திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றம்!

திருப்பரங்குன்றம் மலைமேல் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகேயுள்ள வழக்கமான தீப மண்டபத்தில் கோயில் நிர்வாகம் அறிவித்தபடி மாலை 6 மணிக்குக் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

Nov 24, 2026 - 21:09
Updated: 2 hours ago
0 38
திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றம்!

திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!

கோயில் நிர்வாகத்தின் அறிவிப்பின்படி உச்சிப்பிள்ளையார் கோயில் அருகேயுள்ள தீப மண்டபத்தில் மாலை 6 மணிக்குத் தீபம் ஏற்றம்!

-தமிழ் ஊடகம் செய்திப்பிரிவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாகச் சர்ச்சை நீடித்து வந்த நிலையில், கோயில் நிர்வாகம் அறிவித்தபடி வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே இன்று (நவம்பர் 24) மாலை 6 மணிக்குக் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகேயுள்ள தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது.

இதற்கு முன்னதாக, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கோயிலில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு மரபுகளின்படியே கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என்று தெரிவித்திருந்தது.

தொன்றுதொட்ட மரபு என்று கோயில் நிர்வாகம் விளக்கம்!

கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள், பூஜைகள், வழிபாட்டுச் சடங்குகள் மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா ஆகியவை பல தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வரும் சமய மரபுகள், பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஆகம விதிகளின் அடிப்படையில் நடைபெற்று வருவதாக நிர்வாகம் விளக்கியிருந்தது.

மேலும், மலைமேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகேயுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றுவது நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் மரபு என்றும் குறிப்பிட்டிருந்தது.

அறங்காவலர் குழு ஒருமனதாகத் தீர்மானம்!

கோயிலின் வரலாற்றுத் தொன்மை, சமய முக்கியத்துவம், ஆவணங்கள், ஆகமச் சான்றுகள் மற்றும் ஸ்தானிகர்களின் கருத்துகளின் அடிப்படையில், வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே இந்த ஆண்டும் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று அறங்காவலர் குழு ஒருமனதாகத் தீர்மானித்திருந்தது.

அத்துடன், கோயிலின் மரபு மற்றும் பழக்கவழக்கங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்லவும் முடிவு செய்திருந்தது.

இந்த நிலையில், கோயில் நிர்வாகம் அறிவித்தபடி வழக்கமான தீப மண்டபத்தில் இன்று மாலை 6 மணிக்குத் தீபம் ஏற்றப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பாக நிலவி வந்த சர்ச்சைக்கு மத்தியில், கோயில் நிர்வாகம் தனது மரபுவழி வழிபாட்டு நடைமுறையைப் பின்பற்றி தீபம் ஏற்றியுள்ளது என்று அறிவித்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User