கரூர் உயிரிழப்பு: காவல்துறை எச்சரித்திருந்தால் 41 உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் – முதலமைச்சர் ஜோசப் விஜய்
கரூர் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் முக்கிய விளக்கமளித்துள்ளார். காவல்துறை முன்கூட்டியே எச்சரித்திருந்தால் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும், இது அரசியல் சதி என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தவெக தலைவர் ஜோசப் விஜய் கரூர் நகருக்குப் பரப்புரை மேற்கொள்ளச் சென்ற போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் கரூர் நகருக்கு இன்று மக்கள் சந்திப்புக்காக வருகை தந்த முதலைமைச்சர் ஜோசப் விஜய் பேசுகையில், "நான் அன்று கரூருக்குப் பரப்புரைக்காக வந்தபோது கூட்டம் அதிகமாக இருக்கிறது, நிலைமை சரியில்லை, வராதீர்கள் என்று காவல்துறை எச்சரித்து இருந்தால் அந்த உயிர்ப் பலிகளைத் தவிர்த்து இருக்கலாம்" என்று குறிப்பிட்டார்.
முன்னதாக இன்னொரு ஊருக்கு நான் செல்ல முயன்றபோது அந்த மாவட்டக் காவல்துறையினர் எச்சரித்து அக்கூட்டத்தை இரத்து செய்யக் கூறினார்கள்.
அவ்வாறு ஏன் கரூர் காவல்துறையினர் செய்யவில்லை. மாறாக, காவல்துறையினரே என்னை கரூருக்கு அன்று அழைத்து வந்தனர்.
இதில் காவல்துறையினர் நாடகமாடியிருக்கிறார்கள். அதை நான் முழுதும் நம்பி வந்துவிட்டேன்.
நாங்கள் அந்தக் கூட்டத்தில் இழந்தது எங்களின் அன்பு உறவுகள். அதை நாங்கள் எப்போதும் மறக்கமாட்டோம்.
அது ஒரு அரசியல் சதி, அரசியல் சூழ்ச்சி. அதுபோல எதிர்காலத்திலும் யாரும் எண்ணிக்கூடப் பார்க்கக் கூடாது என்பதற்காக ஒரு நினைவுச் சின்னம் தவெக சார்பில் கரூரில் வைக்கப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறிப்பிட்டார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)