சுரேஷ் வேதநாயகம் மீது குற்றச்சாட்டுகள்: தினகரன் நிர்வாகத்தின் பதில் என்ன?
பத்திரிகையாளர் அமைப்புகளில் தலையீடு, செய்தியாளர்களை மிரட்டியதாக சுரேஷ் வேதநாயகம் மீது எழும் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழ் ஊடகத்தின் புலனாய்வுக் கட்டுரை.
அரசியல் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் ; பத்திரிகை 'முதலமைச்சர்' சுரேஷ் வேதநாயகம்?!
தினகரன் தலைமை நிர்வாகி ஆர்.எம்.ஆர்.ரமேஷ் மவுனம் காப்பது ஏன்?
சென்னை பத்திரிகையாளர் மன்றம், சென்னை நிருபர்கள் சங்கம், MUJ பத்திரிகையாளர் தொழிற்சங்கம் என எல்லாவற்றையும் கைப்பற்ற சுரேஷ் வேதநாயகம் ஆடிய ஆட்டம்!
- தமிழ் ஊடகம் புலனாய்வுச் செய்தியாளர்கள்
ஜெம் வீரமணி குறித்து எந்தச் செய்தியும் வெளி வந்துவிடக் கூடாது, அவ்வாறு செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பரப்பி, வதந்தி பரப்பி அவர்களை மிரட்டி, செய்தி வெளியிடாமல் முடக்கிவிடவேண்டும் என்று செயல்பட்ட தினகரன் பத்திரிகையின் தலைமைச் செய்தியாளரும், சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தின் தற்போதைய தலைவருமான சுரேஷ் வேதநாயகம் ஆடிய ஆட்டத்தின் விளைவாக இன்று அவர் காவல்துறை விசாரணை வளையத்துக்குள் மாட்டி நிற்கிறார்.
ஜெம் வீரமணி தொடர்பான செய்தி ஏன் வெளிவரக்கூடாது? அப்படி வெளிவரக்கூடாது என்று சுரேஷ் வேதநாயகம் துடிப்பது ஏன் எனும் இரண்டு கேள்விகளின் பின்னணியில் அதிரவைக்கும் சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன.
இந்த சுரேஷ் வேதநாயகமும், சென்னை மாநகர காவல்துறை முன்னாள் ஆணையர் அருண் ஐபிஎஸ்-சும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமல்ல அவர்களிருவரும் கூட்டாளிகள், குடும்ப நண்பர்கள் என்றே பத்திரிகை மற்றும் காவல்துறை வட்டத்தில் சொல்கிறார்கள். கமிஷனரே என் பாக்கெட்டில் என்று சுரேஷ் கூறுவதும், சென்னை பத்திரிகையாளர் மன்றத் தலைவர் சுரேஷ் வேதநாயகமே என் பாக்கெட்டில் என்று அருண் கூறுவதும் வழக்கம் எனவும் பேசிக்கொள்கிறார்கள்.
இந்தப் பின்னணியில் சுரேஷ் வேதநாயகத்தின் 'பத்திரிகையாளர் அமைப்புகளைக் கைப்பற்றிய நோக்கத்தை' எளிதில் புரிந்து கொள்ளமுடியும் என்று கூறும் மூத்த பத்திரிகையாளர்கள், நடப்பது திமுக ஆட்சி, பணிபுரிவது திமுக குடும்பப் பத்திரிகை தினகரன், தினகரன் தலைமை நிர்வாகி ஆர்.எம்.ஆர்.ரமேஷ் தன்னுடைய அடுத்த 'பாக்கெட்டுக்குகள்', சென்னை மாநகரக் காவல் ஆணையராகத் தனது கூட்டாளி அருண் ஐபிஎஸ், சென்னை சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக, துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின்....பிறகு என்ன புகுந்து விளையாடவேண்டியதுதானே என்று விளையாடியிருக்கிறார் சுரேஷ் வேதநாயகம் என்று கூறுகிறார்கள்.
முதலில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு 25 ஆண்டுகளாகத் தேர்தல் நடத்தவில்லை, அது மது அருந்தும் கூடமாகிவிட்டது, பல ஆயிரம் கோடி ஊழல் என்று சுரேஷ் வேதநாயகம் அன் கோ வாட்ஸ்ஆப் குழுக்களிலும், நக்கீரன் கோபால் அன் கோ காணொலிகள் மூலமாகவும் வதந்திகளை, அவதூறுகளைப் பரப்பினார்கள்.
இதில் வேடிக்கை என்னவெனில் "சென்னை பத்திரிகையாளர் மன்றம்" ஒரு பொழுது போக்கு மன்றம், Recreation Club. பொழுது போக்கு மன்றத்தில் மது அருந்தாமல் பஜனையா பாடுவார்கள் என்று கேட்கும் மூத்த பத்திரிகையாளர்கள், மன்றத்தில் கோடிக்கணக்கில் ஊழல் என்று கூறிய சுரேஷ் வேதநாயகம் அன் கோதானே கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்றத்தின் நிர்வாகத்தில் இருக்கிறார்கள்...பிறகு ஏன் ஒரு குண்டூசி அளவுக்குக் கூட ஊழலை நிரூபிக்கவில்லை, காவல்துறையில் புகார் கொடுக்கவில்லை...மாநகர ஆணையரே சுரேஷ்சின் பாக்கெட்டில்தானே இருந்தார் என்று கேள்வி எழுப்புகிறார்கள். அவர்கள்.
எல்லாம் பச்சைப் பொய், அவதூறு, வன்மம். திமுக ஆட்சி இன்னும் ஐந்தாயிரம் ஆண்டுகள் நீடிக்கும், 'சின்னவர்' உதயநிதி எங்கள் 'பாக்கெட்டில்' இருப்பார் என்கிற தெனாவெட்டில் சுரேஷ் வேதநாயகம், நக்கீரன் கோபால் அன் கோ ஆட்டம் ஆடினார்கள். ஆனா...'கடவுள் இருக்கார் கொமாரு' என்பதைப் போல இன்று முழுக்க முழுக்க மாட்டி நிற்கிறார்கள் பாருங்கள் என்கிறார்கள் அந்த மூத்த பத்திரிகையாளர்கள்.
வெறும் 400 பேர் மட்டுமே உறுப்பினராக உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அருண் ஐபிஎஸ் செல்வாக்கை வைத்து 500 காவல்துறையினரை இறக்கி மிரட்டிக் கூடுதலாக 800 திமுக ஆதரவு ஆட்களை சேர்த்துத் தேர்தல் எனும் பெயரில் அடாவடியாகச் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தைக் கைப்பற்றி அதன் தலைவராக ஆகிக்கொண்டார் சுரேஷ் வேதநாயகம் என்று கூறும் மூத்த பத்திரிக்கையாளர்கள், இதேபோலதான் மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு (சென்னை நிருபர்கள் சங்கம்) அமைப்பையும் கைப்பற்ற சுரேஷ் அன் கோ திட்டமிட்டு அது முடியாமல் போகவே, அருண் ஐபிஎஸ் செல்வாக்கை வைத்து அந்த கில்டு கட்டடத்தை ஒன்றரை ஆண்டுகள் பூட்டி வைத்திருந்தார் சுரேஷ் வேதநாயகம். அதனைத் திறந்தால் 'சட்டம் ஒழுங்குப் பிரச்னை' வரும் என்று மிரட்டி மிரட்டியே மூடி வைத்தார்கள் என்று ஆவேசத்துடன் பேசும் மூத்த பத்திரிகையாளர்கள் இத்தோடு தனது பேயாட்டத்தை நிறுத்தவில்லை சுரேஷ் வேதநாயகம் அன் கோ, அடுத்து MUJ எனும் மெட்ராஸ் யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ்ட் அமைப்பையும் ஆட்டையைப் போட்டது என்கிறார்கள்.
அந்த அமைப்புக்குத் தேர்தல் நியாயமாக நடந்த நாளன்று சுமார் 120 போலீசாருடன் அங்கு வந்த சுரேஷ் வேதநாயகம், 'தேர்தலை நிறுத்துங்கடா' என்று மிரட்டித் தேர்தலுக்குள் தலையிட்டு தனது ஆட்களை அங்கே நிர்வாகத்தில் அடாவடியாக அமர்த்தியிருக்கிறார் என்ற அவர்களிடம்,
சரி...நீங்கள் எல்லாம் மூத்த பத்திரிக்கையாளர்கள்தானே எதிர்த்து நின்று தடுக்க முடியாதா என்ற கேள்விக்கு அவர்கள் அளித்த பதில் அதிர்ச்சி அளித்தது.
அப்படிக் கேள்வி கேட்ட சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் மூத்த உறுப்பினர் நிலாவேந்தனை 'யாரோ மர்ம நபர்' என்று குறிப்பிட்டு அவரை அதிகாலையில் வீடு புகுந்து அழைத்துச் சென்று காவல்நிலையத்தில் வைத்தார்கள். மன்றத்தின் Bye-law -துணை விதிகளுக்குக்கு மாறாகத் தேர்தல் நடக்கிறது, அங்கே 30 லட்சம் ரூபாயில் கேன்டீன் அவசியமில்லை என்று எழுதிய மன்றத்தின் 22 ஆண்டுகால உறுப்பினர் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் மீது பொய்ப் புகாரில் FIR பதிவு செய்தார்கள். முன்னாள் நிர்வாகி அசுத்தலா என்பவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்கள். இத்தனைக்கும் அசுத்துல்லா IFWJ எனும் இந்திய அளவிலான உழைக்கும் பத்திரிகையாளர் தொழிற்சங்கத்தின் தேசியச் செயலாளர்... இப்படி அருண் ஐபிஎஸ்-சை வைத்து ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியது சுரேஷ் வேதநாயகம் அன் கோ. நாங்களெல்லாம் வெவ்வேறு நிறுவனங்களில் வேலை செய்கிறோம். வழக்கு, விசாரணை என்று அலைந்து கொண்டிருக்க முடியாது, அதனால்தான் தயங்கி நின்றோம். ஆனால் பாருங்கள் எங்களின் வேதனை யாருக்குக் கேட்டதோ இல்லையோ இறைவருக்கும், இன்றைய முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும், அமல்ராஜ் ஐபிஎஸ் போன்ற அதிகாரிகளுக்குக் கேட்டுள்ளது என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள்.
இதையெல்லாம் விட முக்கியமான ஒன்றைக் கவனியுங்கள் என்ற அவர்கள், "இதையெல்லாம் சுரேஷ் வேதநாயகம் தனியாகச் செய்திருந்தால் இந்நேரம் அவரை வேலையை விட்டு தினகரன் செய்தி நிறுவனத் தலைமை நிர்வாகி, ஆர்.எம்.ஆர் ரமேஷ் நீக்கியிருக்க வேண்டுமல்லவா...பாருங்கள் இன்னும் அவர் மீது ஆர்.எம்.ஆர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மாறாக அவரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிப்பு குறித்தும், ஜெம் வீரமணியின் பாலியல் கொடுமைகள் பற்றியும் செய்தி வெளியிட்ட கதிரவன், ஷபீர் அகமது போன்ற பத்திரிகையாளர்கள் மீதே தினகரன் சுரேஷ் அன் கோ அவதூறான, பொய்யான, வதந்தியை பரப்பி மிரட்டல் விடுத்தது அவர்கள் குரல்வளையை நசுக்கப் பார்க்கிறார்கள். இதுகுறித்து காவல்துறை FIR பதிவு செய்துள்ளது. இருந்தாலும், அவரைக் காப்பாற்ற தினகரன் நிறுவனம் முயற்சி செய்கிறது என்றால் சுரேஷ் பின்னணியில் தினகரன் நிர்வாகமே இருக்கிறதா எனும் கேள்வி எழுகிறது இல்லையா...அப்புறம் எப்படி இவற்றையெல்லாம் வேறு நிறுவனங்களில் பணியாற்றும் எங்களைப் போன்றவர்கள் வெளிப்படையாக எதிர்க்க முடியும்? அப்படி எதிர்த்தால் ஆர்.எம்.ஆர் போன்றவர்கள் எங்கள் நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது செய்தி ஆசிரியரிடம் பேசி எங்கள் வேலைக்கு வேட்டு வைத்தால் என்ன செய்வது என்று மனம் நோகக் கூறுகிறார்கள் அவர்கள்.
பத்திரிகை ஊடகர்கள், ஒரு சனநாயகத்தின் நான்காவது தூண் - Fourth Pillar of Democracy . அவர்களே இது போன்ற அடாவடி, அராஜகத்தைக் கண்டு அஞ்சும் அளவுக்கு ஆட்டமாடிய சுரேஷ் வேதநாயகம், நக்கீரன் கோபால் போன்றவர்களை இனியாவது இந்தப் பத்திரிகை ஊடக உலகம் நிராகரிக்க வேண்டும். பொதுமக்கள் அலட்சியப்படுத்தவேண்டும் என்கிறார்கள் மூத்த பத்திரிகை ஊடகர்கள்.
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)