தலைமைச் செயலகத்தில் குறைந்த "புரோக்கர்கள்" நடமாட்டம்; தொடரும் அதிகாரி சிண்டிகேட்? அதிமுக - நாதக ஐடி விங் ஏன் சொதப்பியது?

தலைமைச் செயலகத்தில் புரோக்கர்கள் நடமாட்டம் குறைந்ததாகக் கூறப்படும் சூழல், அதிகாரி சிண்டிகேட் செயல்பாடுகள், காவல்துறை மாற்றங்கள், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஐடி விங் செயல்பாடுகள் குறித்து பருந்தார் பகிரும் அரசியல் தகவல்களின் தொகுப்பு.

Jul 10, 2026 - 14:41
Updated: 4 months ago
0 125
தலைமைச் செயலகத்தில் குறைந்த "புரோக்கர்கள்" நடமாட்டம்; தொடரும் அதிகாரி சிண்டிகேட்? அதிமுக - நாதக ஐடி விங் ஏன் சொதப்பியது?

தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்

மேற்குத் தொடர்ச்சி மலைச் சாரல்...சிலுசிலுவெனக் காற்று. முகாம் அலுவலகத்தில் ஆசிரியர் குழுவினர் எல்லோரும் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தோம். சூடான ராகி பகோடா, சுடச் சுடச் சிறுவாணித் தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம்.

ஓசையே இல்லாமல் வந்தமர்ந்தார் பருந்தார்.

நாங்க இங்க இருக்கிறது எப்படித் தெரியும் என்றோம்.

நீங்க எங்க போறீங்க, என்ன செய்யறீங்க அப்டிங்கறதுல இருந்து எல்லாம் எனக்குத் தகவல் வந்துடும் என்றார் பருந்தார்.

அது சரி...உங்க வேலையே அதுதானே என்று சொல்லிவிட்டு அவருக்கும் தேநீரும் பகோடாவும் கொடுத்தோம்.

பகோடாவை ரசித்து மென்ற கழுகார் அவ்வப்போது தேநீரையும் உறிஞ்சிக் கொண்டே ஆரம்பித்தார்.

"தலைமைச் செயலகத்துல முதலமைச்சர் நேரத்துக்கு வந்து நாற்காலில அமர்ந்து கொள்ளத் தொடங்கியதிலிருந்து அரசுப் பணியாளர்களும் நேரத்துக்கு வந்து பணிகளைச் செய்கிறார்களாம். அதிலும், குறிப்பா அந்த அமைச்சர்கிட்ட இந்த வேலையை முடிச்சுத் தர்றேன்....இந்த அமைச்சர்கிட்ட இந்த வேலையை முடிச்சுத் தர்றேன் அதுக்கு இவ்வளவு சர்வீஸ் சார்ஜ் ஆகும், இதுக்கு இவ்வளவு ஆகும்னு "புரோக்கர்" வேலை செஞ்ச ஆட்கள் எல்லாம் தலைமைச் செயலக வட்டாரத்துலயே காணோம். மொத்தத்துல தலைமைச் செயலகம் கொஞ்சம் நல்லாவே தூய்மையாகியிருக்கு.

ஆமாம்...நீங்க இப்படி சொல்லிட்டு போயிடுவீங்க உடனே....எங்களை ரூட் மாஃபியா, தவெக ஆதரவாளர்கள்னு உருட்டுவாங்க என்றோம்.

எல்லோரையும் எல்லா நேரங்களிலும் திருப்திப் படுத்தவும், புகழ்ந்துக்கிட்டே இருக்கவும் நீங்க என்ன பணத்துக்கு வாசிக்கும் பஜனைக் குழுவா நடத்தறீங்க... பத்திரிகைதானே நடத்துறீங்க. மக்களுக்கு என்ன நல்லதோ, நல்ல செய்தியோ அதைத் தயங்காம சொல்றதுதானே உங்க தமிழ் ஊடகத்தின் சிறப்பு என்று நறுக்கென்று கூறிவிட்டு மேற்கொண்டு பேசத் தொடங்கினர்.

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஓரங்கட்டப்பட்ட கலைஞரின் - திமுகவின் விசுவாச அதிகாரிகள் சிலருக்கு இந்நாள் முதலமைச்சர் ஜோசப் விஜய் மீண்டும் முக்கியத்துவம் கொடுத்து பணிகளில் அமர வச்சிருக்கார்.

எதே...புரியலை. கலைஞர் - திமுக விசுவாசிகளை எதுக்கு ஸ்டாலின் ஓரங்கட்டனும் ?! என்று கேள்வி கேட்டோம்.

மங்குனி...மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அவர் எங்க ஆட்சி செஞ்சார்....அதிகாரிகள்தானே ஆட்சி செஞ்சாங்க...தலைமைச் செயலகத்துல "தோன்றும் நிலவு" அதிகாரியும், காவல்துறையில் "ஆசி கூறும்" அதிகாரியும்தானே ஆட்சி அதிகாரம் செஞ்சாங்க என்றார் பருந்தார்.

ஆமாம் ஆமாம் இன்னமும் அவங்க பெயர் அடிபடுதே...என்று எடுத்துக் கொடுத்தோம்.

ஆமாம், அந்தத் தோன்றும் நிலவு விசுவாச அதிகாரி போடுவதுதான் போஸ்டிங். அப்படி அவர் தூக்கி ஓரம் கட்டிய அதிகாரிகளில் பெரும்பாலானாவர்கள் கலைஞர் காலத்திலிருந்து திமுகவுக்கு உண்மையான விசுவாசம் கொண்ட அதிகாரிகள் என்ற கூறிய பருந்தாரை இடை மறித்து....

அடக் கடவுளே...முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில திமுகவுக்கு எதிராகவே இப்படியெல்லாம் நடந்திருக்கா என்று அதிர்ச்சியுடன் கேட்டோம்.

ஆமாம், அந்த ஓரம்கட்டப்பட்ட அதிகாரிகள் திமுகவுக்கு விசுவாசமா இருந்தலும்கூட எந்த ஆட்சி வந்தாலும் நேர்மையா, ஒழுங்காகப் பணி புரியும் அதிகாரிகள் என்று பருந்தாரே சான்றிதழ் கொடுத்தார்.

ஆமாம், ஒவ்வொரு ஆட்சியிலும் சில அதிகாரிகள் போஸ்டிங் வாங்கி வந்திருப்பாங்க. அந்த நன்றி உணர்ச்சியில் இருப்பாங்க. அதுக்காக ஒரேடியா கட்சிக்காரங்க போல செயல்பட மாட்டாங்க. அது இயற்கைதானே.

சரியாச் சொன்ன...நான் சொன்ன அதிகாரிகளும் அப்படிப்பட்டவங்கதான். அதைத்தான் விசுவாச அதிகாரிகள் என்று குறிப்பிட்டேன். அதுக்காக நல்லா வேலை செய்கிற அதிகாரிகளை ஓரம் கட்டினா அரசு நிர்வாகம் என்னாகும் ?

ஆமாம்...சரிதான் 

இப்படித்தான் ஆட்டம் போட்டிருக்கு அந்த சிண்டிகேட் டீம். அப்படிப் போன ஆட்சியில் ஓரம்கட்டப்பட்ட அறிஞர் அண்ணாவின் பெயர் கொண்ட மக்கள் தொடர்புத் துறை உயர் அதிகாரி ஒருவருக்கு இப்போ அவர் தகுதிக்கும், நேர்மைக்கும் மதிப்பு அளித்து பணி கொடுக்கப்பட்டிருக்கு. இது ஒரு எடுத்துக்காட்டுதான். இப்படித் திமுக ஆட்சியிலேயே திமுகவுக்கு உண்மையாக நன்றியுடன் இருக்கும் அதிகாரிகளைக்கூட ஓரம் கட்டியது  அந்த சிண்டிகேட்.  இந்த சிண்டிகேட்டுக்குத் தலைவரே அந்த தோன்றும் நிலவு அதிகாரிதான். திமுக தோல்விக்கு என்ன காரணம்னு ஊரெல்லாம் ஆட்களை அனுப்பி ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகம் பக்கமும் அனுப்பி ஆய்வு செஞ்சிருந்தா இன்னும் முக்கியமான தரவுகள் கிடைச்சிருக்கும். அதைவிடக் கொடுமை என்னன்னா...ஸ்டாலின் ஆட்சியில் ஆட்டம் போட்ட அந்த சிண்டிகேட்  அதிகாரிகளில் சிலர் இன்னுமும் ஜோசப் விஜய் ஆட்சியிலும் முக்கியமான பதவிகளில் இருக்காங்களாம்.

ஓ.....

அந்த சிண்டிகேட் அதிகாரிகள் இப்பவும் தங்களோட துறை சார்ந்த சில நல்ல செயல்களை, கோப்புகளை வேண்டுமென்றே கிடப்பில் போட்டு வைக்கிறாங்களாம். அப்படிப் போட்டா...உடனே மக்களுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் மீது கடுப்பாகும்ல அதுக்குதான். 

ஓ...இது புதுசா இருக்கே.

அப்படிதான் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் BAPASI க்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதமே தர வேண்டிய 75 லட்சம் ரூபாய் மானிய / உதவித் தொகையை இப்போ வரைக்கும் கொடுக்காம வச்சிருக்காராம் அந்தத் துறைச் செயலாளர் "நிலவு மைக் மோகன்" என்ற பருந்தரிடம்,

ஓ...ஏற்கனவே புத்தகங்கள் விற்பனை பெருசா இல்லாத இந்தக் காலகட்டங்கள்ல அவங்க தலையில ஏன் கை வைக்கனும் ? என்று பரிதாபப் பட்டோம்.

தொடர்ந்து பேசிய பருந்தார், "இப்படிப் பல இடங்கள்ல நுட்பமா வேலை செய்யுதாம் அந்த சிண்டிகேட் அதிகாரிகள் டீம். தலைமைச் செயலகத்துல இப்படின்னா...காவல்துறையிலும் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்குன்னு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு.

அது என்ன....

பொதுவா ஒரு அரசுத் துறையில் குறிப்பாக காவல்துறையில் ஒரே பொறுப்புல ஒரே அதிகாரியை மூன்று வருடத்திற்கு மேல வச்சிருக்க மாட்டாங்க. காரணம் அந்த அதிகாரி எல்லோருக்கும் நன்கு பழக்கம் ஆகிடுவார் அதன்பிறகு அவரை வைத்து சமூக விரோதிகள் காரியம் சாதிக்க ஆரம்பிச்சுடுவாங்க.

ஆமாம்...அதற்காகத்தானே தேர்தல் நேரத்தில் கூட பாதுகாப்புக்குத் துணை இராணுவப் படையைக் கூட்டிட்டு வராங்க என்று நினைவு படுத்தினோம்.

ஆமாம் சரியான எடுத்துக்காட்டுதான் இது. ஆனா மத்தியக் குற்றப்பிரிவு உள்ளிட்ட சில காவல்துறை பிரிவுகளில் எட்டு வருடம் கடந்தும் அதே பொறுப்புல சில அதிகாரிகள் அமர்ந்து இருக்காங்களாம். திண்டுக்கல்லில் ஒரு பெண் அதிகாரி அங்கேயே செட்டில் ஆகிட்டாராம்.

சுத்தம்.....

ஆமாம், இதுபோன்ற கண்டுகொள்ளப்படாத சில பிரச்சனைகளில் அரசும், உயர் அதிகாரிகளும் கவனம் செலுத்தனும்னு பேசிக்கிறாங்க சமூக செயற்பாட்டாளர்கள்.

செலுத்த வேண்டியதுதான் என்றோம்.

அதிமுக ஐடி விங் மேல கடுப்பாகியிருக்காறாம் எடப்பாடியார் என்று அடுத்த தலைப்புக்குத் தாவினார் பருந்தார்.

ஆமாம் அதைத்தான் வெளிப்படையாகவே சொல்லியிருக்காரே என்று கேட்டோம்.

அதிமுக மட்டுமல்ல எல்லாக் கட்சிகளுமே இப்போதான் ஐடி விங் பக்கம் திரும்பிப் பார்க்கிறாங்க. சுவரொட்டி, மேடைப்பேச்சு, விளம்பரங்கள் மட்டுமே அரசியல் பரப்புரை சாதனங்கள் அப்படின்னு நினைச்சுட்டு இருந்தாங்க அவங்க  என்ற பருந்தாரிடம்

ஆமாம் எங்களுக்கே அந்த டவுட் உண்டு. அது சமூக ஊடகப் பிரிவுதானே தவிர ஐடி விங் அல்லவே என்று சொன்னோம்.

ஆமாம், ஐடி விங் அப்படின்னாலே சமூக ஊடகங்கள்ல பதிவு போடறது, தங்கள் கட்சி குறித்து யாராவது ஏதாவது எழுதினா அந்தப் பதிவுகளில் போய் ஆபாசமா திட்டுறது, கெட்ட சொற்களால் எழுதுவது மட்டும்தான் ஐடி விங் வேலைனு நினைச்சுட்டாங்க இந்தக் கட்சிக்காரங்க

ஆமாம்....

ஆனா, அலைபேசிகளை வைத்து சமூக ஊடகத் தொழில் நுட்பங்களை வைத்து துல்லியமாக மேற்கொண்ட பரப்புரைகள்தான் தவெவுக்குக் கை கொடுத்திருக்குன்னு இப்பதான் இந்தக் கட்சிகளுக்கு புரியத் தொடங்கி இருக்கு என்ற பருந்தாரிடம்,

தவெக வெற்றி பெற்ற உடேன இந்தத் தொழில் நுட்ப மாயா ஜாலம் பற்றித்  தமிழ் ஊடகம் சிறப்பு கட்டுரை வெளியிட்டதே என்று நினைவூட்டினோம்.

ஆமாம், அதுதான் தமிழ்நாடு செய்திப் பத்திரிகை ஊடகங்கள்ல வெளிவந்த இந்த நுட்பத்தைக் கோடிட்டுக் காட்டிய முதல் கட்டுரை, பாராட்டுகள் என்று புகழ்ந்த பருந்தார், அதிமுக மட்டுமல்ல நாம் தமிழர் கட்சியினரும் இதே தவறைச் செய்தாங்க என்றவரிடம்....

ஆனா நாம் தமிழர் கட்சி சமூக ஊடகப் பிரிவு ஒரு காலத்துல திமுக சமூக ஊடகப் பிரிவினரைத் திணறத் திணற அடிச்சாங்களே என்று நினைவு படுத்தினோம்.

உண்மைதான்....திமுக சமூக ஊடகப் பிரிவு சம்பளத்துக்கு வேலை செய்த ஆட்கள். ஆனா, நாம் தமிழர் சமூக ஊடகப் பிரிவு என்பது தங்கள் சொந்த செலவுல டேட்டா போட்டு உழைத்த உணர்வாளர்களைக் கொண்ட பிரிவு. அப்பவெல்லாம் காலையில் ஒரு "ஹேஷ் டேக்" போட்டுத் தொடங்கினா அது மதியமே இந்தியா அளவுல ட்ரெண்ட் ஆகிடும். ஆனா, அப்படித் தீயாக உழைத்துப் பதிவிட்ட இளையோர் சிலரை அப்போதய திமுக அரசு கைது செஞ்சவுடனே அன்றிலுருந்து நாம் தமிழர் சமூக ஊடகப் பிரிவு பின்தங்கிடுச்சு.

சரி...ஆளும் திமுக குறித்து எதிர்த்து எழுத வேண்டாம், பதிவிட வேண்டாம்....அதுக்காகத் தமிழ்த் தேசியம் குறித்தும், 14 ஆண்டுகளாக சீமான் பேசுனது குறித்துமா அதேபோல ஹேஷ்டேக் போட்டு பதிவிட்டிருக்கக் கூடாது என்று கேட்டோம் நாம்.

செய்திருக்கலாம்...ஆனா என்னன்னு தெரியல....அந்தக் கைது நடவடிக்கைகளுக்குப் பிறகு நாம் தமிழர் சமூக ஊடகப் பிரிவு மொத்தமாகவே சுணங்கிப்போயிடுச்சு என்றார் பருந்தார்.

இதைச் சொன்னா அதுக்கும் வந்து தமிழ் ஊடகத்தையும் உங்களையும் கெட்ட சொற்களில் திட்டுவாங்க என்றோம் நாம்.

சிரித்தவாறே பருந்தார்...."இதுக்கு மட்டும் கத்துதா அந்தப் பல்லி" என்பது போல அந்த அளவுக்குத்தான் அவங்க அரசியல் பக்குவம் என்று சொல்லிவிட்டு, டேக் ஆஃப் ஆகி மேகமூட்டத்தினுள் மறைந்து போனார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User