ஒமானில் தமிழ்நாடு நாள் விழா: குமரிக் கிழவனாரின் தெற்கெல்லை மீட்பு வரலாற்று நூல் வெளியீடு!
ஒமானில் தமிழ்நாடு நாள் விழாவில் குமரிக் கிழவனார் எழுதிய ‘1956 நவம்பர் 1 – தெற்கெல்லை மீட்கப்பட்ட வரலாறு’ நூல் வெளியிடப்பட்டது.
ஒமானில் தமிழ்நாடு நாள் விழா: குமரிக் கிழவனார் எழுதிய தெற்கெல்லை மீட்பு வரலாற்று நூல் வெளியீடு!
1956 நவம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற மொழிவாரி மாநில மறுசீரமைப்பின்போது தமிழ்நாட்டின் தெற்கெல்லை மீட்கப்பட்ட வரலாற்றை ஆவணங்களின் அடிப்படையில் பதிவு செய்து, குமரிக் கிழவனார் எழுதிய ‘1956 நவம்பர் 1 – தெற்கெல்லை மீட்கப்பட்ட வரலாறு’ என்ற நூல், ஒமானில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் வெளியிடப்பட்டது.
ஒமான் செந்தமிழர் பாசறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழ்நாட்டின் எல்லை மீட்புப் போராட்ட வரலாற்றை எடுத்துரைக்கும் குமரிக் கிழவனாரின் முதல் நூல் வெளியிடப்பட்டது.
ஒருங்கிணைந்த ஒமான் தமிழர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரியா சிவக்குமார் முன்னிலையில், ஒமான் வாழ் தமிழ் உணர்வாளரும் பேராசிரியருமான இராமலிங்கம் நூலை வெளியிட்டார்.
மொழிவாரி மாநில மறுசீரமைப்பின்போது தமிழ்நாட்டிலிருந்து பிரிக்கப்பட்ட மூணாறு பகுதியைச் சேர்ந்த இராஜா, தமிழ்நாட்டுடன் தொடர்ந்து இணைந்திருக்கப் போராடி ஈகம் செய்த தியாகிகளின் மண்ணான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இராபர்ட் ஆகியோர் நூலின் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
தமிழ்நாட்டின் நில எல்லைகளை மீட்பதற்காக நடைபெற்ற போராட்டங்கள், தமிழினத்தின் உரிமை உணர்வு, எல்லை மீட்புத் தியாகிகளின் வரலாறு ஆகியவற்றை ஆவணங்களின் வழியாகப் பதிவு செய்யும் முயற்சியாக இந்த நூலை குமரிக் கிழவனார் எழுதியுள்ளார்.
தமது தமிழ்ச் சார்ந்த செயல்பாடுகளுக்குத் தொடர்ந்து துணைநிற்கும் ஒமான் செந்தமிழர் பாசறை மற்றும் தமிழர் பண்பாட்டு நடுவம் அமைப்புகளைச் சேர்ந்த அனைவருக்கும் நூலாசிரியர் குமரிக் கிழவனார் நன்றி தெரிவித்துள்ளார்.
நூல் கிடைக்கும் இடங்கள்
சென்னை:
பதுமராகம் பதிப்பகம், சென்னை – 95.
தொடர்பு: +91 95978 98110
நாகர்கோவில்:
சுதர்சன் புக்ஸ், கே.பி. சாலை.
தொடர்பு: +91 78459 52550
அரசு புக் ஸ்டால், செட்டிக்குளம்.
தொடர்பு: +91 94871 72501
மேலும், இந்த வாரம் தொடங்கவுள்ள சார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சிந்தனை விருந்தகம் அரங்கிலும் இந்த நூல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)