GEM வீரமணி முதல் புதிய தலைமைச் செயலகம் வரை: பத்திரிகை வட்டாரத்தில் பரவும் தகவல்கள் | பருந்தார்
GEM வீரமணி தொடர்பான செய்திகளை வெளியிடாமல் இருக்க சில பத்திரிகையாளர்கள் பணம் பெற்றார்களா என்ற குற்றச்சாட்டு முதல், விருதுக்காக அலைவதாகக் கூறப்படும் செய்தி ஆசிரியர் மற்றும் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமையுமா என்ற தகவல் வரை — பருந்தார் தகவல்கள்.
+ செய்தி வெளியிடாமல் இருக்க GEM கிரானைட் வீரமணியிடம் பணம் வாங்கினார்களா சில பத்திரிகையாளர்கள் ?!
+ வடிவேலு பாணி நாச்சியப்பன் கடையில் விருது வாங்கத் துடிக்கும் பகலவன் செய்தி ஆசிரியர் !
+ சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்?!
+ செங்கல்பட்டில் முருகன் கோயில் சிலை மாயம்?!
- தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்
பறந்து வந்த பருந்தாரின் தலையில் அழகான மயிலிறகு, கையில் புல்லாங்குழல், மாயக் கண்ணன் வேடம்
கோகுல அட்டமியை கொண்டாடுகிறீர் போல என்று கேட்டோம் பருந்தாரிடம்.
ஆமாம் நாம் குழந்தைகளுக்கு கண்ணன் போல கடவுள் வேடமிட்டு அவர்களை வணங்கி மதிக்கிறோம் ஆனா சில பெரிய மனிதர்கள் போர்வையில் உள்ள மனிதத்தன்மையற்றவர்கள் சிறுமிகளை சீரழிக்கிறார்கள் என்று வருத்தப்பட்ட பருந்தார் தொடர்ந்து பேசினார், "GEM வீரமணி மீதான குற்றச்சாட்டு பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. காணொலியில் இருந்தவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறிக் காவல்துறையினர் வழக்கை ஊத்தி மூடியிருக்கிறார்கள் என்பதுதான் இங்கே ஹைலைட். நீதிமன்றம் உறுதியாக அழுத்தம் கொடுத்தவுடன் வேறு வழியின்றி வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கணவன் மனைவி கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஆமாம் செய்தியில் பார்த்தோம் என்றோம்.
இது ஏதோ ஒரு சிறுமியை போகிற போக்கில் பாலியல் தொல்லை கொடுக்க வீரமணி தொட்டுவிட்டார் என்று முடியும் பிரச்னை இல்லை என்கிறார்கள். இது நீண்ட நெடுநாளாக வழக்கமான ஒரு குற்றச்செயலாக Habitual offence ஆக இருக்க வாய்ப்பு உள்ளதாக சந்தேகப்படுகிறார்கள்.
இந்த வழக்கை ஊத்தி மூட காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் என ஒரு பெரிய நெட்ஒர்க் வேலை செய்திருக்கிறது. பல கோடி ரூபாய்கள் கைமாறியிருக்கின்றன என்பது அடுத்த அதிர்ச்சி. Child trafficking என்பது உலக அளவில் மன்னிக்கமுடியாத குற்றமாகக் கருதப்படுகிறது. அந்த வகையில்தான் இங்கே போக்சோ போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
இந்தக் குற்றத்தைச் செய்தவர்களைவிட அதனை மறைக்க உதவிய சில காவல்துறையினர் மற்றும் சில பத்திரிகையாளர்கள் அசல் குற்றவாளிகளைவிடப் பெரிய குற்றம் செய்திருக்கின்றனர். வேலியே பயிரை மேய்ந்த நிகழ்வு இது.
இதில் ஒரு பத்திரிகையாளர் சென்னை கோயம்பேட்டில் ஒரு மதுபான விடுதியில் இலங்கையைச் சேர்ந்த ஒரு சிறுமி காரில் ஏற்றிக் கொல்லப்பட்ட நிகழ்வை "உல்லாசத்திற்கு வர மறுத்ததால் கொல்லப்பட்டாரா ?" என்று தலைப்பிட்டு அந்தச் சிறுமியின் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமிலிருந்து எடுத்து பத்திரிகையில் செய்தியாக வெளியிட்டவர். இது பத்திரிகை ஊடக அறத்திற்கு எதிராக மட்டுமல்லாது Juvenile justice act அதாவது சிறார் பாதுகாப்பு சட்டத்தையும் மீறிய குற்றச் செயல். இதுகுறித்து ஒரு வழக்கறிஞர் ஏற்கனவே காவல்துறை தலைமை, மனிதஉரிமைகள் அமைப்புகள், சிறார் பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றுக்கு புகார் அனுப்பியுள்ளார். கடந்த ஆட்சியின் ஒரு உயர் காவல்துறை அதிகாரிக்கு நெருக்கமாக இருந்ததால் இந்தப் புகாரையெல்லாம் அவர் அலட்சியப்படுத்தி இருக்கிறார். இன்னொருத்தர் அடிப்படையிலேயே ப்ளாக் மெயில் பத்திரிகையாளர், அந்த ஆளோட லட்சணம் உலகத்துக்கே தெரியும். பெண்கள் விசயத்துல அவர் செருப்படி, விளக்குமாறு அடி வாங்காத நாளே இல்லை, இடமும் இல்லை. அது ஒரு அருவருப்பு அழுக்கு மூட்டை.
ஆக, இந்தப் பத்திரிகையாளர்களுக்கு சிறார் குறித்த எந்த அக்கறையும் இல்லாதிருப்பதைப் பார்க்கும்போது GEM வீரமணிக்கு இவர்கள் உதவியிருப்பார்கள் என்று சிலர் சொல்வதில் உண்மை இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
மானுடமா இல்லை பணமா என்று கேட்டால் மானுடத்தின் "சதைகளை விற்றுக் கிடைக்கும்" பணத்தின்பின் ஓடும் இவர்களெல்லம் பத்திரிகைத் துறையின் மட்டரகமான அவல நிலைக்கு எடுத்துக்காட்டு என்ற பருந்தார் அடுத்த தகவலுக்குத் தாவினார்.
இதுவும் பத்திரிகைத் துறை சார்ந்த தகவல்தான், "திமுக தலைமைக்கு யார் நெருக்கமாக இருப்பது என்கிற போட்டி மூன்று தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்களுக்கு இடையில் கடந்த 2021 - 26 திமுக ஆட்சியில் இருந்தது. அவரவர்கள் தங்களை "சிறந்த பத்திரிகை ஊடகவியலாளர், செய்தி ஆசிரியர்" என்று பில்ட் அப் செய்வதற்கு "போற்றிப்பாடடி பொன்னே" என்று ஒத்து ஓதுவதற்கு ஆட்களை வைத்திருந்தார்கள். ஒருவர் ஒரு படி மேலே சென்று கொம்பு வைத்த பத்திரிகையில் பணிபுரியும் ஒரு செய்தியாளருக்கு ஒரு லட்சம் பணம் கொடுத்து தனது படத்தை அட்டையில் போட்டு ஒரு "கவர்" ஸ்டோரி வரவைத்திருந்தார். அங்குமிங்கும் கெஞ்சி ஒரு விருதையும் வாங்கிவிட்டார். இதெல்லாம் எதற்கு என்றால் திமுகவில் "ராஜ்யசபா"உறுப்பினர் ஆவதற்கு "பிட்" போட.
இந்த மூவரில் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுகொண்டு தான்தான் ராஜ்யசபா உறுப்பினர் என்று கற்பனையில் மிதந்து கொண்டு கால் நிலத்தில் படாதவாறு பறந்தவாறே இருந்தனர். கெடுவாய்ப்பாக ஆட்சி மாற்றிவிட்டது.
இதில் ஒரு செய்தி ஆசிரியருக்கு திமுக பத்திரிகை சார்ந்த விருது ஒன்று இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அவ்வளவுதான் அந்த கொம்பு வைத்த பத்திரிகையில் "கவர்"ஸ்டோரி வரவைத்த பகலவன் ஆசிரியர் தூங்கவே இல்லயாம். "நான் அந்தக் கட்சிக்கு (திமுகவுக்கு) எப்படியெல்லாம் உழைத்தேன், ஆனா நன்றிகெட்ட தனமா எனக்கு ஒரு விருதும் இல்லை, ராஜசபை உறுப்பினர் பொறுப்பும் தரலை"ன்னு புலம்பிட்டுத் திரிகிறாராம். யாராவது ஏதாவது விருது கொடுங்கப்பா அதுக்கு பேமெண்ட் கொடுத்துடலாம் என்று பல தன்னார்வ அமைப்புகளிடம் கெஞ்சிக் கொண்டு இருக்கிறாராம்.
ஓ...வடிவேலு நாச்சியப்பன் பத்திரக்கடை போலவா என்றோம் !
அதே... ஆனா பத்திரிகை ஊடக வட்டாரத்துல என்ன பேசிக்கறாங்கன்னா, "அந்த திமுக பத்திரிகை விருது வாங்கும் பத்திரிகையாளரும் திமுகவை வச்சு 300 - 400 கோடி தேத்தியவர்தான் ஆனா, அவரு அதிமுககிட்ட பணம் வாங்காதவர். ஆனா இந்த "கவர்"ஸ்டோரி நபர் திமுகவுக்கு உழைச்சிக்கிட்டே இருப்பதா சொல்லி 400 கோடி தேத்திட்டு அதிமுககிட்டயும் 50 லட்சம் வாங்கியவராச்சே, அவருக்கு எப்படி திமுக விருது கொடுக்கும்னு பேசிக்கிறாங்க.
ஆக, யாருக்கும் விசுவவசமா இல்லாத காந்தி நோட்டுக்கு மட்டும் விசுவாசமா இருப்பவர்களுக்கு விருது காசு கொடுத்து வாங்கினாதான் உண்டு என்றோம் நாம்.
ஆமாம், தமிழ்நாட்டுல பத்திரிகை ஊடகத் துறையோட லட்சணம் இதுதான் என்ற பருந்தார், "ஒருங்கிணைந்த தலைமைச் செயலகக் கட்டடம் சென்னை பட்டினப்பாக்கம் Foreshore எஸ்டேட்ல வரும்போல. அது பொருத்தமான இடம்தான். அந்த இடத்தை அணுகுவதற்கு சுமார் ஆறு வழிகள் இருக்கு. அதனால போக்குவரத்துக்குப் பிரச்சனை வராது. அப்புறம், அதைவிட கடலுக்கு நெருங்கி MRC நகர்ல கட்டடங்கள் இருக்கு. அதனால கடல் அருகில்ன்னு பிரச்சனையும் இல்லை என்ற பருந்தார் அநேகமா அந்த வேலையை அரசு விரைவில் தொடங்க வாய்ப்பு இருக்கு என்று சொல்லிய பருந்தார், "அப்புறம் இது உறுதி செய்யவேண்டிய தகவல், செங்கல்பட்டு பெருக்கருணை அப்படிங்கற இடத்தில் உள்ள முருகன் கோயில் மூலவரைக் காணவில்லை"னு ஒரு தகவல். உண்மையான்னு விசாரிச்சிட்டு வர்றேன் நாளை சந்திப்போம் என்று கூறி பறந்து விட்டார் பருந்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)