ஜெம் வீரமணி வழக்கு: யூடியூப் மீடியா ட்ரையல் சர்ச்சை! காவல்துறைக்குள் உள்ளடி அரசியலா?

ஜெம் வீரமணி வழக்கில் யூடியூப் மீடியா ட்ரையல், அவதூறு குற்றச்சாட்டுகள்! DIG தர்மராஜ் குறிவைக்கப்படுகிறாரா? காவல்துறைக்குள் உள்ளடி அரசியலா? பருந்தார் தகவல்கள்.

Oct 16, 2026 - 21:57
Updated: 17 days ago
0 20
ஜெம் வீரமணி வழக்கு: யூடியூப் மீடியா ட்ரையல் சர்ச்சை! காவல்துறைக்குள் உள்ளடி அரசியலா?

ஜெம் வீரமணி வழக்கில் 'மீடியா ட்ரையல்' மட்டுமல்ல 'மீடியா அவதூறுகளும்' பரப்பும் Youtube பிரபலங்கள்.

பின்னணியில் 'உள்ளடி அரசியல்' செய்யும் காவல் அதிகாரிகள்

நேர்மையான அதிகாரிகளைக் குறிவைக்கும் அபாயம் !

-தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்

ஐப்பசி அடைமழை பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தது. இடி மின்னலைக்கூடப் பாராமல் மழைக் கோட் சகிதம் நமது அலுவலகம் வந்து சேர்ந்தார் பருந்தார்.

சுக்கு, மிளகு, திப்பிலி, கருப்பட்டி கலந்து சூடாகக் கசாயம் கொடுத்தோம். குடித்து முடித்து சுறுசுறுப்பான பருந்தார் பேசத் தொடங்கினார்.

தமிழ்நாடு காவல்துறையில் கையூட்டு, லஞ்சம், கட்டிங், கமிஷன் வாங்கி கட்டப் பஞ்சாயத்து செய்வது, வழக்கை ஊத்தி மூடுவது போன்ற செயல்களைச் செய்யும் சில அதிகாரிகள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுப்பது உயர் அதிகாரிகள் மீதும், அரசு மீதும் மக்களுக்கு உண்மையில் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.

ம்...

ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு கிட்டத்தட்ட 1994 ம் ஆண்டு முதலே புகைந்து கொண்டிருக்கும் ஒரு வழக்கு. ஆட்சிக்கு வந்த கையோடு சமரசமில்லாமல் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது முதலமைச்சர் ஜோசப் விஜய்தான்.

ம்....

அதன்காரணமாகவே இப்போது வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பலர் சிறைக்குள் இருக்கிறார்கள். அவரது வழக்கை ஊத்தி மூட முயன்ற காவல்துறை அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ம்...

ஒன்றை நன்றாகக் கவனிக்க வேண்டும். வீரமணி வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படவேண்டும் என்று உத்தரவிட்டது போக்சோ நீதிமன்றம். அந்த வகையில், நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்தி விசாரித்து வருவது தவெக அரசும், மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்ம்.

ம்....

இந்த வழக்கு விசாரிக்கப்படாமலேயே 'முடித்து வைக்கப்பட்டதன்' பின்னணி குறித்துத் தொடர்ந்து செய்தி வெளியிட்டது ஹிந்து, எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ஆங்கில நாளிதழ்கள் மட்டுமே. அதிலும் ஒரு ஆங்கில நாளிதழ் 'டைம்' பார்த்து மூச்சே விடவில்லை. அதற்கு ஒரு காரணம் சொல்லப்படுது, அதுகுறித்து பிறகு சொல்கிறேன்.

ம்....

இதில் தமிழ் Youtube பிரபலங்கள் அவர்கள் பங்குக்குத் தகவல்களை வெளியிட்டனர்.

ம்....

ஆனால், பத்திரிகை ஊடகங்களில் குறிப்பாக காவல்துறை செய்திகள் (Crime Beat) பார்க்கும் செய்தியாளர்களுக்கு நன்கு தெரியும் அந்த Youtube பிரபலங்களுக்கு யார் அப்படி ஒரு தகவல் தந்திருக்க முடியும் என்று என்ற பருந்தாரிடம்,

ஆமாம், ஒரு செய்தி வெளியில் வரும்போதே இதை யார் கொடுத்திருக்க முடியும் என்று நம்மால் சரியாக ஊகிக்க முடியுமே என்றோம் நாம்.

ஆமாம், சரி அது Youtube பிரபலங்களின் கருத்து சுதந்திரம் என்பதால் அதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, ஆனால் தங்களுக்குப் பிடிக்காத அதிகாரிகளையும் வீரமணி வழக்கில் கோர்த்து விடும் வேலைகளை இந்த Youtuber கள் செய்யத் தொடங்கியபோதுதான் வில்லங்கம் ஆகியது இந்த Youtube பிரபலங்களின் 'துணிச்சலான, மாஸ் ஆன, தெறியான என்று சிலர் சில்லறைகளை சிதறவிடும் செயல்கள்' என்ற பருந்தாரிடம்,

நானே உங்களிடம் கேட்க நினைத்தேன், திட்டமிட்டு மறைக்கப்பட்ட ஒரு வழக்கில் உண்மையில் தொடர்புடைய அதிகாரிகள் பெயரை, அரசியல் கட்சி ஆளுமைகளின் பெயர்களை மட்டும் முழு அடையாளத்தை வெளிப்படுத்தாமல், பூடகமாக வெளியிட்டால்கூட ஏதோ சரி என்று விடலாம். ஆனால் பத்திரிகைப் புலனாய்வு அறத்தின்படி குற்றத்தில் தொடர்புடையவர்கள் என்று எல்லோர் பெயர்களையும் சும்மா வாய்க்கு வந்தபடி வெளியிடுவது மிகப்பெரிய தவறு இல்லையா என்று கேட்டோம்.

ஆமாம் உண்மைதான். அப்படி வெளியிட்டால் உண்மையில் அந்த நபர்களுக்குத் தொடர்பிருந்தால் அவர்கள் தப்பிச் செல்வதற்கும், சாட்சியங்களை அழிப்பதற்கும் நிறைய வாய்ப்பு இருக்கிறது. விசாரணை அதிகாரிகளை திசை திருப்பவும் வாய்ப்பு உள்ளது. மேலும் அரசியலாக்கப்பட்டு வழக்கு விசாரணை புஸ்வாணம் ஆக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

உண்மைதான் பருந்தாரே என்றோம், தொடர்ந்து பேசிய பருந்தார்,

அதுமட்டுமல்ல அப்படி வெளியிடப்படும் நபர்களுக்கு அந்த வழக்கில் தொடர்பு இல்லையென்றால் வெளியிடுவோர் மீது அவதூறு வழக்குப் பாயவும் வாய்ப்பு உள்ளது என்ற பருந்தார், அப்படி ஏதும் ஆதாரம், சான்றுகள் இருந்தால் அவர்கள் விசாரணை அதிகாரிகளிடம் அல்லது நீதிமன்றத்தில்தான் சொல்லவேண்டும் என்றார்.

ஆனா, ஜெம் வீரமணி வழக்கில் இந்த Youtube பிரபலங்கள் வெளியிடும் பட்டியலைப் பார்த்தால் தமிழ்நாடு சிறைகள் போதாமல் பக்கத்துக்கு மாநில சிறைகளையும் புக் செய்து வைக்கவேண்டும் போல என்று சொல்லி சிரித்தோம்.

ஆமாம் நீர் சொல்வது உண்மைதான், அதனால்தான் உயர்நீதிமன்றம் 'மீடியா ட்ரையல்" நடத்தப்படக் கூடாது என்றது. அதாவது மீடியாக்கள் புலனாய்வு கூடச் செய்யலாம் அதற்காக நீதிபதிகள் போல மீடியாக்களில், காணொலிகளிலேயே வழக்கு விசாரணை செய்து இவர்தான் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கக் கூடாது என்பதுதான் நீதிமன்ற உத்தரவின் அடிப்படை.

உண்மைதான் பருந்தாரே...நீங்கள் குறிப்பிட்ட ஆங்கில அச்சுப் பத்திரிகைகள் இந்த 'தங்க விதியை' (Golden Rule) மீறாமல் செய்தி வெளியிட்டு வீரமணி வழக்கை வெளிக்கொண்டு வந்தார்கள். ஆனால், இந்த Youtube பிரபலங்கள் பலரையும் கோர்த்து விடும் வேலையைச் செய்கிறார்கள் என்றோம்

அங்கேதான் நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்ற பருந்தார், அந்த Youtube பிரபலங்களின் காணொலித் தகவல்களைக் கூர்ந்து கவனித்தால் அது அவர்களாகக் கற்பனையில் வெளியிடும் பெயர்கள் அல்ல, உள்ளுக்குள் காவல் அதிகாரிகள் 'சிலரின்' உள்ளடி அரசியல் அதற்குள் இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும் என்ற பருந்தாரிடம்,

விவரமாகச் சொல்லுங்கள் என்றோம்,

இந்த Youtube பிரபலங்கள் சொல்பவர்களை எல்லாம் பிடித்து உடனே சிறைக்குள் தள்ளி விட முடியாது. காரணம், நீதிமன்றத்தில் அவர்கள் குற்றவாளிகள்தான் என்று விசாரணை அதிகாரிகள் சாட்சியங்கள், சான்றுகள், ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்.

ம்...

இப்படிப்பட்ட நிலையில் இந்த Youtube பிரபலங்களின் செயல் இப்போது வேறு ஒரு அபாய கட்டத்தைத் தண்டி விட்டது. இவர்களுக்குத் தகவல் தரும் 'காவல் உயர் அதிகாரிகள்' தங்களுக்குப் பிடிக்காத அதிகாரிகள் பெயர்களை எல்லாம் இந்த Youtube பிரபலங்கள் மூலமாக அவிழ்த்து விடுகின்றனர்.

அடக்கடவுளே என்றோம்.

ஆமாம், அப்படித்தான் இன்று ஒரு காவல்துறை அதிகாரியின் பெயரைக் கோர்த்து விட்டிருக்கிறார்கள்.

யார் அது...என்ன பின்னணி என்று கேட்டோம்.

அந்த அதிகாரியின் பெயர் DIG தர்மராஜ். அவர் இப்போது முதலமைச்சரின் நேரடி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரியாக முதலமைச்சருடனே பயணிக்கிறார்.

ம்....

அவர் NIA எனும் இந்திய அரசின் புலனாய்வு அமைப்பில் பணயாற்றியவர்.

ம்....

அதன்பிறகு கடந்த திமுக ஆட்சியில் சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் இருந்த காலத்தில் நுண்ணறிவுப் பிரிவு (IS-Inttelligence Section) இணை ஆணையராக (Joint Commissioner) சுமார் ஒரு ஆண்டு மட்டுமே பணியாற்றினார்.

ம்...

கை சுத்தமான, நேர்மையான அதிகாரிகளைத்தான் அருண் ஐபிஎஸ்க்குப் பிடிக்காதே... அவரை வேலூருக்கு தூக்கி அடித்தார்கள். அதுமட்டுமல்ல, தர்மராஜ் ஐபிஎஸ் சென்னை IS இல் இருந்த  கால கட்டத்தில் இந்த வீரமணி வழக்கை ஊத்தி மூடும் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அப்படிப்பட்ட அறிக்கையைத் தயாரிக்கும் வேலையும் இவருடையது அல்ல என்ற பருந்தாரிடம்,

ஒரு IS அதிகாரி உளவுத்துறை நுண்ணறிவுத் தகவலை Note போட்டு மட்டும்தான் மேலதிகாரிக்கு அனுப்ப முடியும், அவர்கள் விசாரணை அதிகாரிகள் அல்லவே என்றோம்.

கரெக்ட்...மேலும் இவருடைய உயர் அதிகாரி மாநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ். அப்படி இருக்க அந்த ஆறுமாத காலத்தில் இந்த வீரமணி வழக்கை ஊத்தி மூடும் உள்ளடி வேலைகள் தர்மராஜ் கவனத்திற்கே வந்திருக்க வாய்ப்பும் இல்லை என்ற பருந்தார், தர்மராஜ் ஐபிஎஸ் தற்போது DIG - Intelligence அதிகாரி. இன்னும் சில மாதங்களில் அவர் IG ஆக பதவி உயர்வு பெரும் தகுதியில் உள்ளார்.

ஓ....

அவர் மீது இப்படி ஒரு அவதூறு கிளப்பி விட்டு, Remark உருவாக்கிவிட்டல் அவர் IG ஆக முடியாது போகலாம்.

அடக் கொடுமையே...

அதற்காகத்தான் இப்போது சம்பந்தமே இல்லாமல் DIG தர்மராஜ் மீது அவதூறுகளை அள்ளி வீசும் வேலையைச் செய்கிறார்கள்.

அப்படி அவர் IG ஆகிவிடக்கூடாது என்று யார் எண்ணுவார்கள் என்று அப்பிராணிபோல் கேட்டோம்.

ரெண்டு தரப்புதான் விரும்பும். ஒன்று, அவரை முதலமைச்சரிடமிருந்து பிரித்து விடவேண்டும் எனும் தரப்பு, இரண்டு அவர் IG ஆனால் தமது பதவிக்கு ஆபத்து என்று கருதும் தரப்பு.

ஓ...கதை அப்படிப்போகுதா என்றோம்.

அதுமட்டுமல்ல, ஜெம் வீரமணி வழக்கைப் பணம் வாங்கிகொண்டு ஊத்தி மூடியதாக விசாரணை வளையத்தில் மாட்டி நிற்கும் 'அந்த' உயர் அதிகாரி மற்றும் அவரது கூட்டாளிப் பத்திரிகை ஆசாமிகள் சிலரும் இதன் மறைமுகப் பின்னணியில் இருப்பதாக போனஸ் தகவல் என்ற பருந்தார் குறிப்பெடுத்துக்கொண்டு நாம் நிமிர்ந்து பார்ப்பதற்குள் விர்ரென்று பறந்து மழை மேகத்தில் மறைந்து விட்டிருந்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User