ஈஷா யோகா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும்! காவல்துறையிடம் சத்யபாமா கோரிக்கை!
ஈஷா யோகா மையத்தில் இருப்பவர்களை மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்கவும், மையத்தை அரசுடைமையாக்கவும் காவல்துறையிடம் சத்யபாமா கோரிக்கை.
ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தில் மதிமயக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளவர்களை மீட்டெடுத்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும், ஈஷா யோகா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும் என அரசயோகி கருவூறார் தமிழ்வேத பாடசாலை நிறுவனர் சத்யபாமா காவல்துறையிடம் நேரில் கோரிக்கை.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்தியபாமா அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் தலைமைச் செயலாளருக்கு மனு அனுப்பியிருந்தார்.
அந்த மனு கோயமுத்தூர் ஆலந்தூர் காவல்நிலையத்திற்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதுகுறித்த விசாரணைக்கு நேரில் வருமாறு சத்யபாமா அம்மையாருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
விசரணைக்கு நேரில் நின்ற சத்யபாமா அவர்கள், "ஏராளமான இளையோர் ஈஷாவின் மதிமயக்கும் செயல்களுக்கு ஆளாகி அங்கே அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். தனது சொந்த மகள்கள் இரண்டுபேரை ஜக்கி வாசுதேவிடம் இருந்து மீட்க பல ஆண்டுகாலமாகப் போராடிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் காமராஜ். அந்த இரண்டு மகள்கள் தங்கள் பெற்றோரை நேரில் வந்து பார்க்கக்கூட ஜக்கி வாசுதேவ் அனுமதிப்பதில்லை. முதலில் அவர்கள் இருவரையும் தாய் தந்தையரைப் பார்க்க ஏற்பாடு செய்யுங்கள். மேலும், அங்கே அடைபட்டுக் கிடைக்கக் கூடியவர்களை மீட்டு மனநல சிகிச்சை அளிக்க வேண்டும். ஈஷா யோகா மையத்தை அரசுடைமையாக வேண்டும் என்றும் கோரியே தான் தலைமைச் செயலாளருக்கு மனு அனுப்பியதாக சத்யபாமா அவர்கள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்ததாக சத்யபாமா அவர்கள் தமிழ் ஊடகத்திடம் தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
1
Dislike
3
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)