அன்று FIR, கைது, மிரட்டல்?! இன்று அவதூறு புகார்! சுரேஷ் வேதநாயகம், நக்கீரன் பிரகாஷ் பின்னணி – பருந்தார் தகவல்கள்!
தினகரன் சுரேஷ் வேதநாயகம், நக்கீரன் பிரகாஷ் மீது அவதூறு புகார்? சென்னை பத்திரிகையாளர் மன்றம், அருண் ஐபிஎஸ், ஜெம் வீரமணி வழக்கு பின்னணி குறித்து பருந்தார் தகவல்கள்!
நீதியும் உண்மையும் மிக வலிமையானது!
திமுக ஆட்சியில் எதிர்த்து மனதால் 'சிந்தித்தாலே' FIR - கைது - மிரட்டல்' என்று பேயாட்டம் போட்ட தினகரன் சுரேஷ் வேதநாயகம், நக்கீரன் பிரகாஷ் !
இன்று அதே தெனாவெட்டில் 'அவதூறு பரப்பிவிட்டு' அல்லல்படும் நிலை !
தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள் !
ஒரு கையில் சுண்டல் தட்டு, மறு கையில் பொரித் தட்டு சகிதம் வந்து சேர்ந்தார் பருந்தார்.
வாங்க பருந்தாரே ஆயுத பூசை முடித்த கையேடு வருகிறீர் போல என்று சொல்லிக்கொண்டே சுண்டலில் கொஞ்சம், பொரியில் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டோம்.
பொரி போலவே படபடவெனப் பொறிந்து தள்ளினார் பருந்தார், "தினகரன் செய்தி நிறுவனத்தின் தலைமைச் செய்தியாளர் சுரேஷ் வேதநாயகம். தொடக்கத்தில் ஒரு நாளிதழின் காவல்துறை தரப்பு செய்திகளை சேகரிக்கும் செய்தியாளராகச் சென்னையில் பணியாற்றியவர். தொடக்கத்தில், திருவான்மியூர் பகுதியில் இன்னொரு செய்தியாளரின் அறையைப் பங்கிட்டுத் தங்கியிருந்த மிக எளிமையான பின்னணியைக் கொண்டவர்தான்.
ம்...
பொதுவாக செய்தியாளர்களுக்கு அதிலும் குறிப்பாக காவல்துறை அதிகாரிகளை எளிதாக நெருங்கும், பேசும் அளவுக்கு இருக்கும் காவல்துறைச் செய்திகளைச் சேகரிக்கும் (போலீஸ் பீட்) செய்தியாளர்களுக்கென்று எப்போதுமே ஒரு 'தனி மவுசு' இருக்கும்.
ம்....
அவ்வளவு ஏன்...அது ஒரு பெரிய தொலைக்காட்சி நிறுவன அதிபராக இருந்தாலும்கூட காவல்துறை உயர் அதிகாரியை சந்திக்க வேண்டும் என்றால் இந்த போலீஸ் பீட் செய்தியாளர்தான் அப்பாயின்ட்மென்ட் வாங்குவர். காரணம் அந்த அதிகாரிக்கு நிறுவன அதிபரை நேரடியாகத் தெரியாது. இதேபோலத்தான் முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என்றாலோ, ஆளுநரைச் சந்திக்க வேண்டும் என்றாலோ தலைமைச் செயலக செய்தியாளர் மூலமாக அப்பாயின்ட்மென்ட் வாங்குவார்கள். செய்தி ஆசிரியரை உடன் அழைத்துச் செல்வார்கள். இதில் என்ன வினோதம் என்றால், எல்லாம் அந்த நிறுவனத்தின் Banner ல் இருக்கும்வரைதான் செய்தியாளருக்கோ, செய்தி ஆசிரியருக்கோ மரியாதை.
ம்....புரிகிறது. இயேசுக் கிறித்துவைச் சுமந்து சென்ற கழுதைபோல. இயேசுவுக்குக் கிடைக்கும் மரியாதை தனக்குக் கிடைத்ததாகப் பெருமைப் பட்டுக்கொள்ளக் கூடாது அந்தக் கழுதை என்றோம்.
அட அட என்ன அழகான எடுத்துக்காட்டு, மிகச்சரி என்று பாராட்டிய பருந்தார் தொடர்ந்து பேசினார். "தினகரனுக்கு வேலைக்கு சென்றவுடன் தலைமைச் செய்தியாளரும் ஆகிவிட்டபடியால் சுரேஷ் வேதநாயகத்தின் காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு மேலும் வலுவடைந்தது."
ம்....
தாங்கள் பணிபுரியும் நிறுவன அதிபருக்கு மட்டுமல்ல, காவல்துறையில் கீழ் நிலையில் பணிபுரியும் பலருக்கும் பணியிட மாறுதல், அல்லது உயர் அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லி தங்களுக்கு சில பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல் என சுரேஷ் வேதநாயகம் போன்ற காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வந்து குவியும்.
ம்...புரிகிறது.
இப்படிப் பொதுவாக ஒரு போலீஸ் பீட் செய்தியாளர்களுக்கு விண்ணப்பங்கள் வந்தாலும் எல்லா அதிகாரியிடமும் சென்று இந்த விண்ணப்பங்களை நீட்டி நீட்டி காரியம் சாதிக்கும் வழக்கம் எல்லாப் பத்திரிகையாளர்களிடமும் இருக்காது. அவ்வளவு ஏன், எந்த அதிகாரியிடமும் சென்று இதுபோன்ற சிபாரிசு கேட்டிராத ஒருசில பத்திரிகையாளர்கள் இன்றும் உண்டு என்ற பருந்தாரிடம்,
ஆமாம், அடிக்கடி சிபாரிசுக்குப் போனாலே அதிகாரிகளிடம் நம் மீதான மதிப்பு குறைந்துவிடும். அதுமட்டுமல்ல ஒருவேளை அந்த அதிகாரி தவறு செய்தால் நாம் அவர் செய்த தவறைச் செய்தியாக்க முடியாது போகும் என்றோம்.
மிகச்சரி.... உங்கள் தமிழ் ஊடகம் செய்தி ஆசிரியர் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதே காவல்துறை மற்றும் தலைமைச் செயலகச் செய்தியாளர். அவர் அப்படி யாரிடமும் கைகட்டி, தலையைக் சொறிந்துகொண்டு நின்றதில்லை. அதனால்தான் தமிழ் ஊடகம் தலை நிமிர்ந்து நின்று இன்றும் யாராக இருந்தாலும் கேள்விகள் கேட்க முடிகிறது, செய்தி வெளியிட முடிகிறது என்ற பருந்தாரிடம்....
ஆனால், 'அவர் பிழைக்கத் தெரியாதவர்' என்று சொல்கிறர்களே என்று சொன்னோம்...
சிரித்த பருந்தார்...அப்படி ஒரு 'பிழைப்பு' பிழைக்காமல் இருப்பது நல்லதுதான் என்று கூறிவிட்டு மீண்டும் தலைப்புக்குள் வந்தார்.
இப்படிப்பட்ட சுரேஷ் வேதநாயகத்திற்கு அடித்தது ஜாக்பாட். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி. சென்னை மாநகரக் காவல் ஆணையராக அவரின் உடன்பிறவா 'உடன்பிறப்பு' அருண் ஐபிஎஸ்.
அப்படிப்போடு...ம்
அருண் ஐபிஎஸ் ஆணையராக ஆனதால் ஒட்டுமொத்தக் காவல்துறையும் சுரேஷ் வேதநாயகத்தின் 'பாக்கெட்டில்' எனும் நிலை.
ஓ... பேஷ் பேஷ்..ம்...
அப்படிப்பட்ட அருண் ஐபிஎஸ்க்கு பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா... நண்பேன்டா ஆச்சே ...
ம்....
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை அதற்கு ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தினார் சுரேஷ் வேதநாயகம்.
ம்...அடடே அருமை அப்புறம்,
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பிரஸ் கிளப் என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் அதன் அதிகாரபூர்வ பெயர் சென்னை பத்திரிகையாளர் மன்றம். அதற்கு 25 ஆண்டுகளாத் தேர்தல் நடத்தப்படவில்லைனு சொல்லப்பட்டாலும் அங்கு புதிய கட்டடம் கட்டி அதனைத் திறந்து வைக்கவே 7 வருடங்கள் ஆகிவிட்டது. அதன்பிறகு ஒருவழியாக செட்டில் ஆகும் நிலையில் மீதமிருந்த 15 ஆண்டுகளில் தேர்தல் நடத்தும்போதெல்லாம் வழக்கு, வம்பு என்று இழுத்துக்கொண்டே போனது. இருந்தாலும் அந்த 25 ஆண்டுகளில் அந்த மன்றம் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவாக இல்லாமல், சொம்பாக இல்லாமல் பத்திரிகை ஊடகர்களுக்கான தெம்பான இடமாக இருந்தது. தேர்தல் நடக்கவில்லை என்ற ஒரு குறையைத் தவிர பெரிதாக வேறு குறை சொல்ல முடியாது.
ம்....
இப்படிப்பட்ட நிலையில் முன்னாள் துணை முதலமைச்சரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினிடம் சேப்பாக்கம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தைக் கைப்பற்றிவிட்டால் எல்லாப் பத்திரிகை ஊடகர்களையும் நம் வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று சொல்ல, அதே வேளை இதே 'பிட்'டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அவரது 'வாக்கிங் நண்பர் ஹிந்து என். ராம் போட.... அப்போதைய மாநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ்-சிடம் சுரேஷ் வேதநாயகம் பேச.... திமுகவின் மொத்தப் படையும் இறங்கி அதன் 'பாணியில்' தேர்தலை நடத்தி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தைக் கைப்பற்ற...அந்த மன்றத்தின் புதிய தலைவர் ஆனார் சுரேஷ் வேதநாயகம்.
அடேங்கப்பா....தானைத் தலைவன் சுரேஷ் வேதநாயகம் ஒரு சைலன்டான சூறாவளி போல... ம்...அப்புறம். என்றோம்.
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் இன்று இரணகளமாகியிருக்கார் சுரேஷ் வேதநாயகம் என்று சிரித்துக்கொண்டு சொன்ன பருந்தார்..அந்த மன்றத்தின் தேர்தலில் உண்மையாக, முறையாக சந்தா செலுத்தி வந்த உறுப்பினர்கள் 161 பேர் மட்டுமே...முறையாக சந்தா செலுத்தாதவர்கள் சுமார் 250 பேர். ஆக மொத்தம் தகுதி வாய்ந்த உறுப்பினர்கள் என்று பார்த்தால் 400 பேர்தான்.
ம்....
ஆனால் சுரேஷ் வேதநாயகம் தலைமையிலான அணி, மன்றத்தின் Bye law - துணை விதிமுறைகளுக்கு எதிராகத் தகுதி இல்லாத 800 பேரை கூடுதலாகச் சேர்த்து அந்தத் தேர்தலை நடத்தியது.
ம்....
இந்த 1200 பேர் வாக்களிக்கும் தேர்தலுக்கு மாநகரக் காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ், துணை ஆணையர்கள், இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், 500 காவலர்கள் என சென்னை மாநகரக் காவல்துறையின் பெரிய Force ஐ சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இறக்கினார் சுரேஷ் வேதநாயகம்.
அடேங்கப்பா....பெரிய ஆள்தான் போல. ம்...
இப்படித் தலைவர் ஆன பிறகு அந்த மன்றத்தில் சுமார் 35 லட்சம் ரூபாய்க்கு ஒரு Canteen கட்டி அதனை அருண் ஐபிஎஸ்-ஐ வைத்து திறக்க வைத்தார் சுரேஷ் வேதநாயகம்.
நண்பேன்டா....ம்.. அப்புறம் என்றோம்.
அடுத்து செய்தியாளர்களுக்கு மழை உடை (Rain Coat) தருகிறோம் என்று சொல்லி அதற்கும் அருண் ஐபிஎஸ்-ஐ அழைத்து கொடுக்க வைத்தார் சுரேஷ் வேதநாயகம்.
ம்....புரிகிறது...சென்னை மாநகரக் காவல்துறையை தனது 'பாக்கெட்டில்' வைத்து அழகு பார்த்த நண்பேன்டாவுக்கு சென்னை பத்திரிகையாளர்களையே அருண் ஐபிஎஸ்-சின் பாக்கெட்டில் வைத்து அழகு பார்த்திருக்கிறார் சுரேஷ் வேதநாயகம்.
Exactly correct....இப்போ நினைச்சுப்பார்... இந்த இணையர்களைத் தாண்டி எந்தப் பத்திரிக்கையாளராவது திமுக அரசு செய்கிற தவறுகளை சுட்டிக்காட்டி எழுத முடியுமா? என்று கேட்ட பருந்தாரிடம்...
வாய்ப்பே இல்ல ராஜா வாய்ப்பே இல்ல...அந்தக் கேன்டீன் அவ்வளவு செலவு செஞ்சு கட்டியது வீண் என்று எழுதிய எங்க செய்தி ஆசிரியர் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் மீதே FIR போட்டார்கள் சுரேஷ்-ம் அருண் ஐபிஎஸ்சும்... யார் என்ன சொன்னாலும் உடனே பொய்ப்புகார், FIR , கைது, குண்டர் சட்டம்னு விளையாட்டாகவே பாயுமே என்றோம்.
இப்போ புரிகிறதா...என்று கேட்டார் பருந்தார்
தெளிவாகப் புரிகிறது பருந்தாரே என்றோம்.
உங்க செய்தி ஆசிரியர் மீது மட்டுமல்ல..மறைந்த நிலாவேந்தன் எனும் செய்தியாளர் மீதும் பொய்ப் புகார் கொடுக்கப்பட்டு அவர் காவல்துறையினரால் அதிகாலையில் வீடு புகுந்து அழைத்துச் செல்லப்பட்டார்...இன்னொரு முன்னாள் நிர்வாகிக்கு ஷோகாஸ் நோட்டீஸ் கொடுத்து, பொய்ப்புகார் கொடுத்து அவரையும் Remand செய்யத் திட்டமிட்டார் இந்த சுரேஷ் வேதநாயகம்.
ஓ...சினிமாவில் வரும் Smart ஆன வில்லன் கேரக்டர் சுரேஷ் வேதநாயகத்துக்கு சரியாகப் பொருந்துகிறது என்றோம்.
ஆனால், என்ன செய்ய 'அரளி விதை நடவு செய்தல் நெல் மணியா விளையும் ? அரளிதான் விளையும்' என்பதைப்போல திமுக ஆதரவாளர்கள் எனும் பெயரில் ஹிந்து என்.ராம். நக்கீரன் கோபால், சாவித்திரி கண்ணன், ஹிந்து டி.சுரேஷ் குமார், சன் நியூஸ் குணசேகரன், நியூஸ் 18 கார்த்திகை செல்வன், நக்கீரன் பிரகாஷ் என்று ஒரு பெருபடை சுரேஷ் வேதநாயகத்தை தலைவர் ஆக்கியும், ஹஸீப் எனும் திமுக அதரவு அமைப்பை நடத்திவரும் ஒருவரை செயலாளர் ஆக்கியும் அழகு பார்த்தது. ஆனால், இப்போ அந்த அருண் ஐபிஎஸ் நிலை ?! அவரை பாக்கெட்டில் வைத்திருந்த சுரேஷ் வேதநாயகத்தின் நிலை ?! என்று நிறுத்திய பருந்தாரிடம்....
ஆமாம் பாருந்தாரே "ஜெம் வீரமணி வழக்கில் பாலிமர் செய்தியாளர் கதிர், நியூஸ் மினிட் செய்தியாளர் ஷபீர் அகமத், செய்தியாளர் செல்வராஜ் ஆகியோரும், இப்போதைய காவல் ஆணையாளர் அமல்ராஜும் ஜெம் வீரமணியைப் பாதுகாக்கப் பாடுபடுகிறார்கள்" என்கிற ரீதியில் ஒரு அவதூறுப் பதிவு ஒன்றைப் பரப்பியதாக தினகரன் சுரேஷ் வேதநாயகம், நக்கீரன் பிரகாஷ், தினகரன் தாம்பரம் செய்தியாளர் ஒருவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு இவர்கள் மூன்று பேரும் CCB விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றோம்.
ஆமாம், ஆனால் அதிலிருந்து தப்பிக்கவும், இந்தச் செய்தி வெளிவந்துவிடாமல் மறைக்கவும் நக்கீரன் பிரகாஷ், குணசேகரன், கார்த்திகை செல்வன் என்று அந்த அணி எல்லோருக்கும் போன் போட்டு "என்ன இருந்தாலும் இது நம்ம பத்திரிகையாளர்களுக்குள்ளான பிரச்சனை, நாமே பேசித் தீர்த்துக் கொள்ளலாமே" என்று தேனில் ஊறவைத்த வாழைப் பழம் போல பேசுகிறார்களாம் என்ற பருந்தார்,
சென்னை பத்திரிகையாளர் மன்றம் மட்டும் என்ன அமெரிக்காக்காரன் பிரச்சனையா என்ன? அதுவும் பத்திரிகையாளர்களுக்கு இடையேயான பிரச்சனைதானே, அதுக்கு மட்டும் அருண் ஐபிஎஸ்-சை வைத்து அவ்வளவு திமிராக FIR போட்டு, வழக்கு போட்டு, குண்டர் சட்டம் போட்டு என்னா தவுலத்தா ஆட்டம் போட்டானுங்க இவனுக...இப்போ இவனுகளுக்கு வந்தா ரத்தம் அடுத்துவங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா என்று கேள்வி கேட்கிறார்கள் தமிழ் நாடு முழுவதுமுள்ள பத்திரிகை ஊடக அன்பர்கள் என்றார் பருந்தார்...
தொடர்ந்து பேசிய பருந்தார், ஜெம் வீரமணி வழக்கை ஊத்தி மூடியதான குற்றச்சாட்டின்பேரில்தான் அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு SIT யின் விசாரணை வளையத்தில் இருக்கிறார். அவரைப் பாக்கெட்டில் வைத்து சுற்றிக்கொண்டிருந்த சுரேஷ் வேதநாயகம் இப்போது தன்னை அவதூறு வழக்கில் இருந்து காப்பற்றிக்கொள்ள பாலிமர் அலுவலகத்தின் வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார், அவரது கூட்டாளிகள் எல்லோருக்கும் போன் போட்டு கெஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு,
ஆட்சி மாறாமல் இருந்து, அருண் ஐபிஎஸ் மாறாமல் இருந்திருந்தால் தமிழ் நாட்டில் நேர்மையான ஒரு பத்திரிகை ஊடகன்கூட வீட்டை விட்டே வெளியில் வந்திருக்க முடியாது. சுரேஷ் வேதநாயகம்தான் எல்லாம், சென்னை பத்திரிகையாளர் மன்றம்தான் காவல்துறை ஆணையர் அலுவலகம் என்று ஆகி இருக்கும் என்ற பருந்தார்,
அரசியல் பிழைத்தோர்க்கும் அறமே கூற்றாகும் !
அதாவது, அரசியலில் பிழை செய்தவர்களுக்கு "அறம்" என்பதே எமனாக மாறி நிற்கும். இது அரசாங்க அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கும் பொருந்தும் என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)