அன்பில் மகேஷ் கைது: வில்சன் அலுவலக வாசலில் நடந்தது என்ன? ஆ.ராசா விசாரணை!

அன்பில் மகேஷ் கைது பின்னணி, ஆ.ராசா–மா.சுப்பிரமணியன் காவல்துறை விசாரணை, சுரேஷ் வேதநாயகம் மறுவிசாரணை குறித்து பருந்தார் தகவல்கள்.

Oct 28, 2026 - 18:00
Updated: 6 days ago
0 145
அன்பில் மகேஷ் கைது: வில்சன் அலுவலக வாசலில் நடந்தது என்ன? ஆ.ராசா விசாரணை!

+ திமுக வழக்கறிஞர், நாடாளுமன்ற உறுப்பினர் வில்சனின் அலுவலக வாசலில் வைத்தே அன்பில் மகேஷைக் கைது செய்த காவல்துறையினர் !

+ முன்னாள் அமைச்சர்கள் ஆ.ராசா - மா.சுப்ரமணியத்தைக் 'கலாய்த்த' காவல்துறையினர்?!

+ விசாரணைக்கு இன்று ஆஜர் ஆகுமா தினகரன் சுரேஷ் வேதநாயகம் அன் கோ !?

தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்

"பொதுவாக செல்வி ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில்தான் செய்தி நிறுவனங்களுக்கு இப்படி அன்றாடம் பரபரப்பான தலைப்புச் செய்திகள் கிடைக்கும். இப்போது முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சியிலும் அதிரடி நடவடிக்கைகள், முன்னாள் அமைச்சர்கள் கைது நடவடிக்கைகள் என மழைக்காலத்திலும் அனல் பறக்கிறது தமிழ்நாட்டில்" என்று யாரிடமோ அலைபேசியில் சத்தமாகப் பேசிக்கொண்டே அலுவலத்திற்குள் நுழைந்தார் பருந்தார்.

வாங்க பருந்தாரே நல்வரவு என்று வரவேற்றோம்.

எடுத்தவுடன் படபடவென்று தகவல்களைக் கொட்டத் தொடங்கினர் பருந்தார்.

திமுகவின் வழக்குகளைக் கையாள்வதையே பெரும்பான்மைப் பணியாகக் கொண்டிருக்கும் வழக்கறிஞர் வில்சன் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும்கூட.

ம்....

அவரது மகன் ரிச்சர்ட் வில்சனும் தனது தந்தையைப் போலவே வழக்கறிஞர்.

ம்...

அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை உயர்நீதிமன்றத்தில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்திருந்தார்.

ம்...

மனுவில் ஆளுநரின் அனுமதியின்றி தன் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யவும் கோரியிருந்தார்.

ம்..

ஆட்டுக்குத் தாடி போல, நாட்டுக்கு ஆளுநர் என்று சொல்லும் 'திமுகவினர்' இப்போதுமட்டும் ஆளுநர் அனுமதியின்றி வழக்குத் தொடுக்க முடியாது என்று கூறுவதா என்று கேள்வி எழுப்பியிருந்த நீதிபதி லட்சுமி நாராயணன், குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது, வேண்டுமானால் 'முன்பிணை' மனுத் தாக்கல் செய்யுங்கள் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டார்.

ம்...

இதைச் செய்தியாக்கிய தி ஹிந்து நாளிதழின் நீதிமன்றச் செய்தியாளர் மொஹம்மது இம்ரானுல்லாவை X தளத்தில் tag செய்திருந்த ரிச்சர்ட் வில்சன், 'நீதிமன்றச் செய்திகளை எப்படி எழுதவேண்டும் என்று இம்ரானுல்லாவுக்கு ஹிந்து நிறுவனம் பயிற்சி அளிக்கவேண்டும்" என்று கேலி செய்திருந்தார்.

ம்...

அதற்கு பதிலடி கொடுத்திருந்த இம்ரானுல்லா, "நான் ஒன்றும் உங்கள் சம்பளப் பட்டியலில் உள்ள செய்தியாளர் அல்ல" என்று தெரிவித்திருந்தார். இப்படி சில வாத விவாதங்கள் X தளத்தில் இடம் பெற்றன.

ம்...

அதாவது வில்சன் அன் கோவுக்கு திமுக சார்ந்த செய்திகள் அவர்கள் விரும்பும் வகையில்தான் செய்தி பத்திரிகை ஊடகங்களில் வரவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது போல என்ற பருந்தாரிடம்,

அதேபோல, "பத்திரிகை ஊடகர்களை எப்படிக் கையாள வேண்டும் என்று வில்சனுக்கும் அவரது மகன் ரிச்சர்ட் வில்சனுக்கும் உச்ச நீதிமன்றம் பயிற்சி கொடுக்க வேண்டும்" என்று பத்திரிகையாளர்கள் சொன்னால் எப்படி இருக்கும்?! என்று கேட்டோம்.

சரியான கேள்விதான் என்ற பருந்தார், நிலைமை இப்படி இருக்க அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன்பிணையும் நிராகரிக்கப்பட்ட நிலையில், எப்படியும் தன்னைக் கைது செய்து விடுவார்கள் என்று தெரிந்து வில்சனின் வழக்கறிஞர் அலுவலகத்திற்குச் சென்றிருக்கிறார் அன்பில் மகேஷ்.

ம்...

வில்சன் அலுவலகத்திற்கே சென்ற காவல்துறையினர் அன்பில் மகேஷ் வெளிவரும்வரை காத்திருந்து வாசலில் வைத்தே கைது செய்திருக்கிறார்கள்.

ஓ...

முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்தும் அமைச்சர் நிர்மல் குமார் குறித்தும் அவதூறாகப் பேசியதான புகாரில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவிடமும், அனுமதியின்றிப் போராட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் மா.சுப்ரமணியத்திடமும் காவல்துறை விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

ம்...

விசாரணைக்கு நேரில் வந்த அவரிடம், "உங்கள் பெயர் என்ன? தந்தை தாயார் பெயர் என்ன? சகோதர சகோதரிகள் பெயர் என்ன? குழந்தைகள் குறித்த விவரங்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது போன்ற கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். நொந்துபோன ஆ.ராசா, இதையெல்லாம் எதற்குக் கேட்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க சார் என்று நெருக்கிக் கேட்டிருக்கிறார்கள். இது என்னடா சோதனை என்று எண்ணிக்கொண்டே பதில் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

ம்...அதைத்தான் 'ஒரு டீ..ஒரு பிஸ்கட்' என்று சொன்னாரா ஆ.ராசா? என்று கேட்டோம்.

ம்....ஆமாம். அதேபோல மா.சுவிடவும் இதே ரகக் கேள்விகள். "நேரமாகிவிட்டது வெளிநாடு போகவேண்டும். டிக்கட் விசா எல்லாம் தயார்" என்றாராம் மா.சு. "நீங்க எங்கே வேண்டுமானாலும் போங்க சார், ஆனா மேலிடம் சொன்னால்தான் நாங்க உங்களை இங்கிருந்தே அனுப்ப முடியும்" என்று கூலாக சொல்லியிருக்கிறார்கள் காவல்துறையினர்.

அடடே...

ஜெம் வீரமணி தொடர்பான செய்திகளை வெளியிட்ட பாலிமர் டிவி கதிரவன் உள்ளிட்ட பத்திரிகை ஊடகர்கள் மீது அவதூறு பரப்பி மிரட்டல் விடுத்ததாக விசாரணையின் கீழ் இருக்கும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவரும், தினகரன் செய்தியாளருமான சுரேஷ் வேதநாயகம், நக்கீரன் நிருபர் தாமோதரன் பிரகாஷ், தினகரன் தாம்பரம் செய்தியாளர்களிடம் ஏற்கனவே 100க்கும் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ள. மறுவிசாரணைக்கு கடந்த சனிக்கிழை வரவேண்டும் என்று கூறியிருந்த நிலையில், வழக்கறிஞர் மூலமாக 28 ம் தேதி (இன்று) ஆஜராவதாக எழுத்துப் பூர்வமாகத் தெரிவித்திருந்தனர். ஆனால், இன்று பிற்பகல் 4 மணி வரை ஆஜரானதாகத் தகவல் இல்லை

ம்...

திருச்சியில் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்ட நிலையில் அடுத்த பெரிய விக்கெட் தீபாவளிக்குள் வீழ்த்தப்படுமாம், திருப்பதி கோயில், சட்டநாதர் கோயில் என்று சுற்றியது எல்லாம் வேலைக்காகவில்லையாம் என்று கூறிய பருந்தார் முதல் விக்கெட் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழக்கில் பரிமாற்றம் ஆன தொகை 420 கோடி என்கிறார்கள். இதில் முதல் மனைவிக்கு மட்டுமே 300 கோடி, அரசகுமாரன், முத்துக்குமாரன் வகைக்கு 50 கோடி, உதவியாளர் வகையில் 50 கோடி, ஓட்டுநர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 20 கோடி என்று கோடிகளில் கசியக்கூடிய தகவல்களை எல்லாம் கேட்டால் தலை சுற்றுகிறதாம். மொத்தத்தில் பள்ளிக்கல்வித் துறையில் தூர் வாரினால் ஆயிரம் கோடிகளைத் தாண்டும் குற்றச்சாட்டுகள் இருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள் அதிகாரிகள் என்ற பருந்தார் கண்ணிமைக்கு நேரத்தில் பறந்துவிட்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User