"பஞ்சாங்கம்" அல்ல "ஐந்தங்கம்" – தமிழர்களின் உண்மையான காலக் கணக்கு விளக்கம்

'பஞ்சாங்கம்' என்பது சமஸ்கிருதப் பெயர்; அதன் தமிழ்ப் பெயர் 'ஐந்தங்கம்'. தமிழர்களின் காலக்கணக்கு, பிறைநாள், விண்மீன், யோகம், கரணம் மற்றும் தமிழ் வானியல் மரபை விரிவாக அறியுங்கள். வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் எழுதும் புதிய தொடர்

Aug 03, 2026 - 08:06
Updated: 1 hour ago
0 24
"பஞ்சாங்கம்" அல்ல "ஐந்தங்கம்" – தமிழர்களின் உண்மையான காலக் கணக்கு விளக்கம்

வளர்மெய்யறிவான் () விசுவா விசுவநாத் எழுதும் புதிய தொடர்

ஐந்தங்கம் (பஞ்சாங்கம்) என்றால் என்ன ? இதோ இதை வசித்து அறியுங்கள்

"பாஞ்ச்" என்றால் சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி மொழியில் ஐந்து என்று பொருள், அவ்வளவே.

இந்த ஞாலம் எனும் பூமியும், நிலவு உள்ளிட்ட கோள்கள் சுழலும் சூரியக் குடும்பமும், பேரண்டமும் ஒரு துல்லியமான கணக்கில் இயங்குகிறன என்றும் அந்தக் கோள்களின் சுழற்சிக்கும் நமது உயிரின வாழ்க்கைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும் கண்டறிந்தவர்களில் தமிழர்கள் முன்னோடிகள்.

தமிழர்களின் காலக் கணக்கு

அந்த அடிப்படையில் ஒரு நேரம் என்பதைக் குறிக்க "கண்ணிமை" எனும் கண் இமைகள் ஒரு முறை இமைப்பதை ஒரு நேரத்தைக் குறிக்கும் அளவீடாகப் பயன்படுத்தினர் தமிழர்கள்.

பெருவிரல் - ஆள்காட்டி விரலைச் சேர்த்துச் சொடுக்கும் நேரத்தை "நொடி" என்று அளவீடாகப் பயன்படுத்தினர்.

அப்படி ஒரு மணி நேரத்திற்கு தமிழர்கள் பயன்படுத்திய அளவீட்டின் பெயர் "ஓரை".

இந்த ஓரை எனும் தமிழ்ச் சொல்தான் Hour - ஹவர் என்று ஆங்கிலத்தில் பயன்படுத்தப் படுகிறது. சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியில் "ஹோரா" என்று அழைக்கப்படுகிறது.

இப்படி கண்ணிமையில் தொடங்கி ஒரு மணி நேரம் அந்த 24 ஒரு மணி நேரம் (ஓரை) கொண்டது ஒரு நாள், ஏழு நாட்கள் கொண்டது ஒரு வாரம், நான்கு வாரங்கள் கொண்டது ஒரு மாதம், 12 மாதங்கள் கொண்டது ஒரு ஆண்டு, 60 ஆண்டுகள் கொண்டது ஒரு "அறுபதாண்டுச் சுழற்சி"...இப்படி 24 ஆயிரம் ஆண்டுகள் கொண்டது ஒரு உகம், அந்த 24 ஆயிரம் ஆண்டு என்பதும் ஏறுமுக சுழற்சி, இறங்கு முக சுழற்சி என்று இந்தப் பேரண்டம் ஒரு ஒழுங்கு முறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று கண்டுபிடித்தவர்களிலும் முன்னோடிகள் தமிழர்களே.

தமிழர்கள் நேரம், நாள், வாரம், மாதம், ஆண்டு ஆகியவற்றின் காலக் கணக்குகளை மிகத் துல்லியமாக கணித்து அன்றாடம் பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஐந்தங்கம்

இதனை எளிதாக ஐந்தங்கம் என்று நமது வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையாக இருக்கக் கூடிய காலக்கணக்கின் ஐந்து அங்கங்களை நமக்குள் வகுத்து அளித்திருக்கிறார்கள்.

அந்த ஐந்தங்கங்கள் என்பவை...

1. நாள் (வாரம்)

2. பிறைநாள் (திதி)

3. விண்மீன் (நட்சத்திரம்)

4. யோகம்

5. கரணம்

பொதுவான பெயர்

தமிழ்ப் பெயர்

பஞ்சாங்கம்

ஐந்தங்கம்

திதி

பிறைநாள்

நட்சத்திரம்

விண்மீன்

வாரம்

நாள்

யோகம்

கம்

கரணம்

கரணம்

01. இதில் நாள் என்பவை...

ஏழு கிழமைகள்:

ஞாயிறு

திங்கள்

செவ்வாய்

புதன்

வியாழன்

வெள்ளி

சனி

02. இதில் பிறை நாள் (திதி) என்பவை...

சம்ஸ்கிருதப் பெயர்

தமிழ்ப் பெயர்

பிரதமை

ஒன்றாம் பிறை

துவிதியை

இரண்டாம் பிறை

திரிதியை

மூன்றாம் பிறை

சதுர்த்தி

நான்காம் பிறை

பஞ்சமி

ஐந்தாம் பிறை

சஷ்டி

ஆறாம் பிறை

சப்தமி

ஏழாம் பிறை

அஷ்டமி

எட்டாம் பிறை

நவமி

ஒன்பதாம் பிறை

தசமி

பத்தாம் பிறை

ஏகாதசி

பதினொன்றாம் பிறை

துவாதசி

பன்னிரண்டாம் பிறை

திரயோதசி

பதின்மூன்றாம் பிறை

சதுர்த்தசி

பதினான்காம் பிறை

பௌர்ணமி

முழுநிலா

அமாவாசை

கருநிலா / நிலாமறைவு

வளர்பிறை – தேய்பிறை முறையில்

வளர்பிறை

  • வளர்பிறை ஒன்றாம் நாள்
  • வளர்பிறை இரண்டாம் நாள்
  • வளர்பிறை பதினான்காம் நாள்
  • முழுநிலா

தேய்பிறை

  • தேய்பிறை ஒன்றாம் நாள்
  • தேய்பிறை இரண்டாம் நாள்
  • தேய்பிறை பதினான்காம் நாள்
  • கருநிலா (அமாவாசை)

03. இதில் விண்மீன் (நட்சத்திரம்) என்பவை...

சமஸ்கிருதப் பெயர்களும் அதன் மூலத் தமிழ்ப் பெயர்களும்

1. அசுவினி – இரலை

2. பரணி – அடுப்பு

3. கார்த்திகை – அறுமீன்

4. ரோகிணி – சகடு

5. மிருகசீரிடம் – மான்தலை

6. திருவாதிரை – அருதிரை

7. புனர்பூசம் – கழை

8. பூசம் – பூசம்

9. ஆயில்யம் – அரவம்

10. மகம் – வேள்வி

11. பூரம் – எலி

12. உத்திரம் – கதிர்

13. ஹஸ்தம் – கை

14. சித்திரை – நெய்ம்மீன்

15. சுவாதி – விளக்கு

16. விசாகம் – முறம்

17. அனுஷம் – பனை

18. கேட்டை – துளங்கொளி

19. மூலம் – வில்

20. பூராடம் – உடைகுளம்

21. உத்திராடம் – ஆடி

22. திருவோணம் – உலக்கை

23. அவிட்டம் – பறவை

24. சதயம் – நீர்நாள்

25. பூரட்டாதி – முன்கொழுங்கால்

26. உத்திரட்டாதி – பிற்கொழுங்கால்

27. ரேவதி – தொழு

04. இதில் ஓகம் (யோகம்) என்பவை....

அடுத்த தொகுப்பில் பார்க்கலாம்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User