தினகரன், நக்கீரன் செய்தியாளர்கள் நீதிமன்றத்தில் சரண்; வேப்பேரி காவல்நிலையத்தில் கையெழுத்து

தினகரன் செய்தியாளர்கள் சுரேஷ் வேதநாயகம், சரத், நக்கீரன் செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ் ஆகியோர் முன்பிணை உத்தரவின்படி நீதிமன்றத்தில் சரணடைந்து பிணைத்தொகை செலுத்தி, வேப்பேரி காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர்.

Nov 16, 2026 - 14:11
Updated: 3 days ago
0 125
தினகரன், நக்கீரன் செய்தியாளர்கள் நீதிமன்றத்தில் சரண்; வேப்பேரி காவல்நிலையத்தில் கையெழுத்து

தினகரன் செய்தியாளர்கள் சுரேஷ் வேதநாயகம், சரத் மற்றும் நக்கீரன்

செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ் ஆகியோர் நீதிபதி முன் சரண் !

வேப்பேரி காவல்நிலைய விசாரணை அதிகாரி முன் அன்றாடம் கையெழுத்து!!

தமிழ் ஊடகம் | சென்னை | 16/11/26

அண்ணா பல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தல், ஜெம் வீரமணி பாலியல் குற்ற வழக்கு ஆகியவை குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளர்கள் மீது அவதூறு பரப்பி, அச்சுறுத்தல் விடுத்ததாக செய்தியாளர் கதிரவன் கொடுத்த புகாரின்பேரில் தினகரன் தலைமைச் செய்தியாளர் சுரேஷ் வேதநாயகம், தாம்பரம் செய்தியாளர் சரத் மற்றும் நக்கீரன் செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யபட்டது.

அவர்களிடம் முதல்கட்ட விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவதூறு பரப்பியது உண்மை என்று கண்டறிந்து அவர்களின் அலைபேசிகளைப் பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு அனுப்பினார்கள்.

இரண்டாம் கட்ட விசாரணைக்கு நேரில் வருமாறு அழைப்பாணை விடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் மூவரும் முன்பிணை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார்கள்.

மனுவை விசாரித்த நீதிபதி என்.ரமேஷ், ஏற்கனவே ஒருமுறை விசரணைக்கு நேரில் நின்ற காரணத்தாலும், அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு தடவியல் ஆய்வு நடைபெற்று வருகின்ற காரணத்தாலும் மூவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் முன்பிணை தருவதாக உத்தரவிட்டார்.

மேலும், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் மூன்றுபேரும் தொடர்புடைய மாவட்ட நீதிபதி முன்பு சரணடைந்து, தலா 25 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதேபோல அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையிலும் வேப்பேரி காவல்நிலைய விசாரணை அதிகாரி முன் அன்றாடம் காலை 10.30 மணிக்கு நேரில் நின்று மூவரும் தவறாது கையெழுத்து இடவேண்டும் என்றும் நீதிபதி ரமேஷ் உத்தரவிட்டிருந்தார்.

விசாரணையின்போது, மூன்று பத்திரிகையாளர்களும் நற்பெயர் பெற்ற கண்ணியமான பத்திரிக்கையாளர்கள் என்று மூவரின் வழக்கறிஞர் கூறியபோது, "நற்பெயர் / கண்ணியம் என்றால் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்த நீதிபதி, "நக்கீரன் செய்தியாளர் பிரகாஷ் என்ன நற்பெயர் பெற்ற கண்ணியமானவரா?"" என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், தமது ஆணையில், சென்னை பத்திரிகையாளர் மன்றம் போன்ற அமைப்பில் இருந்து கொண்டு இப்படி சக பத்திரியாளர்கள் மீது அவதூறு பரப்பும் அளவுக்கு சுரேஷ் வேதநாயகம் தரம் தாழ்ந்து போனது துரதிட்டவசமானது என்றும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

முன்பிணை நிபந்தனை உத்தரவுப்படி 14/11/26 சனிக்கிழமை முதல் சுரேஷ் வேதநாயகம், சரத், தாமதரன் பிரகாஷ் ஆகியோர் நீதிபதி முன் சரண் அடைந்து பிணைத்தொகை கட்டி விசாரணை அதிகாரி முன் கையெழுத்திட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 1

Comments (0)

User