ஜெம் வீரமணி வழக்கு: கணேசன் செல்போனில் சிக்கிய 50 காணொலிகள்; ₹70 கோடி பணப்பாதை, நில விற்பனை மர்மம்!
ஜெம் வீரமணி POCSO வழக்கில் முன்னாள் ஊழியர் கணேசன் கைது. செல்போனில் கிடைத்ததாகக் கூறப்படும் காணொலி, நில விற்பனை, ₹70 கோடி பணப்பாதை மற்றும் வழக்கை ஒடுக்க பணம் பயன்படுத்தப்பட்டதா என்ற விசாரணையின் பின்னணி.
-தமிழ் ஊடகம் புலனாய்வுச் செய்தியாளர் குழு
ஜெம் கிரானைட் வீரமணியின் சிறுமிகள் பாலியல் வழக்கு என்பது ஏதோ ஒரு வயதானவர் ஒரு சிறுமியைப் பாலியல் ரீதியாக அணுகினார் என்று முடிவு செய்யக்கூடிய வழக்கு அல்ல. தோண்டத் தோண்ட அடுக்கடுக்காக வெளிவரும் கற்பனை கூட செய்யமுடியாத "திட்டமிட்ட சிறுமிகள் பாலியல்" படுபாதகக் குற்றங்களாக இருக்கின்றன.
இதில் ஜெம் வீரமணி தனக்கான பாலியல் வக்கிரத்தைத் தணித்துக் கொள்வது மட்டுமல்லாமல் சிறுமிகளை வேறு சிலருக்கு இரையாக்கியிருப்பாரோ என்கிற கோணத்திலும் விசாரணை செல்லலாம் என்று தெரிகிறது.
அமெரிக்காவின் எப்ஸ்டீன் என்பவர் சிறுமிகளை உலகின் பல பெரிய மனிதர்களுக்கு இரையாக்கினார் என்றும் அதற்கான காணொலி, புகைப்பட ஆதாரங்கள் வெளிவந்தது போல ஜெம் வீரமணி தொடர்பில் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 50 காணொலிகளில் யார் யார் தொடர்பில் உள்ளார்களோ என்பது விசாரணையின் முடிவில்தான் தெரியவரும்.
இதற்கிடையில், வீரமணி நிறுவனத்தில் சுமார் 23 ஆண்டுகள் பணியாற்றிய நேற்று கைது செய்யப்பட்ட, கணேசன் என்பவற்றின் அலைபேசியை ஆராய்ந்த காவல்துறையினர் அதிலிருந்து சுமார் 50 காணொலிகளைக் கைப்பற்றி இருக்கிறார்கள்.
அந்தக் காணொலிகளைக் கண்டு அதிர்ந்து போன காவல்துறையினர் மேலதிக விசாரணைக்கு முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் சில ஆலோசனைகள் கேட்டதாகவும் தெரிகிறது.
எனவே, இதில் அரசியல் கட்சிகளின் பிரபலங்கள் பலர் மாட்டுவதற்கான சூழல் இருப்பதாகக் காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறைக் குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளிலும், பத்திரப் பதிவுத் தரவுகளைத் தேடியதில் கடந்த பிப்ரவரி மாதம் வாக்கில் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள வீரமணி பெயரில் உள்ள இரண்டு சொத்துக்களை சுமார் 80 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது தெரியவந்துள்ளது.
வழக்கை மேற்கொண்டு விசாரணையின்றி முடித்துவைக்க இந்த நிலங்களை விற்று அதன்மூலம் பலருக்கும் பணம் கொடுக்கப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலங்களை விற்றுக்கொடுத்த பணியை தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்கத்தின் தலைவராக இருந்த கண்ணையாவின் மகன் பிரகாசம் செய்து கொடுத்துள்ளதும் விசரணையில் தெரியவந்துள்ளது.
பிரகாசத்திற்கு காவல்துறையினர் விசாரணை அழைப்பாணை அனுப்பியுள்ள நிலையில், அவரை விசாரித்தால் யார் யாருக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்கிற விவரம் வெளிவரும். அவ்வாறு வெளிவந்தால் அவர்களிடம் உள்ள கானொலிகளும் வெளிவரலாம் என்று தெரிகிறது.
எனவே, ஒரே ஒரு சிறுமி அல்ல...இது பல சிறுமிகளை தூண்டில் புழுக்கள் போல பயன்படுத்தப்பட்ட ஒரு பெரிய வலைப்பின்னலாக இருக்கலாமோ என்கிற ஐயத்தை விசாரணையின் தகவல்கள் உணர்த்துகின்றன.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)