போலி நூல்கள் கொள்முதல் சர்ச்சை முதல் பத்திரிகையாளர்கள் புறக்கணிப்பு வரை: பருந்தார் சொல்லும் அதிர்ச்சித் தகவல்கள்!
தமிழகப் பொது நூலக நூல் கொள்முதலில் போலி நூல்கள் குறித்த குற்றச்சாட்டுகள், பெரியார் அறிவுலகம், விசாரணை நடைமுறைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் அதிருப்தி குறித்து பருந்தார் பகிரும் தகவல்கள்.
நூலகங்கள் முதல் ஊடகத்துறை வரை..
ரூ.716 கோடி நூலகங்கள்! போலி நூல்கள் சர்ச்சை!
செய்தித்துறை அமைச்சர் மீது அதிருப்தி
வெளிநாடு கூட்டிபோகவில்லை; புலம்பிய செய்தி ஆசிரியர்
தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்
அளவான பனிமூட்டம் இருந்த இனிய அதிகாலை வேளை. நாம் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த மலைப் பாதைக்கே வந்து சேர்ந்தார் பருந்தார்.
மரத்தடியில் இருந்த கல் இருக்கையில் அவரை அமரவைத்து நாம் கொண்டு வந்திருந்த சூடான கரிசாலைத் தேநீரைக் குடிக்கக் கொடுத்தோம்.
பிறகு நம்முடன் பருந்தாரும் நடைப் பயிற்சியில் சேர்ந்து கொண்டார். நடந்துகொண்டே பேசத் தொடங்கினார் பருந்தார்.
"டிஜிட்டல் உலகமயமாகிவிட்ட வேளையில் நூலங்களுக்கு யார் சென்று நூல்கள் வாசிக்கப் போகிறார்கள்? அது உண்மையா போலியா? என்று யார் பார்க்கப்போகிறார்கள் என்று எண்ணினார்களோ என்னவோ 2021-26 மு.க.ஸ்டாலின் ஆட்சியில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள்.
ம்...
போலித் தமிழ் நூல்கள் மோசடியைக் கணக்கிட்டால் லட்சக் கணக்கான ரூபாய்கள்தான் மோசடி இருக்கலாம் ஆனால் ஆங்கிலப் போலி நூல்களைக் கணக்கிட்டால் கோடிகளில் மோசடி நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள் பதிப்பகத் தொழில் சார்ந்த விவரமறிந்தவர்கள்.
ஓஹ்...
கடந்த திமுக ஆட்சியில் பொது நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் செய்யப்படாமல் மூன்றாண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கிறார்கள் என்று உண்மையான பதிப்பகத்தார்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
ம்....
பிறகு வழக்கமான அளவைவிட சிறிய அளவில்தான் உண்மையான பதிப்பகத்தாரிடம் நூல்கள் வாங்கப்பட்டன.
ம்....
அவ்வாறு உண்மைப் பதிப்பாளர்களிடம் குறைந்த எண்ணிக்கையில் பெயரளவில் வாங்கிவிட்டு போலிப் பதிப்பகத்தாரிடம் அதிக எண்ணிக்கையில் வாங்கியிருக்க வேண்டும் என்ற ஐயம் இப்போது எழுகிறது என்ற பருந்தாரிடம்,
ஆமாம், உண்மையான பதிப்பகத்தாரிடம் நூல்கள் வாங்கினால் 'கட்டிங்' கிடைக்காது. போலியாக அச்சடித்து அவற்றை 500 - 1000 - 1500 என்ற விலைக்கு வாங்கினால் அச்சடிப்பு செலவு, அதை அச்சடித்த பதிப்பகத்துக்கு 'கட்டிங்' செலவு என சுமார் 40 விழுக்காடு போனாலும் கூட 60 விழுக்காடு கிடைக்குமே. அதாவது 100 கோடி ரூபாய்க்குப் போலி நூல்கள் 'இறக்கினால்' 60 கோடி ரூபாய் லட்டு மாதிரி நிற்குமே! என்றோம்
மிகச்சரியாக சென்னீர்கள்...."சும்மா பத்து லட்சம் 20 லட்சத்திற்கு 'வியாபாரம்' செய்யும் ஆட்சியா திமுக ஆட்சி?!" என்று சொல்லிக் கண்ணடித்த பருந்தார், "போலி நூல்கள் மட்டுமல்ல பெரிய பெரிய நூலகக் கட்டடங்கள் கட்டிய வகையிலும் ஆழமாகத் 'தூர்' வாரினால் சில பல நூறு கோடிகள் சாதாரணமாகத் தாண்ட வாய்ப்பு என்று அதிர்ச்சியோடு சொல்கிறார்கள்" என்ற பருந்தார் தொடர்ந்து பேசினார்,
அண்ணா நூலகம், கலைஞர் நூலகம், பெரியார் அறிவுலகம் ஆகிய மூன்று கட்டுமானங்களின் திட்ட மதிப்பு மட்டுமே 716 கோடி ரூபாய் என்ற பருந்தார்,
அது என்ன நினைத்தார்களோ என்னவோ மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அவரவருக்குக் கிடைத்த அளவுக்கு எல்லாத்துறைகளிலும் 'வாரி வாரிச் சுருட்டியிருக்கிறார்கள்' என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள், அதிலும் பள்ளிக் கல்வித்துறை படுமோசம் என்பது அன்பில் வழக்கில் தெரிய வருகிறது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள் என்ற பருந்தார் தொடர்ந்து பேசினார்.
சிறு, நடுத்தர அளவிலான பொது நூலகங்களுக்கு முக்கியத்துவம் தராமல் அண்ணா நூலகம், கலைஞர் நூலகம், பெரியார் அறிவுலகம் என வரலாற்றில் 'ஸ்டிக்கர்' ஒட்டும் வேலைகளை மட்டுமே மும்முரமாகச் செய்திருக்கிறார்கள் முந்தைய ஆட்சியினர் என்பது போலி நூல்கள் பிரச்சனையில்தான் தெரியவந்துள்ளது என்றும் கூறுகிறார்கள் நூலக வாசகர்கள் என்றார் பருந்தார்.
சரிங்க பருந்தாரே...இதில் யார் தவறு செய்தார்கள் என்று உடனே கண்டுபிடிக்க முடியாதா என்ன? என்று கேட்டோம்.
சரியான கேள்வி, முதலில் இந்த நூல்கள் வாங்கும் வழிமுறைகளைத் தெரிந்து கொண்டால் இதன் சிக்கல் புரியும் என்ற பருந்தார் புரியும்படி சொல்லத் தொடங்கினார்,
எடுத்துக்காட்டாகச் சொல்கிறேன்....கோயமுத்தூர் பெரியார் அறிவுலக நூலகத்திற்கு நூல்கள் வாங்க மொத்தம் 113 எழுத்தாளர்கள் / வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் அனைவருமே சமூகத்தில் நல்ல பெயருடைய எழுத்தாளர்கள், வல்லுனர்கள், அறிவுஜீவிகள்.
ம்....
இதில் இந்த 113 பேர் கொண்ட குழுவினர் அவரவருக்கு பரிச்சயமான துறைகளில் தரமான நூல்களை வாங்கப் பரிந்துரை செய்து ஒரு பட்டியல் கொடுப்பார்கள்.
ம்....
அதேபோல நூலகத்துறையின் பொது அறிவிப்பின்படி உண்மையான பதிப்பகங்களும் அவர்களிடம் உள்ள தரமான நூல்களுக்கு ஒரு பட்டியலைத் தருவார்கள்.
ம்...
இந்தக் குழு மற்றும் பதிப்பகங்கள் ஆகியவற்றிடம் பெற்ற பட்டியல்களில் உள்ள நூல்களைத் தேர்ந்தெடுத்து உறுதி செய்யவேண்டிய இறுதிப்பணி ஐந்து பேர் கொண்ட குழுவிடம் தரப்படும்.
ஓ...
பெரியார் அறிவுலகம் தொடர்பில் அந்த நூல்கள் தேர்ந்தெடுப்பில் இறுதிப் பட்டியலில் கையெழுத்துப்போட்டு உறுதி செய்த ஐவர் குழுவில்,
பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன், வேர்ச்சொல் தமிழ் ஆய்வறிஞர் அரசேந்திரன், வெங்கடாசலபதி, ஐஏஎஸ் அதிகாரிகள் சந்திர மோகன் மற்றும் சுதன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
ம்....
பிறகு இந்தப் பட்டியல் அடிப்படையில் நூல்களுக்கான விலைகளைப் பேரம் பேசி முடிவு செய்ய அடுத்துள்ள ஒரு ஐவர் குழுவிடம் ஒப்படைக்கப்படும்.
ஓஹ்....
அவர்கள் அந்த நூல்களுக்கான விலைகளைப் பேசி முடித்து இறுதி செய்து விலைப் பட்டியல் கொடுத்துவிட்டால் நூல்கள் வாங்குவதற்கான இறுதி ஆணை வெளியிடபப்டும்.
ஓ...இத்தனை படிநிலைகள் இதில் உள்ளனவா? என்று கேட்டோம்.
ஆமாம், இப்போது விசாரணை அதிகாரிகள் இந்தப் படி நிலைகளில் தொடர்புடையவர்களிடம் தனித்தனியே வாக்குமூலங்களை வாங்கியிருக்கிறார்கள்.
ஓஹ்....
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் போலி நூல்களை உள்ளே நுழைத்தது யார் ? அதற்கு ஒப்புதல் கொடுத்து யார்? நிதி கொடுத்ததில் உண்மையில் பொறுப்புக் கூறல் யாருக்கு? என்பது விசாரணை முடிவில் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள் காவல்துறை தரப்பில். நாம் விசாரித்த வரையில் அநேகமாக திங்கட்கிழமைக்குகள் மோசடி செய்தவர்களைக் காவல்துறை நெருங்கிவிடும் என்கிறார்கள் என்று சொன்ன பருந்தார் பத்திரிகை ஊடகத் தொழிற்சங்கத்தினர் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று அடுத்த தகவலைக் கூற ஆரம்பித்தார்
ஏன் என்னாச்சு? என்று கேள்வி கேட்டோம்.
தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகத் தனக்கு தொலைக்காட்சியில் விவாதங்களில் பேச வாய்ப்பளித்த தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்களைக் கண்டு உருகுகிறாரம் அமைச்சர் ராஜ்மோகன், அவர்களைத்தான் மதிக்கிறார்களாம் செய்தித்துறை உயர் அதிகாரிகள்.
ஓ...
இத்தனைக்கும் அந்தத் தொலைக்காட்சி ஆசிரியர்கள் திமுகவின் பரப்புரை பீரங்கிகள்.
அடடே....
ஆனால்...அத்தகைய செய்தி ஆசிரியர்கள்தான் பவுடர், சென்ட், மேக்கப், கோட் சூட் போட்டுகொண்டு இருப்பதால் அவர்கள்தான் மதிப்பு மிக்க உண்மையான பத்திரிகை ஊடகவியலாளர்கள் என்று எண்ணுகிறார்களாம் ராஜ்மோகனின் செய்தித் துறையினர்.
ஹஹஹா......என்று வாய்விட்டு சிரித்தோம். என்னங்க பருந்தாரே...இது புதுசா இருக்கே என்றோம்
உண்மைதான்...இந்திய அரசு சார் நிறுவனமான பத்திரிகைப் பதிவாளர் RNI அல்லது PRGI பதிவாளரே, ஒருவர் பத்திரிகை நடத்த அனுமதி கேட்டால் அவர் ஏழையா, பணக்காரரா, பவுடர் போட்ட மூஞ்சியா, ஷேவிங் செய்யாத மூஞ்சியா என்றெல்லாம் பார்ப்பது இல்லை. சில மாதங்கள் ஆய்வு செய்து சான்றிதழ் கொடுக்கிறார்கள்.
ம்....
ஆனால், இங்கே ராஜ்மோகன் போன்ற அமைச்சர்கள் அப்படி RNI - PRGI யில் பதிவு செய்த சிறு - குறு - நடுத்தர பத்திரிக்கையாளர்களை ஏதோ தூசி துரும்பைப் பார்ப்பது போல பார்க்கிறார்களாம்.
ஓஹோ....
பத்திரிகைத் தொழிற்சங்கத்தினரைச் சுத்தமாக மதிப்பது இல்லையாம்
இதுவேறயா...ம் என்றோம்.
அப்புறம் அந்தக் கடல் கடந்த நாட்டில் திருமணம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அந்த நிறுவனத் தலைவர் அந்த செய்தி ஆசிரியரிடம் எல்லோர் முன்னிலையிலும் சில திருமண பத்திரிகைகளைக் கொடுத்து செய்தித்துறையில் முக்கியமானவர்களுக்கு நீங்களே அழைப்பிதழ் வைத்து விடுங்கள் என்று சொன்னாராம்.
அவ்வளவதுதான், ஆசிரியருக்குத் தலைகால் புரியவில்லை. ஏற்கனவே அடுத்த CEO தான்தான் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்த நிலையில் இப்படி நேரில் வந்து தலைவரே சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார் என்றவுடன் lift ஏ இல்லாமல் தரைக்கும் மாடிக்கும் பறந்திருக்கிறார் அந்த செய்தி ஆசிரியர். நிறுவனத் தலைவருடன் திருமணத்திற்கு நானும் தனி விமானத்தில் பறக்கப்போகிறேன் என்று தன்னுடைய ஒத்தூதி ஆட்களிடம் கூறியதோடு மட்டுமல்லாமல் விலை உயர்ந்த கோட் சூட் ஷூ என்று பயணத்துக்கு ஏற்பாடும் செய்திருக்கிறார்.
ஹ..ஹ.ஹ.ஹாஆ... அப்புறம்
அப்புறம் என்ன இவரைக் கண்டுகொள்ளவே இல்லையாம். துக்கத்தில் தொண்டை அடைக்கத் திருமணத்தன்று கருப்பு சட்டை போட்டுகொண்டு வந்திருக்கிறார்.
ஹஹஹஹ......ஏன் பருந்தாரே அந்த நிறுவனத்தில் இந்த ஆசாமி சேர்ந்தே நான்கைந்து ஆண்டுகள் கூட இருக்காது...அப்படி இருக்க அவர்கள் வீட்டுத் திருமணத்திற்கு அழைத்துச் செல்லும் அளவுக்கு இவர் என்ன சூப்பர்ஸ்டாரா? என்று கேட்டோம்.
என்ன கருமமோ....அதேபோல அந்த நிறுவனத்தின் குடும்பத் திருமண அழைப்பிதழ்களை தன்னிடம் கொடுத்து அச்சுப் பத்திரிகை ஆசிரியர்கள், உரிமையாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் அளிக்கத் தன்னிடம் சொல்வார்கள் என்று எதிர்பார்த்த அந்த செய்தித்தாள் தலைமைச் செய்தியாளருக்கும் அதிர்ச்சி....
ம்...
முன்பிணை, வழக்கு விசாரணை எனத் தீவிரமடைந்துள்ள நிலையில் அவரை வைத்து அழைப்பிதழ் கொடுப்பதைத் தவிர்த்துள்ளார்களாம் தலைமை தரப்பில் என்ற பருந்தார் நேரமாகிவிட்டது மீண்டும் சந்திப்போம் என்று கூறிவிட்டுப் பறந்துவிட்டார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)