அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு; நக்கீரன் பிரகாஷ் கைது! பதற்றத்தில் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்?

அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு சோதனை, நக்கீரன் தாமோதரன் பிரகாஷ் கைது மற்றும் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் குறித்த பருந்தாரின் பரபரப்புத் தகவல்கள்.

Sep 17, 2026 - 10:39
Updated: 2 minutes ago
0 41
அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு; நக்கீரன் பிரகாஷ் கைது! பதற்றத்தில் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்?

நமது இருப்பிடத்திற்கே பறந்து வந்த பருந்தார் கடகடவென தகவல்களைக் கொட்டத் தொடங்கினார்.

"லண்டன் பயணத்தை முடித்துவிட்டு முதலமைச்சர் சென்னை வந்தாகிவிட்டது. அன்பில் மகேஷ் இடங்களில் அதிரடி சோதனையும் முடிந்துவிட்டது. இந்த சோதனை "தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி, பல கோடி மோசடி செய்த வழக்கு" தொடர்புடையது.

இந்த வழக்கில் B.T.அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருக்காங்க. அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை பாய்கிறது. அன்பில் மகேஷ் மீது ஏற்கனவே ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டாகிவிட்டது.

இந்த சோதனை நடவடிக்கை குறித்து செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ள சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினர், ' இன்று (16.09.2026) திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சொந்தமான சென்னையில் 2 இடங்கள் மற்றும் திருச்சியில் 2 இடங்கள், இவரது உதவியாளர்களான வாலாடி கார்த்திக், அருண் பிரகாஷ் மற்றும் பிரகாஷ் ஆகியோருக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் ஆகியவற்றுடன் சேர்த்து வழக்கு சம்மந்தமாக 118 ஆவணங்கள், 18 செல்போன்கள்,3 Laptop,8 Pendrive, 2 Desktop (inbuild Hard Disk), 1 Tablet, 1 Apple I pad கைப்பற்றப்பட்டுள்ளது" ன்னு சொல்லி இருக்காங்க என்ற பருந்தாரிடம்,

சூடு பிடிச்சுடுச்சு போல என்றோம்.

"மக்கள் பணத்தைத் தொட மாட்டோம், தொட்டவங்களை விட மாட்டோம்"னு முதலமைச்சர் ஜோசப் விஜய் சும்மா சொல்லலை, உண்மையிலேயே காட்டு காட்டத் தொடங்கிட்டார்னு தலைமைச் செயலகத்துல பேச்சு.

...பார்ப்போம் என்றோம்.

தொடர்ந்து பேசிய பருந்தார், "இந்த சோதனை நடவடிக்கை ஒருபுறம், இன்னொருபுறம் பெண் ஊடகவியலாளரைத் தரக்குறைவாக, இழிவாகப் பேசியதாக நக்கீரன் பத்திரிகை நிருபர் தாமோதரன் பிரகாஷ் கைது ஒருபுறம்னு நேற்று ஒரே களேபரம். "எங்கேயோ தேள் கொட்டினால் வேறு எங்கேயோ நெறி கட்டும்னு" பழமொழி இருக்கு அதுக்கு ஏற்ப இந்த ரெண்டு சம்பவங்கள் தனித்தனியா நடந்துட்டு இருக்கிற நேரத்தில் சென்னையில் குளுகுளு அறையில் உட்கார்ந்து இருந்த ஒரு தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் ஒருவருக்கு வியர்த்து விறுவிறுனு ஆயிடுச்சாம்.

இதென்ன புதுசா இருக்கே...யார் அது, அவருக்கு என்ன இந்த நடவடிக்கைகளால பிரச்சனை!? என்று கேட்டோம்.

அந்த ஆசாமி, கருப்புச் சட்டை ஒருத்தர் சிபாரிசில் அந்ப் பெரிய சேனலில் போய் உட்கார்ந்தவுடன் உலகத்தில் இருக்கும் ஒட்டுமொத்தத் தொலைக்காட்சி செய்திப் பிரிவுக்கும் தான்தான் ஒரே ஆசிரியர் அப்படினு நினைப்பு.

நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கும்னு சொல்லுவாங்க. பிரபல பத்திரிகை ஒன்றில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துத் தன்னைப் பத்தி அட்டைப்படக் கட்டுரை போ வச்சு "நல்லவர், வல்லவர், நாலும் தெரிஞ்சவர்னு" அரசியல்வாதி போல பணம் கொடுத்து விளம்பரம் தேடி ஆசாமி, இப்போது யாராவது விருது கொடுக்கமாட்டாங்களான்னு வடிவேலு பாணியில் 'நாச்சியப்பன் பாத்திரக்கடை" தேடுகிற ஆள்.

அந்தசாமி வெளியில் பெரியார், சாதி ஒழிப்பு, பகுத்தறிவுன்னு உருட்டிட்டு பின்னாடி தான் சார்ந்துள்ள தெலுங்கு பேசும் சாதிச் சங்கத்துக்கு லட்ச லட்சமா பணத்தை வாரிக் கொடுக்கிறவர். தான் வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்து சென்னையில் உள்ள அந்தத் தமிழ்த் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவில் இருந்து ஒவ்வொரு தமிழராகப் பார்த்துப் பார்த்து...நொந்து போக வச்சு, வேலையைவிட்டு விரட்டிவிட்டுட்டு இருக்கார். அத்தோட நிற்காம, தெலுங்கு பேசும் ஆட்களா பார்த்து 32 பேருக்கும் மேல வேலைக்கு சேர்த்து, ஒரு தெலுங்கு செய்திப் படையோடு அந்த சேனலில் வலம் வந்துட்டு இருக்காராம். அவரோட தெலுங்குப் படைக்கு மட்டும் சம்பள உயர்வு, ஊக்கத்தொகைன்னு போட்டுக் கொடுக்கறாராம்.

ஓஹ்...

ஒரு யோக்கியமான செய்தி ஆசிரியர் இப்படிச் செய்வானா ? என்று கேட்ட பருந்தார், அந்தச் சேனலில் இதற்கு முன்னாடி தொடக்கத்திலிருந்து இருந்த செய்தி ஆசிரியர் மீது வேறு சில அதிருப்தி இருந்தாலும், செய்திப் பணியில் அவரை அடிச்சுக்க முடியாத அளவுக்கு கண்டிப்பான செய்தி ஆசிரியர். அவர் போனதற்குப் பிறகு வந்த இந்த நபர் செய்தியைத் தவிர மீதி எப்படிப் பணம் சுருட்டுவது, முதலீடு செய்வது எப்படி, எப்படிப் பரிசாக கார் வாங்குவது, நிலம் வாங்குவது, எந்த சிபாரிசு செஞ்சு கமிஷன் வாங்குறது, எந்த அமைச்சரைப் பார்த்து மேட்டர் முடிக்கிறதுன்னு 24 மணிநேரமும் பணம் பணம் பணம் மட்டுமே குறிக்கோளாம்.

....

இதற்காகவே தன்னைச் சுற்றிலும் தெலுங்கு பேசும் ஆட்களைத் தேடிப்பிடிச்சு வச்சிருக்காராம். அதுல பலபேருக்கு தமிழில் செய்தியே ஒழுங்கா எழுத வரலயாம். ஆனாலும், சாதிப்பாசம், மொழிப்பாசம் அந்த செய்தி ஆசிரியரை இப்படிச் செய்ய வைக்குதாம்.

பெரியார் இராமசாமி புகழ் ஓங்குக என்று சொல்லிவிட்டு சரி...இந்த சோதனை + கைதுக்கும் இந்த ஆசாமிக்கும் என்ன தொடர்பு ? என்று நாம் கேட்டோம்.

வேறு என்ன... தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அரசு அனுமதி பெற்று தருவதாக கூறி, பல கோடி மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பி.டி.குமாரும் இந்த ஆசாமியும் நல்ல நெருக்கமாம். குமாரின் அலைபேசித் தொடர்புகளைப் பட்டியல் எடுத்த போது இந்த பிராடு ஆசாமி அவரிடம் பலமுறை பேசியது தெரிய வந்திருக்காம். அதேபோல அந்த முன்னாள் அமைச்சரோடும் நெருக்கமாம். அது மட்டுமல், இந்த ஆசாமிக்கு நெருக்கமானவர்தான் பெண் ஊடகவியலாளரை இழிவாகப் பேசிய வழக்கில் கைதான நக்கீரன் தாமோதரன் பிரகாசும் என்ற பருந்தார்,

ஆக....வியர்க்குமா வியர்க்காதா ? விறுவிறுக்குமா விறுவிருக்காதா ? வழக்கமா எட்டு மணிக்கு அலுவலகம் விட்டு வெளியே போகிற ஆசாமி நேற்று 11.30 க்குதான் வெளில போனாராம், போகும்போது BGM ல் "இடியே ஆனாலும் தாங்கிக் கொள்ளும் இதயம்" பாட்டு ஓடியதாம். என்று கூறிய பருந்தார் தொடர்ந்து பேசினார்,

உங்க தமிழ் ஊடகம் செய்தி ஆசிரியர் மீது சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகி ஒருவர் பொய்ப் புகார் கொடுத்து FIR போட வச்ச அன்னைக்கு இந்த பிராடு ஆசிரியர்தான் அதே செய்தித் தளத்துல "பார்த்தீங்களா நான் இறங்கி அடிச்சதுல விசுவா கதி கலங்கிட்டான்" அப்படினு அட்டைக்கத்தி வீசுன ஆள் என்ற பருந்தாரிடம்,

இவனைப் போல எத்தனை அட்டகத்திகளை உண்மையான பத்திரிகை ஊடகர்ள் பார்த்து இருப்பாங்க என்று சொல்லிவிட்டு மடியில் கனம் இருந்தா வழியில் பயம் இருக்கத்தானே செய்யும் !? என்று நாம் சொல்லி முடிப்பதற்குள் விர்ர்ர்ரென விண்ணில் பறந்தார் பருந்தார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User