தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் ஆன்லைனில் பார்ப்பது எப்படி? முழு வழிகாட்டி

தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி? EPIC எண், தேர்தல் ஆணைய இணையதளம், PDF பட்டியல் பதிவிறக்கம் மற்றும் பெயர் சேர்க்கும் வழிமுறைகள்.

Nov 13, 2026 - 11:23
Updated: 13 hours ago
0 30
தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் ஆன்லைனில் பார்ப்பது எப்படி? முழு வழிகாட்டி

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! பெயர்களைச் சரிபார்க்க ஒரு மாதம் அவகாசம் – இறுதிப் பட்டியல் ஜனவரி 4ல் வெளியீடு!

தமிழ்நாட்டில் 2027ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணியின் (Special Summary Revision – SSR) ஒரு பகுதியாக 38 மாவட்டங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

2027 ஜனவரி 1ஆம் தேதியைத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் விவரங்களைத் திருத்துதல் உள்ளிட்டவற்றுக்கு பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்?

வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை ஒவ்வொருவரும் சரிபார்க்க வேண்டும்.

குறிப்பாக,

+ பெயர் மற்றும் வயது சரியாக உள்ளதா?

+ முகவரி மற்றும் தொகுதி விவரங்கள் சரியாக உள்ளனவா?

+ குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளனவா?

+ ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளதா?

+ உயிருடன் இருப்பவர்களின் பெயர்கள் தவறுதலாக நீக்கப்பட்டுள்ளனவா?

+ இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் விவரங்கள் சரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனவா?

என்பதைச் சரிபார்ப்பது அவசியம்.

வாக்காளர் அடையாள அட்டை எண்ணை ONLINE ல் எப்படி சரிபார்ப்பது?

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளம்

electoralsearch.eci.gov.in

செய்முறை:

  1. இணையதளத்தைத் திறக்கவும்.
  2. Search by EPIC என்பதைத் தேர்வு செய்யவும்.
  3. உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை (EPIC Number) உள்ளிடவும்.
  4. State பகுதியில் Tamil Nadu தேர்வு செய்யவும்.
  5. Captcha குறியீட்டை உள்ளிட்டு Search அழுத்தவும்.
  6. உங்கள் பெயர், தொகுதி, வாக்குச்சாவடி விவரங்களைப் பார்க்கலாம்.

+ அடையாள அட்டை எண் தெரியாவிட்டால் Search by Details மூலம் பெயர் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களைக் கொண்டும் தேடலாம்.

எந்தப் படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்?

படிவம் 6: வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்க்கவும், விடுபட்ட பெயரை மீண்டும் சேர்க்கவும்.

படிவம் 7: தவறான அல்லது தகுதியற்ற பதிவுகளை நீக்கக் கோரவும், அதற்கான ஆட்சேபனைகளைத் தெரிவிக்கவும்.

படிவம் 8: பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைத் திருத்தவும், குடியிருப்பு மாறியிருந்தால் முகவரி மாற்றம் செய்யவும்.

18 வயதை 2027 ஜனவரி 1ஆம் தேதிக்குள் நிறைவு செய்யும் தகுதியுள்ள புதிய வாக்காளர்களும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான [https://voters.eci.gov.in](https://voters.eci.gov.in) மூலம் விண்ணப்பிக்கலாம். ECINET செயலி மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும்.

மேலும், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO), வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் ஆகியவற்றை அணுகியும் விண்ணப்பங்களை அளிக்கலாம். சிறப்பு முகாம்களிலும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய கால அட்டவணை

+ வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – நவம்பர் 12, 2026

+ விண்ணப்பங்கள் மற்றும் ஆட்சேபனைகள் அளிக்கும் காலம் – நவம்பர் 12 முதல் டிசம்பர் 11, 2026 வரை

+ விண்ணப்பங்கள் மற்றும் ஆட்சேபனைகள் மீதான தீர்வு – டிசம்பர் 28, 2026க்குள்

+ இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – ஜனவரி 4, 2027

இறுதிப் பணியில் தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதுடன் தேர்தல் ஆணையத்தின் பணி முடிந்துவிடுவதில்லை. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் ஆட்சேபனைகளை முறையாகப் பரிசீலித்து, தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் விடுபடாமல் உறுதிப்படுத்த வேண்டியது தேர்தல் அதிகாரிகளின் முக்கியப் பொறுப்பாகும்.

குறிப்பாக, உயிருடன் இருப்பவர்களை இறந்தவர்களாகப் பதிவு செய்தல், குடியிருப்பில் இருப்பவர்களை இடம்பெயர்ந்தவர்களாகக் குறிப்பிடுதல், ஒரே பெயரைத் தவறுதலாக நீக்குதல் போன்ற பிழைகள் ஏற்படாமல் கவனிக்க வேண்டும்.

வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக உரிமை. அந்த உரிமையைப் பாதுகாக்க, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் மற்றும் விவரங்களைச் சரிபார்ப்பது ஒவ்வொருவரின் முக்கியக் கடமையாகும். இறுதிப் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பே தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User