பருந்தார் தகவல்கள்: தவெக அரசின் முதல் நிதி நிலை அறிக்கை, அமைதியான திமுக, ஊடகங்கள் மீது தாக்குதல், "பில்டிங் ஸ்ட்ராங்கு... பேஸ்மென்ட் வீக்" செய்தியாசிரியர்

தவெக அரசின் முதல் நிதி நிலை அறிக்கை, திமுகவின் சட்டப்பேரவை அணுகுமுறை, செய்தியாளர்கள் மீதான தாக்குதல், "பில்டிங் ஸ்ட்ராங்கு... பேஸ்மென்ட் வீக்" செய்தியாசிரியர் பருந்தாரின் பரபரப்பு அரசியல் தகவல்கள்.

Aug 05, 2026 - 18:22
Updated: 21 hours ago
0 30
பருந்தார் தகவல்கள்: தவெக அரசின் முதல் நிதி நிலை அறிக்கை, அமைதியான திமுக, ஊடகங்கள் மீது தாக்குதல், "பில்டிங் ஸ்ட்ராங்கு... பேஸ்மென்ட் வீக்" செய்தியாசிரியர்

தவெக அரசின் முதல் நிதி நிலை அறிக்கை. பருந்தாரிடமிருந்து ஒரு சத்தத்தையும் காணோம் என்று எண்ணிக் கொண்டே அவரை அழைக்க அலைபேசியை எடுத்தபோது நேற்றுப் போலவே பருந்தாரிடமிருந்து குரல் பதிவு வந்து விழுந்தது. 

100 வயசு பருந்தாரே என்று சொல்லிக் கொண்டே குரல் பதிவைக் காது கொடுத்துக் கேட்டோம். 

"10 லட்சம் கோடி கடன், கஜானா காலி என்றெல்லாம் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்த நிலையில், கூடுதல் வரி விதிப்புகள் இருக்கலாம் என்று எண்ணியிருந்த நிலையில் புதிய வரிகள் இல்லாத நிதி நிலை அறிக்கையாக உள்ளது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். ஆனால், 2500 ரூபாய் பெண்கள் உரிமைத் தொகை, வீடுகளுக்கு எரிவாயு உருளைகள் ஆகிய திட்டங்களுக்கு அறிவிப்புகள் எதுவும் இல்லை என்று மக்கள் மத்தியில் ஒரு ஏமாற்றம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும், நிதி நிலை சரியான பிறகு படிப்படியாகச் செய்கிறோம் என்றாவது சொல்லியிருக்கலாம் என்கிறார்கள். மற்றபடி பொதுவாக நல்ல பட்ஜெட் என்பதே நம் காதில் விழுந்த செய்தி. 

பல பழைய திட்டங்களுக்கு பெயர்களை மட்டும் மாற்றியிருக்கிறார்கள் என்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி. 

நேற்று உதயநிதி மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசரணைக்கு தஞ்சாவூர் வரை அழைத்துச் சென்ற நிலையில் திமுகவினர் போராட்டங்கள் நடத்தியதைப் பார்த்தால் இன்று சட்டப்பேரவைக்கு "கருப்பு சின்னம்" அணிந்து கொண்டு திமுக உறுப்பினர்கள் வருவார்கள், சபையில் ஒரே அமளி துமளி செய்வார்கள், தகறாரு நடக்க வாய்ப்புண்டு என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருந்தது. 

அப்படி நடந்தால் அதை எதிர்கொள்ளவும் ஆளும்கட்சி ஆயத்தமாக இருந்தது. ஆனால் திமுக தரப்பு அப்படி ஒன்று நேற்று நடந்ததுபோலவே காட்டிக்கொள்ளவில்லை. சட்டப்பேரவையில் எதிர்பாராத விதமாக அமைதி காத்தனர். 

இதுக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுது, உதயநிதியின் தஞ்சாவூர் இரட்டை அர்த்த பேச்சை திமுகவில் உள்ள மூத்தவர்களே இரசிக்கவில்லையாம். அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள தமிழ் செய்தி ஊடகங்கள்தான் உதயநிதிக்கு முட்டுக்கொடுப்பது போல செய்திகளை வெளியிட்டது, அனால், இந்தி, ஆங்கிலச் சேனல்கள் அப்படியே புட்டுப் புட்டு வைத்து ஆங்கிலத்திலும், இந்தியிலும் இந்தியா முழுதும் உதயநிதி பேச்சை மக்களுக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள். டெல்லியில் பெரிய அளவு உதயநிதியின் பேர் ரிப்பர் ஆகிவிட்டது.

இப்படிப்பட்ட நிலையில், சட்டப்பேரவையிலும் ஏதாவது செய்து அதைப் பரபரப்பாக்கிவிட்டால் இன்னமும் பேர் ரிப்பேர் ஆகிவிடும் என்று எச்சரிக்கப்பட்டதால் கப் சிப் என மவுனமாகிவிட்டது திமுக தரப்பு.

திமுகவினர் ஏதாவது ஏடாகூடகமாக செய்து விட்டால் உடனே முதலமைச்சர் ஜோசப் விஜயைச் சுற்றி நின்று பாதுகாக்கவும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு "சிறப்பு அறிவுரை" சொல்லப்பட்டிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, சபையில் உள்ள அத்தனை ஒளிப்பதிவுக் கருவிகளும் திமுக உறுப்பினர்களை நோக்கியே இறுதிவரை உற்று நோக்கிக்கொண்டிருந்தன. நேரலை (Live) வேறு....இதெல்லாம் கருத்தில் கொண்டே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தரப்பு நல்ல பிள்ளைகளாக நிதி நிலை அறிக்கை முழுவதையும் காது கொடுத்துக் கேட்டுட்டு அமைதியாக வெளியேறியிருக்கிறார்ககள்.

நேற்று திமுகவினர் தங்களின் வழக்கமான கை வரிசையைச் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மீது காண்பித்து இருக்கிறார்கள். தஞ்சாவூரில் நியூஸ் 7 குழுவினரைக் காட்டுமிராண்டித் தனமாக அடித்து, ஒளிப்பதிவுக் கருவிகளை உடைத்திருக்கிறார்கள். 

சோளிங்கரில் தினகரன் எம்எல்ஏ கபில், தினகரன் செய்தியாளரை அடித்த சம்பவத்தில் அவரைக் கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்திய சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள், தஞ்சாவூரில் நியூஸ் 7 குழுவினரை திமுகவினர் அடித்து உதைத்த நிகழ்வுக்கு வெறும் அறிக்கை மட்டும் வெளியிட்டுவிட்டு குப்புறப் படுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

திமுக சார்ந்த தினகரன் செய்தியாளர் தாக்கப்பட்டு சிந்தினால் அது இரத்தம், திமுகவினர் தாக்கினால் அது மட்டும் தக்காளி சட்னியாகத் தெரிகிறதா இந்தத் திமுக ஜால்றா சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு? என்று செய்தி ஊடக உலகத்தினர் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.

அப்புறம், திமுகவுக்கு சொம்பு, அண்டா, பக்கெட் என்று சுழன்று சுழன்று சொம்படித்து தவெக உள்பட எதிர்கட்சிகளை எல்லாம் நாறடித்துக் கொண்றிருந்த திமுக செய்தி ஆசிரியர்கள், செய்தியாளர்கள் மீது அடுத்தடுத்து நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள். புதிய தலைமுறை விஜயன் அடுத்து இப்போ நக்கீரன் கோபால் மீதும் வழக்குகள் பாய்ந்திருக்கின்றன.

இந்த அதிரடிகளைப் பார்த்து அந்தத் தெலுங்கு வெறி பிடித்த 300 கோடி சொத்து சேர்த்த செய்தி ஆசிரியர் ஆசாமி ரொம்பவே வெல வெலத்துப் போயிருக்கிறாராம். உப்பு சப்பில்லாத விவாத நிகழ்ச்சிக்கெல்லாம் கோட் சூட் போட்டு பவுடர் போட்டுகொண்டு வந்து முகத்தை டிவியில் காட்டிக்கொள்ளும் அந்த விளம்பர ஆசாமி, இப்போது தவெக அரசுக்கு எதிரான விவாத நிகழ்ச்சி என்றால் தலைதெறிக்க ஓடிக்கொண்டே அது போன்ற நிகழ்ச்சிகளை வேறு ஒரு நெறியாளருக்குத் தள்ளி விட்டுவிடுகிறாராம். 

அந்த டுபாக்கூர் ஆசாமிதான் உங்க தமிழ் ஊடகம் ஆசிரியர் மீது சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் பொய்ப் புகார் கொடுத்ததற்குப் பின்னணியில் தீவிரமாக இருந்த ஆசாமி. அதுமட்டுமல்ல, அப்போ அந்த ஆசாமி தன் பக்கத்துல இருந்தவர்கள்கிட்ட சொன்னாராம், "பார்த்தியா நான் இறங்கி அடிச்ச அடியில விஷ்வா (விஸ்வநாத்) பயந்து வாயை மூடிட்டான்" என்று அட்டைக் கத்தி சுருள் சுருளாக வீசினராம்.

இப்போ அவரோட வீக்கான பேஸ்மென்ட் ஆட்டிக்கிட்டே இருக்காம் ஆனா, முகத்தை மட்டும் நாய் சேகர் போல ஸ்ட்ராங்கா வச்சிருக்கிறாராம்.

அந்த டுபாக்கூர் ஆசாமியைப் பற்றி விவரம் அறிந்த பத்திரிக்கையாளர்கள் வடிவேலு பாணியில் இப்படிப் பேசிக்கொள்கிறார்களாம், "என்னடா கோவிந்தா உன்னை என்னவோ பெரிய ரவுடின்னு சொன்னானுக...ஆனா வழக்கு கேஸ் அப்படின்னா பேஸ்மென்ட் இந்த ஆட்டம் ஆடுதேடா" என்று.

நாளை நேரில் வருகிறேன் என்று தகவலுடன் பருந்தார் குரல் பதிவு நிறைவடைந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User