ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி பாலியல் புகார் | சென்னை காவல்துறை

ஜெம் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மேலும் ஒரு சிறுமி புகார். வெள்ளை நிற கேம்ரி கார் அடையாளம் காணப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு.

Nov 07, 2026 - 20:56
Updated: 1 day ago
0 24
ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி பாலியல் புகார் | சென்னை காவல்துறை

ஜெம் வீரமணி மீதான பாலியல் புகார் வழக்கில் மேலும் ஒரு சிறுமி வாக்குமூலம்!

வெள்ளை நிற கேம்ரி கார் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை – பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி பாலியல் புகார் அளித்துள்ளதாக சென்னை பெருநகர காவல்துறையின் விபச்சாரத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள எட்டு வழக்குகளில், ஜெம் வீரமணி எட்டு வழக்குகளிலும், சாந்தி மூன்று வழக்குகளிலும், மகேந்திரசிம்ஹன் இரண்டு வழக்குகளிலும், லாசர் ஐந்து வழக்குகளிலும், கணேசன் இரண்டு வழக்குகளிலும், சீனிவாசன், சக்திவேல், பாபு, பார்த்திபன் ஆகியோர் தலா ஒரு வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் சாட்சியாக இருந்த சிறுமி, தானும் ஜெம் வீரமணியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் லாசரை ஒரு நாள் காவல் விசாரணையில் எடுத்து விசாரித்த காவல்துறையினர், பாலியல் குற்றச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வெள்ளை நிற டொயோட்டா கேம்ரி (Camry) காரை அடையாளம் கண்டு வழக்கில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கிடையே, குற்ற எண் 11/2026 வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மொத்தம் பதிவு செய்யப்பட்டுள்ள எட்டு வழக்குகளில், இரண்டு வழக்குகளுக்கான இறுதி அறிக்கைகள் வரும் வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User