தமிழக காவல்துறையில் உள்ளடி அரசியல்? ஜோசப் விஜய்க்கு எழும் சவால்கள்! பருந்தார் தகவல்கள்
கட்டாயக் கையூட்டு இல்லாத நிர்வாகம், காவல்துறை அதிகாரிகளின் உள்ளடி அரசியல், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், தீயணைப்புத்துறை சர்ச்சைகள், ஊடகங்களின் பங்கு என முதலமைச்சர் ஜோசப் விஜய் எதிர்கொள்ளும் சவால்களை அலசும் பருந்தார் தகவல்கள்.
தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்
தீபாவளி கொண்டாடிய மகிழ்ச்சியில் வந்த பருந்தார் தகவல்களை அள்ளிக் கொட்டத் தொடங்கினார்.
முதலமைச்சர் ஜோசப் விஜயின் ஆட்சிக்கு அவப்பெயர் கொண்டுவரவேண்டும் என்று பல தரப்புகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று ஆரம்பித்தார் பருந்தார்.
புரியும்படி சொல்லுங்க பருந்தாரே என்று சொன்னோம்.
கட்டாயக் கையூட்டு இல்லாதது அடித்தட்டு மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது என்றாலும், வாங்கி வாங்கியே வயிறு வளர்த்த அதிகாரிகள் தரப்புக்கு பெரும் அதிருப்தி.
இருக்காதே பின்ன என்றோம்.
ஆமாம் அரசு தரும் மாத சம்பளத்தை அப்படியே மனைவியிடம் கொடுத்துவிட்டு 'கிம்பளத்திலேயே' காலம் ஓட்டிக்கொண்டிருந்த அதிகாரிகளுக்குத்தான் இப்போது சிக்கல். அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதம்தான் சட்டம் ஒழுங்கு பிரச்னை, கொலைபாதக சம்பவங்கள், சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி ஓடுவது போன்ற பிரச்னைகள் எல்லாமுமாம்.
ஓஹ்....இப்படி ஒரு கோணம் இருக்கிறதா?!
ம்....எடுத்துக்காட்டாக சொல்கிறேன், மதுவிலக்குக் கொண்டு வர முடிவு செய்தால் முதலில் அன்றாடம் குடித்துப் பழகியவர்களுக்கு மாற்றுத்திட்டம் தீட்ட வேண்டும்.
புரிகிறது பருந்தாரே...குடிக்கு அடிமையானவர்களிடம் நாளை முதல் மது இல்லை என்று சொன்னால் அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உடனே சரியாக முடியாது.
கரெக்ட்...அதுபோலத்தான் லஞ்சம் எனும் கையூட்டு வாங்கி அதற்கு அடிமையாகிப்போனவர்களின் நிலையும் என்ற பருந்தார், முன்பெல்லாம் மேலிடத்துக்குப் பணம் தரவேண்டும் என்று சொல்லி வசூல் செய்வார்கள். குறிப்பாக அமைச்சர்கள்...அமைச்சர்களுக்கு அடுத்த மேல்நிலை ஆட்சி அதிகாரத் தலைமைக்கு என்றெல்லாம் சொல்லி வாங்குவார்கள். காவல்துறை, போக்குவரத்துத்துறை, டாஸ்மாக் உள்ளிட்ட பணம் கொழிக்கும் துறைகளில் அன்றாட வசூல் நடக்கும்.
ம்.....
இப்போது முதலமைச்சர் பெயரையோ, அமைச்சர்கள் பெயரையோ சொல்லி வசூல் செய்ய வேண்டிய தேவை இல்லாது போயிற்று.
ம்....
இதெயெல்லாம் தாண்டி வசூல் செய்து வாழ்ந்த அதிகாரிகள் அதிலும் முந்தைய ஆட்சியாளர்களின் விசுவாசிகள்தான் இன்று எழும் பல பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணமாம்.
ஓஹ்...
இதுபோன்ற பிரச்சனைகள் ஒருபுறம் என்றால் காவல்துறையில் வடமொழி அதிகாரிகளுக்கும், தமிழ் மொழி அதிகாரிகளுக்கும் இடையே நடக்கும் உள்ளடி அரசியலும் சேர்ந்து கொண்டதாம்.
இது என்ன புதுப்பிரச்சனை பருந்தாரே என்று கேட்டோம்.
புதுப்பிரச்சனை எல்லாம் இல்லை, உள்ளே ஓடிக்கொண்டிருந்த பிரச்சனைதான். வடமொழி அதிகாரிகள் தமிழ் மொழி அதிகாரிகளைக் காலி செய்யும் உள்ளடி வேலைகளை மும்முரமாகச் செய்கிறார்களாம்.
ஓஹ்....
அதிலும், சாதி ரீதியான உள்ளடி வேலைகளும் நடக்கிறதாம்.
அடடே...
ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட எல்லைகளில் யார் யார் தகராறு செய்வார்கள் யார் யார் வெட்டு குத்து அளவுக்குப் போவார்கள் என்ற விவரம் அந்தக் காவல்நிலையத்திற்கு அத்துப்படி. மேலும் அப்படிப்பட்ட நபர்களின் அசைவுகளை கண்காணித்துக்கொண்டே இருக்க உளவுத்துறை எனும் நுண்ணறிவுப்பிரிவுக் காவல் அதிகாரிகளும் இருப்பார்கள்.
ம்....
அதிலும் கூடுதலாக வன்முறை உணர்வோடு இருப்பவர்கள் காவல்துறை 'ராடார்' கண்காணிப்பில் இருப்பார்கள்.
ம்...
அப்படிப்பட்ட கூட்டத்திற்குள்ளேயே தகவலாளர்கள் (Informers) வைத்திருப்பார்கள் காவல்துறையினர்.
ம்....
ஒவ்வொரு நாளும் Forecast என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் முன்னறிவிப்பு செய்யவேண்டியது நுண்ணறிவுப்பிரிவின் முதன்மைப் பணி.
ம்....
அப்படி இருக்க ஒரே நாளில் 12 கொலைகள் நடக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் நிலை ஏற்பட்டதற்கு யார் காரணமாக இருக்க முடியும் ? என்று கேள்வி கேட்டு நிறுத்தினார் பருந்தார்.
ஒட்டுமொத்தமாகவே காவல்துறைக்குள் நடக்கக்கூடாத உள்ளடி வேலைகள் நடக்கிறது என்று நீங்கள் சொல்வதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது என்றோம்.
உண்மை. சிறைத்துறை DGP யாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் கண்டிப்பான அதிகாரி.
ம்...
அவர் சிறைத்துறைக்குள் கண்டிப்பு காட்டியதாலேயே அவரை மாற்ற ஒரு சூழ்ச்சி நடந்தது என்கிறார்கள்.
ஓஹ்...
முதலமைச்சர் ஜோசப் விஜய் செய்யவேண்டிய முதல் வேலை இப்படி உள்ளடி அரசியல் செய்யும் அதிகாரிகளை மாற்றிவிட்டு காவல் பணியை அர்ப்பணிப்போடு செய்யும் அதிகாரிகளைப் பணியில் அமர்த்தவேண்டும் என்கிறார்கள்.
ம்...சரிதான்...
அதேபோல எந்தெந்தத் துறைகளில் இதுபோன்ற உள்ளடி அரசியல் செய்யும் அதிகாரிகள் இருக்கிறார்கள் என்றும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் அதிகாரிகள் யார் யார் என்றும் கணக்கெடுத்துக் களை எடுக்கவில்லையென்றால் சிரமம்தானாம் என்றார் பருந்தார்.
உளவுத்துறை எனும் நுண்ணறிவுப்பிரிவுத் தலைமை மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லையே என்று கேட்டோம்.
நன்றாக கூர்ந்து கவனித்துப் பாருங்கள் DGP மகேஷ் குமார் அகர்வாலை செயல்பட விடாமல் தடுக்கிறார்கள் என்று ஒரு பேச்சு ஓடியது. அவரிடம் முழு அதிகாரத்தையும் கொடுத்தால் சட்டம் ஒழுங்கு ஒழுங்குக்கு வரும் என்று நாமே கூட பருந்தார் தகவல்களில் சொல்லியிருந்தோம்.
ம்....
இப்படிப்பட்ட நிலையில் ஒவ்வொரு மண்டலமாக நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார் டிஜிபி.
ம்...பார்த்தோம்.
அப்படியிருக்க எங்கே காவல்துறையில் பிரச்சனை என்று புரிந்து கொள்ள முடிகிறதா இல்லையா?! கண்டிப்பான அதிகாரி ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால் போன்ற அதிகாரிகளின் பெயரைக் கெடுக்கும் அளவுக்கு காவல்துறை நிர்வாகம் இருக்கிறதா எனும் கேள்வி எழுகிறதா இல்லயா?
நிச்சயமாக பருந்தாரே...காவல்துறை சரிவர ஒழுங்குடன் செயல்படாமல் யாரோ உள்ளடி வேலைகள் செய்கிறார்கள் என்ற ஐயம் வலுவாகவே எழுகிறது என்றோம்.
கட்டாயக் கையூட்டு வாங்க முடியாத நிலை, அதிகாரிகளின் உள்ளடி அரசியல்...என துறை இரண்டுபட்டால் எதிர்க்கட்சிகளுக்குக் கொண்டாட்டமா இல்லையா ?! என்று கேட்டார் பருந்தார்.
புரிகிறது பருந்தாரே....
வாகன சோதனைகள், தெருக்கள் வழியாக காவல் ரோந்து, கண்காணிப்புகளை அதிகரித்தல் என சந்தேகத்துக்கு இடமான பகுதிகளில் காவல் பணிகளைக் கூர்மையாக்கினால் இந்த அளவுக்கு கொலைகள் நடப்பது குறையும் என்கிறார்கள்.
ம்....
பணம் கொழிக்கும் துறைகளில் தீயணைப்புத் துறையும் ஒன்று என்ற பருந்தாரிடம்,
ஓ...அப்படியா என்று வியப்போடு கேட்டோம்.
ம்...ஒவ்வொரு கட்டடம் கடும்போதும் தீயணைப்புத் துறையின் சான்று வேண்டும். பட்டாசுக் கடை போட்டால் அதற்கும் தீயணைப்புத் துறை அனுமதி வேண்டும்.
புரிகிறது...புரிகிறது பருந்தாரே.....
சென்னை அண்ணாநகரில் மின்மாற்றி (Transformer) இருக்கும் இடத்திலிருந்து 30 மீட்டர் தொலைவில் பட்டாசுக்கடை இருக்கக்கூடாது என்று கூறி 18 உரிமங்களை நிராகரித்த தீயணைப்புத் துறை மின்மாற்றிக்கு அருகிலேயே ஒரு கடைக்கு அனுமதி கொடுத்திருக்கிறது.
அடப்பாவமே....
அந்த 18 கடைக்காரர்கள் தீயணைப்புத்துறை அனுமதி கொடுத்துவிடும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு பட்டாசு ஆர்டர் செய்துவிட்டார்களாம்.
கொடுமை.
கட்டாயக் கையூட்டு இல்லையென்பதால் அதிகாரிகளின் Misbehaviour இப்படி இருக்கிறதாம் என்ற பருந்தார், இதையெல்லாம் வெளிக்கொண்டுவரவேண்டிய பத்திரிகை ஊடகங்கள் அரசியல் செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றன என்பதும் மற்றுமொரு பிரச்சனை என்றார்.
ம்....
பொதுவாக பத்திரிகை ஊடகங்களைத் தனது வசம் வைத்திருப்பது திமுகவின் வழக்கம். தவெக தரப்பில் அப்படி எந்த ஒரு வழக்கமும் இன்னும் உருவாகவில்லை.
ம்....
முதலமைச்சருக்கு மிக நெருக்கமாக இருக்கும் இரண்டுபேர் தவெக ஐடி விங்கை மட்டுமே நம்பி இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்களாம் என்ற பருந்தாரிடம்,
அவர்களுக்கு என்ன தெரியுமோ அதைத்தானே ஆலோசனை கொடுப்பார்கள் என்றோம்.
உண்மைதான் ஜோசப் விஜய் சினிமாவில் இருக்கும்வரை அவர்களின் ஐடி விங், ரீல்ஸ் உத்திகள் செல்லும். ஆனால் ஆட்சி அதிகாரம் என்று வந்துவிட்டால் ஐடி விங் மற்றும் ரீல்ஸ் குழுக்களை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. பத்திரிகை ஊடகங்களின் நியாயமான பலம் ஆட்சியாளர்களுக்குத் தேவை.
ம்...
கடந்த திமுக ஆட்சியின் தொடக்கத்தில் அறிவுஜீவிகளின் ஆலோசனைகள் எல்லாம் கேட்கப்பட்டன என்ற பருந்தாரிடம்....
ஆமாம் ஆமாம் குழுக்கள் கூட உருவாக்கினார்களே...
ஆமாம்...எல்லாம் உருவாக்கினார்கள். ஆனால் ஆறுமாத காலத்திற்கடுத்து எவர் சொன்னாலும் கேட்கவில்லை. சபரீசன் ஒரு புறம், துர்கா ஸ்டாலின் மறுபுறம், உதயநிதி இன்னொருபுறம் என்று பல குழுக்களாகப் பிரிந்து போனதால், இந்த இடைவெளியைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டு அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் தனித்தனியாக, அவரவர் ஒரு பவர் சென்டரோடு தொடர்பு வைத்துக்கொண்டு ஆடக்கூடாத ஆட்டமெல்லாம் ஆடி கடைசியில் மு.க.ஸ்டாலினேயே தோற்கடித்து கட்சியையும் தோற்கடித்து விட்டார்கள்.
ம்...
அப்படி அளவுக்கு அதிகமாக பத்திரிகை ஊடகங்களைத் தவறாகவும் பயன்படுத்தக்கூடாது, அதேவேளை முற்றாகவும் நிராகரித்துவிடக் கூடாது, அதுதான் ஒரு நல்ல ஆட்சியாளருக்கு அழகு என்ற பருந்தார் பார்ப்போம் முதலமைச்சர் ஜோசப் விஜய் படிப்படியாக உறுதியான நடவடிக்கை எடுப்பாரா என்று ! என்று சொல்லிவிட்டு ஜிவ்வென்று வானத்தில் பறந்து மறைந்தார்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)