திமுக ஆட்சியில் 4,641 கோயில்களில் குடமுழுக்கு: தங்கம், நவரத்தினங்கள், கோயில் நிலங்களின் நிலை என்ன? நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் எழும் அடுக்கடுக்கான கேள்விகள் !

திமுக ஆட்சியில் 4,641 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டதாக சேகர்பாபு தெரிவித்த நிலையில், பழமையான கோயில்களின் புனரமைப்பில் Heritage/SLEC வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டனவா? கோயில் தங்கம், நவரத்தினங்கள், நிலங்கள் குறித்த ஆவணங்கள் என்ன சொல்கின்றன? தமிழ் ஊடகம் புலனாய்வு – பகுதி 1.

Sep 23, 2026 - 10:37
Updated: 17 hours ago
0 30
திமுக ஆட்சியில் 4,641 கோயில்களில் குடமுழுக்கு: தங்கம், நவரத்தினங்கள், கோயில் நிலங்களின் நிலை என்ன? நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் எழும் அடுக்கடுக்கான கேள்விகள் !

- அதிர வைக்கும் பின்னணி !

தமிழ் ஊடகம் புலனாய்வுச் செய்தியாளர் குழுவின் அதிரடி ஆய்வு ! - பகுதி 1

"கடவுள் இல்லை, கடவுளை நம்பாதே, கடவுளைப் பரப்பியவன் காட்டுமிராண்டி" எனும் பெரியார் இராமசாமியின் முழக்கங்களை அடி நாதமாகக் கொண்டு செயல்படும் திமுக கடந்த, மு..ஸ்டாலின் ஆட்சியில் கோயில் கோயிலாக ஓடிச்சென்று 4,641 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்தது. அந்தக் கட்சி சார்பில் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த சேகர்பாபு காவி வேட்டி கட்டிக்கொண்டு "பத்திப் பரவசநிலை" அடைந்தவர் போல சுற்றிக்கொண்டிருந்தார்.

பொதுவாக, பழைய கோயில்களைப் புதுப்பித்து, வண்ணப்பூச்சுகள் பூசி புதுமைப்படுத்தி, குடமுழுக்கு செய்கிறார்கள்தானே, அது நல்லதுதானே அதில் என்ன தவறு ? எனும் கேள்வி எழலாம்.

குடமுழுக்கு செய்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் பழைய கோயில்களை இடித்து, மாற்றிக் கட்டுவதில்தான் இருக்கிறது பெரும் பஞ்சாயத்து.

தமிழ்நாட்டில் சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கோயில்கள் உள்ளன. இவை எதுவும் 100 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டவை அல்ல. பெரும்பாலான கோயில்கள் 1000 முதல் 2000 ஆண்டுகள் பழமையானவை.

மேலும், கோயில்கள் என்பவை வெறும் கற்கட்டடம் மட்டுமே அல்ல, அவை தமிழரின் வரலாற்று அடையாளத்தைச் சுமந்து நிற்பவை. அதிலும் குறிப்பாக தமிழர்களின் கட்டுமானக் கலை, அளவீடுகள், நுட்பம், சிற்பம், ஓவியம், சிலை வடிவமைப்பு, கோயிலுக்காக வழங்கப்பட்ட நிலங்கள் என கோயில் தொடர்பில் விலைமதிக்க முடியாத சொத்துக்களும், அரும்பொருட்களும் இணைந்தவை.

இதை போகிற போக்கில் இடித்துவிட்டு மாற்றிக் கட்டுவது, பழமையை, கலைச் சின்னங்களை, வரலாற்று அடையாளங்களை இடித்துவிட்டு புதிதாகக் கட்டுவது என்பது ஆயிரக்கணக்கான ஆண்டு தமிழர் அடையாளங்களை, வரலாற்றைச் சிதைப்பது ஆகும். அவை தொடர்புடைய சொத்துக்கள் களவாடப்படுவதற்கும் பெரிய வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.

இதன் காரணமாகவே, கடந்த 2015-16 காலகட்டங்களில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு கோயில்களைப் பாதுகாக்கவும், இயற்கையாகச் சிதிலமடைந்த கோயில்களைப் பழமை மாறாமல் பாதுகாக்கவும் "பாரம்பரியக் குழு - Heritage Committee" ஒன்றை அமைக்க ஒரு வழக்கைத் தாமாக முன்வந்து எடுத்து விசாரித்தது.

கோயில்களில் நடைபெறும் திருப்பணி என்ற பெயரில் பழமையான கல் கட்டுமானம், சிற்பம், கல்வெட்டு, சுவரோவியம் போன்றவை சேதமடைவதைத் தடுப்பதற்கு தொல்லியல் மற்றும் பாரம்பரியப் பாதுகாப்பு நிபுணர்களின் ஆய்வு இல்லாமல் திருப்பணி நடத்தக்கூடாது என்ற பாதுகாப்பு முறை இதன் தொடர்ச்சியாக வலுப்பெற்றது.

அதன் தொடர்ச்சியாக, Suo Motu W.P.No.574 of 2015 மற்றும் W.P.(MD) No.24178 of 2018 உள்ளிட்ட வழக்குகளில் நீதிபதிகள் R. மகாதேவன் மற்றும் P.D. ஆதிகேசவலு அமர்வு 07.06.2021 அன்று சுமார் 225 பக்கங்களைக் கொண்ட விரிவான தீர்ப்பை வழங்கியது.

தமிழகத்தின் கோயில்கள், கோயில் நிலங்கள், சிலைகள், சிற்பங்கள், கல்வெட்டுகள், சுவரோவியங்கள் உள்ளிட்ட பாரம்பரியச் சொத்துகளைப் பாதுகாப்பதற்கான விரிவான கட்டமைப்பை இந்தத் தீர்ப்பு உருவாக்கியது.

அதன்படி, 17 உறுப்பினர்களைக் கொண்ட "பாரம்பரிய ஆணையம் - Heritage Commission: அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

அதில் ASI அதாவது இந்தியத் தொல்லியல் துறையின் ஒரு பிரதிநிதி, மாநில தொல்லியல் துறையின் பிரதிநிதி, புகழ்பெற்ற வரலாற்றாளர் அல்லது மானுடவியலாளர், பொதுப்பணித்துறை - PWD Structural/Conservation மற்றும் Architectural Wing பிரதிநிதிகள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் - HR&CE Joint Commissioner நிலைக்குக் குறையாத அதிகாரி, தகுதிபெற்ற ஸ்தபதி, இரண்டு ஆகம/சில்ப சாத்திர நிபுணர்கள், இரசாயன ஆய்வு வல்லுநர் - chemical analyst போன்ற நிபுணர்கள் இடம்பெற வேண்டும்; UNESCO பிரதிநிதியைச் சேர்ப்பதையும் பரிசீலிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியது.

இதன் பொருள் Heritage Committee என்பது HR&CE அதிகாரிகள் மட்டும் அமர்ந்து முடிவெடுக்கும் குழு அல்ல.

தொல்லியல் + கட்டிடப் பாதுகாப்பு + பாரம்பரியக் கட்டிடவியல் + ஸ்தபதி + ஆகமம் + வரலாறு போன்ற பல துறை நிபுணத்துவம் ஒன்றிணைய வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் நோக்கம்.

பாரம்பரிய ஆணையத்திற்கு (Heritage Commission-க்கு) அடுத்ததாக மாநில அளவிலான வல்லுநர் குழு (State Level Expert Committee-SLEC)-ஐ மறுசீரமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதில்:

கட்டுமான வல்லுநர் (Structural Expert), தொல்லியல் வல்லுநர் (Archaeological Expert),

பராமரிப்புப் பாதுகாப்பு வல்லுநர் (Conservation Expert,) பாரம்பரிய ஸ்தபதி (Traditional Stapathi), வரலாற்று, கல்வெட்டு, ஓவிய, நுண்கலை வல்லுநர்கள் (History/Epigraphy/Iconography/Fine Arts நிபுணர்), இரண்டு ஆகம வல்லுநர்கள் (Agama Experts), இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) மற்றும் பொதுப்பணித்துறையினர் (PWD) பிரதிநிதிகள் இருக்க வேண்டும்.

District Level Committees பரிந்துரைக்கும் கோயில் பழுது/புதுப்பிப்புப் பணிகளை ஆராய்ந்து அனுமதி வழங்கும் பொறுப்பு State Level Expert Committee-க்கு வழங்கப்பட்டது.

100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களுக்கு முக்கியமான பாதுகாப்பு

சேகர்பாபு மற்றும் திமுகவினருக்கு 2021ம் ஆண்டு நீதிபதிகள் R. மகாதேவன் மற்றும் P.D. ஆதிகேசவலு அமர்வு கொடுத்த மேற்கண்ட தீர்ப்பு என்ன இடையூறாக இருந்ததோ தெரியவில்லை, அதனை எதிர்த்து 2026 ம் ஆண்டு மறுசீராய்வு மனு தாக்கல் செய்தர்.

அதில்,

"தமிழ்நாடு பாரம்பரிய ஆணையச் சட்டத்தின்" (Tamil Nadu Heritage Commission Act) கீழ் கோயில்கள் வரவில்லை என்றும், இந்து சமய அறநிலையத்துறை (HR&CE Act) தனிச்சட்டத்தின் கீழ்தான் கோயில்கள் வருகின்றன" என்று வாதிட்டது.

அதனை விசாரித்த நீதிமன்றம் மீண்டும் இவ்வாறு தெளிவு படுத்தியது:

"பாரம்பரிய ஆணையம் (Heritage Commission) என்பது கோயில்களுக்கு மட்டும் அல்ல; தமிழகத்திலுள் "கலாச்சார / பாரம்பரிய மதிப்புக் (cultural/heritage value) கொண்ட அனைத்து கட்டமைப்புகளுக்கும் உரியது". என்றும்

எனவே HR&CE-ன் State Level Committee-ஐ அப்படியே “State Heritage Commission” ஆக மாற்ற முடியாது. அதே நேரத்தில் State Level Expert Committee தனியாகத் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

மேலும் கோயில் பணிகளுக்கான வழங்குதல்கள் (sanction) HR&CE Act மற்றும் அதன் விதிமுறைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்றும் கூறியது.

இந்த மறுசீராய்வு மனு மீதான 2026 ஜூன் தீர்ப்பின்படியும்,

"100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களில் புதுப்பித்தல் மற்றும் மாற்றிக் கட்டுதல் (renovation/alteration) பணிகளை "மாநில அளவிலான வல்லுநர் குழுவினரின்" (SLEC) அனுமதி பெற்ற பின்னரே மேற்கொள்ள வேண்டும்" என்று W.P.No.574/2015 தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது

எனவே,

“திருப்பணி செய்கிறோம்”

“குடமுழுக்கு நடத்துகிறோம்”

என்று கூறி பழமையான கோயிலின் கட்டுமானத்தில் விருப்பம்போல் மாற்றம் செய்யக் கூடாது என்பதே இந்தத் தீர்ப்புகளின் அடிப்படை.

மேலும், தலைமை நீதிபதி அவர்கள் இந்தப் பிரச்சனையைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த காரணமே, "இந்தத் தீர்ப்புகளுக்கு முன்பு தமிழ் நாட்டின் 100 க்கணக்கா பழமையான கோயில்கள் எந்த விதிமுறைகளும் பின்பற்றாமல் இடித்து மாற்றிக் கட்டப்பட்டன என்பதால்" மனம் வருந்தியே இத்தகைய ஒரு வழக்கை முன்னெடுத்தார்கள்.

ஆனால், அதுபற்றிய எந்த ஒரு அடிப்படை உணர்வும் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடமோ, அறநிலையத்துறையிடமோ இல்லை என்பது அதிர்ச்சி தரும் தகவல்.

தீர்ப்பின் மற்றொரு முக்கிய அம்சம்

மகாதேவன்–ஆதிகேசவலு தீர்ப்பின் மற்றொரு முக்கிய அம்சம் "பழமைப் பாதுகாப்பு" (conservation).

கோயில்களின் :மறுசீரமைப்பு"(restoration) பணிகளில் அறிவியல் நுட்பங்கள் (scientific technology) பயன்படுத்தப்பட வேண்டும்.

கட்டிடங்களைச் சுத்தப்படுத்த "மணல் வெடிப்பு" (sand blasting) தவிர்க்கப்பட வேண்டும் என்றும், UNESCO குழு சுட்டிக்காட்டிய ஆகம மற்றும் சில்ப சாஸ்திர மீறல்களால் ஏற்பட்ட குறைபாடுகளைச் சரிசெய்து முடிந்தவரை பழைய நிலையை மீட்டெடுக்க முயற்சிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படைத் தத்துவம்:

புதுப்பித்தல் அல்ல பழமைப் பாதுகாப்பே முதன்மை !

அதவது

Renovation அல்ல — Conservation முதன்மை.

அதாவது பழைய ஒன்றை அகற்றிவிட்டு புதிதாக அழகுபடுத்துவது "பாரம்பரிய பாதுகாப்பு"

(heritage conservation) அல்ல.

கோயில்களுக்கு மட்டுமல்ல இந்தத் தீர்ப்புகள்

நீதிபதிகள் R. மகாதேவன் மற்றும் P.D. ஆதிகேசவலு அமர்வு கொடுத் தீர்ப்புகள் கோயில்களைப் பாதுகாக்க மட்டுமே அல்ல, அது 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட அனைத்து நினைவுச் சின்னங்களுக்கும் பொருந்தும் என்பது உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய ஒன்று.

இப்படிப்பட்ட நிலையில் திருவாளர் சேகர் பாபு தலைமையிலான முந்தைய இந்து சமய அறநிலையத்துறை 4,641 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்து முடித்ததாகக் கூறுகிறது.

இந்தக் குடமுழுக்குக்கு முன்பு, கோயில்களில் புதுப்பித்தல், மறுசீரமைத்தல், பாதுகாத்தல் நிலையில், பாரம்பரிய ஆணையம், மாநில அளவிலான வல்லுநர் குழு ஆகியோரின் அனுமதி பெற்றதா என்கிற கேள்வியை விட அவர்களின் வழிகாட்டல் முறையாகப் பின்பற்றப்பட்டதா எனும் கேள்வி இப்போது முதன்மையாக எழுகிறது.

மேலும், கோயில் புனரமைப்பு, மறுகட்டமைப்பு நிலைகளில் பாரம்பரிய ஆணையம் மற்றும் மாநில அளவிலான வல்லுநர் குழுவின் கண்காணிப்புகளில் அவை நடந்ததா ?

அல்லது 4,641 கோயில்களிலும் தாங்கள் கொடுத்த வழிகாட்டல்கள் அடிப்படையில் பணிகள் நடைபெற்றனவா என இந்தக் குழு மறு ஆய்வு செய்ததா ?

எனும் கேள்விகள் வலுவாக எழுகின்ற.

நமது தமிழ் ஊடகம் புலனாய்வுச் செய்தியாளர் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில் அது போன்ற மறுஆய்வு எந்தக் கோயில்களிலும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

அதேபோல, கோயில்களுக்குக் காணிக்கையாகப் பெறப்பட்ட சுமார் 3,000 கிலோ தங்க ஆபரணங்கள் உருக்கப்பட்டு கட்டிகளாக மாற்றப்பட்டதும் சேகர் பாபு தலைமையில் நடைபெற்று முடிந்திருக்கிறது.

எத்தனை கிலோ மற்றும் கிராம் தங்கம் இருந்தன?

அவை உருக்கப்பட்டபோது சேதாரம் எவ்வளவு ?

அந்த ஆபரணங்களில் இருந்த நவரத் கற்கள் எத்தனை ? அவை எங்கே ?

இந்த ஒவ்வொரு நகையும் உருக்கப்படுவதற்கு முன்னதாக படம் எடுக்கப்பட்டனவா ?

எனும் பல கேள்விகளும் அடுத்தடுத்து எழுகின்றன.

தமிழ்நாடு முழுவதும் 4,641 கோயில்களில் புனரமைப்பு, மறுகட்டமைப்பு, குடமுழுக்கு செய்த சேகர்பாபு செயல்பாடுகளில் பெருத்த சந்தேகம் எழுந்துள்ள நிலையில், எடுத்துக்காட்டாக  திருச்சியைச் சுற்றியுள்ள ஸ்ரீரங்கம், குணசீலம், திருப்பைங்கீலி உள்ளிட்ட கோயில்கள் மீது இன்றுவரை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு காண்பித்து வரும் அதீத அக்கறை அதிரவைக்கும் பல சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந்தக்கோயில்களுக்குச் சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பழமையான கோயில்களின் கட்டுமானத்தின்போது கோயில் கருவறைக்குக் கீழ், கோயில் கதவு நிலைகளுக்குக் கீழ் விலைமதிக்க முடியாத வைரம் உள்ளிட்ட நவரத்ன கற்களைத் தங்கக் காசுகளைப் போட்டு அதன் மீது கட்டுமானம் கட்டுவது வழக்கம்.

திமுக ஆட்சியில் பழமையான ஆயிரக்கணக்கான  கோயில்கள் பல இடித்து மாற்றிக் கட்டப்பட்டன என்றால் அவற்றின் கீழே இருந்த விலை மதிக்க முடியாத அந்த கற்கள், காசுகள் எங்கே ?!

அவை ஆவணப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதா ?! 

எனும் அடுத்த கேள்வி எழுகிறது.

இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், இவற்றில் பெரும்பாலான கோயில்கள் பரம்பரை அறங்காவலர் குழுவினரால் பராமரிக்கப்படுகின்றன. எனவே, அவர்களை அமைச்சர் கே.என். நேரு, சேகர் பாபு போன்றவர்கள் எளிதில் வளைத்துவிட முடியும் எனும் அபாய நிலையும் நினைவில் கொள்ளத்தக்கது.

ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முதலில் 4,641 கோயில்களிலும் நீதிமன் உத்தரவுப்படி புனரமைப்பு, புதிப்பித்தல், மறுகட்டமைப்பு, பாதுகாத்தல் நடைபெற்றுள்ளதா என்றும், அவை பாரம்பரியக் குழு மற்றும் மாநில அளவிலான வல்லுநர் குழு வழிகாட்டல்கள்படி நடைபெற்றனவா ?

அவற்றுக்கான ஆவணங்கள் என்ன ?

தங்கம், வைரம், வைடூரிய கற்களின் நிலை என்ன ?

பல ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களின் நிலை என்ன என்று ஆய்வு செய்ய ஒரு சுயாதீன நேர்மையான விசாரணை ஆணையத்தை அமைத்து ஆய்வு செய்து அறிக்கை பெற்று மக்களுக்கு அறிவித்தால் தவெக அரசின் வாழ்நாள் சாதனையாக அது வரலாற்றில் இடம்பெறும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User