கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய ரியல் எஸ்டேட் சர்ச்சை – தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பின்னணி என்ன?

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள ரியல் எஸ்டேட் வணிகப் போட்டி, தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீதான சர்ச்சை, திமுக தரப்பு குறித்த குற்றச்சாட்டுகள், ஜோசப் விஜய் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தின் பின்னணி – பருந்தார் தகவல்கள்.

Nov 11, 2026 - 15:31
Updated: 7 hours ago
0 363
கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய ரியல் எஸ்டேட் சர்ச்சை – தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பின்னணி என்ன?

+ எம்.எல்.ஏக்கள் கூட்டம் : இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜோசப் விஜய் !

+ தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேசின் 'தலை உருண்ட' கதை !

+ திமுக ஆதரவாளர்களின் ரியல் எஸ்டேட் வணிகப் போட்டி?!

+ கள்ளக்குறிச்சியில் ஒரு குட்டிப் பரந்தூர் 'பாலிடிக்ஸ்' !!

தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்

பருந்தாரின் அலைபேசியிலிருந்து வாட்ஸ்ஆப் தகவல் வந்து விழுந்தது. எடுத்து வாசித்தோம்.

நாடகம் போல விவரித்திருந்தார் பருந்தார்

"காட்சி 1:

கள்ளக்குறிச்சித் தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இரவில் குறுந்தகவல் அனுப்ப அதுகுறித்து அவர் கட்சி மேலிடத்திற்குப் புகார் கொடுக்க, மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அருள் விக்னேஷ் மன்னிப்புக் கோர...இந்தப் பஞ்சாயத்து முடிந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிறது.

காட்சி 2 (பிளாஷ் பேக்)

முந்தைய திமுக ஆட்சியில் அவசர அவசரமாகக் கட்டி, அவசர அவசரமாகத் திறந்து வைக்கப்பட்டது கள்ளக்குறிச்சிப் பேருந்து நிலையம். அந்தப் பேருந்து நிலையத்தைச் சுற்றி சுமார் 100 ஏக்கர் நிலம் ரிஷிவந்தியம் திமுக எம்.எம்.ஏ.வசந்தன் கார்த்திகேயனின் ஆதரவு ரியல் எஸ்டேட் வணிகர்களுக்குச் சொந்தமான இடமாம். இதை எம்.எல்.ஏ. வசந்தன் கார்த்திகேயனின் ஆதரவு ரியல் எஸ்டேட் வணிகர்களுக்கு நேர் எதிரான தொழில் போட்டி வணிகர் தரப்பு கள்ளக்குறிச்சி தவெக எம்.எம்.ஏ அருள் விக்னேஷிடம் போட்டுக் கொடுத்ததாம்.

காட்சி 3:

"எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கட்டப்பட்ட பேருந்து நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்பட நடவடிக்கை எடுப்பேன், ரியல் எஸ்டேட் இலாபத்திற்காக மக்களை அலைக்கழிக்க பேருந்து நிலையத்தைத் தவறான இடத்தில் கட்டி இருக்கிறார்கள்" என்று அறிவித்தாராம் த.வெ.க.எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்.

காட்சி 4:

இதனால் பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் உள்ள தங்களின் இடத்தின் மதிப்பு கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் தி.மு.க எம்.எல்.ஏ தரப்பு ரியல் எஸ்டேட் குழு, எப்படியாவது த.வெ.க எம்.எல்.ஏவின் பதவியைக் காலி செய்யக் காத்திருந்ததாம்.

காட்சி 5:

இத்தகைய நிலையில் இன்று (11/11/26) த.வெ.க எம்.எல்.ஏக்களை முதலமைச்சரும் கட்சித் தலைவருமான ஜோசப் விஜய் சந்திக்கவுள்ள நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த 'குறுந்தகவல்' பஞ்சாயத்தை மீண்டும் சமயம் பார்த்து கிளப்பி விட்டிருக்கிறது திமுக எம்எல்ஏ வசந்தன் கார்த்திகேயன் தரப்பு என்று பத்திரிகையாளர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி அதிகாரிகள் மத்தியில் பேச்சு ஓடுகிறது. இதனால்தான் திமுக ஆதரவு சமூக ஊடகங்கள் அருள் விக்னேஷை வறுத்து எடுக்கின்றனவாம்.

காட்சி 6:

இந்த ரியல் எஸ்டேட் பஞ்சாயத்து ஒருபுறம் இருக்க பெண்களுக்கான பாதுகாவல் அரசு இது என்ற கொள்கையுடன் இருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய், அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அவசியமாகிவிட்டது. அல்லது, இல்லை அந்த அளவுக்கு வேண்டியதில்லை அவர் மன்னிப்பு கேட்டதோடு பிரச்சனை முடிந்துவிட்டது என்று இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தப்புதான் என்கிறார்கள்.

அதேவேளை, பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் ஆகியவை கட்டிய அரசு திட்டத்தின் பின்னணியில் ரியல் எஸ்டேட் வணிகர்களின் 'கை' இருந்ததா? அதனால் குறிப்பிட்ட ஒரு கட்சி ஆதரவாளர்கள் பலன் அடைந்தார்களா என்பது குறித்தும் விசாரிப்பதும் அவசியம் என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்.

ஒரு ஊரின் பேருந்து நிலையத் திட்டத்திலேயே 100 ஏக்கர் ரியல் எஸ்டேட் வணிகம் ஆட்டிப்படைக்கிறது என்னால் 5 ஆயிரம் ஏக்கர் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் எத்தனை கோடி விளையாடியிருக்கும் என்றும் அந்த சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

அப்புறம் மாமல்லபுரத்திற்கு அழைக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் மீது குற்றப்பத்திரிகை வாசிக்கப்படும் என்று பரப்பப்படும் செய்திகளில் உண்மை இல்லையாம். எம்.எல்.ஏக்களுக்குப் பரிசு, பாராட்டு என்று அன்பு மழை பொழிகிறதாம். உண்மையில் தவறு செய்திருக்கும் எம்.எம்.எல்.எங்களுக்கு 'அட்வைஸ்' தரப்பட்டு ஒழுங்கு படுத்தவும் திட்டமாம்."

என்று முடித்திருந்தார் பருந்தார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User