முதலமைச்சர் விஜயின் விமானப் பயணம்: அரசு செலவா ? சொந்த செலவா ? முழு விவரம்

முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவே செய்யாத ஒரு செயலை இந்நாள் முதலமைச்சர் ஜோசப் விஜய் செய்கிறார். என்ன அது என்று விளக்கும் தனித்துவமான கட்டுரை

Jul 16, 2026 - 08:15
Updated: 2 months ago
0 75
முதலமைச்சர் விஜயின் விமானப் பயணம்: அரசு செலவா ? சொந்த செலவா ? முழு விவரம்

-ஏர்போர்ட் பாலு, சிறப்புச் செய்தியாளர்

நடிகர் விஜயாக இருந்து அரசியலுக்குள் நுழைந்த ஜோசப் விஜய் மீது பல விமர்சனங்கள் எழுந்த. ஆட்சி அதிகாரத்திற்கு வந்து 108 இடங்களில் வெற்றி பெற்ற பிறகும் பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் செய்ததாகக் கூறப்பட்ட சில செயல்கள் மீதும் விமர்சனங்கள் எழுந்தன.

எனினும், முதலமைச்சர் என்கிற அரசுப் பணியாளராக மாறியவுடன் ஜோசப் விஜயின் சில நடவடிக்கைகள் பல தரப்பினரின் பாராட்டுகளைப் பெறுகின்ற.

அலுவலகத்திற்கு அன்றாடம் 10 மணிக்கு வந்து அமர்ந்து பணிகளைப் பார்ப்பது. வீட்டிலிருந்து தலைமைச் செயலகம் வரும் வரை போக்குவரத்துக்கும், மக்களுக்கும் எந்தவித இடையூறும் தராமல் "கான்வாய்" பயணத்தைத் திட்டமிட்டு நடைமுறைப் படுத்தியது. குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு ஆய்வு செய்யச் சென்றது ஆகியவை மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன.

அந்த வகையில் இந்தத் தகவலும் உண்மையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மீதான மதிப்பை மேலும் அதிகரிக்கக் கூடும்.

தேர்தலுக்கு முன்னதாக இருந்தே தனி வானூர்தியில் பயணம் செய்யும் வழக்கம் கொண்டிருந்தார் ஜோசப் விஜய். தேர்தல் முடிந்து முதலமைச்சர் ஆனபிறகும் புது டெல்லி பயணம் உட்பட பல பயணங்களுக்கு தனி வானூர்தியையே பயன்படுத்துகிறார். ஆனால், அவற்றுக்கு ஆகும் செலவுகளை அரசு பணத்திலிருந்து பயன்படுத்துவதில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக அரசுப் பணியாளர்களுக்கு பணிகளின்போது அரசு வாகனம் தரப்படும் மற்றும் போக்குவரத்துச் செலவு (Travel Allowance) ஆகியவை அரசு நிதியிலிருந்தே தரப்படும். அதிலும் குறிப்பாக முதலமைச்சரின் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகளுக்கு அரசு நிதியே பயன்படுத்தப்படும்.

அது ரயில், வானூர்தி, ஹெலிகாப்டர் எனும் உலங்கு ஊர்தி என ஆகும் எத்தகைய பயணச் செலவுகளுக்கான ரசீதுகளையும் கொடுத்து அரசு கருவூலத்திலிருந்து அதற்கான பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.

செல்வி. ஜெயலிலதா முதலமைச்சராக இருந்தபோது Bell 412 EP எனும் பெயருடைய உலங்குஊர்தி (ஹெலிகாப்டர்) சுமார் 35 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசால் வாங்கப்பட்டது. அதேபோல "செஸ்னா" வானூர்தி ஒன்றும் அரசு சார்பில் வாங்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த உலங்குஊர்தி 2018 ம் ஆண்டு வரை மொத்தமே 2500 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மட்டுமே பறந்து பயன்படுத்தப்பட்டது. பிறகு அது "பறக்கும் அவசர ஊர்தியாக" (ஆம்புலன்ஸ்) மாற்றப்பட்டது. அதன் பிறகு அது சென்னை வானூர்தி நிலையத்தில் "கிங்பிஷர்" நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பயன்படுத்தப்படாமல் கிடந்த அதை விற்க இரண்டு மூன்று முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பிறகு அது விற்கப்பட்டது. முன்னதாக "செஸ்னா" வானூர்தி ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டது.

மிழ்நாடு அரசின் Bell 412 EP உலங்குஊர்தியை செல்வி ஜெயலலிதா அரசு முறைப் பயணங்களுக்கும் மற்றும் அரசியல் தேர்தல் பரப்புரைப் பயணங்களுக்கும் பயன்படுத்தினார். இதில் தேர்தல் பரப்புரைக்கு ஆன உலங்குஊர்தி செலவுகளை அதிமுக கட்சி ஏற்றுக்கொண்டது. ஆனால் அரசுமுறைப் பயணச் செலவுகளைத் தமிழ்நாடு அரசு செய்தது.

ஆனால், முதலமைச்சர் ஜோசப் விஜயின் அரசு முறைப் பயணம் மற்றும் அரசியல் பயண செலவுகளுக்கா தொகையில் ஒரு ரூபாய் கூட இதுவரை அரசு செலவில் செய்யப்படவில்லை, அனைத்தையும் தமது சொந்த செலவில்தான் செய்து வருவதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு பணத்தில் ஒரு பைசா கூட நான் எடுத்து செலவு செய்யமாட்டேன் என்று விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User