தவெக மீது ஊடக எதிர்ப்பலை ஏன்? திமுகவுக்கு Backfire ஆன போலி நூல்கள் மோசடி!
தவெக அரசுக்கு எதிரான ஊடக விமர்சனங்கள், கட்டாய லஞ்சத் தடுப்பு, திமுகவின் போலி நூல்கள் விவகாரம், அட்டைக்கத்தி வீசும் தொலைக்காட்சி டுபாக்கூர் செய்தி ஆசிரியர் குறித்து பருந்தார் தகவல்கள்.
+ தவெக மீது அதிகரிக்கும் (சமூக) ஊடக எதிர்ப்பலை !
+ கட்டாய லஞ்சம் வாங்கத் 'தடை' : தவெக மீது கடும் கடுப்பில் திமுக - அதிமுக ஆதரவு அதிகாரிகள்?!
+ சோனியா புத்தக வெளியீடு ; 'கடமைக்கு' மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த ராகுல்?!
+ அருண் ஐபிஎஸ் மீது பதியப்பட்ட வழக்கு குறித்த செய்தியை வெளியிடமால் தவிர்த்த பிரபலத் 'தொலைக்காட்சி' ?!
+ இறங்கி அடித்து இடுப்பை உடைத்துக் கொண்ட டுபாக்கூர் செய்தி ஆசிரியர் இப்போது ஒவ்வொருவராக வேட்டையாடப்போகிறாராம் !
+ திமுகவுக்கு Backfire ஆகிய போலி நூல்கள் மோசடி !
தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்
கையில் பஞ்சாமிருதம் சகிதம் வந்து சேர்ந்தார் பருந்தார்.
என்னங்க பருந்தாரே பழனி போயிருந்தீர்களா என்று கேட்டோம்.
ஆமாம் என்ற பருந்தார் பஞ்சாமிருதத்தை நம் கைகளில் வைத்துவிட்டுப் பேசத் தொடங்கினார்.
ஜோசப் விஜயின் தவெக மீது பத்திரிகை ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் எதிர்ப்பலை அதிகம் வீசுகிறது என்றார் பருந்தார்.
அரசின் மீதான மக்களின் எதிர்ப்பலையா பருந்தாரே என்று கேட்டோம்.
சரியான கேள்வி கேட்டீர்கள். மக்களின் எதிர்ப்பலை என்பது பேருந்துகள், தேநீர்கடைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் எழும். ஆனால் இது பத்திரிகை ஊடகங்கள், சமூக ஊடகங்களில்தான் எழுகின்றன என்ற பருந்தாரிடம்....
உடனே உங்களை ரூட் மாபியா என்று அழைப்பார்கள் பருந்தாரே என்று சொன்னோம்....
வாய்விட்டுச் சிரித்த பருந்தார், சிலர் எதையாவது உளறிக்கொண்டே இருப்பார்கள். நாம் அவர்களுக்காக தகவல்கள் - செய்திகள் வெளியிடுவதில்லை. உண்மை நிலவரம் அறிந்துகொள்ள விரும்பும் நமது வாசகர்களுக்காகவும், மக்களுக்காகவும்தான் செய்திகள் வெளியிடுகிறோம் என்ற பருந்தார் தொடர்ந்து பேசினார்,
பேருந்து வெற்றிப்பயணம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. அதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று குரல் எழுந்தவுடன் ஆட்டோக் கட்டணம் அதிகரித்து 'பாலன்ஸ்' செய்துவிட்டார்கள். அதே வேளை விலைவாசி உயர்வு ஒரு பிரச்சனைதான். அது எல்லா மாநிலங்களிலும் இருக்கும் பிரச்சனைதான். இங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டிய நிலையில் இருக்கிறது. அதேபோல கட்சி நிர்வாகிகளைக் கட்டுப்படுத்தி ஒழுங்கு படுத்தவேண்டியதும் அவசியமான ஒன்று. மற்றபடி இவையெல்லாம் சமூக ஊடகங்கள் சொல்வதைப் போலக் கட்டுப்படுத்த முடியாத பிரச்னைகளெல்லாம் அல்ல, ஆட்சி மாற்றம் தேவை என்னுமளவுக்கான பிரச்சனைகளும் அல்ல. மின்வெட்டு, மின் துண்டிப்பு, மின் தடை ஒரு நாளைக்கு 17 முறையெல்லாம் இருந்தது. இப்போது அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ம்...
ஜெயலலிதா பாணி நிர்வாக அதிரடி முடிவுகளை ஜோசப் விஜய் எடுத்தால் நல்லது என்கிறார்கள் என்ற பருந்தாரிடம்,
தங்களுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் அப்படியெல்லாம் அதிரடி நடவடிக்கை எடுத்தால் தவெக கட்சிக்காரர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படாதா? என்று கேட்டோம்.
கட்சிக்காரர்களைத் திருப்தி செய்துவிட்டு மக்களை அதிருப்தி அடைய வைத்தால் ஆட்சி என்னாவது? என்று கேட்ட பருந்தார், மக்கள் நம்பி வாக்களித்துள்ளார்கள், எனவே அவர்களின் நலன்தான் முக்கியமானதாக இருக்கவேண்டும் என்கிறார்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்று பதிலளித்தார்.
உண்மைதான் பருந்தாரே என்றோம்.
தொடர்ந்து பேசிய பருந்தார்,
திமுக தரப்பு ஊழல்களைத் தூசி தட்டி எடுத்து வழக்குகளை உறுதியாகத் தவெக அரசு முன்னெடுக்கிறது. அதிலும், திமுகவின் மிக முக்கியத் தலைவர்களைச் சுற்றி வளைக்கின்றன வழக்குகள். செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, அன்பில் மகேஷ் என உதயநிதிக்கு 'அரணாக' நிற்கும் ஆளுமைகள் மீது வழக்குகள் பாய்கின்றன. ஜெகத்ரட்சகன் மகன் ஏற்கனவே தவெகவில் ஐக்கியம்.
ம்...
கடந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் டாஸ்மாக், கல்வித்துறை, மணல் தொடங்கி நூலகங்கள் வரை ஸ்டாலினின் கவனத்துக்கே வராமல் கட்சிக்காரர்களும், அதிகாரிகளும் புகுந்து விளையாடியிருக்கிறார்களாம்.
ம்...
கட்டாய லஞ்சம் கிட்டத்தட்ட 80 விழுக்காடு குறைந்துள்ள நிலையில், மக்கள் பணத்தைத் தொடவிட மாட்டோம், தொட்டவர்களை விட மாட்டோம் என்று ஜோசப் விஜய் உறுதியாக இருப்பதால் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் அரசு சேவைகளில் உண்மையில் பலன்களை அடைந்து வருகிறார்களாம்.
ம்...
அரசு அதிகாரிகளின் இடமாற்றம், பதவி உயர்வு ஆகியவை பெருமளவில் கட்டாய லஞ்சம் இல்லாமல் நடைபெறுவதும் மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றுத் தந்திருக்கிறது.
ம்...
ஆக, இவற்றையெல்லாம் மக்களிடம் கொண்டு செல்லவேண்டிய தவெக அரசு தரப்பு பத்திரிகை ஊடகங்களை சரிவரக் கையாளவில்லை என்பது அடுத்த பிரச்சனை.
ம்....
தவெகவின் கொள்கை வகுப்பாளர்கள் (சமூக ஊடக விங்) IT விங்கை மட்டும் வைத்து ரீல்ஸ் போட்டால் போதும் என்று இருப்பதாகக் கட்சிக்குள்ளயே பேச்சு ஓடுகிறது என்ற பருந்தாரிடம்,
உண்மைதான் பருந்தாரே...பத்திரிகை ஊடகங்களை திமுக வழக்கம்போல சரியாகப் பயன்படுத்தி தவெக அரசுக்கு எதிராகப் போர் தொடுக்கிறது.
சரியாகச் சொன்னீர். உண்மையில் தவெக தனித்து நிற்கிறது. தவெக அரசுக்கு ஆதரவு தரும் இடதுசாரிகள் கள்ளக்குறிச்சி பிரச்சனை தொடங்கி பல்வேறு பிரச்சனைகளில் திமுகவை விட அதிகமாகத் தவெக அரசை விமர்சிக்கிறார்கள்.
ம்...
இதனால்தான் ஊடக, சமூக ஊடகங்களில் தவெக அரசுக்கு எதிரான அலை வீசுவது போலத் தோன்றுகிறது என்று விவரித்த பருந்தார், ஊழல் வழக்கு, குற்ற வழக்குகளில் தீவிர நடவடிக்கைகளால் காயம்பட்டுள்ள திமுகவுடன் கட்டாய லஞ்சத் தடையினால் பாதிக்கப்பட்டுள்ள திமுக அதிமுக ஆதரவு அதிகாரிகளும் சேர்ந்துகொள்ள ஆங்காங்கே அரசு நிர்வாகத்தில் சிறு சிறு தொடர் சலசலப்புகள் எழுகின்றன என்றார் பருந்தார்.
ம்...
திரிஷா விஜய் என்ற 'எழுத்தாளர்' பெயரைக் கேட்டதும், பெரியார் அறிவுலக நூலகத்தில் போலி நூல்கள் மோசடி செய்தது தவெக அரசு என்று அறிக்கைவிட்ட மு.க.ஸ்டாலின் தரப்புக்கு அதுவே Backfire ஆகியிருக்கிறது. அந்த மோசடிகள் நடந்தது தனது ஆட்சியில்தான் என்பதே பிறகுதான் ஸ்டாலினுக்குத் தெரிந்திருக்கிறது.
ம்...
விசாரணையில் அகல்விளக்குப் பதிப்பக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் நூலகத்துறை கீழ்நிலை அதிகாரிகளைப் பலிகடா ஆக்கிவிட்டு உயர் அதிகாரிகள் தப்பித்துக் கொள்வார்கள் என்று ஒரு சந்தேகம் சமூக ஊடகங்களில் பரவுகிறது.
ம்....
தமிழ்நாட்டில் உண்மையில் தவெகவினரைவிட அதிக அளவு அதிலும் ஆழமாக தோண்டித் துருவி கலைஞர் கருணாநிதி தொடங்கி உதயநிதி வரையிலும் ஊடகங்களில் வறுத்து எடுப்பது காங்கிரஸ் கட்சிக்காரர்கள்தான்.
ம்...
தவெக கூட்டணியில் திமுகவைக் கடுமையாக விமர்சிப்பது காங்கிரசும் தவெகவும்தான். கம்யூனிஸ்ட் கட்சியினரோ, விடுதலைச் சிறுத்தைகளோகூட இல்லை.
ஆமாம் பருந்தாரே உண்மைதான்....
இப்படிப்பட்ட நிலையில் சோனியாகாந்தி எழுதிய நூல் வெளியீட்டு விழாவுக்கு மு.க.ஸ்டாலினுக்கு எதற்கு அழைப்பு விடுக்கப் போகிறார்கள்? என்ற பருந்தார் அதனால் ஒரு 'பார்மாலிட்டிக்கு' மு.க.ஸ்டாலினின் உதவியாளரை அழைத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
உண்மைதான் பருந்தாரே எங்களுக்கும் அதே கேள்வி...என்றோம்.
இன்னொன்றையும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் காங்கிரஸ் + தவெகவின் உறுதியான இணைப்பு திமுகவை மேலும் தனிமைப்படுத்தி இருக்கிறது. அந்தவகையில் திமுகவை பாஜகவை நோக்கித் தள்ளும் முயற்சியாகவும் பார்க்க வேண்டும் என்ற பருந்தார்,
2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கான நகர்வுதான் இது என்கிறார்கள் டெல்லியில் என்றார்.
ம்...
சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு ஒரு அடாவடித் தேர்தல் நடத்தித் தான் தலைவராக ஆகி, அதன் நிரந்தர சிறப்பு விருந்தினராக காவல் முன்னாள் ஆணையர் அருண் ஐபிஎஸ்-சை அமர்த்த நினைத்திருந்தார் தினகரன் பத்திரிகையாளர் சுரேஷ் வேதநாயகம்.
ம்...
ஆட்சி மாறிய நிலையில், ஜெம் வீரமணி பாலியல் குற்றம் வெளிவந்த நிலையில் அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு அவரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ம்...
இந்த நிலையில் ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக செய்திகள் வெளியிட்ட சக பத்திரிகை ஊடகர்களை மிரட்டி அவதூறு பரப்பியதான வழக்கில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தற்போதைய தலைவரும், தினகரன் செய்தியாளருமான சுரேஷ் வேதநாயகம் + 2 பேர் விசரணையின் கீழ் உள்ளனர். மேலும் முன்ஜாமீன் பெற்று அன்றாடம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்கள்.
ம்...
இப்படிப்பட்ட நிலையில், அருண் ஐபிஎஸ் பெயர் வழக்கில் சேர்க்கப்பட்ட செய்தியை தமிழ்நாட்டின் எல்லா தொலைக்காட்சிகளும் வெளியிட்ட நிலையில், அந்தப் பகலவன்
தொலைக்காட்சி மட்டும் செய்தி வெளியிடவில்லையாம்.
ஏனாம்...? என்று கேட்டோம்.
எல்லாம் அருண் ஐபிஎஸ் மீதும் சுரேஷ் வேதநாயகம் மீதும் இருக்கும் பயம்தானாம் என்ற பருந்தாரிடம்...
பயமா...செய்தித் தொலைக்காட்சி ஆசிரியருக்கு அப்படி என்ன பயம்? என்று கேட்டோம்.
யாருக்குத் தெரியும்...செய்தி ஆசிரியர் ஆனவுடன் அந்தத் தொலைக்காட்சியின் பெயரையும், கட்சியின் பெயரையும் வைத்தே 300 - 400 கோடி ரூபாய் தேத்திய நிலையில் இந்த ரெண்டுபேரையும் வைத்தும் நிறையத் தேத்திவிட்டாரோ என்னவோ என்று அந்த குழுமத்திலேயே பேசிக்கொள்கிறார்கள்.
ஓ...
இந்த வசூல் ராஜா செய்தி ஆசிரியர், தன்னை சாதி ஒழித்த ஆள் என்று பேசிக்கொண்டு தெலுங்கு பேசுவோர் சாதிச் சங்கத்துக்கு லட்சக்கணக்கில் நிதி உதவி செய்யக்கூடிய ஆளாம். திமுக என்று சொல்லிக்கொண்டு அதிமுகவிடமும் 50 லகரம் வரை தயங்காமல் கறக்கிற ஆசாமியாம்....
ஓ...
இப்போ தீபாவளிக்கு தவெகவின் 'பசையான' சில அமைச்சர்களிடமும் கை நீட்டிவிட்டாராம். அவர்களையும் விட்டுவைக்கவில்லையாம்.
ஓ...
அந்த டுபாக்கூர் வசூல் ராஜாதான் சொன்னாராம்..."தற்போது நமக்கு சற்று பின்னடைவாக உள்ளது. பொறுத்திருங்கள் நமக்கு எதிரான பத்திரிகை ஊடகவியலாளர்களை ஒவ்வொருவராக வேட்டையாடுவோம்" என்றாராம் என்ற பருந்தாரிடம்...
என்ன வசூல் வேட்டையா என்று சிரித்துக்கொண்டே கேட்டோம்...
இதுகுறித்து ஒரு மூத்த பத்திரிகையாளர்..."அவன் வேட்டையாடினா எலும்புத் துண்டுகூட அவனுக்குக் கிடைக்காது" என்கிறார் என்ற பருந்தார்....இந்த வசனத்தைப் பேசுவதற்கு முன்பு அந்த ஆளும், வழக்கில் சிக்கிய ஆசாமிகளுக்கு காலில் விழாத ஆட்களே இல்லையாம்.
அப்புறம் உங்களுக்கு எதுக்குடா இந்த வெட்டி வசனம் என்று கேட்டோம்.
ஹஹஹா....என்று சிரித்துக்கொண்டே பனிமூட்டத்துக்குள் புகுந்து மறைந்தார் பருந்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)