அன்புள்ள ரஜினிகாந்த் படத்திற்கு வரிவிலக்கு மறுத்தாரா எம்ஜிஆர்? ரஜினி–எம்ஜிஆர் மோதல் | தொடர் 3

‘அன்புள்ள ரஜினிகாந்த்’ திரைப்படத்திற்கு வரிவிலக்கு கோரப்பட்டபோது எம்ஜிஆர் என்ன கூறியதாக அப்போது செய்திகள் வெளியாகின? ரஜினிகாந்த்–எம்ஜிஆர் உறவின் மற்றொரு சம்பவத்தை விவரிக்கிறார் பத்திரிகையாளர் நாச்சி. செல்வராஜ்.

Aug 22, 2026 - 13:10
Updated: 25 days ago
0 27
அன்புள்ள ரஜினிகாந்த் படத்திற்கு வரிவிலக்கு மறுத்தாரா எம்ஜிஆர்? ரஜினி–எம்ஜிஆர் மோதல் | தொடர் 3

-நாச்சி.செல்வராஜ், பத்திரிகையாளர்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் எண்பதுகளின் தொடக்கத்தில் வேகமாக வளர்ந்து வந்த ரஜினி மீது தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்து வந்தார்.

அப்போது மாற்றுத் திறனாளிக் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

அப்படத்தில் ரஜினிகாந்த் - அம்பிகா மற்றும் குழந்தை நட்சத்திரமாக மீனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை ரஜினிகாந்தின் உயிர் நண்பரான நடராஜ் இயக்கி இருந்தார்.

பொதுவாக சமூகத்தில் நல்ல கருத்துக்களை தெரிவிக்கும் படங்களுக்கு வரி விலக்கு அளிப்பதுண்டு. மாநில அரசின் முதலமைச்சர் நினைத்தால் கேளிக்கை வரியை ரத்து செய்து அந்தப் படத்தை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லலாம்.

இதடிப்படையில் அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படம் வெளியிடம் நிலையில் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆரிடம் அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்திற்குவரி விலக்கு கோரினார் தூயவன்.

"இந்த படத்திற்கு நான் வரி விலக்கு அளிக்கிறேன் ஆனால் படத்திற்கு ரஜினிகாந்த் பெயரை எடுத்துவிட்டு ராமசாமி அல்லது குப்புசாமி எனப் போட்டுவிட்டு வாருங்கள் வரி விலக்கு அளிக்கிறேன்" என்று எம்ஜிஆர் பதில் அளித்ததாக அப்போது செய்திகள் கசிந்தன.

இந்தத் தகவலைத் தூயவன் ரஜினிகாந்த்திடம் சொன்னபோது கோபமடைந்த ரஜினிகாந்த் அப்படி ஒன்றும் அவசியம் இல்லை ரஜினிகாந்த் என்ற பெயர் இருக்கட்டும், ஒருவேளை படம் வசூல் ரீதியில் தோல்வி அடைந்தால் அதற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று கூற அன்புள்ள ரஜினிகாந்த் என்ற பெயரிலேயே அந்த திரைப்படம் வெளியானது.

இதனைத் தொடர்ந்து அந்த படம் தமிழகமெங்கும் வெற்றிவாகை சூடி வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்தது. முத்துமணி சுடரே வா முல்லைமலர் கொடியேவா என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி வெற்றி நடை போட்டது.

இப்படி நடிகர் ரஜினிகாந்துடன் எம்ஜிஆர் தொடர்ந்து மோதலை கடைப்பிடித்தார். அதில் எம்ஜிஆர் தோல்வி அடைந்தார் என்பது கடந்த கால வரலாறு.

அடுத்த பகுதியில் சந்திப்போம்...

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User