திமுகவின் வள்ளலார் சர்வதேச மையம்: அமெரிக்க 1200 கோடி மோசடி விவகாரம் – பின்னணி என்ன?
வடலூர் வள்ளலார் சர்வதேச மையத் திட்டத்தின் பின்னணி என்ன? நண்பன் பவுண்டேஷன், நண்பன் வென்ச்சர்ஸ், அமெரிக்க SEC நடவடிக்கைகள், 1200 கோடி முதலீட்டு மோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் வள்ளலார் பெருவெளி பாதுகாப்புப் போராட்டம் குறித்து ஆவணங்கள், அரசியல் நிகழ்வுகள் மற்றும் கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் அலசும் சிறப்புக் கட்டுரை.
மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்துவரும் திருவருட்பிரகாச இராமலிங்க வள்ளலார்
உலகளாவிய அறிவியல் மருத்துவம் எப்படி மனிதனின் நோய்களைத் தீர்ப்பது, எப்படி இளமையாக வாழ்வது, எப்படி மரணத்தைத் தவிர்ப்பது என்று இன்று ஆய்வுகள் செய்து கொண்டிருக்கின்றன. அதில் இன்னும் குறைந்த விழுக்காடுகளே முன்னேற்றம் பெற்றுள்ளன.
ஆனால், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே நரை, திரை, மூப்பு, பிணி, சாவு எனும் ஐந்தையும் வென்று சாதித்தவர்கள் தமிழ் மரபில் வந்த சித்தர்கள்.
நரை என்பது முடி நரைப்பது, திரை என்பது கண் கோளாறு, மூப்பு என்பது வயதாகுதல், பிணி என்பது நோய், சாவு என்பது இறப்பு.
இந்த நிலையை அடைந்தவர்களே "சாகாவரம் பெற்ற" "மரணமிலாப் பெருவாழ்வு" பெற்ற சித்தர்கள், ஞானிகள், பேரறிவாளர்கள் என்கிறோம்.
மீதமுள்ள இடங்களைக் காலியாகவே வைத்திருக்கும்படி வள்ளலார் கூறியிருந்தார்
அப்படிப்பட்ட மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்துவரும் திருவருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் 1860 ம் ஆண்டுகளில் வடலூர் பார்வதிபுரம் மக்களிடம் 80 காணி - 106 ஏக்கர் நிலத்தைக் கொடையாகப் பெற்று அதில் எப்போதும் உணவு தயாரித்து பசித்தவர்களுக்கு வழங்கும் தருமச்சாலை ஒன்றையும் ஞானம் போதிக்கும், ஞானம் உணர்த்தும் ஞானசபை ஒன்றையும் அமைத்தார். மீதமுள்ள இடங்களைக் காலியாகவே வைத்திருக்கும்படியும், எதிர்காலத்தில் லட்சக் கணக்கான மக்கள் வருவார்கள் என்றும் கூறியிருந்தார்.
அதன்படியே இன்று ஒவ்வொரு ஆண்டு தை மாதப் பூச விண்மீன் (நட்சத்திரம்) நாளன்றும் 20 லட்சம் பேர் வரை வருகிறார்கள்.
தருமச்சாலையின் இயக்கத் திட்டம்
தருமச்சாலையின் இயக்கத் திட்டம் என்பது, "உள்ளவர்கள் பொருட்களைக் கொண்டு வந்து தரவேண்டும், அவற்றை சமைத்து இல்லாதவர்களுக்குத் தர வேண்டும்" என்பதே.
இந்த வகையில், இன்றைய நிலவரப்படி அரிசி மட்டுமே "போதும் வேண்டாம்" எனும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மூட்டைகள் இருக்கின்றன, நன்கொடைகளும் குவிகின்றன.
இதேபோல தனியாரால் ஆங்காங்கே ஊர்களில் நடத்தப்படும் தருமச்சாலைகளின் எண்ணிக்கை சுமார் 3 ஆயிரங்களைத் தாண்டும்.
கண் வைத்தது "நண்பன் பவுண்டேஷன்"
இப்படிப்பட்ட இந்த தருமச்சாலைகளின் மீதுதான் கண் வைத்தது "நண்பன் பவுண்டேஷன்" எனும் அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஆரம்பிக்கட்ட ஒரு அமைப்பு.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, கோவிட் 19 காலகட்டங்களில் "அருட்கஞ்சி" எனும் ஒரு திட்டத்தைத் தொடங்கியது.
அதன்படி, தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் நாம் மேலே குறிப்பிட்ட 3000 தருமச்சாலைகளில் பலரையும் தொடர்பு கொண்டு "அரசி தருகிறோம், பருப்பு தருகிறோம், அடுப்பு, சட்டி, பானைகள் தருகிறோம்" என்று கூறி சில ஆயிரங்களை நன்கொடையாக அப்பியது இந்த நண்பன் பவுண்டேஷன் அமைப்பு.
இந்த நண்பன் பவுண்டேஷன் அமைப்பு தொடங்கப்படுவதற்கு முன்னரே பல பத்து ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன இந்த ஆயிரக்கணக்கான தருமச்சாலைகள்.
அந்த வகையில், நண்பன் பவுண்டேஷன் தரும் கொடைகளையும் (Donation) வழக்கமான கொடைகள் போலவே பாவித்தனர் தருமச்சாலையினர்.
ஆனால், இந்த தருமச்சாலை நடத்துபவர்களே முகம் சுளிக்க வைக்கும் செயலைச் செய்தது நண்பன் பவுண்டேஷன்.
கஞ்சி / உணவு அளித்தது போல படம் எடுத்து உடனே அனுப்ப வேண்டும்
பல ஆண்டுகளாக எந்தவிதப் பிரதிபலனையும் பாராமல் தருமச்சாலை நடத்திவரும் தமிழ்நாட்டு சன்மார்க்க சங்கத்தவர்களிடம், எடுத்துக் காட்டாக ஒரு 2000 ரூபாய் நன்கொடை கொடுத்துவிட்டு அந்த 2000 ரூபாய்க்கு தருமச்சாலையில் கஞ்சி / உணவு அளித்தது போல படம் எடுத்து உடனே அனுப்ப வேண்டும் என்று வற்புறுத்தியதே அந்த முகம் சுளிக்க வைத்ததற்கான காரணம்.
அதேபோல ஒரு தையல் எந்திரத்தை வாங்கிக்கொடுத்துட்டு அதில் ஒரு பெண்மணி தையல் தைப்பது போல படம் எடுத்து உடனே அனுப்புங்கள் என்பர் கடுமையாக வற்புறுத்தியது இந்த நண்பன் பவுண்டேஷன் குழு.
இந்த அமைப்பின் மீது வள்ளலார் தருமச்சாலையினருக்கு சந்தேகம் எழுந்தது.
அப்போதே இந்த அமைப்பின் மீது வள்ளலார் தருமச்சாலையினருக்கு சந்தேகம் எழுந்தது. எனினும், கோவிட் 19 காலகட்டம் என்பதால் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவர்கள் கேட்டதுபோல படம் எடுத்து அனுப்பிவிட்டனர்.
இதேபோல இலங்கையிலும் சிலருக்கு "அருட்கஞ்சி" கொடுத்துவிட்டு அந்தப் படங்களையும் இணைத்து ஒரு இணையதளம் ஒன்றை உருவாக்கி "லட்சக்கணக்கானோர் பசியாற்றும் நண்பன் பவுண்டேஷன்" என்று விளம்பரம் செய்தது இந்த அமைப்பு.
வள்ளலார் சர்வதேச மையம்
இந்த அமைப்புதான் "வள்ளலார் சர்வதேச மையம்" ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று கோவிட் கால Zoom கூட்டங்களில் வலியுறுத்தி வந்தது.
ஆக, ஏழை எளிய மக்களின் பசியாற்றும் வடலூர் தருமச்சாலை மற்றும் ஏழை எளிய மக்களுக்கு ஆன்மிக அறிவையும் போதிக்கும் மெய்யியல் தலமான வடலூர் வள்ளலாரின் ஒட்டுமொத்த அமைப்பையும் "வணிக மாக்கியமாக்கி", வெளிநாட்டினர் வந்து தங்க நவீன வசதியுடன் கூடிய தங்கும் விடுதி, Multicuisine என்று சொல்லக்கூடிய பன்னாட்டு உணவகம்" அகியவற்றை எல்லாம் "வள்ளலாருக்கு ஏழை எளிய கிராமத்து மக்கள் அளித்த 106 ஏக்கர்" நிலத்தில் செய்ய முனைந்தபோதுதான் கடும் எதிர்ப்புத் தொடங்கியது.
வள்ளலார் சர்வதேச மையம் எனும் இந்த "வணிகத் திட்டத்தை" மு.க.ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடம் சொல்லி அவர் மு.க.ஸ்டாலினிடம் சொல்லி, ஸ்டாலின் சேகர்பாபுவிடம் சொல்லி, 100 கோடி ரூபாய் அரசு நிதி இதற்காக ஒதுக்கப்பட்டது.
வடலூர் இராமலிங்க வள்ளற் பெருமானார் இந்த 106 ஏக்கர் பெருவெளியை "செத்தாரை எழுப்பும் உத்தர ஞான சிதம்பரம்" என்று வருணிக்கிறார். இதனை ஒரு வெட்ட வெளித் தலம் என்று போற்றுகிறார்.
அந்த இடத்தில் 100 கோடி ரூபாய் செலவில் சிதைத்து இந்த வணிக வளாகம் கட்ட முயன்றது திமுக அரசு.
இதனைப் பலமுறை, பலரும் எடுத்துக்கூறியும், போராடியும் அவர்களை எல்லாம் ஆட்சி அதிகாரத் திமிர் கொண்டு அடக்க முயற்சி செய்தது மு.க.ஸ்டாலின், சேகர் பாபு மற்றும் நண்பன் பவுண்டேஷன் குழு.
இங்கேதான் ஒரு அற்புதம் நடைபெற்றது.
நண்பன் பவுண்டேஷன் இப்படி ஒரு பித்தலாட்டம் இங்கே செய்துகொண்டு, திமுக அரசின் மூலமாக வள்ளலார் சன்மார்க்கத்தையே ஆட்டிப்படைக்க முயற்சி செய்த அதே வேளையில், நண்பன் பவுண்டேஷன் தொடங்கிய நண்பன் வென்ச்சர்ஸ் எனும் நிறுவனம் அமெரிக்காவின் பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் வசமாக சிக்கியது.
அதாவது, நண்பன் வென்ச்சர்ஸ் நிறுவனத்தில் 100 ரூபாய் முதலீடு செய்தால் 100 ரூபாய் இலாபம் தருவதாக அள்ளிவிட்டு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1200 கோடி ரூபாய் சுருட்டியிருந்தது.
இதில் ஏமாந்தவர்கள் வேறு யாருமல்ல அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வாழும் தமிழர்களே.
இந்த நண்பன் வென்ச்சர்ஸ் நிறுவனத்தை FetNA எனும் வட இந்திய தமிழ்ச் சங்க மாநாட்டில் அறிமுகம் செய்து வைத்து அதற்கென அந்த நிகழ்வில் ஒரு தனி அரங்கு தந்து தாராளமாக முதலீடு செய்யுங்கள் என்று விளம்பரப் படுத்தியவர் கால்டுவெல் வேல்நம்பி என்பவர். அவர் இப்போது அயலக திமுக அமைப்பின் பொறுப்பாளர். அதற்கு முன்னரும் அவர் திமுகதான்.
அதுமட்டுமல்லாம் இந்த FetNA பணத்தை எடுத்து நண்பன் வென்ச்சர்சில் முதலீடு செய்திருந்தார் இவர். ஆனால் அது மட்டும் திரும்பக் கொடுக்கப்பட்டதாக் கூறப்படுகிறது.
எப்படி இது சாத்தியம்" என்று ஆய்வு செய்தது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம்.
இப்படிப்பட்ட நிலையில், "100 ரூபாய் வாங்கி 100 ரூபாய் இலாபம் கொடுக்கும் தொழில் உலகத்திலேயே இல்லையே...எப்படி இது சாத்தியம்" என்று ஆய்வு செய்தது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம்.
அதன் விசாரணையில், நண்பன் பவுண்டேஷன் இணைய தளத்தில் அவர்கள் நடத்தி வருவதாக அறிவித்துள்ள பெரிய தொழிற்சாலை குறித்து நேரில் ஆய்வு செய்தபோது அது ஒரு மீனவர் குப்பம், அங்கு அப்படி எந்தத் தொழிற்சாலையும் இல்லை என்பது தெரியவந்தது.
சொத்துக்களை உடனே முடக்கிய US-SEC
இதையடுத்து அமெரிக்காவின் U.S. Securities and Exchange Commission (SEC) - பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் உடனடியாக நண்பன் குழுவின் சொத்துக்களை ஆய்வு செய்தபோது வசூல் செய்த 1200 கோடியில், 600 கோடிக்கும் மட்டுமே சொத்து இருப்பது தெரியவந்தது.
அந்த சொத்துக்களை உடனே முடக்கிய SEC அதனை முதலீட்டாளர்களுக்குத் திருப்பி அளிக்கும் பணிகளைத் தொடங்கியது.
இந்த நண்பன் பவுண்டேஷன்தான் இங்கே வள்ளலார் சன்மார்க்க சங்கத்தின் மீது "முதலைக் கண்ணீர்" வடித்த அமைப்பு. அந்த அமைப்புக்காகத்தான் மு.க.ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோர் அந்த ஆட்டம் போட்டுள்ளனர்.
வடலூர் தலைமைச் சங்கம்
இதற்கென "வடலூர் தலைமைச் சங்கம்" என்கிற அமைப்பைக் கைப்பற்றி அதில் திமுக ஆதரவாளர்கள், குறிப்பாக ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் அடிச் சேவகர்களை தலைவர், பொருளாளர் பொறுப்புகளில் அமர வைத்து இந்த ஒட்டுமொத்த நாடகமும் நடத்தப்பட்டது.
ஆக, அமெரிக்காவில் 1200 கோடி பணத்தை சுருட்டிய ஒரு மோசடி அமைப்பின் செயல்திட்டமே இந்த 100 கோடிரூபாய் வள்ளலார் சர்வதேச மையம் திட்டம்.
வடலூர் பார்வதிபுரம் மக்கள் அளித்த 106 ஏக்கரில், 25 ஏக்கர் நிலத்தை கடந்த 1975 ம் ஆண்டு திமுக ஆட்சியில் தனியாருக்குப் பட்டாப் போட்டு கொடுத்த நிலையில், மேலும் ஒரு ஆறு ஏக்கர் நிலத்தை சபாபதி சிவாச்சாரியாரின் வாரிசுகள் ஆக்கிரமித்துள்ளனர். ஆக, 72 ஏக்கர் நிலம் மட்டுமே இப்போது இந்து சமய அறநிலையத்துறை வசம் உள்ளது.
வணிக அமைப்பாக மாற்றும் திட்டமே இந்த 100 கோடி ரூபாய் திட்டம்.
அந்த 72 ஏக்கர் நிலத்திலும் 100 கோடிக்கு சரவதேச மையம் கட்டி அமெரிக்காவில் நண்பன் பவுண்டேஷன், இங்கே தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் குடும்ப உறுப்பினர் ஒருவரின் "சர்வதேச மைய" அமைப்பு ஆகியவை இணைந்து வள்ளலாரின் சமரச சுத்த சத்திய சன்மார்க்க அமைப்பை "வணிக" அமைப்பாக மாற்றும் திட்டமே இந்த 100 கோடி ரூபாய் திட்டம்.
இத்தகைய நிலையில்தான் இந்த சர்வதேச மையம் அதிலும் பெருவெளியை சிதைக்கும் கட்டுமானம் கூடாது என்று கடந்த இரண்டரை ஆண்டுகளாகப் போராட்டம் நடைபெறுகிறது.
பொய் வழக்குகள், அடக்குமுறை, ஒடுக்குமுறை
போராடியவர்கள் மீதெல்லாம் பொய் வழக்குகள், அடக்குமுறை, ஒடுக்குமுறை செய்தார்கள் சேகர்பாபு உள்ளிட்ட திமுகவினர்.
எனினும் தொடர்ந்து போராடினார்கள் வள்ளலாரின் பின்பற்றாளர்கள், தமிழ்த் தேசிய பேரியக்கம், தெய்வத் தமிழ் பேரவை, வள்ளலார் பணியகம், உத்தர ஞான சிதம்பர பாதுகாப்பு அமைப்பு, மனுதாரர்கள் வினோத் ராகவேந்திரா, அருட்சபை வேலன் உள்ளிட்டோரும் வழக்கறிஞர்கள் சுரேஷ், செந்தில்நாதன் உள்ளிட்டவர்களும்.
ஆட்சி மாறியதும் காட்சி மாறியிருக்கிறது. முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் இந்தத் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
வள்ளலாரை ஒரு பணம் காய்க்கும் மரமாகத் திமுக பயன்படுத்தத் தீட்டிய சதி
இதன் மூலம் வள்ளலாரை ஒரு பணம் காய்க்கும் மரமாகத் திமுக பயன்படுத்தத் தீட்டிய சதி முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த வேளையில், திமுக பினாமியாக செயல்பட்டு வரும் "வடலூர் தலைமைச் சங்கம்" எனும் அமைப்பை உலக அளவிலான சன்மார்க்க சங்க பிரதிநிதி அமைப்பு போல திமுக ஆட்சியில் பொய்யாக கட்டமைத்து வைத்து அரசின் பிரதிநிதி போலவும் காண்பிக்கப்பட்டு வந்தது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர் ரமேஷ் அவர்களுக்கு வேண்டுகோள்
நாகலிங்கம், வெற்றிவேல், APJ இங்கோவன் எனும் திமுக பினாமி நபர்களின் அந்தப் போலி சங்கத்திற்கும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கும், வள்ளலார் தெய்வ நிலைய அமைப்புக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதை அறநிலையத்துறை அறிவிக்கவேண்டும்.
சன்மார்க்கம் அறிந்த உண்மையான சாதுக்கள், பெரியோர்கள், அமைப்பினர் கொண்ட ஒரு புதிய ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து வள்ளலாரின் சமரச சுத்த சத்திய சன்மார்க்கத்தை நெறிப்படுத்த வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோரிடம் தமிழ் ஊடகம் அன்போடு கேட்டுக்கொள்கிறது.
அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங் கருணை !
எல்லாம் செயல் கூடும்
என்னாணை அம்பலத்தே
எல்லாம் வல்லான் தனையே ஏத்து !
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்,
நிறுவனர் : இராமலிங்க வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு ஆய்வு அறக்கட்டளை
நிறுவனர் : தமிழியல் நடுவம்
What's Your Reaction?
Like
1
Dislike
1
Love
0
Funny
1
Wow
0
Sad
0
Angry
1
Comments (0)