சீமான் குறித்து அவதூறு பேச்சு: YouTuber பிஸ்மி, தமிழன் கோகுல் மீது வழக்கு பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சீமான் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறப்படும் YouTuber பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் மீது வழக்கு பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

Jul 28, 2026 - 17:15
Updated: 5 days ago
0 125
சீமான் குறித்து அவதூறு பேச்சு: YouTuber பிஸ்மி, தமிழன் கோகுல் மீது வழக்கு பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்த யூ டூயுபர் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல்மீது நடவடிக்கை கோரிய வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து யூடியூபர்கள் பிஸ்மி, தமிழன் கோகுல் ஆகியோர் அவதூறு பரப்பியதாகவும், அதுகுறித்து காவல்துறைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் கூறி வழக்கறிஞர் தீரன் திருமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அவரது மனுவில், "...இது அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட அவதூறுப் பரப்புரை. இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித முதல் தகவல் அறிக்கையும் (FIR) பதிவு செய்யப்படவில்லை. எனவே, கடந்த ஜூலை.3-ஆம் தேதி அளித்த புகாரை பரிசீலித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தர வேண்டும்" எனக்கோரி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சீமான் தரப்பில், "பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் இடம் விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரமேஷ் 100 கோடி ரூபாய் பெற்றார் எனப் பேசிய ஒருவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர், ஆனால் சீமான் குறித்து பேசினால் நடவடிக்கை எடுப்பதில்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி, "இதற்கு மட்டும் எப்படி உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? காவல்துறை பாரபட்சம் பார்க்கிறதா? ஒரு தலைவர் குறித்து அவதூறாகவோ அல்லது அசிங்கமாகவோ பேசுவதை வேடிக்கை பார்க்க முடியாது. திமுக எம்எல்ஏ ஒருவர் முதலமைச்சர் குறித்து பேசுனா உடனே நடவடிக்கை எடுத்து கைது செய்வீர்கள் அதற்கு உங்களுக்கு அதிகாரம் இருக்கு... சீமானைப் பொறுத்தவரை தேர்தலில் தோற்கலாம் வெற்றி பெறலாம் ஆனால் தற்போதைக்கு தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல்வாதியாக உருவாகி உள்ளார்" என்றார்.

மேலும், "இந்த வழக்கைப் பொறுத்தவரை யூடியூபர்கள், சீமானை மிகவும் கொச்சையாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்துள்ளனர் இதனை ஏற்க முடியாது எனவே சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று மாலைக்குள் இது குறித்து வழக்கு பதிவு செய்து நாளை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், அதன் வீடியோக்களை நீக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

தமிழ் ஊடகம் இணைய இதழை SUBSCRIBE செய்யுங்கள். SUBSCRIBE செய்ய பொத்தான் மேலே வலதுபுறம் உள்ளது

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User