறவும் தேவைப்படும் என்றும் IATR - உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் டாக்டர் நோபுரு கராஷிமா கூறினார்.

அதனால் கடும் கோபமடைந்த கலைஞர் கருணாநிதி "செம்மொழி மாநாடு" எனும் பெயரில் கோயமுத்தூரில் பெரும் பொருட் செலவில் நடத்திய ஒரு தனி மாநாடு மிகப்பெரிய அளவில் எதிர்மறையான பெயரை கருணாநிதிக்கும், திமுகவுக்கும் பெற்றுத் தந்தது.

அந்த மாநாடு கலைஞர் கருணாநிதி புகழ் பாட நடத்தப்பட்ட அவரது குடும்ப மாநாடு என்றே வெளிப்படையாகக் குற்றம் சாட்டப்பட்டது.

அதிலிருந்தே உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடத்தும் மலேசியாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் IATR அமைப்பை உடைக்க வேண்டும் என்று திமுக முடிவெடுத்ததாக ஒரு கருத்து நிலவுகிறது.

ஆனாலும், IATR அமைப்பின் தற்போதைய உலகத் தலைவர் பேராசிரியர் டான் ஸ்ரீ மாரிமுத்து அவர்களின் தலைமையில், IATR ன் இந்தியச் செயலாளர் மாசிலாமணி நந்தன் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் 2023 ம் ஆண்டு 11 வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவின் மலாயாப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.

அந்த மாநாட்டிற்கும் அப்போதைய முதலமைச்சர் மு..ஸ்டாலின் ஆதரவு கொடுக்கவில்லை. மாநாட்டின் இறுதியில் உதயநிதி ஸ்டாலின் ஒரு வாழ்த்துச் செய்யதியை மட்டும் காணொலி வடிவில் அனுப்பியிருந்தார்.

ஆனால், அதேவேளை திமுக ஆதரவாளர்களை வைத்து அதே தேதிகளில் சென்னையில் ஒரு மாநாடு போட்டியாக நடத்தப்பட்டது. அந்த மாநாடும் முறையாக IATR அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட "தமிழ் ஆராய்ச்சி மாநாடு" அல்ல.

அடுத்து 12 வது மாநாட்டை நடத்த முயன்றபோதும் திமுக ஆதரவு தரவில்லை. அதிலும் அந்த முயற்சியைக் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கும் முயற்சியில் மு..ஸ்டாலினின் ஆட்சியில் "நிழல் முதலமைச்சர்" போல செயல்பட்ட அதிகாரி உதய சந்திரன் முழு வீச்சில் ஈடுபட்டார்.

ஆக, கருணாநிதி குடும்பப் புகழ் பாட மறுக்கும் எவருக்கும் இதே கதிதான் என்பதே திமுகவின் வன்மமாக இருந்து வந்திருக்கிறது என்கிறார்கள் தமிழ் மொழி மீது அக்கறை கொண்டவர்கள்.

இத்தகைய நிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜய், தனிநாயகம் அடிகளார் தொடங்கி இன்றைய பேராசியர் டான் ஸ்ரீ மாரிமுத்து ஐயா மற்றும் மாசிலாமணி நந்தன் அவர்கள் வரை கட்டிக் காத்து வரும் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் - IATR ன் பழமை, பெருமையை மீட்டெடுத்து தமது தலைமையில் 12 வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த வேண்டும் என்பதே "தமிழியல் நடுவம்" மற்றும் உலக அளவிலான தமிழ் ஆய்வாளர்களின் விருப்பமாக இருக்கிறது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User