பகலவன் தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியரின் ஆட்டம் அதிகரிப்பு! – பருந்தார் தகவல்கள் | தமிழ் ஊடகம்

தொலைக்காட்சி ஊடக நிறுவனத்தில் நிறுவன உரிமையாளரின் விசுவாச மூத்த நிர்வாகிகளையே ஓரங்கட்டும் டுபாக்கூர் செய்தி ஆசிரியர். மற்றொரு தொலைக்காட்சியில் பெண் ஊழியர் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகார் எனப் பருந்தார் தகவல்கள்.

Nov 25, 2026 - 21:19
Updated: 4 days ago
0 446
பகலவன் தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியரின் ஆட்டம் அதிகரிப்பு! – பருந்தார் தகவல்கள் | தமிழ் ஊடகம்

+ 'பகலவன்' தொலைக்காட்சியில் 30 ஆண்டுகளாகப் பணியாற்றுபவர்களை ஓரங்கட்டி CEO கனவில் மிதக்கும் டுபாக்கூர் செய்தி ஆசிரியர் !

+ ஓசை எழுப்பும் மாலை நேரத் தொலைக்காட்சியில்  பாலியல் துன்புறுத்தல் புகார் !

தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்

பனியுடன் சிலுசிலு மழையும் சேர்ந்து கொள்ள பச்சைப்பசேல் என்றிருந்த புல்வெளிக்கு நடுவில் வந்து இறங்கி நமது முகாம் அலுவலகத்திற்கு வந்தார் பருந்தார்.

வந்தவரை வரவேற்று சூடாகத் தேநீர் கொடுத்தோம். குடித்துக்கொண்டே தகவல்களைக் கொட்டத் தொடங்கினார்.

முக்கியமான ஊடகத் தரப்புத் தகவல்களைச் சொல்லிவிடுகிறேன் என்று தொடங்கிய பருந்தார், அந்தப் பெரிய ஊடக நிறுவனத்தின் திருமண விழா வெளிநாட்டில் நடந்து முடிந்த கையோடு இங்கே வரவேற்பு விழா வைத்திருந்தார்கள். அரசியல் தலைவர்கள் தொடங்கி, அம்பானி தரப்பு, பத்திரிகை, ஊடகப் பெருந்தலைகள் மற்றும் அந்த மணவிழாவுக்குச் சொந்தமான ஊடகக் குழுமத்தின் நிர்வாகப் பெருந்தலைகள் வரை சகலமான விவிஐபிக்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

ம்...அது அந்தக் குழுமத்தின் குடும்ப விழாவாச்சே சும்மாவா...என்றோம்.

ஆமாம். அந்த நிகழ்வுக்கு வருபவர்களைக் காணொலிப் பதிவு செய்ய மட்டுமே அந்த நிறுவனத்தின் மூத்த ஒளிப்பதிவாளர்கள் ஐந்துபேர் நுழைவாயிலிலேயே கேமிராவோடு நிறுத்தப்பட்டிருந்தனர் என்றால் பாருங்கள் என்றார் பருந்தார்.

ம்...

அவர்கள் ஒருவர் விடாமல் அனைவரையும் 'கவர்' செய்திருந்தார்கள்.

ம்...

ஆனால் செய்தியில் வந்து காணொலியைப் பார்த்து அதிர்ச்சி ஆகியிருக்கிறார்கள் அந்த நிறுவனக் குழுமத்தின் பெருந்தலைகள் என்ற பருந்தாரிடம்,

ஏனாம்..என்று கேட்டோம்.

செய்தியில் தங்களது முகம்கூட எங்குமே காட்டப்படவில்லையாம்.

அடடே...ம்

அதுமட்டுமல்ல பல்வேறு பத்திரிகை ஊடகச் செய்தி ஆசிரியர்கள், உரிமையாளர்கள் எல்லாம் வந்திருந்தனர். அவ்வளவு ஏன்...அந்தக் குழுமத்தின் தலைவரின் உறவினர், அந்தத் தலைவரின் பால்ய கால நண்பர், அந்த நிறுவனத்தின் MD உள்ளிட்ட எவர் முகமும் காட்டப்படவேயில்லையாம் என்ற பருந்தாரிடம்...

ஓ...அப்புறம் யாரைத்தான் காட்டினார்களாம்? என்று கேட்டோம்

வேறு யாரை அந்த டுபாக்கூர் செய்தி ஆசிரியர் மட்டுமே வளைத்து வளைத்து செய்தியில் காட்டப்பட்டிருக்கிறார்.

அடக்கடவுளே...என்ன கொடுமை சர் இது....அந்த ஆசாமி அந்த நிறுவனத்தில் சேர்ந்தே நான்கைந்து ஆண்டுகள்தானே ஆச்சு? என்று வியப்போடு கேட்டோம்.

ம்...உண்மைதான், ஆனால் அவரது செயல்பாடுகள் அப்படியெல்லாம் இல்லையாம்...அந்தக் குழுமத்தின் தலைவருக்கு நெருக்கமான கண்ணுக்குக் கண்ணான ஒருவரைக் 'காக்கா' பிடித்துக்கொண்டு எல்லோரையும் ஒதுக்கித் தள்ளி ஓரங்கட்டித் தான் மட்டும் மேலே சென்று கொண்டேயிருக்கிறாராம். அதிலும் குழுமத் தலைவரின் பால்ய கால நண்பரும், நாளிதழின் மூன்றெழுத்து நிர்வாகியுமான அவரையே ஒரு இடத்தில் கூட செய்தியில் காட்டவே இல்லையாம்.

அப்படி என்ன வன்மம் ? என்று கேட்டோம்.

ஒரு வன்மமும் இல்லை...அந்த ஆசாமி தொடக்கத்திலிருந்தே இந்த 'lobby' யைத் திட்டமிட்டு செய்து வருகிறாராம்.

முதல் கட்டமாக அவர் செய்தி ஆசிரியரானவுடனே தனக்கு வேண்டப்பட்ட அதிலும் தெலுங்கு பேசத் தெரிந்த சுமார் 35 பேரைத் தமது பிரிவில் சேர்த்து, ஏற்கனவே நன்கு வேலை செய்து வந்த தமிழ் பேசக்கூடிய, எழுதக் கூடியவர்களை படிப்படியே வெளியேற்றிவிட்டாராம்.

ஓ....

அப்படி தன்னைச் சுற்றி ஒரு 'தனக்கான கூட்டம்' ஒன்றை வைத்துக் கொண்டு, 'போற்றிப் பாடடி பொன்னே' என்று அவர்களை வைத்துக் கோரஸ் பாடவைத்துக்கொண்டு செய்திப்பிரிவில் ஏற்கனவே இருந்த அனைவரின் fuse ஐயும் பிடுங்கி விட்டாராம்.

ஓ....

24 மணி நேர செய்திப்பிரிவில் நுழைந்த அவர் அடுத்து முக்கியச் செய்திப்பிரிவையும் கைக்குள் கொண்டு வந்துவிட்டாராம் என்ற பருந்தாரிடம்....

அந்த அளவுக்கு எல்லாம் அந்த டுபாக்கூர் ஆசாமி ஒர்த் இல்லையே...என்றோம்

உண்மைதான் அந்த தொலைக்காட்சி தொடங்கிய காலத்திலிருந்து செய்தி ஆசிரியராக இருந்த அந்த 'மன்னனின்' கால் தூசுக்குச் சமம் ஆகமாட்டார் இந்த ஆசாமி...ஒரு செய்தியைக் கூட ஒழுங்காக எழுதத் தெரியாத இந்த ஆசாமிக்கு நன்கு தெரிந்து ஒரு உத்தி 'எல்லோரையும் காலி செய்துவிட்டு தான் மட்டும் முன்னேறுவது எனும் குள்ளநரி வேலைதான்' என்ற பருந்தாரிடம்....

ஆனால் அந்த நிறுவனத்தில் அப்படியெல்லாம் பாலிடிக்ஸ் செய்ய முடியாதே...என்று கேட்டோம்.

உண்மைதான்...ஆனால் நான் ஏற்கனவே சொன்ன கண்ணனுக்குக் கண்ணானவரை எப்படியோ வளைத்துப் போட்டுவிட்டு எல்லோரையும் காலி செய்து கொண்டிருக்கிறாராம் டுபாக்கூர் செய்தி ஆசிரியர்.

கொடுமை....

ஒருபுறம் அந்த நிறுவனத்தில் இருந்த திறமையானவர்கள், அடுத்துத் தனக்குப் போட்டியாக வரக்கூடியவர்கள் என்று எவரையெல்லாம் அந்த ஆசாமி நினைத்தாரோ அவர்கள் அனைவரையும் காலி செய்துவிட்டு அவர்களை ஓரங்கட்டி வேகமாக முன்னேறிக்கொண்டு இருக்கிறாராம்.

ம்....

அந்தக் குழுமத்தின் நாளிதழ் செய்தியாளர் மீது வழக்குப் பாய்ந்ததை சாதகமாக்கி அவரது தலைமை நிர்வாகியையும் காலி செய்துவிட்டு அந்தப் பதவியையும் தானே ஆட்டையைப் போடத் திட்டமாம்.

ம்....

தனது கைத்தடிகளிடம், அடுத்த CEO நான்தான் என்று தெம்பாகச் சொல்கிறாராம் என்ற பருந்தாரிடம்....

ஓ....அதனால்தான் திருமண வரவேற்பு செய்திக் காணொலிகளில் தான் மட்டுமே சுழன்று சுழன்று வேலை செய்தது போலக் காட்டிக்கொண்டாரா? என்று கேட்டோம்..

கரெக்ட்....ஆனா அந்த நிறுவனத்தின் தலைவர் இதுபோன்ற குள்ளநரி வேலையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்.

ம்.....

இந்த டுபாக்கூர் ஆசாமி அந்த ஒட்டுமொத்தத் தொலைக்காட்சி, பத்திரிகை நிறுவனத்தின் 'முகம்' தான்தான் என்று நிறுவிக்கொண்டிருக்கிறாராம்.

ம்....

அதன் அதிரடி நடவடிக்கையாகவே திருமண வரவேற்பு நிகழ்வுச் செய்திகளில் தனது உருவம் மட்டும் அடிக்கடி வந்து போகுமாறு பார்த்துக்கொண்டதோடு, வீடியோ தொகுப்பாளர்களுக்கு சிறப்புக் கட்டளையே பிறப்பித்தாராம்; தனது உருவம் தவிர வேறு யார் உருவமும் செய்தியில் இடம் பெறக்கூடாது என்று என்று சொல்லி முடித்த பருந்தாரிடம்.

அந்த நிறுவனத்தின் உண்மையான நிர்வாக 'முகம்' இந்த டூபாக்கூருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...தலைமைக்குத் தெரிந்தால் அடுத்த நொடியே தூக்கி வெளியே வீசிவிடுவார்கள் என்று சொன்னோம்.

கரெக்ட் என்ற பருந்தார் அடுத்து சொன்ன தகவலும் ஊடகம் குறித்ததே...

"ஓசை எழுப்பும் மாலை நேரத்துத் தொலைக்காட்சி செய்திப் பிரிவில் பணியாற்றும் ஒரு பெண் உதவி ஆசிரியப் பணியாளர் அந்த நிறுவனத்தில் அவருக்கு மேலே பணியாற்றும் மூன்று ஆண் துணை ஆசிரியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

ஓ...என்ன பிரச்சனை?

பணியின்போது அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து ஆபாச இரட்டை அர்த்தமாகப் பேசுவதுடன், அவர் இருக்கும்போதே கணினியில் ஆபாசப் படங்களை ஓடவிட்டிருக்கிறார்கள் இந்த மூன்று பேரும்...

அடச்சை...அப்புறம்?!

அப்புறம் என்ன அவர் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த நிறுவனத்தின் போலீஸ் செய்திகள் பார்க்கும் ஒரு செய்தியாளர் காவல்துறையிடம் ஏதோதோ விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

இதில் என்ன விளக்கம் கொடுக்கிறார்களாம்?!

தெரியலை...அந்த நிறுவனத்தின் தலைமை என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தனது நிறுவனத்திற்கு வேலைக்கு வரும் ஒரு பெண் செய்தி உதவி ஆசிரியருக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்காமல் என்ன ஆணி பிடுங்கிக்கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை என்ற பருந்தார்....இதற்குமேல் அடுத்த தகவல்களைச் சொன்னால் அப்புறம் உங்கள் வாசகர்கள் படிக்கமாட்டார்கள் எனவே இப்போதைக்கு இது போதும் என்று சொல்லிவிட்டு பறந்து விட்டார்.

What's Your Reaction?

Like Like 4
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User