செந்தில் பாலாஜி + 22 முன்னாள் அமைச்சர்கள்; தாராபுரம் தொகுதியை அதிர வைக்கும் திமுக! | பருந்தார் தகவல்கள்

தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக தீவிர களப்பணி! செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் களமிறங்கியுள்ள பின்னணி என்ன? அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சிகளின் தேர்தல் வியூகங்கள் என்ன? தமிழ் ஊடகம் பருந்தாரின் களத் தகவல்கள்.

Sep 19, 2026 - 09:31
Updated: 6 hours ago
0 65
செந்தில் பாலாஜி + 22 முன்னாள் அமைச்சர்கள்; தாராபுரம் தொகுதியை அதிர வைக்கும் திமுக! | பருந்தார் தகவல்கள்

வீட்டுக்குச் சென்றுவிட்டு வருகிறேன் என்று சென்ற பருந்தார் 30 நிமிடங்களில் வந்துவிட்டார். வந்த கையோடு கடகடவெனத் தகவல்களைக் கொட்டத் தொடங்கினார்.

"தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளை மு..ஸ்டாலின் திமுகவுக்கான ஒரு பெரும் வாய்ப்பாகக் கருதுகிறாராம். இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட்டால் வெ அரசுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கைக் குறைக்க முடியும் என்று கணக்குப் போடுகிறாராம். பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிகளே பெரும்பாலும் வெற்றி பெறும் என்கிற கணக்கை உடைக்க வேண்டும் என்று விரும்புகிறாராம். இரண்டு இடைத் தேர்தல்களைப் பொறுத்தவரை தாமே நேரடியாகக் களத்தில் இறங்கியுள்ள மு..ஸ்டாலின் தாராபுரம் தொகுதியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளாராம்.

அது ஏனாம் என்று கேட்டோம்.

தாராபுரம் தொகுதியைப் பொறுத்தவரை அது தமிழ்நாட்டின் உண்மையான சமத்துவபுரம் என்று பத்திரிகையாளர்கள் சொல்வார்கள். காரணம், இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள வாக்காளர்களில் பொருளாதாரம் - நிலபுலன் - அதிகாரம் ஆகியவை வலுவாகக் கொண்ட கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சுமார் 31 விழுக்காடு இருந்தாலும்கூட, தேவேந்திரகுல வேளாளர்கள், பறையர்கள், அருந்ததியர்கள், கிறித்தவ, இஸ்லாமியர்கள் என சேர்த்துப் பார்த்தால் கிட்டத்தட்ட 45 விழுக்கட்டுக்கும் மேலாக உள்ளனர். வன்னியர்கள், முக்குலத்தோர், முதலியார்கள், நாயுடுகள், ரெட்டியார்கள், தெலுங்கு செட்டியார்கள் என கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் குடிமக்களும் கதம்பமாகக் கலந்து வாழும் ஒரு தொகுதி.

...

அரசு பட்டியலில் உள்ள மக்களுக்கான ரிசர்வ் தொகுதியான இங்கு கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பி.சத்யபாமா வெற்றி பெற்றார். அதாவது, தமிழ்நாடு முழுவதும் ஜோசப் விஜய் சூறாவளி வீசிய நேரத்திலும் தாராபுரம் தொகுதி வாக்காளர்கள் அதிமுகவுக்கே வாய்ப்பு அளித்தனர்.

ம்.....

ஆனால் அந்த வேட்பாளர் சில நாட்களிலேயே வெ பக்கம் சென்றுவிட்டதால் அதிமுக வாக்காளர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக மக்களே அந்த வேட்பாளர் சத்யபாபா மீது கடுப்பாகினர். அதற்கேற்ப அந்த வேட்பாளரையே வெ சார்பில் தற்போது நிறுத்தியிருக்கிறார் ஜோசப் விஜய்.

ம்.....

, அதிமுக மற்றும் வெ ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் கணிசமான அளவில் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள சத்யபாமாவுக்கு கடந்த தேர்தல் போல வாக்குகள் விழாது, அவை சிதற வாய்ப்பிருப்பதாக திமுக கணக்கிடுகிறது. அந்த சிதறும் வாக்குகளை நாம் ஏன் அள்ளக்கூடாது என்று சிந்திக்கிறதாம் திமுக. அப்படி வெற்றி பெற்றால் சோர்ந்து போயிருக்கும் திமுகவினரை ஊக்கப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறார்களாம்.

அடடே...அருமையான கணக்கு.

இதனால்தான் திமுகவின் 22 முன்னாள் அமைச்சர்களைத் தாராபுரத்தில் களம் இறக்கியிருக்கிறார் மு..ஸ்டாலின். அதுமட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாவட்டப் பொறுப்பாளர்கள், கட்சியினரையும் தொகுதிக்குள் இறக்கியிருக்கிறார். "தேர்தல் ஸ்பெஷலிஸ்ட்" செந்தில் பாலாஜி ஒருங்கிணைப்பில் 10 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு முன்னாள் அமைச்சர் என்கிற அடிப்படையில் "கதவுக்குக் கதவு" வாக்குளை சேகரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜி + திமுக என்றால் தேர்தல் நேரச் "சிறப்பு கவனிப்புகளும்" இருக்கும்தானே.... என்று சிரித்தார் பருந்தார்.

அது இல்லாமலா....?! என்று நாமும் சிரித்தோம். சரி...அதிமுக நாம் தமிழர் நிலை எப்படி ?! என்று கேட்டோம்.

அதிமுக மட்டும் சளைத்ததா என்ன ? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சத்யபாமாவும், அவரை தன் பக்கம் இழுத்த வெகவும் மக்களின் துரோகிகள். அவர்களுக்கா உங்கள் வாக்கு என்கிற கோணத்தில் அதிமுக களம் இறங்கியிருக்கிறது. திமுக ஆட்சியை வெறுத்துதான் வெகவுக்கு வாக்களித்தீர்கள், இப்போ வெ குறித்தும் தெரிந்துகொண்டீர்கள், எனவே இருக்கும் ஒரே வாய்ப்புதிமுகதான் என்று கூறிக் களம் இறங்குகிறது அதிமுக.

அப்படிப்போடு.....என்றோம்

நாம் தமிழருக்கு கோவை கார்த்திகாவை இறக்கியிருப்பது அந்தக் கட்சிக்கு கூடுதல் பலம். வேட்புமனுத் தாக்கல் செய்த கையோடு அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதை வியப்போடு பார்த்து இரசிக்கிறார்கள் தாராபுரம் தொகுதி மக்கள். அவர், தாராபுரம் தொகுதியில் திமுக, அதிமுக, வெ ஆகிய கட்சிகள் நிறைவேற்றத் தவறிய நீண்ட நெடிய நாள் பிரச்சனைகளை எடுத்துப் பேசி எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள் என்று பரப்புரை செய்தால் அவருக்கு சாதகம் ஏற்படும் என்கிறார்கள் தாராபுரம் தொகுதி பத்திரிகை ஊடகவியலாளர்கள் என்ற பருந்தார், தலைமைச் செயலகம் வரை போய்விட்டு வந்து மதியம் மீண்டும் சந்திப்போம் என்று கூறிவிட்டுப் பறந்துவிட்டார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User