அருள் விக்னேஷ் விவகாரம்: பின்னணியில் நடந்தது என்ன? | பருந்தார் தகவல்கள்

தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீதான புகார், கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய சர்ச்சை, அரசியல் பின்னணி மற்றும் பருந்தார் தகவல்கள் அலசும் அதிரடி அரசியல் கட்டுரை.

Nov 26, 2026 - 15:37
Updated: 3 days ago
0 3.1k
அருள் விக்னேஷ் விவகாரம்: பின்னணியில் நடந்தது என்ன? | பருந்தார் தகவல்கள்

தவெக எம்.எல்.ஏ.அருள் விக்னேஷ் வீழ்த்தப்பட்டது எப்படி ?!

திரைப்படப் பாணியில் நடந்த அதிர வைக்கும் சூழ்ச்சி!

-தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்

யாரிடமோ அலைபேசியில் பேசிக்கொண்டே வந்தார் பருந்தார். உள்ளே வந்தவருக்கு வணக்கம் சொல்லி அமரவைத்தோம்.

பதிலுக்கு வணக்கம் சொல்லிவிட்டு பேசத் தொடங்கினார் பருந்தார்.

பெண் அதிகாரிக்கு குறுந்தகவல் அனுப்பிப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள அருள் விக்னேஷ் விவகாரம் குறித்து விசாரிக்க அந்த மாவட்டத்திற்கே சென்றிருந்தேன்...

அடடே அருமை...சொல்லுங்க பருந்தாரே என்ன தகவல் என்று கேட்டோம்.

கள்ளக்குறிச்சியில் இருந்து கல்வராயன் மலைக்குச் செல்லும் பாதையில் சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஊர் வடக்கனேந்தல்.

ம்...

அந்த ஊரில் தனது பாட்டி வீட்டில் தங்கிப் படித்தவர்தான் அருள் விக்னேஷ். ஏழ்மையான குடும்பப் பின்னணி கொண்டவர்.

ம்...

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அவர் விசிக கட்சியில் பயணம் செய்தவர். ஆனால் அடிப்படையில் அவர் விஜய் ரசிகர்.

ஓஹோ...

அதன்காரணமாகவே ஜோசப் விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் அதில் இணைந்துள்ளார். தேர்தல் வரும் நேரத்தில், அந்த வேளையில் வேறு வேட்பாளர் கிடைக்காத நிலையில் அவருக்குத் தவெக சார்பில் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

ம்ம்ம்....

உண்மையில் அவருக்குப் பெரிய அளவில் அரசியல் குறித்தோ, சட்டமன்றம் குறித்தோ எந்த அடிப்படை அனுபவமும் இல்லாதவர்.

புரிகிறது...பெரும்பாலானவர்கள் இரசிகர் மன்றப் பின்னணியில் இருந்து வந்தவர்கள்தானே, அரசியலுக்கே புதியவர்கள்தானே என்று நினைவூட்டினோம்.

ஆமாம்...இப்படிப்பட்ட நிலையில்தான் அவர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டார்.

ம்...

அதே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வலது - இடதுகரமாக செயல்படும் திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தன் கார்த்திகேயன்தான் திமுக மாவட்ட செயலாளரும்கூட

ம்..

அவரது முன்னெடுப்பில் கள்ளக்குறிச்சியில் ஒரு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. 16.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அந்தப் பேருந்து நிலையம் ஊரை விட்டு தொலைவில் ஒரு அத்துவானக் காட்டில் கட்டப்பட்டது. அதனைக் கடந்த பிப்ரவரி மாதம் அப்போதய போக்குவரத்துத் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

ம்....

அந்தப் பேருந்து நிலையத் திட்டம் போடப்படுவதற்கு முன்னரே அந்த இடத்தைச் சுற்றிலுமுள்ள சுமார் 100 ஏக்கர் நிலம் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயனுக்கு வேண்டப்பட்டவர்களால் மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டதாக அந்த ஊரில் பேச்சு ஓடுகிறது.

ஓஹோ...

பேருந்து நிலையம் அங்கு கட்டப்பட்டதால் சுற்றிலுமுள்ள சுமார் 100 ஏக்கர் நிலம் பல மடங்கு விலை ஏறும்தானே...

ஆமாம்...அது இயல்புதானே...சென்னை கிளம்பாக்கத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் சில லட்சங்களுக்கு வாங்கப்பட்ட ஒரு நிலத்தின் மதிப்பு இப்போது 20 - 30 கோடிகளில் நிற்கிறது என்றோம்.

மிகச்சரி...கள்ளக்குறிச்சியில் இப்படி ஒரு பிசினெஸ் திட்டத்துடன் பேருந்து நிலையம் கட்டப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

ம்....

அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ ஆனதும் அந்தப் பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தாராம்.

சுத்தம்....விடுவார்களா என்ன?! என்றோம்.

அதே...அப்போதிருந்தே அருள் விக்னேஷுக்கு புள்ளி வைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

ஆக... அருள் விக்னேஷ் தெரிந்தோ தெரியாமலோ தனது முதல் 'எதிரியை' உருவாக்கிக்கொண்டுவிட்டார், அப்படித்தானே.

இருக்கலாம்... அது ஒரு ஊரறிந்த பிரச்னை என்று வைத்துக்கொள்வோம். அதேவேளை அருள் விக்னேஷைச் சுற்றி ஒரு புதிய மனித நட்பு வட்டம் நெருங்கியிருக்கிறது.

ம்...

நான் ஏற்கனவே சொன்னது போல அவருக்கு அரசியலும் தெரியாது அரசியலில் எப்படி எல்லாம் கவிழ்த்துக் காலி செய்வார்கள் என்பது தெரியாது...

புரிகிறது பருந்தாரே நீங்கள் மேற்கொண்டு சொல்லுங்கள்.

வழக்கமாக நட்புகளுடன் மது அருந்தும் வழக்கம் கொண்டிருந்த அவருக்கு பெருமளவில் அன்றாடம் செலவு செய்யப்ட்டு பல இடங்களில் புதிது புதிதாக புதிய நடுப்புகளால் 'பார்ட்டி' வைக்கப்பட்டுள்ளது.

ம்....

எம்.எல்.ஏ ஆகிவிட்ட மகிழ்ச்சி...தனக்கு அந்த நட்பு வட்டம் கொடுக்கும் ஊக்கம், 'உற்சாகம்' எல்லாம் சேர்ந்து அவர்களை முழுதும் நம்பிய நிலையில்தான் ஒருநாள் அதிக அளவு போதைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார் அவர். அப்போதுதான் அவரது எண்ணிலிருந்து அந்தக் குறுந்தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது என்று அதிர்ச்சி தரும் தகவல் அந்த மாவட்டத்தில் பேசப்படுகிறது.

அடக்கொடுமையே...அதனால்தான் அந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், எந்த 'trap' லும் மாட்டிக்கொள்ளக் கூடாது, கவனமாக இருங்கள் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் சொல்லியதாகத் தகவல் பரவியதா?! என்று கேட்டோம்.

இருக்கலாம்...உண்மையான பின்னணி இதுதான் என்று கூறப்பட்டாலும்கூட, பிற ஆட்களுடன் அமர்ந்து மது அருந்தியது, இப்படிப்பட்ட ஒரு சூழ்ச்சிக்கு ஆளாகும் அளவுக்கு கவனக்குறைவாக இருந்தது ஆகியவைதான் அருள் விக்னேஷ் செய்த தவறு என்கிறார்கள்.

ம்...புரிகிறது பருந்தாரே...அப்போ அருள் விக்னேஷின் 'Glass Mates' யார் யார் என்று பார்த்து 'விசாரித்தால்' உண்மை வெளிவரும் இல்லையா பருந்தாரே...என்று கேட்டோம்.

ஆமாம், இந்த விவகாரத்தில் செய்திகள், திமுக ஆதரவு சமூக ஊடகர்கள் பதிவுகள் ஒருபுறம் இருக்க, கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக செயலாளர் வசந்தம் கார்திகேயன்தான் செய்திகள் அடிப்படையில் அருள் விக்னேஷ் மீது காவல்துறையிடம் புகார் தெரிவித்தார்.

ம்...

அதன்பிறகு கனிமொழி வரை அது பகிரப்பட்டது, கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ம்...

ஆனால் கூர்ந்து கவனியுங்கள் அதிமுகதான் நீதிமன்றம் வரை சென்றது.

ஆமாம்....

இதையெல்லாம் கூர்ந்து கவனித்துவரும் தவெக தரப்பு, அருள் விக்னேஷ் செய்த தவறு ஒருபுறம் இருக்க, கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய ரியல் எஸ்டேட் முறைகேடு, திமுகவினர் அங்கு செய்துவரும் வில்லங்கங்களைத் தோண்டி எடுக்க ஆரம்பித்துவிட்டதாம்.

ஓ....

அதே மாவட்டத்தில் நல்ல பெயர் எடுத்திருந்த உதயசூரியன் எனும் திமுக பிரபலத்தை வீழ்த்தியதும் வசந்தன் கார்த்திகேயன்தான் என்று கூறும் அந்த மாவட்டப் பத்திரிக்கையாளர்கள் கள்ளக்குறிச்சியில் திமுக கெட்டபெயர் வாங்குவதற்கும் அவரே காரணம் என்கிறார்கள். இப்படித்தான் அந்த மாவட்டப் பகுதியில் பேச்சுக்கள் ஓடுகின்றன.

ம்...

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் வழக்குத் தொடுத்த அதிமுகவுக்கு சரியான 'மைலேஜ்' கிடைத்தது. இதையடுத்து நாமும் ஏதாவது செய்யவேண்டுமே என்றுதான் ஆளுநர் மாளிகையை நோக்கி நடைபோட்டு ஒரு புகார் மனுவைக் கொடுத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என்கிறார்கள்.

ம்...

பெண்களுக்கு ஆதரவான, பெண்களுக்குப் பாதுகாப்பான அரசு ஜோசப் விஜய்யின் தவெக அரசு எனும் பெயரை உடைத்து, "மாவட்ட பெண் ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத அரசு" எனும் பெயரைப் பதியவைக்கவே இத்தனை மெனக்கெடுகிறார்களாம்... என்று சொன்ன பருந்தாரின் அலைபேசி மணி அடிக்க எடுத்துப்பேசிக்கொண்டே புறப்பட்டார் பருந்தார்.

What's Your Reaction?

Like Like 14
Dislike Dislike 3
Love Love 4
Funny Funny 3
Wow Wow 3
Sad Sad 2
Angry Angry 4

Comments (0)

User