பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் சர்ச்சை முதல் நாம் தமிழர் கட்சி உள்விவகாரம் வரை!

கோவை பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதல் சர்ச்சை, அமைச்சர் உதவியாளர் பின்னணி, தகவல் ஆணையர் நியமனம், பத்திரிகையாளர் வழக்கு, நாம் தமிழர் கட்சி உள்விவகாரங்கள் குறித்து பருந்தார் பகிரும் அரசியல் தகவல்கள்.

Nov 07, 2026 - 14:11
Updated: 1 day ago
0 98
பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் சர்ச்சை முதல் நாம் தமிழர் கட்சி உள்விவகாரம் வரை!

+ பெரியார் இராமசாமிக்கே மொட்டை அடித்த 'பதிப்பக மோசடி' !

+ நாம் 'நாடகக்' கட்சியின் மீடியா பிசினெஸ் !

+ மீன்வளத்துறை அமைச்சர் உதவியாளரின் அதிர்ச்சிப் பின்னணி !

+ நேர்மையான பத்திரிகையாளருக்கு நல்ல பொறுப்பா? : புலம்பித் தள்ளும் அறிவாலய அடிமைப் பத்திரிகையாளர்கள் !

+ தினகரன் சுரேஷ், நக்கீரன் பிரகாஷ் - ஒரு நாள் ஆஜராகாததால் 15 நாள் ஆஜராக வைத்த நீதிமன்றம் !

-தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள் 

கைகளில் 'அகல்விளக்கு' ஏந்தியபடி பறந்து வந்த பருந்தார் நம் முன் அமர்ந்தார். 

என்னங்க பருந்தாரே பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்குகூட ஏற்றக்கூடாதா என்று கேட்டோம்.

அதுதான் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அகல்விளக்கு ஏற்றித் தீபாவளி கொண்டாடுகிறார்களே போதாதா என்று சிரித்தபடி சொன்னார் பருந்தார். தொடர்ந்து பேசிய பருந்தார், கோயமுத்தூர் பெரியார் அறிவுலக நூலகத்தில் தப்பும் தவுறுமாக எழுதப்பட்ட சுமார் 1800 நூல்கள் அரசு சார்பில் பணம் கொடுத்து வாங்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அகல்விளக்கு பதிப்பகம் எனும் பெயரில் அந்தப் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் 300 ரூபாய் மதிப்புக்கூடப் பொருந்தாத அந்த நூல்களில் சில 1400 ரூபாய் விலை போடப்பட்டுள்ளது என்று இணையதள ஊடகம் ஒன்றில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதினார். மேலும், அப்படிப்பட்ட ஒரு பதிப்பகத்தின் பெயரையே தாம் கேட்டதில்லை என்றும் சொல்லியிருந்தார்.

ம்....

அவ்வளவுதான்..உடனே திமுகவினர், "பார்த்தீர்களா நூலகத்திலும் தவெக அரசு ஊழல் செய்திருக்கிறது" என்று சமூக ஊடகங்கள் முழுதும் பரப்ப ...பதிலுக்கு அந்தப் புத்தங்கங்கள் வாங்கியது திமுக ஆட்சியில்தான் என்று தவெகவினர் பதிலடி கொடுக்க சமூக ஊடகங்களில் அகல் விளக்கு அல்ல பட்டாசு வெடிக்கிறது என்றார் பருந்தார்.

ம்...

அதிலும் அந்தப் புத்தகங்களில் ஒரு புத்தகத்தின் எழுத்தாளர் பெயர் "திரிஷா விஜய்" என்று ஒரு படம் பரவ...வெறும் வாயை மென்றுகொண்டிருந்த திமுகவினருக்கு அவல் கிடைத்தது போல ஆயிற்று.

சரிங்க பருந்தாரே என்னதான் நடந்திருக்கு என்று கேட்டோம்.

பதிப்பகத் துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள் தெளிவாகச் சொல்கிறார்கள். ஒவ்வொரு நூலகத்திற்கும் புதிய புத்தகங்கள் வாங்க ஒவ்வொரு துறை சார்ந்த வல்லுநர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்படும் என்ற பருந்தாரிடம்,

அப்படி ஒரு பட்டியலையும் பார்த்தோம். ஜெயரஞ்சன், சுல்தான் இஸ்மாயில், பெருமாள் முருகன் உள்ளிட்ட பல்துறை வல்லுநர்கள் - எழுத்தாளர்கள் குழு என்று நினைவூட்டினோம்.

ஆம். இந்த ஆய்வாளர்கள்தான் தங்கள் துறை சார்ந்த நூல்களை வாங்குவதற்கான தேந்தெடுப்பு மற்றும் ஒப்புதல் வழங்குவார்களாம்.

ம்....

அதன்பிறகு அவற்றை வாங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும்.

ம்...

அப்படிக் கோயமுத்தூர் பெரியார் அறிவுலக நூலகத்திற்கு கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் அளவில் நூல்கள் வாங்கப்பட்ட நிலையில் குறைந்தது ஒரு லட்சம் நூல்கள் வாங்கப்பட்டிருக்கவேண்டும் என்று கணக்கிடுகிறார்கள் நாம் சந்தித்துப் பேசியவர்கள்.

ஓ...

அப்படி ஒரு நூலகத்திற்கு நூல்கள் வாங்கப்பட்ட குழுவின் பணி என்பது தங்களிடம் தரப்படும் துறைகள் தொடர்பான நூல்களுக்கான சரிபார்ப்பு, ஒப்புதல் பணிகளோடு முடிந்துவிடும். நூல்கள் வாங்கியபிறகு அந்தக் குழுவே கலைக்கப்பட்டுவிடும்.

ஓஹோ....

ஆக, அந்தவகையில் கோயமுத்தூர் பெரியார் நூலகத்திற்கு நூல்கள் வாங்கப்பட்ட அமைக்கப்பட்ட குழுவின் காலம், நூல்கள் வாங்கிய பணிகள் ஆகியவை கடந்த திமுக ஆட்சியில் முடிந்துவிட்டதாம் என்ற பருந்தாரிடம்,

அப்புறம் அந்த முத்திரைகளில் தேதி, ஆண்டு வேறுபடுகிறதே என்றோம்.

சராசரி ஆட்கள் தொடங்கி திமுக தலைமை வரை அந்த ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைத் தேதியை வைத்துக்கொண்டு சமூக ஊடகங்களில் விவாதித்து வருகிறார்கள் என்ற பருந்தார், வாங்கப்பட வேண்டிய நூல்கள், அவற்றின் எண்ணிக்கை ஆகிவற்றை குழு முடிவு செய்தவுடன் அந்த நூல்களுக்கான வாங்கும் ஆணை (ஆர்டர்) போடப்பட்டவுடன் நூல்கள் வந்து சேரும்.

ம்....

அவற்றை அந்த ஊரில் இருந்தும் பக்கத்துக்கு மாவட்டங்களில் இருந்தும் நூலகர்கள், நூலகப்பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அவை அனைத்தும் கொடுக்கப்பட்ட ஆர்டர்கள் படி வந்துள்ளனவா என்று சரி பார்ப்பார்கள். எண்ணிக்கை குறைந்தால் மீண்டும் அதனை பதிப்பகத்தாரிடம் கேட்டு வாங்குவார்கள்.

ம்....

அப்படி எண்ணிக்கை சரி பார்க்கப்பட்டபிறகு அவற்றை நூலகத்தின் 'கணினி மென்பொருளில்' பதிய வைப்பார்கள், நூலகக் கணக்கில் ஏற்றுவார்கள்.

ம்....

அப்போதுதான் அந்த ரப்பர் ஸ்டாம்ப் சீல் வைக்கப்படும், அதன்பிறகு உரிய அலமாரியில் வைக்கப்படும்.

ஓ...

சுமார் ஒரு லட்சம் புத்தகங்களுக்கு கையில்தான் ரப்பர் ஸ்டாம்ப் இட முடியும். எனவே, அது சில நாட்களில் முடியும் பணி அல்ல.

ம்....

எனவே நூலில் 'ஸ்டாம்ப்' போடப்பட்ட அந்தத் தேதி, ஆண்டை வைத்து திமுக ஆட்சி, தவெக ஆட்சி என்று முடிவெடுக்க முடியாது என்கிறார்கள் பதிப்பகத்தார்கள்.

ஓ....

ஆக, இந்தப் பெருமாள் முருகன் குறிப்பிடும் நூல்களுக்கு ஒப்புதல் கொடுத்த குழுவின் உறுப்பினர் யார்? என்பதுதான் முதலில் கேட்கப்பட வேண்டிய கேள்வி என்ற பருந்தாரிடம்,

சரிதான்... அந்தக் குழுவில் இருந்த பெருமாள் முருகன்தானே இதைப் பற்றி குறிப்பிடுகிறார் என்று கேட்டோம்.

ஆமாம் அன்பரே, குழுவின் ஒரு உறுப்பினரிடமிருந்து மட்டுமே மொத்தமாக ஒரு லட்சம் நூல்களுக்கான ஒப்புதல் பெறப்பட மாட்டாது இல்லையா என்று கேட்டார் பருந்தார்.

ஆமாம் அது எப்படி சாத்தியம்...மாட்டாது என்றோம்.

அப்படித்தான்...அந்த குழுவில் பெருமாள் முருகனும் ஒருவர். ஆனால் மொத்தமாக வாங்கிய நூல்கள் பற்றி அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றார் பருந்தார்.

புரிகிறது...மேலும் நூலகம் திறந்தபிறகுதான் அவரே உள்ளே சென்று பார்த்திருக்க முடிந்திருக்கிறது என்றோம் நாம்.

மிகச்சரி....ஆக அந்த குறிப்பிட்ட அகல்விளக்கு பதிப்பகம் நூல்களுக்கு ஒப்புதல் கொடுத்த 'இலக்கியத் துறை வல்லுநர்' யார் ? இத்தனை மிகப் பழமையான பதிப்பகங்கள் இருக்க அப்படி ஒரு புதிய பதிப்பகத்தின் நூல்கள் எந்தத் தரத்தின் அடிப்படையில் வாங்க ஒப்புதல் கொடுக்கப்பட்டன? அந்தப் பதிப்பகத்தை சிபாரிசு செய்தது யார் ? என்று விசாரணை மேற்கொண்டால்தான் உண்மை தெரியவரும்.

புரிகிறது பருந்தாரே...மேலும் ஒரு லட்சம் நூல்களையும் ஒரு தனி வல்லுநர் குழு அமைத்து சரிபார்ப்பது அவசியம் என்று எண்ணுகிறேன்.

ஆமாம், இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் ஆய்வு செய்வது அவசியம் என்றே பதிப்பகத்தார்கள் சிலர் கூறுகின்றனர்.

ஆனால், "சமூக ஊடகங்களில் எந்த விசாரணையும் இல்லாமல் தீர்ப்பு எழுதிக் கொண்டு இருக்கிறார்களே" என்றோம்...

அதைத்தான் சமூக ஊடகங்களில் தீபாவளி பட்டாசு வெடித்து விளையாடுகிறார்கள் என்றேன் என்று சொன்ன பருந்தார் அடுத்த தகவலுக்கு மாறினார்.

அதிமுக ஆட்சியில் வேளாண்துறை அமைச்சராக இருந்து பிறகு உடல்நலக்குறைவால் காலமானவரின் உதவியாளராக இருந்த தாமரை மலர் பெயர் கொண்ட ஒருவர்தான் இப்போது மீன்வளத்துறை அமைச்சரின் உதவியாளராம்.

அதனால் என்ன என்று கேட்டோம்.

அதிமுக அமைச்சரிடம் அவர் உதவியாளராக இருந்த காலத்தில் அமைச்சர் பெயரை வைத்து எக்கச்சக்கமாக சொத்து சேர்த்துவிட்டாராம் அவர்.

ஓ...

அது தெரிந்த அமைச்சரின் மகன் தரப்பு அவரை 'விசாரித்து' சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டது.

அடடே...

அவர் மீது வழக்கும் பதிவானதாகத் தகவல்.

ஓ...

அப்படிப்பட்ட பின்னணி கொண்ட ஒருவரை சிறப்பு உதவியாளராக தற்போதய "மக்கள் பணத்தைத் தொடமாட்டோம், தொட்டால் விட மாட்டோம்" என்ற கொள்கையுடைய விஜய் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரு அமைச்சரின் உதவியாளராக அமர்த்தியது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

ஓஹ்...ஏன் உளவுத்துறை இதையெல்லாம் விசாரித்துதானே 'ஓகே' தருவார்கள் என்று கேட்டோம்.

அது அடுத்த அதிர்ச்சி. உளவுத்துறை மீது ஏற்கனவே பல எதிர்மறை விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற தகவல்கள் மேலும் அந்த எதிர்மறை விமர்சனங்களை வலுப்படுத்துகின்றன என்று வருத்தப் படுகிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தில் என்ற பருந்தாரிடம்,

தவெக அரசுக்கு இன்னும் அதிகாரிகள் சரியாக அமையவில்லை என்று தவெகவினரே சொல்கிறார்கள் என்றோம் நாம்.

ஆம், விரைவில் அமையட்டும் என்ற பருந்தார், அதேவேளை "தமிழ்நாடு தகவல் ஆணையம்" அதாவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் துறைவாரியான கேள்விகளுக்கு பதில் தர மறுக்கும் அல்லது தவறான தகவல் தரும் பிரச்சனைகள் தொடர்பாக விசாரிக்கும் ஆணையகத்தின் ஒரு ஆணையராக பத்திரிகை ஊடகவியலாளர் மகாலிங்கம் பொன்னுசாமி நியமிக்கப்பட்டுள்ளார் என்ற பருந்தாரிடம்,

ஆமாம் பருந்தாரே பலருக்கு அப்படி ஒரு பதவி உள்ளது, அதில் பத்திரிகையாளர் இடம்பெறலாம் என்றே தெரியவில்லை என்றோம்...

உண்மைதான் மூத்த பத்திரிகையாளர்கள் பலருக்கே தெரியவில்லை. அது RTI சட்டத்தின்படி அமைக்கப்பட்ட சட்டரீதியான அமைப்பு.

ஓஹ்....

அதில் பெரும்பாலும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளை மட்டுமே அமர்த்துவது வழக்கம். ஆனால், அதில் பத்திரிகை ஊடகர்களும் இடப்பெறலாம் என்ற பருந்தார், அந்த ஆணையரைத் தேர்ந்தடுக்கும் குழுவில் முதலமைச்சரும் இருப்பார், பணி நியமனம் செய்வது ஆளுநர் என்றார்.

ம்....

அப்படி முதன் முதலாக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சியில் ஒரு நல்ல பெயர் பெற்ற பத்திரிகையாளர் மகாலிங்கம் பொன்னுசாமி நியமிக்கப்பட்டதைக் கண்டு வயிறு எரிந்து கிடக்கிறார்கள் திமுக ஆதரவு பத்திரிகையாளர்கள் என்ற பருந்தாரிடம்,

ஏன்...."நான் திமுகவின் சொம்பு அல்ல, அண்டா" என்று சொன்ன பரோட்டா வீச்சு ஆசாமி ஒருவருக்கு அரசு கலைவாணர் அரங்கத்தில் அலுவலகம், பாதுகாப்பு காவல்துறை அதிகாரி, ஒரு அரசு கார், இரண்டு உதவியாளர்களைக் கொடுத்து மக்கள் தொடர்புத் துறையில் 'அரச பதவி' கொடுத்தபோது இதே திமுக ஆதரவு அறிவு ஜீவி பத்திரிகையாளர்கள் ஏன் வயிறு எரிந்து புலம்பவில்லை என்று கேட்டோம்...

அந்த அண்டா ஒரு தரமான பத்திரிகையாளர் அல்ல என்றாலும் திமுக அண்டா ஆச்சே...எப்படி எரிய விட முடியும் ? அப்படி எரிந்தாலும் தண்ணீர் ஊற்றி அணைத்துக் கொண்டு விடுவார்கள் என்ற பருந்தார்....

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தற்போதைய தலைவரும் தினகரன் தலைமைச் செய்தியாளருமான சுரேஷ் வேதாயகம், நக்கீரன் நிருபர் தாமோதரன் பிரகாஷ் ஆகியோரின் முன்பிணை மனு நிபந்தனை அடிப்படையில் ஏற்கப்பட்டுள்ளது என்ற பருந்தார்.

ம்...நீதிபதி என்.ரமேஷ் அவர்களின் தீர்ப்பு ஆணையை வாசித்தோம். மிகச்சிறந்த கருத்துகள் என்றோம்.

ம்...உண்மை. பொதுமக்கள் மத்தியில் பத்திரிகை ஊடகங்களின் மீது அதிருப்தி இருந்தாலும், அந்தத் துறை மீது நீதிமன்றம் இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கிறது என்பதையே அந்தத் தீர்ப்பின் வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

ம்...

நீதிபதியின் அந்த அறிவுரைகளை உண்மையில் பின்பற்ற வேண்டியது பத்திரிகை ஊடகர்களின் கடமை என்ற பருந்தார், சக பத்திரிகையாளர்கள் மீதே 5 லட்சம் மிரட்டி லஞ்சம் கேட்டதாக அவதூறு பரப்பி மிரட்டிய வழக்கில், விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகாமல் தவிர்த்த சுரேஷ் வேதநாயகம், தாமோதரன் பிரகாஷ், சரத் ஆகிய மூன்று பேரும் அதே விசாரணை அதிகாரி முன்னிலையில் 15 நாட்களுக்கு அன்றாடம் காலை 10.30 க்கு ஆஜராகி கையெழுத்து இடவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்ற பருந்தார், "மதிப்பு மிக்க பத்திரிகையாளர் சங்கங்களின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்து கொண்டு இப்படி அவதூறு பரப்பும் அளவுக்கு தரம் தாழ்ந்தது மிகவும் துரதிட்டவசமானது" என்று நீதிபதி கூறியது மிக உன்னிப்பாக பத்திரிகை ஊடகர்களால் கவனிக்கப்பட்டுள்ளது என்ற பருந்தார் அடுத்த தகவலுக்கு மாறினார்.

நாம் தமிழர் கட்சி என்பது ஒரு 'நாம் நாடகக் கட்சி' என்பது வெட்டவெளிச்சமாகி விட்டதாம். மேடையில் திறமையாகப் பேசி, விடுதலை இயக்கத்தின் தலைவர் படம், கொடி ஆகியவற்றை வைத்து உண்மையான தமிழ் உணர்வாளர்களுக்கு வலை விரிப்பதும் அவர்களில் ஒருவர்கூட பிரபலம் ஆகிவிடாமல் மட்டம் தட்டிவிடவேண்டும் என்பதும்தான் திட்டமாம்.

ம்....

இப்படி உண்மையான உணர்வாளர்களை மீன்களுக்கு பொரி வீசுவதுபோல வீசி அவர்களை வளைத்துப் போட்டுத் தேர்தலில் நிற்கவைத்து தோல்வி அடையச்செய்துவிடுவதுதான் மெகா திட்டமாம்.

ஓஹ்...இது புதுசா இருக்கே என்றோம்.

ஆமாம், அவர்களில் எவராவது அதிக வாக்குகள் வாங்கியோ, பத்திரிகை ஊடகங்களில் அதிகம் பிரபலம் ஆகிவிட்டால் 'செக்' வைக்கப்பட்டு விடுவார்களாம்.

ம்....

சில நாட்களில் 'பிசிறு' போல அவர்கள் கட்சியை விட்டு வெளியேற்றப்படுவார்களாம்.

ஓஹ்...சரி இதில் கட்சித் தலைமைக்கு என்ன இலாபம் ? என்று கேட்டோம்.

தலைவர் படம், கொடியைக் காட்டினால்தான் புலம் பெயர் தமிழர்களிடம் வசூல் செய்ய முடியும், இங்கே தமிழர் உணர்வாளர்களை வளைத்துப் போட முடியும். கட்சியில் சேர்ந்த 100க்கு 99 பேர் விடுதலை இயக்கத்தின் தலைவருக்காகவே கட்சியில் சேர்ந்தார்கள். அந்தக் கூட்டத்தைக் காட்டி இன்னும் வசூல் செய்யமுடியும் வேறு என்ன...

ம்...புரிகிறது.

ஆனால் 9 நாடு இராணுவப்படை இணைந்து வீழ்த்தவேண்டிய அளவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த அந்ததத் தலைவர் மது அருந்தமாட்டார், புகை பிடிக்கமாட்டார், கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தவே மாட்டாராம்.

ஓஹ்...

ஆனால் சீமான் மேடையில் மட்டும்தான் பிரபாகரன், சேகுவேரா, அண்ணல் அம்பேத்கர் என்று நாகரிகமாகப் பேசுவார் தனிப்பட்ட முறையில் அலைபேசியிலும் மற்றும் நேரடியாகவும் நாராசமாகக் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவார்

அடக்கடவுளே...

மேடையில், பொது இடங்களில் நீங்கள் பார்க்கும் சீமானின் பேச்சு, செயலுக்கு எதிரான பக்கம் அவருடைய மறுபக்கம்.

புரிகிறது....

அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை தமிழ் உணர்வாளர்களை, தமிழ் வாக்காளர்களை ஓர்மைப்படுத்தி படிப்படியாக அவர்களின் உணர்வுகளைக் காயடித்து விடவேண்டும்.

ம்...

சீமானின் வலது - இடது கரமாக இருக்கும் பாக்கியராசன் என்பவர் நடத்தும் 'கம்பெனிதான்' நாம் தமிழர் கட்சியே என்கிறார்கள் அந்தக் கட்சி குறித்து நன்கு அறிந்தவர்கள். அந்தப் பாக்கியராசனுக்கு சென்னை அண்ணாசாலையில் ஒரு அலுவலகம் இருக்கிறதாம். இரகசிய ஒற்றன், நான்காம் தூண் போன்ற youtube சேனல்களை அவர்தான் நடத்துகிறாராம். அதேபோல தங்கள் சொல்வதைக் கேட்டு அப்படியே காணொலிகள் வெளியிடும் கட்சிக்காரர்களுக்கு பாக்கியரசன்தான் நிதி உதவி செய்வாராம். ஆனால் தப்பித்தவறிக் கூட ஒடுக்கப்பட்ட சாதியாக இருந்தால் நோ உதவியாம்.

ஓஹ்...இதுவேறயா !

அதுதவிர Fake ID வெறிநாய்ப் படை ஒன்றையும் பாக்கியராசன்தான் நடத்துகிறாராம். ஆபாசமாக பின்னூட்டம் இடுவதுதான் அந்த வெறிநாய்ப் படையின் வேலையாம்.

ம்.....

பாக்கியரசன், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி மூன்றுபேரும் ஒரே அணியாம்.

ஓஹ்....

இவர்கள் சாதி ரீதியாகவும் ஒரே அணிதானாம் என்கிறார்கள் கட்சியின் உள்ளரசியல் தெரிந்தவர்கள்

ஓ...சுத்தம்...ம்

ஒடுக்கப்பட்ட சாதிக்காரர்களை கட்டம் கட்டித் தூக்குவதில் வல்லவர்களாம் இந்த அணியினர்.

அடக்கொடுமையே... என்ன அநியாயமா இருக்கே என்றோம்.

எந்தச் சேனலைக் கட்சிக்காரர்கள் பார்க்கவேண்டும், பின்னூட்டம் இடவேண்டும், ஆபாசமாக பின்னூட்டம் இடவேண்டும் என்பதெல்லாம் பாக்கியராசன் கொடுக்கும் கட்டளைப்படிதான் நடக்குமாம்.

அதனால்தான் சில சேனல்களில் மட்டும் அதிக பார்வையாளர்கள், Subscribers இருக்காங்களா ?

ஆமாம், அந்தக் கட்சியில் ஒடுக்கப்பட்டவர் நடத்தும் Youtube சேனல்களில் நல்ல நல்ல கன்டென்ட்ஸ் போட்டாலும்கூட Subscriber மற்றும் பார்வையாளர்களே ஏறமாட்டார்கள் பார்த்திருக்கலாம் நீங்கள் என்ற பருந்தாரிடம்,

ஆமாம், நீண்ட ஆண்டுகளாக அந்தக் கட்சியில் இருக்கும் ஒருவர் கந்துவட்டிக்குப் பணம் வாங்கி கேமிரா, லைட், கம்ப்யூட்டர் எல்லாம் வாங்கி விடாமல் காணொலிகள் போட்டுக்கிட்டே இருக்கார். ஆனா சில நூறு Subscribers கூட அதுக்கு ஏறலை என்று சொன்னோம்.

ஏன்...நம்ம கட்சிக்காரர்தானே அவரோட சேனலுக்கும் Subscribe செஞ்சுவிடுங்க என்று வாட்ஸ்ஆப் குழுக்களில் தகவல் போட்டாலே அவரோட சேனல் ஒரே நாளில் லட்சங்கள் தாண்டுமே...ஆனா செய்யக்கூடாதுன்னே இருக்காங்க என்ற பருந்தார் சாட்டை, தம்பி, இரகசிய ஒற்றன், நான்காம் தூண் ஆகிய சேனல்களுக்கு மட்டும் ஊக்கம் தரப்படுகிறதாம்

என்றார்.

தமிழம்னு ஒரு சேனலும் அப்படித்தான் கிடந்தது, ஆனா இப்போ பத்திரிகையாளர் ஏகலைவன் படத்தைப் போட்டு வாய்க்கு வந்தபடி அந்த ஆசாமி பேசுறதால இப்போ கொஞ்சம் பார்வைகள் ஏறுது என்று நாம் சொன்னோம்.

ஆமாம், அந்த ஆசாமிதான் நாம் தமிழர் கட்சியையே முடிச்சு விட்டவர் என்ற பருந்தார் கட்சிக்காரர்கள் எந்த Youtube சேனலை Subscribe செய்ய வேண்டும், எதற்கு பின்னூட்டம் இட வேண்டும், யாரை ஆபாசமாக அருவருப்பாக பேசவேண்டும் என்று 24 X 7 மணிநேரமும் செயல்பட்டால் அந்தக் கட்சி எப்படி உருப்படும் என்ற பருந்தாரிடம்,

ஓ அதனலதான் பா.ஏகலைவனை குறிவைச்சு வெறிநாய்கள் போல பாய்கிறார்களா என்று கேட்டோம்.

ஆமாம்....புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்டது போல சுமார் 30 ஆண்டுகள் பத்திரிகை ஊடகத்துறையில் நல்ல பெயரோடு செயல்படும் பா.ஏகலைவனின் பெயரை Damage செய்யவேண்டும் என்பதுதான் அந்த தமிழம் சேனலுக்கு பாக்கியராசன் கொடுத்துள்ள அசைன்மென்ட் என்ற பருந்தாரிடம்,

பா.ஏகலைவனை 2009 ம் ஆண்டிலிருந்து பார்த்து வரும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு அவரைப்பற்றி நன்கு தெரியும். இதில் இந்த ஆள் உளறிக்கொட்டினால் மட்டும் அது மாறிவிடுமா என்ன ? என்றோம்.

தமிழர்களுக்குத் தெரியும் இரசிகக் குஞ்சுமணிகளுக்கு ?! என்று கேட்ட பருந்தார், சீமானுக்கு விஜய் மீது இருக்கும் ஒரே காண்டு, தன்னைவிட வயதில் இளையவர், அனுபவம் குறைவானவர் அவர் முதலமைச்சர் ஆகிவிட்டார், தனக்கு இன்னும் டெபாசிட்கூட கிடைக்கலையே என்பதுதானாம் என்ற பருந்தாரிடம்,

அதற்கு என்ன செய்ய முடியும் பருந்தாரே? எண்ணங்கள்தான் செயல்கள் ஆகின்றன. விஜய்க்கு முதலமைச்சர் ஆகவேண்டும், தனது கட்சிக்காரர்களை எம்.எல்.ஏ. அமைச்சர்கள் ஆக்கவேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருந்திருக்கிறது அது செயலுக்கு வந்திருக்கிறது. ஆனா நாம் நாடகக் கட்சியில் தானும் வெற்றி பெறக்கூடாது, தனது கட்சிக்காரர்களும் வெற்றி பெறக்கூடாது என்ற எண்ணம் இருந்தால் செயலும் அப்படித்தானே இருக்கும் என்றோம்...

ஆமாம், அரசியல் வெற்றி என்பது அல்ல சீமானின் நோக்கம், கடைசிவரை இப்படியே வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்சாக வாழ்ந்துவிட வேண்டும் என்பதுதானாம் அதற்கேற்ப அவரைச் சுற்றியுள்ள பாக்கியராசன் கோஷ்டியும் நல்ல சொகுசாக வாழ்கிறதாம் என்ற பருந்தார்,

தனது மனைவி, மகள், மகன் என அனைவரையும் களப்பலி கொடுத்து கடைசிவரை மக்களுக்காகவே வாழ்ந்த அந்தத் தலைவனின் படம், கொடியை வைத்துக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழும் இவர்களா தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்கப் போகிறார்கள் என்று நான் கேட்கவில்லை நம்மிடம் பேசும் புலம்பெயர் தமிழர்கள் கேட்கிறார்கள் என்று சொன்ன பருந்தார், அம்பாசமுத்திரத்தில் பொது வேட்பாளர் எல்லாம் இல்லையாம் ஒரு பெரிய வசூலுக்கான திட்டமாம் என்ற பருந்தார் பை...பை...சொல்லிவிட்டுப் பறந்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User