நீதிக்கட்சியின் முதல் ஆட்சி முதல் 1923 தேர்தல் வரை! | அரசியல் தொடர் – 4

1920இல் நீதிக்கட்சி ஆட்சியைப் பிடித்தது எப்படி? ஏ. சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர் ஆட்சி மற்றும் 1923 தேர்தல் அரசியல் வரலாறு.

Nov 23, 2026 - 11:25
Updated: 7 hours ago
0 9
நீதிக்கட்சியின் முதல் ஆட்சி முதல் 1923 தேர்தல் வரை! | அரசியல் தொடர் – 4

அதனால் அரசியல் பேசுகிறேன்

பத்திரிகையாளர் ஜோதி நரசிம்மன் எழுதும் தொடர்-4

கடந்த 1919 ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ‎'மாண்டேகு செம்ஸ்ஃபோர்ட்'-ன் அரசியல் சீர்திருத்தங்கள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு அடிப்படையாக அமைந்தன.

இதன்விளைவாக சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை நடைமுறைப் படுத்தப்பட்டது.

1920 ஆம் ஆண்டு நீதிக்கட்சி தேர்தலில் போட்டியிட்டது. 1937 வரை சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தது. 1937 இல் காங்கிரஸ் கட்சியிடம் தோல்வியை தழுவியது நீதிக்கட்சி. ஆட்சியும் காங்கிரஸ் வசம் சென்றது.

‎

‎ஒரு பக்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மற்றொரு பக்கம் அரசாங்கம் நியமிக்கப்படும் உறுப்பினர்கள், என இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியது ஆங்கிலேய அரசு.

அப்படித் தேர்தலில் பங்கெடுத்து வெற்றி பெற்றவர்களின் விவரங்களை 1920 டிசம்பர் 6 ம் தேதி அறிவித்தது ஆங்கிலேய அரசு. அந்த தேர்தலில் 'தராசு' சின்னத்தில் போட்டியிட்ட நீதிக்கட்சி 63 இடங்களை கைப்பற்றி ஆட்சியையும் அமைத்தது.

‎

‎திரு. ஏ.சுப்பராயுல ரெட்டியார் முதலமைச்சரானார். அவரிடம் கல்வி, பொதுப்பணிகள் துறையும் இருந்தது.

‎

‎திரு. பனகல் ராஜா உள்ளாட்சித் துறை பொறுப்பு வகித்தார்.

‎

‎திரு. கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு வளர்ச்சிப் பணிகளுக்கான பொறுப்பு வகித்தார்.

‎

‎1920 இல் நீதி கட்சி வெற்றி பெற்ற போது "வெள்ளுடை வேந்தர்" என அழைக்கப்பட்ட சர்.பிடி தியாகராயர் முதல்வராக பொறுப்பேற்க கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். அதன் பிறகு தான் ஏ.சுப்புராயிலு ரெட்டியார் முதல்வராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற சில மாதங்களுக்குப் பிறகு சுப்புராயலு காலமானார். அவருக்கு பதிலாக பனகல் அரசர் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

‎

‎1923 ம் ஆண்டு சென்னை மாகாணம் இரண்டாவது பொதுத் தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. இந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. காரணம் இரட்டை ஆட்சி முறை. ஆமாம் மாநில சுயாட்சியை காங்கிரஸ் ஆதரித்தது. கவர்னர் போன்ற ஒரு அமைப்பு ஆட்சியாளர்களை கட்டுப்படுத்துவதை காங்கிரஸ் விரும்பவில்லை. அதனால் தன் எதிர்ப்பை தெரிவிக்க ‎தேர்தலில் பங்கெடுப்பதைப் புறக்கணித்து வந்தது.

இந்த முறை தேர்தல் நடந்த 98 இடங்களில் 44 இடங்களை கைப்பற்றியது நீதிக் கட்சி.

சத்தியமூர்த்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் நீதிக் கட்சியை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். ஆனாலும் நீதிக் கட்சி வென்றது.

‎

‎பனகல் ராஜா மீண்டும் முதலமைச்சர் ஆனார்.

‎

‎திரு. ஏ.பி. பாட்ரோ உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

‎

‎திருடி என் சிவஞானம் பிள்ளை கல்வி, பொதுப்பணிகள் வளர்ச்சித் துறைகள் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

‎

‎அப்போது காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்றாலும், சீனிவாச சாஸ்திரி, சத்தியமூர்த்தி ஆகியோர் "சுயராஜ்ய கட்சி" என்ற பெயரில் நீதிக்கட்சியை எதிர்த்து போட்டியிட்டு 11 இடங்களை வென்றனர்.

‎

‎மூன்று ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நீதி கட்சிக்கு உள்ளே பூசல் நிலவியது. பிட்டி தியாகராயர் சர்வாதிகாரியை போல நடந்து கொள்கிறார் எனக்கூறி ஒரு பிரிவினர் வெளியேறி தனித்துப் போட்டியிட்டனர்.

தொடர்ந்து அரசியல் பேசுவோம்....

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User